Wednesday, September 10, 2014

மெல்லிய கருத்த தேவதை..



தினமும் மனைவியை அவர்கள் கல்லூரி வாகனத்தில் ஏறுவதற்கு இறக்கிவிட்டு விட்டு எதிர் முனையில் நானும் மகனும் டாடா காட்டுகிறோம் என்று நிற்போம்... மகன் டாடா காட்டுவதில் மும்மரமாக இருப்பான்.. காலை நேரம் அனைத்து கல்லூரி பேருந்துகளும் நின்று செல்லும் இடம் அந்த இடத்தில் நிற்க எனக்கு என்ன கசக்குமா, 3 நிமடம் தான் நிற்பேன் என்றாலும் மனசு இருக்கும் எந்த டென்ஷனும் அமைதியாக அமுக்கும் நேரம் அது.. குளு குளுன்னு இருக்குன்னு சொல்வாங்களே அதே தருணம் தான். கடவுள் கண்ணை படிச்சதற்காக தினமும் நன்றி சொல்லவேண்டும். அந்த இடத்தில் இருந்து நகரும் போது, வானில் இருந்து நட்சத்திரங்கள் கீழே விழும் அதே எபெக்ட்டு.

இப்படியாக கடந்த நான்கு மாதமாக போய்க்கொண்டு இருந்த வாழ்வில் எதேச்சையாக இரு தினங்களுக்கு முன் தினமும் பார்க்கும் ஒரு தேவதை கடந்து சென்றது. தேவதை என்றதும் வெள்ளி நிற சுடிதார் அணிந்திருக்கும் என்று நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது. இந்த தேவதை காட்டன் புடவையில் உடலோடு ஒட்டு நிற்கும், மெல்லிய கருத்த முகத்தில் ( மாநிறம்ன்னு சொல்வாங்ளே அது தான்) சிறிய பொட்டும் அதே அளவில் மூக்குத்தியுடன் கடந்து போகும், ஒரு 25 செகன்டு தான் என்னை கடந்து சென்றாலும், உடல், பொருள், ஆவி அனைத்தும் அடங்கி எண் கண்கள் மட்டும் விழித்திருக்கும் நேரம் அது.

எப்பவும் போல அந்த தேவதை போய் இருந்தால் பரவாயில்லை,  எப்பவும் வடப்பக்கம் செல்லும் தேவதை, இன்று இடப்பக்கம் எனது சிங்கத்தருகில் வந்து வாட்டர் பால்ஸ் ஓவரா ஓடுது என்று அவள் தோழியிடம் வேகமாக, எனக்கு கேட்கும் அளவில் சொல்லி விட்டு சென்றாள்.. தோழி என்றால் சுமார்ன்னு நினைச்சுக்காதீங்க பாஸ் அதுவும் தேவதைதான், பட் எல்லாருக்கும் எல்லா தேவதையும் பிடிக்காதல்லவா, அது போலத்தான் இதுவும்...

எனக்கு முதல்ல வாட்டர் பால்ஸ் என்றதும் புரியல, நானும் என் மண்டைய குழப்பு குழப்பு பார்த்தேன், கவுட்டி கவுட்டியா யோசிச்சு பார்த்தேன்.. ம்கும் ஒன்னும் விளங்கள.. சரின்னு பொஞ்சாதிகிட்ட பேச்சு கொடுத்துட்டே ஒரு பொண்ணு இப்படிச்சொல்லுச்சு என்றேன்.. அவள் சிரி சிரின்னு சிரிச்சிட்டு ஓவரா ஜொள்ளு ஊத்தறீன்னு சிம்பிளா உன்ன கவுத்துட்டு போய்ட்டாங்க....
( ஏய் டண்டனக்க டணுக்குனக்கான்னு அவளுக்கு சந்தோசம்)... அடப்பாவமேன்னு அப்புராணி பையன இப்படி சொல்லிட்டாங்களேன்னு வருத்தம் தான் ஆனால் அடுத்த நாள் காலையில் இருந்து டாடா காண்பிக்க எதிரே நிற்பதில்லை, பொஞ்சாதியை பக்கத்திலேயே நின்னு பஸ் ஏற்றி விட்டு விட்டு வந்துடுறேன்...

ஆனாலும் அந்த மெல்லிய கருத்த தேவதை தூரத்தில் போய் திரும்பி பார்த்து சிரிக்க தவறுவதில்லை, அடுத்த நாலு ஸ்டெப்பில் தோழி தேவதையும் இப்பெல்லாம் பார்த்து சிரிக்குதுபாஸ்....

7 comments:

  1. இதெல்லாம் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு! வாட்டர் பால்ஸ்னா தெரியாதாமே?

    ReplyDelete
  2. Get your appetite outside, but eat at home. திருமணமான புதிதில் என் வெள்ளைக்கார பாஸ் எனக்கு சொல்லி கொடுத்தது. வாட்டர் பால்ஸ், பையனுடையதா இருக்க போது. கவனம்.

    ReplyDelete
  3. நடக்கட்டும்...
    வாட்டர் பால்சை வேஸ்ட் பண்ணிடாதீங்க செங்கோவி...

    ReplyDelete
  4. ithu yaru eluthanathu?

    ReplyDelete