Tuesday, March 22, 2011

இப்படித்தான் இருக்கவேனும் தேர்தல் அறிக்கை...


மேற்கு வங்கத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தேர்தல் அறிக்கை நேற்று வெளியிட்டு உள்ளார் அவரின் தேர்தல் அறிக்கை அந்த மாநில மக்களின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சியும் எப்படி அடுத்த 5 ஆண்டுகளில் இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது.

மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசம், கவர்ச்சி அறிவிப்புகள் எதுவும் அறிக்கையில் இடம் பெறவில்லை.

மம்தா தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்
1.மாநிலத்தில் பசுமை புரட்சியை ஏற்படுத்தப் போவதாகவும், தொழில் துறையையும், விவசாயத் துறையையும் இரட்டை சகோதரிகளாக கருதி, அவற்றின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2.ஆட்சிக்கு வந்த முதல் நூறு நாட்களில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றுவது, அடுத்த 1,000 நாட்களில் என்ன திட்டங்களை நிறைவேற்றுவது என்பது குறித்து, விளக்கமாக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3.தொழில் துறையை மேம்படுத்தி, அதன் மூலம், வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

4. மாநிலத்தில் உள்ள தொழில் துறை பயிற்சி மையங்களின் எண்ணிக்கையை, தற்போதுள்ள 51ல் இருந்து 300 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

5.ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் மையம் அமைக்கப்படும். மூடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை, மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

6.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதிய விமான நிலையங்கள் கட்டப்படும்.

7.தொழில் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆசிரியர்களின் பயிற்சி தரம் உயர்த்தப்படும்.

8. மாநிலத்தில் மேலும் 10 புதிய மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்.

9.தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர். பள்ளிகளின் கட்டமைப்பு வசதி உயர்த்தப்படும்.

10.மாநிலம் முழுவதும், சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

11.ஒவ்வொரு நகரத்திலும் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

 12.விவசாயத் துறையின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும். விவசாயத்துக்கு தேவையான இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும்.

13.மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளையும் இணைப்பதற்கான "மாஸ்டர் பிளான்' செயல்படுத்தப்படும்.

14.மாநிலத்தின் நிர்வாக பணிகளில் அரசியல் ஆதிக்கம் அகற்றப்படும்.

15.பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்துக்காக திட்டங்கள் தீட்டப்படும்.

மேற்கு வங்கமும் இந்தியாவில் தான் இருக்கிறது. தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை விட பின்தங்கிய மாநிலம், இருந்தும் இலவச கவர்ச்சி அறிவிப்புகள் ஏதும் இல்லாமல் மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட இதை வரவேற்போம்.

நம்ம ஊருக்கு எப்ப இப்படி ஒரு தேர்தல் அறிக்கை வருமோ?

23 comments:

  1. அவங்களுக்கு ஒன்னும் தெரியல... கலைஞர்கிட்ட டியூஷன் படிக்க சொல்லுங்க..

    ReplyDelete
  2. அருமையான தேர்தல் அறிக்கை... இம்மாதிரியான தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டிற்கு எப்போது வருமோ?

    ReplyDelete
  3. நம்ம ஊருல இந்த மாதிரி அறிக்கையா???
    ஹா ஹா ஹா
    போங்க சங்கவி.. ஆனாலும் உங்களுக்குப் பேராசை தான்.

    ReplyDelete
  4. டும்டும்...டும்டும்...
    சும்மா...நையாண்டிக்குதானே எழுதியிருக்கீங்க...
    நம்ம தமிழ்நாட்டுக்கா?
    உஹூம்...சரிபட்டு வராது.

    ReplyDelete
  5. திரு சங்கவி, மமதா வால் எதையும் இங்கும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. இவர்கள் தீவிரவாதிகளுடன் தீவிரத் தொடர்பில் இருப்பதால் இன்னொரு விதமான கம்யூனிஸ்ட் ஆட்சி மாதிரிதான் இருக்கும் என்று தோன்றுகிறது. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  6. m m ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம்

    ReplyDelete
  7. இம்மாதிரியான தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டிற்கு....????????????
    அசத்திட்டிங்க

    ReplyDelete
  8. அந்த அறிக்கையெல்லாம் நமக்கு சரி பட்டு வராது... எப்படி சும்மாவே உட்கார்ந்து ஓசி சோறு திங்கலாம்னு பாக்குற கூட்டம் நம்ம கூட்டம்...


    எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

    ReplyDelete
  9. //நம்ம ஊருக்கு எப்ப இப்படி ஒரு தேர்தல் அறிக்கை வருமோ?//

    நடக்குரதை பேசுங்க மக்கா இது நடக்குற காரியமா....

    ReplyDelete
  10. மேற்கு வங்கத்தில் இருகவன் கிட்ட கேட்டால் தான் தெரியும்.. :)

    //பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்துக்காக திட்டங்கள் தீட்டப்படும். -///

    இலவசம் நு தனிய சொல்லாம இப்படி சொல்லிருக்காங்க..

    ReplyDelete
  11. உங்களுக்கு ஆனாலும் ஓவர் குசும்பு மக்கா

    ReplyDelete
  12. சாத்தியமே இல்லை பங்காளி... ஏக்கப் பெருமூச்சுத்தான் விட இயலும்...

    பிரபாகர்...

    ReplyDelete
  13. இந்த அறிக்கைய “தல” கையில் கொண்டு போய் தந்தால், ராக்கெட் விடுவார்...

    “தல”யின் அறிக்கையை மம்தா பானர்ஜியிடம் தந்து, அவர் அதை படித்தால் மயங்கி விழுவார்...

    ReplyDelete
  14. இது என்ன சின்னப் புள்ளத் தனமா இருக்கு,அறிக்கையும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்...நம்ம வைகைப் புயல்,அடிச்சா போதும் ஓட்டெல்லாம் ஓட்டைப் பிரிச்சுட்டு கொட்டிடாது.....

    ReplyDelete
  15. இலவசத்தையும் மீறி ஏதோ சாதிக்கனும் என்ற ஆர்வம் இருக்கு இந்த அறிக்கையிலே

    ReplyDelete
  16. 2001 தேர்தல்ல ஒழுங்கா சாதனையப் பாத்து ஓட்டுப் போட்டிருந்தா கருணாநிதி இப்படி மாறிருக்க மாட்டாரு! மத்த எல்லா ஊருலயும் சாதனையப் பார்த்து ஓட்டுப் போடுறான். நம்ம கூட்டணியையும், இலவசத்தையும் பாத்தே போட்டோம்! இப்ப நமக்கேத்த மாதிரி தேர்தல் அறிக்கை தயாரிக்கிறாங்க! என்ன தப்புண்ணேன்???

    ReplyDelete
  17. பகிர்வுக்கு நன்றி!

    தேர்தல் அறிக்கையின் நம்பிக்கையினால்தான் காங்கிரஸின் கண்ணில் விரல் விட்டு ஆட்டும் துணிவு மம்தாவுக்கு!

    தாத்தாவும் தான் இருக்கிறாரே:(

    ReplyDelete
  18. நல்ல பகிர்வு நண்பரே. மனதில் அலையடிக்கும் ஏக்கங்கள் எங்கோ விதைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதன் வேர் நம்மையும் தொடும் நாள் தூரத்தில் இல்லையென நம்புவோம்... இது தான் தேர்தல் அறிக்கை போல் தெரிகிறது. இதோடு ஒப்பிட்டா நம்ம மாநிலத்தில் தேர்தல் பிச்சை போடுற மாதிரி தெரிகிறது.

    ReplyDelete
  19. தமிழ்நாட்டுல எல்லோரையும் பிச்சைக்காரர்களாய் நினைக்கும் அரசியல்வாதிகள்..

    ReplyDelete
  20. வங்காள மக்கள் புத்திசாலிகள். அவங்களுக்கு ஏற்ற மாதிரி தேர்தல் அறிக்கை. இங்கே சாக்லேட் குடுத்து குழந்தையின் நகையைப் பறிக்க முயலும் திருடனைப் போல புத்தி கொண்ட அரசியல்வியாதி, குழந்தை மாதிரியே ஏமாளி வாக்காளன், வேறென்ன, திருடனுக்குக் கொண்டாட்டம்.

    ReplyDelete