Thursday, March 17, 2011

அஞ்சறைப்பெட்டி +கும்தலக்கா 16.03.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

குட்டி நாடாக இருந்தாலும் உலக பொருளாதராத்தில் தனக்கு என்று தனி இடம் உள்ள ஜப்பான் சுனாமியால் உருக்குழைந்து உள்ளது. அதன் முழு இழப்பு என்ன என்று இன்னும் அறிவிக்க வில்லை.

ஜப்பானியர்கள் நிச்சயம் மீண்டு வருவார்கள் என்பதில் ஐயமில்லை.. உழைக்கும் திறமை இருக்கும் வரை முன்னேற்றம் தானாக வரும். ஜப்பான் மக்கள் மீண்டும் பழைய நிலையை அடைய பிராத்திப்போம்...

...............................................................................................

ஒரு வழியாக திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் பங்கீடு முடிந்தது. காங்கிரஸ் கலைஞரை அழுத்தி 63 தொகுதியை வாங்கிக்கொண்டது.

63 சீட் வேண்டும் என்ற எண்ணிக்கையில் இருந்த கவனம் 63 இடம் வாங்கும் போது இல்லாமல் போய்விட்டது. சென்னையில் மட்டும் 5 இடம் வாங்கி உள்ளார்கள்.

சென்னை போடா வெண்ணை என்று சொல்லும் காலம் பக்கத்தில் இருக்கிறது.


...............................................................................................

தேர்தல் கமிஷன் இது வரை இல்லாத பல நெருக்கடிகளை அரசியல் கட்சிக்கு கொடுத்து கிலியை ஏற்படுத்தி உள்ளனர்.

சாலைகளில் சோதனை என்ற பெயரில் சிக்கும் பணம் கொஞ்சம் நஞ்சமல்ல இது வரை கோடிக்கணக்கில் சிக்கி உள்ளது.

தேர்தல் வரை இந்த அதிரடி தொடந்தால் வாக்காளருக்கு பணம் அளிப்பது நிறைய குறைய வாய்ப்பிருக்கிறது


........................................................................................................

அம்மா அதிரடியாக வேட்பாளர் பட்டியலிட்டு கூட்டணி கட்சிகளிடம் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் அம்மாவின் தைரியம் பாராட்டத்தக்கது.

கூட்டணி கட்சிகள் தினமும் சென்று பேசி பிரச்சனையை தீர்த்திருக்க வேண்டும்.  போக வேண்டியது பேச வேண்டியது எங்கள் பொதுக்குழுவை கூட்டி யோசித்து சொல்கிறேன் என சொல்வது இப்படி சொல்லிக்கொண்டே இருந்ததால் பொறுத்தது போதும் என பொங்கி எழுந்து விட்டார் ஜெ.

இதனால் ஜெவுக்க லாபமும் உண்டு. நஷ்டமும் உண்டு.

........................................................................................................

ஸ்பெக்டரம் வழக்கில் மார்ச் 31ம் தேதி சிபிஜ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறதாம். இத்தகவல் வெளியான சில மணி நேரத்தில் ராசாவின் நண்பரும், இவ்வழக்கில் சிபிஐயால் விசாரிக்கப்பட்டவருமான சாதிக்பாட்ஷா தற்கொலை செய்து கொண்டார் என்ற அதிர்ச்சி செய்தி.

தேர்தல் நேரத்தில் இது மாதிரி நடப்பதால் வாக்குகள் பாதிக்கும் வாய்ப்பு உண்டு.

........................................................................................................

இஸ்ரேலை சேர்ந்த மாடல் அழகி ஒரிட் பாக்ஸ். இவர் டெல்அவில் நகரில் நடந்த ஒரு விளம்பர படத்தில் நடித்தார். அவருடன் ஒரு நாக பாம்பும் நடித்தது. அவர் பழங்காலத்தில், பெண்கள் அணியும் கவர்ச்சி உடையுடன் நடித்தார். படஷீட்டிங்கின் போது அவர் அந்த நாக பாம்பை பிடித்த படி கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்தார்.

அப்போது திடீரென அந்த பாம்பு அவரது உடலை சுற்றிக் கொண்டது. இதனால் பயந்த அவர் அதன் கழுத்தில் இருந்து பிடியை விட்டார். உடனே அந்த பாம்பு அவர் இடது புறத்தில் பொருத்தியிருந்த சிலிகான் மார்பகத்தில் கடித்தது. சிறிது நேரத்தில் சிலிகான் விஷம் ஏறி அந்த பாம்பு செத்து விழுந்தது.

இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, மாடல் அழகி ஒரிட் பாக்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

நாட்டு நடப்பு

திமுகவும், அதிமுகவும் கூட்டணி முடிவானாலும் கூட்டணி கட்சிகளிடையே இருக்கும் கலக்கம் இன்னும் போகவில்லை.
காங்கிரசுக்கு 63 தொகுதி கொடுத்த திமுக தேர்தலில் அவர்கள் வெற்றிக்கு பாடு படுவார்களா என்றால் கொஞ்சம் கஷ்டம் தான். காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் சீமான் போன்ற தமிழ் ஆர்வலர்கள் நிச்சயம் எதிர் பிரச்சாரம் செய்வதால் 63 தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெறுவது என்பது கனவாகத்தான் இருக்கும்..

தகவல்

உயிர்கொல்லி நோய்களில் ஒன்றாக புற்று நோய் திகழ்கிறது. அந்த நோய் கடந்த 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியுள்ளது என தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள நேஷனல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் மண்ணுக்குள் புதைந்து கிடந்த ஒரு விலங்கின் எலும்பு கூடுகளை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.

அவற்றில் புற்று நோய் கட்டிகளை உருவாக்க கூடிய “செல்”கள் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் புதையுண்டு கிடந்த விலங்கின் எலும்பு கூட்டை சோதனை செய்ததில் அது 60 கோடி ஆண்டு பழமையானது எனவும் கண்டறியப்பட்டது.

உலகின் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே ஒரு செல் உயிரினம் தோன்றியதாக கூறப்படுகிறது. அதில் இருந்து பல செல் உயிரினங்கள் உருவாகி பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது. இந்த உயிரினத்தில் தான் 60 கோடி ஆண்டுக்கு முன்பு புற்று நோய் இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் நிலவு என்ற பெயரில் எழுதி வருகிறார். "எழுதிப் பழகவும், எழுத முடியாதவற்றை இதயத்தில் வைத்து அழவும் பிறந்தவன்" என்று இவரைப்பற்றி வர்ணிக்கிறார்.  அணு உலைகளை பாதுகாக்க மறுத்த ஜப்பான் முதலாளித்துவம் என்ற ஓர் அற்புதமான கட்டுரை எழுதி உள்ளார்.

 
 
தத்துவம்

நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.

எவ்வளவு தான் பந்த பாசமானாலும் இடையில் ஒரு வேலி மெலிசா இருந்துகிட்டே இருக்கணும்.



கும்தலக்கா

நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் சுயமரியாதையுடன் அதிமுகவில் இருந்து விலகுகிறேன் என்று அறிக்கை கொடுத்து விலகி உள்ளார்.

40 இடங்களில் போட்டி போடுகிறேன் என்று அறிவித்துள்ளார் சென்னையில் மட்டும் 3இடங்களில் போட்டி இடுகிறாராம். ஏன் இந்த வேண்டாத வேலை...

டெபாசிட் காலி.....


........................................................................................................

வைகோ இன்று கோபப்பட்டு என்ன பிரயோசனம் தன்னிடம் இருந்து ஒவ்வொரு முக்கிய தலைவர்களும் வெளியே போகும் போது தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். அன்று உதாசினப்படுத்தினார் இன்று அனுபவிக்கிறார். இனியும் காலம் இருக்கிறது வைகோவைப் பொறுத்த வரை பொது எதிரி காங்கிரஸ் தான் காங்கிரஸ் நிற்கும் 63 தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்தி 63 தொகுதிக்கும் சுத்தி சுத்தி பிரச்சாரம் செய்தால் நிச்சயம் ஓட்டு வாங்கும் வாய்பிருக்கிறது.

அம்மாவுடன் கூட்டணியை பத்திரமாக பார்த்துக்கொண்ட வைகோ கூட இருந்தவர்களை பத்திரமாக பார்த்துக்க முடியலையே...


7 வருடமாக வைகோ அம்மாவுடன் கூட்டணியில் இருந்தார் ஆனால் 7 வருடத்துக்கு முன் வைகோவுடன் இருந்தவர்கள் இன்று இல்லையே.. 


........................................................................................................

