Thursday, March 24, 2011

உங்க வேட்பாளரின் பின்னனியை தெரிஞ்சிக்கலாம் வாங்க...


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கிரிமினல் பின்னணி, சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்களை எஸ்.எம்.எஸ். மூலம் பொது மக்கள் பெற தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன், தங்கள் மீதான கிரிமினல் வழக்குகள், சொத்து விவரம் ஆகியவற்றைத் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆவணங்கள் அடிப்படையில், தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட ஜனநாயக மாற்றங்களுக்கான சங்கத்தினர் ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டனர்.
இதன்படி, 2006 -ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 77  பேர் மீது மொத்தம் 176 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இதில் கட்சி வாரியாக உறுப்பினர்கள் விவரம்: 
திமுக: 39, 
 பாமக: 15, 
 காங்கிரஸ்: 9, 
 அதிமுக: 8,  
மதிமுக: 2, 
 இந்திய கம்யூனிஸ்ட்: 2.

2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 57 பேர் கோடீஸ்வரர்கள்.

 

சட்டப்பேரவைத் தேர்தலின்போது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான மார்ச் 30-ம் தேதியில் இருந்தே வாக்காளர்கள், தங்கள் பகுதி வேட்பாளர்களின் பின்னணி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

வாக்காளர்கள் தங்களது செல்போனில் இருந்து தங்கள் பகுதி அஞ்சல் பின் கோடு எண் (உதாரணமாக தியாகராய நகர் தொகுதியை சேர்ந்த வாக்காளர்களாக இருந்தால் 600017) எனக் குறிப்பிட்டு 56070 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
 
இவ்வாறு அனுப்பினால், அந்தத் தொகுதி வேட்பாளர்களின் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் விவரம், அவர்களின் கல்வித் தகுதி, சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்கள் அவரவர் செல்போன்களுக்கே அனுப்பப்படும் என ""ஜனநாயக மாற்றங்களுக்கான சங்க'' நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து இந்த அமைப்பை நடத்தி வருகின்றனர்.
http://adiraiexpress.blogspot.com/2011/03/blog-post_11.html

15 comments:

  1. பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  2. தற்போது தேவையான விஷயம்...
    பகிர்வுக்கு நன்றி ....

    ReplyDelete
  3. ஆகா அது சரி - பாத்துடுவோம்ல - தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  4. அட இதுவும் ஒரு விக்கி லீக் மாதிரி இருக்கே...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
    இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

    ReplyDelete
  5. நல்ல பயனுள்ள தகவல தான் சங்கவி..

    ReplyDelete
  6. அப்புறம் பொது மக்களே...
    தயவு செய்து தங்களுடைய வேட்பாளரை இப்போதே நலலா பாத்துக்கங்க அப்புறம் 5 வரும் பார்க்க முடியாது..

    என்ன நான் சொல்றது..

    ReplyDelete
  7. நல்ல பயனுள்ள தகவலை கொடுத்திருக்கிறீர்கள்... நன்றி


    எனது வலைபூவில் இன்று: மதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்

    ReplyDelete
  8. Useful information. I have shared this one in my facebook. Hope all are have some attention before putting there vote....
    Thanks alot.

    ReplyDelete
  9. தேர்தல் செய்தி,பயனுள்ள செய்திகள் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  10. என்ன தெரிஞ்சி என்னாகுது..இலவ்சம் கொடுத்து மாட்டு சந்தை ஆக்கிபுட்டாங்களே

    ReplyDelete
  11. வலைதளங்களில் உண்மையான தகவல் தானா என்று உறுதிப்படுத்திய பின் அளியுங்கள் நண்பரே... பொய்யான தகவல் அளித்து உங்கள் உண்மை தன்மையை குலைத்துக்கொள்ளாதீர்கள்

    ReplyDelete
  12. Please see this for more info.

    http://myneta.info/

    ReplyDelete