Monday, October 6, 2014

"குடி குடியை கெடுக்கும்" இதுயாருடைய தவறு???


குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் வீட்டை கெடுக்கும் என பல வகையான புதுமொழிகளை கேட்டு இருந்தாலும் நம்ம ஊரில் சரக்கு விற்பனை குறைவதில்லை. குடிப்பவர்களுக்கு எல்லாம் நிச்சயம் தெரியும் குடல் வெந்து, கல்லீரல் வெந்து சாகப்போகிறோம் என்று ஆனாலும் குடிக்கத்தான் செய்கின்றனர்.

இப்போது எல்லாம் கம்பெனி மீட்டிங்கில் மட்டும் சரக்கு சாப்பிடுகிறேன் என்று சொல்பவர்கள் தான் இங்கு ஏராளம். அப்புறம் பொஞ்சாதி ஊருக்கு சென்று விட்டால் நண்பர்களோடு கூத்தடிப்பவர்களும் இங்கு அதிகம் தான். கொஞ்சம் தான் குடிச்சேன், அட பீர் தாம்பா குடிச்சேன் அதனால பிரச்சனை இல்லை என்று சொல்பவர்களும் தாராளமாக உள்ளனர்.

குடியைப்பற்றி இவ்வளவு பேசுகிறாயே நீ யோக்கியனா என்று நீங்கள் கேட்கலாம், மேலே சொன்ன வகைகளில் நானும் ஒருவன் தான், எனக்கு பேர் குடிகாரன் இல்லை ஏதோ அப்பப்ப குடிப்பவன், எனக்கு செல்ப் கன்ரோல் இருக்கிறது என்று வியாக்கானம் பேசும் பலபேர்களில் சத்தியமாக நானும் ஒருவனே.

குடியால் நிறைய குடும்பங்கள் அழிந்துள்ளன, அழிந்து கொண்டு இருக்கின்றன, அழியப்போகிறது என பல கருத்துக்கள் சொல்லலாம். இப்படித்தான் சொன்னான் பிரபு, அவன் யார் என்கிறீர்களா இன்றைய குடியைப்பற்றியான என் எழுத்துக்கு அவன் தான் ஹீரோ.

பிரபு சராசரியை விட நல்ல உயரம் அரசு போக்குவரத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறான், மனைவி மகள், மகன் என சந்தோசமான குடும்பத்துக்கு சொந்தக்காரன். வழக்கம் போல மீசையை முறுக்கிக்கொண்டு வண்டியை ஓட்டும் அவன் லாவகம் அனைவருக்கும் பிடித்தமானதே. ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவனுக்கு பணி. பணி முடிந்து இறங்கி வரும் போது உடல் சூட்டுக்காக அவ்வப்போது பீர் குடிக்க ஆரம்பித்தவன், பின் பீர் பித்தன் ஆனான்.

பிரவுவை எல்லோருக்கும் பிடிக்கும் அதனாலயே அவனுக்கு உண்டான நட்பு வட்டம் பெருகியது, நட்பு வட்டம் பெருக பெருக குடியும் பெருகிவிட்டது. அதற்கேற்றாற் போல் தினமும் கர்நாடக சென்று வரும் பணி கொடுத்ததால் தமிழ்நாடடு சரக்கு போர் அடிக்கவே தினமும் கர்நாடகாவில் இருந்து விதவிதமான புல்லால் மனுசன் புல்லாகிப்போனார். என்ன தான் கட்டுமஸ்தான உடல், வட்டசாட்டமான உடலாக இருந்தாலும் சாப்பாட்டிற்கு பதில் சரக்கை குடித்தால் எத்தனை நாளைக்குத்தான் தாங்கும் அந்த குடல். ஆனால் நம்ம பிரபு எம்புட்டு குடிச்சாலும் தினமும் சாப்பாட்டில் எருமைத்தயிர் சாப்பிடுவதை குறைக்கவில்லை.

எருமைத்தயிரைப்பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம் அதற்கு அம்புட்டு கொழுப்பு இருக்கு. கம்மஞ்சோத்தையும் தயிரையும் குடிச்சு வளர்ந்த உடலை எல்லாம் பார்த்தீங்கன்னா சும்ம தள தளன்னு இருக்கும். அழகான பொண்ணுகளை கிராமத்து பக்கம் பார்த்தோம் என்றால் நிச்சயம் தயிர் அந்த அழகிற்கு முக்கிய பங்காற்றி இருக்கும்... எதப்பத்தி பேசினாலும் இந்த அழகான பொண்ணுங்க வருவதை தவிர்க்க முடியவில்லை நட்புக்களே..

கிட்டத்தட்ட 20 வருடமாக குடி குடி என்று இருக்கும் சரக்கை எல்லாம் ஒரு கை பார்த்த பிரபு வயது ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமாக கிறங்கித்தான் போனான். 40 வயதுதான் ஆகிறது இப்போது முதலில் அவனுக்கு வந்தது மஞ்சள் காமாலை அப்போது பரிசோதனையில் தான் தெரிந்தது ஈரல் அழகிப்போகிவிட்டது என்று. கோவை அழைத்து வந்து 2 இலட்சம் செலவு செய்து காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து சென்றார்கள். பட் 20 நாள் சரக்கு சாப்பிடாமல் இருந்த நாக்கு சும்மா இருக்குமா மீண்டும் ஒரு கட்டிங்விட உடல் எல்லாம வீங்க, உச்சா வராமல் அப்படியே பெரிதாகிக்கொண்டு போனது.