அநேகமாக 20ம் தேதிக்குள் அனைத்து கட்சிகளும் வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்துக்கு தயாராவார்கள் என்று எதிர்பார்க்கலாம் இம்முறை அதிக ஊர்களுக்கு சென்று ஜெவும், ஸ்டாலினும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். பிரச்சாரத்தின் போது தலைவர்களின் பேச்சு அனல் கக்கும், அதை விவாதிக்க ஒரு கூட்டம் அலைமோதும், தேர்தலினால் அனைத்து ஊடகங்களும் பரபரப்பாக காணப்படும், இணையதள வாசகர்களான நாமும் பரபரப்பாக இருப்போம்...
........................................................................................................
ஜெ வேட்பாளர் பட்டியலை அறிவித்ததை அடுத்து அவரின் கூட்டணிக் கட்சிகள்  அனைத்தும் கடும் கோபத்தில் தற்போது அலோசனை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் முக்கியமாக கம்யூனிஸ்டுகளும், தேமுதிகவும் கூட்டணியில் இருக்கலாமா இல்லை வெளியேறி 3 வது அணி அமைக்கலாமா என்று அலோசனையில் உள்ளனர்.

3 வது அணி அமைக்கலாம் என்றால் இவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்வார்கள் கிருஷ்ணசாமி 50 தொகுதி கேட்பார். கூட்டணியை விட்டு வெளியேறினாலும் நட்டம், கூட்டணியில் இருந்தாலும் அவமானம் பொறுத்திருப்போம் என்ன செய்வார்கள் என்று...

21 comments:

  1. அம்மாவுக்கு ஆப்பு கன்ஃபர்ம்

    ReplyDelete
  2. சென்னையில் மட்டும் 5 இடம் வாங்கி உள்ளார்கள். //


    இவங்க கேக்கும்போது கொடுக்கல.. இப்ப வான்ட்டடா கொடுத்துருக்காங்கன்னா தெரியலையா?

    ReplyDelete
  3. அம்மா வழி தனி வழி... போகப்போகத்தான் தெரியும் சாணக்கியத்தனமா? இல்லை சாணித்தனமா? யென்று.

    ReplyDelete
  4. இன்றைய அஞ்சறைப் பெட்டியும் சூப்பர்

    ReplyDelete
  5. தொடர்ந்து கலக்குங்க.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. அஞ்சறைப் பெட்டியில் அரசியல் நெடி - தொடரட்டும் தேர்தல் வரை!!

    ReplyDelete
  7. கலக்கல் நண்பா

    இதத்தான் சிலிக்கன்
    வேலிங்கராங்களா நண்பா ஹி ஹி!

    ReplyDelete
  8. ஜப்பான்...

    அவர்கள் கடும் உழைப்பாளிகள்.. விரைவில் மீண்டு விடுவார்கள்.. நாமும் பிரார்த்திப்போம்...

    அதிமுக கூட்டணியில் லேசான சலசலப்பு போல் தெரிகிறது...

    //நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் சுயமரியாதையுடன் அதிமுகவில் இருந்து விலகுகிறேன் என்று அறிக்கை கொடுத்து விலகி உள்ளார்.

    40 இடங்களில் போட்டி போடுகிறேன் என்று அறிவித்துள்ளார் சென்னையில் மட்டும் 3இடங்களில் போட்டி இடுகிறாராம்.//

    கார்த்திக் அறிவித்த தொகுதிகளில் தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்ட சேரன்மகாதேவி, சாத்தான்குளம், கடலாடி, இளையான்குடி, சமயநல்லூர் ஆகிய தொகுதிகளும் உள்ளதாமே!!

    ReplyDelete
  9. //அஞ்சறைப் பெட்டியில் அரசியல் நெடி - //
    இன்றைய தேதியில் அரசியல் இல்லாமல் பதிவிட முடியாது என்பது உண்மைதான்..

    ReplyDelete
  10. அம்மா குடுக்கும் அலப்பறையில் காங்கிரஸ் தப்பிவிடுமோ?

    ReplyDelete
  11. //7 வருடமாக வைகோ அம்மாவுடன் கூட்டணியில் இருந்தார் ஆனால் 7 வருடத்துக்கு முன் வைகோவுடன் இருந்தவர்கள் இன்று இல்லையே..//
    தெளிவான அரசியல் பார்வை.
    வைகோவுக்கு அரசியல் பண்ணத்தெரியவில்லை என்பது உண்மைதான் போலும்..

    ReplyDelete
  12. உங்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நிலவு அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. தேர்தல் நெருங்கிருச்சோ? அஞ்சறைப்பெட்டியிலே கரம் மசாலா வாசனை தூக்கலா இருக்கே? :-)

    ReplyDelete
  14. நிலவு தளம் நானும் வாசித்தேன்.
    ஷோபா சக்தி பற்றிய செய்திகள் நிறையவே பகிர்கிறார் !

    ReplyDelete
  15. இதனால் ஜெவுக்க லாபமும் உண்டு. நஷ்டமும் உண்டு.........//////////////

    நிச்சியம் நஷ்டம் மட்டுமே ........

    ReplyDelete
  16. ரொம்ப ஜால்ரா ...!!!

    ReplyDelete