Tuesday, May 11, 2010

முதல்நாள் திருவிழாவும் சங்கவியும்.....

ஒரு வாரத்திற்குப்பின் இன்று தான் வலைப்பக்கம் வர முடிந்தது. கடந்த ஐந்து நாட்களாக திருவிழா சந்தோசத்தில் இன்று தான் மீண்டு அலுவலகம் வந்தேன். கடந்த செவ்வாய் இரவு திருவிழா தொடங்கியது செவ்வாய் இரவு 9 மணியவில் எங்கள் ஊரை சென்றடைந்தேன். ஊர் முழுவதும் விளக்குகள் எரிந்து திருவிழா தொடங்கியதற்கான ஒரு சந்தேசாத்தில் இருந்தது.

முதல் நாள்

திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக சாமி ஊர்வலம், வானவேடிக்கை மற்றும் கரகாட்டம், நையாண்டி மேளம், குறவன் குறத்தி ஆட்டம். எங்கள் ஊரில் எனது நண்பர்களை சந்தித்து நலம் விசாரித்த பின் சாமி ஊர்வலம் வர இரவு 12 மணி ஆகும் என்பதால் வெளியூரில் இருந்து என்னைப்போல் வந்த நண்பர்களுடன் ஊரைச்சுற்றி முடித்து விட்டு சாமி ஊர்வலத்தை எதிர்பார்த்து காத்து இருந்தோம். எங்கள் ஊர்த்திருவிழாவை இப்பதிவின் மூலம் பதிவதில் மிகவும் சந்தோசப்படுகிறேன். முதல் நாள் நிகழ்ச்சிகள் மட்டும் எனது மொபைலில் படம் எடுத்தேன் அடுத்த இரண்டு நாட்கள் திருவிழாவில் ஆட்டம் போட்டதால் வீடியோ எடுக்க இயலவில்லை. ஊர் சார்பாக எடுத்த வீடியோ எனக்கு வரும் சனிக்கிழமை தான் கிடைக்கும் கிடைத்த உடன் உங்களுடன் பகிர்கிறேன்..

எங்கள் கிராம திருவிழாவை நீங்களும் பார்த்து ரசியுங்களேன்....













17 comments:

  1. இது அற்புதத்திருவிழா.. ஆனந்தமடைகிறோம் சங்கவி... நன்றி

    ReplyDelete
  2. ///////ஊர் சார்பாக எடுத்த வீடியோ எனக்கு வரும் சனிக்கிழமை தான் கிடைக்கும் கிடைத்த உடன் உங்களுடன் பகிர்கிறேன்../////////

    பகிர்வுக்கு நன்றி நண்பரே !
    உங்களின் வீடியோவிற்காக காத்திருக்கிறேன் !

    ReplyDelete
  3. சீக்கிரமா ... திருவிழா படத்தை பதிவேற்றம் செய்யுங்க சங்கவி.

    ReplyDelete
  4. பகிர்விற்கு நன்றி..
    என்ன திருவிழான்னு சொல்லல..

    ReplyDelete
  5. வீட்டில போய் பார்க்கிறேன் பங்காளி!

    பிரபாகர்...

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி நண்பரே !

    ReplyDelete
  7. திருவிழா நிகழ்ச்சிகள் பார்த்த போது, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குதுங்க. வீடியோ பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  8. உங்கள் ஊர்த்திருவிழாவுக்கு எங்களையும் அழைத்துச் சென்றதற்கு நன்றி! அருமையான பகிர்வு!

    ReplyDelete
  9. நல்ல இருக்குங்க. இப்படி பாத்து ரெம்ப நாள் ஆச்சு. ஊருக்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு. பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  10. எங்கள் ஊர் திருவிழாவை ஞாபகப் படுத்திவிட்டீர்கள்.

    ReplyDelete
  11. உங்க ஊரு பேரு எழுதவே இல்லையே பாஸ் ..

    எனது வலைத்தளம் மாற்றப்பட்டு உள்ளது. நேரம் இருப்பின் வந்துசெல்லவும்.

    http://romeowrites.blogspot.com/

    ReplyDelete
  12. நாங்களும் திருவிழாவில் நின்றதுபோல ஒரு உணர்வு
    தந்தீர்கள் சங்கவி.நன்றி.

    ReplyDelete
  13. நேரில் பார்த்ததுபோல இருக்குது.

    பகிர்வுக்கு நன்றி சங்கவி!

    ReplyDelete
  14. எங்களையும் கூட்டிட்டு போயிருக்கலாம்....திருவிழா என்றாலே மனசில் மகிழ்ச்சி களைகட்ட தொடங்கிவிடும்...

    ReplyDelete
  15. entha urr nanba?r u tirumayam district is it?

    ReplyDelete
  16. sorry nanbara! r u tirumayam taluka is it?

    ReplyDelete