இப்போது நாள் குறித்து விட்டார்களாம் இன்னும் ஒரு வாரம் தாங்குவதே அதிகம் என்று. எதோ பிரவுவின் தாத்தா சம்பாரித்த தோட்டம் அவனின் புள்ளைகளை காப்பாற்றி விடும், ஆனால் இந்த மாதிரி பிரபுக்கள் ஊருக்கு நாலஞ்சு பேராவது நிச்சயம் இருப்பாங்க, அவர்களின் குழந்தையை எல்லாம் யார் காப்பாற்றுவது. பிரவுவை கடைசியாக மருத்துவமனைக்கு எனது காரில் தான் ராத்திரி தூக்கிப்போட்டுக்கொண்டு போய் சேர்த்தோம், அப்போது மனிதன் பேசினார் என் புள்ளைங்கள படிக்க வெக்காம போறேனே என்று மனிதன் அழுதார். இப்போது வந்த வியாக்கனம் குடிக்கும் போது வந்துருக்கனும் அண்ணே என்றேன்.

உண்மை தான் என்று தன் குழந்தைகளை பார்த்து அழுது கொண்டே சென்றார், இன்னும் சில நாட்கள் எல்லோரையும் நிச்சயம் அழவைப்பார். மனைவி ஸ்டடியாக நின்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். இது தான் இனி அந்த குடும்பத்தின் நிலை.

இது யாருடைய தவறு...

இந்த பிரபு குடிகாரன் ஆனாதற்கு யார் காரணம்..

பிரபு படித்தவன் பட்டம் வாங்கியவன் அவருக்கு தெரியாதா குடித்தால் உடல்நலத்திற்கு கேடு என அப்புறம் ஏன் குடித்தார்??? 

அரசாங்கமே மது விற்றதால் குடித்தார் என்று சொல்ல முடியுமா ??

குடும்ப பிரச்சனைக்காக குடித்திருப்பாரா ???

ஒட்டுநர் பணியில் இருப்பதால் குடித்தால் தான் உடல் குளிர்ச்சி ஆகும் என குடிச்சிருப்பாரா??

இப்படி ஆயிரம் கேள்விகள் கேட்கலாம், என்னைப்பொறுத்த வரை திருடனாய் பார்த்து திருந்தினால் தான் உண்டு அது போலத்தான் குடிகாரனும் அவர்களாக பார்த்து நிறுத்தினால் தான் உண்டு. யாரும் ஊற்றிக்கொடுப்பதில்லை அவர்களாகவே அவர்களுக்கு ஊற்றி குடித்து தன் உயிரையும் மாய்த்துக்கொள்கின்றனர். 

ஒவ்வொரு பெக் அடிக்கும் போதும் தன் குழந்தை குடும்பம், மனைவி அப்பா அம்மா என்று ஒவ்வொருவரிடம் எவனக்கு பயம் இருக்குதோ அவன் குடியை விட குடும்பத்தின் நலனிலேயே அக்கரையாக இருப்பான்..

யாரையும் மதிக்காமல் அப்பா, அம்மா, மனைவி என குடிக்காகாது கொடுக்காதவர்களை தாக்கும் மனிதர்களும் நம்ம ஊரில் நிறைய.

இவர்களாக பார்த்து திருந்தினால் தான் உண்டு....

பிரபுவின் நிலை நமக்க வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் போதுதான் குடிகாரர்களின் எண்ணிக்கை குறையும்... அதுவரை பல பிரபுக்கள் உருவாகிக்கொண்டு தான் இருப்பார்கள்...


6 comments:

  1. Though I agree that individuals must change, when the poison is sold by the govt., the slight guilty consciousness or inhibition in individuals vanish.

    ReplyDelete
  2. பல ‘பிரபு’க்கள் உயிரை விட்டும் இன்னும் சில பிரபுக்கள் திருந்தாமல் இருப்பது வருத்தமே! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  3. இப்போது வரைக்கும் இது கட்டுரையா இல்லை சிறுகதையா என்ற குழப்பத்தில் இருக்கிறேன்.. ஒரு சிறுகதைக்கு உண்டான களம், அப்படியே முடித்திருக்கலாம் :-)

    ReplyDelete
  4. நல்ல கட்டுரை...
    குடிமக்கள் திருந்தணுமே...?

    ReplyDelete
  5. விற்பது தவறு என்றாலும் பெருமளவு கட்டுப் படுத்துவதே நல்லது, யார் விற்றாலும். இப்போது அரசே விற்பதால் கட்டுப்படுத்துவது எளிது. சரக்கு விற்று லாபம் சம்பாதிப்பதே குறிக்கோள். அரசு அந்த குறிக்கோளிடம் இருந்து விலகி வரலாம். ஆனால் தனியார் விற்பதாக இருந்தால் அது நடக்காது.

    எனவே.. அரசே நடத்துவது நல்லது. அதனால் பெருமளவு கட்டுப் படுத்திவிடலாம். பண்ண வேண்டுமே!

    ReplyDelete
  6. http://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_26.html?s
    வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete