Sunday, May 2, 2010

கம்பத்து ஆட்டமும் சங்கவியும்...

மே தினத்தை முன்னிட்டு அலுவலகம் மூன்று நாட்கள் விடுமுறை ஊரில் திருவிழா காலமானதால் நிறைய சந்தோசத்துடன் இருந்தேன் ஆனால் என் மனைவிக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை இல்லை அன்று தான் கல்லூரி இவ்வருட கடைசி வேலை நாள் என்று கூறியதும் என்ன செய்வது சனிக்கிழமை போகலாம் என முடிவெடுத்து சனிக்கிழமை காலை புறப்பட்டு ஊர் சுற்றி மாலை 5 மணியளவில் மாமா வீட்டிற்கு சென்று மனைவியை விட்டு விட்டு சந்தோசத்துடன் கம்பத்து ஆட்டம் ஆடலாம் என எங்கள் கிராமத்திற்கு மாமாவீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றேன்.

செல்லும் வழியில் சாலைகள் செப்பனிட்டுக்கொண்டு இருந்தார்கள் பரவாயில்லை சாலைகள் நன்றாகத்தான் இருந்தது. 20 நிமிட பயணத்திற்குப்பின் எங்க கிராமத்திற்கு சென்று விட்டேன். எப்பவும் ஊரில் திருவிழா நேரங்களில் மாலை 8 மணியளவில் கோவிலில் பூஜை நடைபெறும். அதற்குச் சென்று விடலாம் என தயாராகி சென்றேன். இடையில் என் பால்ய நண்பர்கள் எல்லாரையும் சந்தித்துவிட்டு எல்லோரும் இன்று ஆட்டம் ஆடலாம் ரொம்ப நாள் ஆச்சு நாம் எல்லாம் ஆடி என்று கோயிலுக்கு சென்றோம் அங்கு பூஜை முடிந்து எங்க ஊரில் உள்ள எங்களுக்கு அடுத்த தலைமுறை தம்பிகள் எல்லாம் அண்ணா வாங்க இன்றைக்கு ஆட்டம் களை கட்டும் மேளம் அடிக்கறர் இன்று பாடு திண்டாட்டம்தான் வாங்க வாங்க எங்க கூட்டத்தை அழைக்க நாங்க எல்லாம் ஸ்ரீ சக்தி மாரியம்மனை தரிசித்து விட்டு ஆட்டம் போட தயாராக இருந்தோம்.

எங்க நண்பர்களில் சில பேர் மனைவி சகிதமாக வந்து இருந்தார்கள். அவர்களை எல்லாம் சந்தித்து விட்டு எப்படி இருக்கறீர்கள் என்று விசாரித்துவிட்டு. ஆட்ட களத்திற்கு சென்றோம். என் நண்பன் பழனியை அழைத்து என் மொபைலை கொடுத்து இதில் வீடியோ கிளிப்பிங்ஸ் எடுடா எனக்கூறி அவனிடம் கொடுத்துவிட்டு நாங்கள் ஆட்டத்திற்கு சென்றோம் வரிசையாக நண்பர்களும் எங்கள் தம்பிகளும் நின்று இருந்தார்கள்.

எனக்கு முதல் வரிசையிலேயே இடம் கொடுத்தனர் அனைவரும் வரிசையாக நின்று முதல் அடி ஆட்டத்தை தொடங்கினோம். ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு 50 பேர் ஆட்டம் ஆட ஆட்டம் களை கட்டியது. முதல் அடி ஆட்டம் முடிந்தவுடன் தப்பட்டையை தீயில் காய்ச்ச செல்லுவார்கள் அப்போது பழனியிடம் இருந்த மொபைல் வீடியோவை வாங்கி உள்ளே சென்று பார்த்தால் வெறும் இருட்டில் உருவம் மட்டும் ஆடுகிறது. எப்படி எடுத்தாய் என்று பார்த்தால் எங்களுக்கு பின்புறம் வெளிச்சம் நாங்கள் 50 பேர் ஆடியதில் சுத்தமாக வெளிச்சம் மறைந்து விட்டது. சந்தோசம் பொசுக்கென்று போய்விட்டது. என்ன செய்வது போனால் போகட்டும்.

அடுத்த ஆட்டத்திற்கு தயாராக ஆனோம், இரண்டாம், மூன்றாம் அடி ஆட்டந்தான் ரொம்ப அழகாக இருக்கும் இரண்மாம் அடி ஆட்டம் ஆடத்தொடங்கி நன்கு வேகமாக ஆடினோம் நாங்கள் ஆடியது யார் கண் பட்டதோ தெரியவில்லை வானத்தில் இருந்து மழை பொத்துகிட்டு ஊத்தத்தொடங்கியது. தாளம் தட்டுபவர்கள் இது தான் சமயம் என எஸ்கேப். அப்புறம் என செவித்தில் அடித்த பந்து போல வீட்டிற்கு வந்தேன். ஞாயிறு காலை மீண்டும் கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு மாலை கோவை வந்தாச்சு... வழக்கம் போல் அலுவலகம்...

18 comments:

  1. //மொபைல் வீடியோவை வாங்கி உள்ளே சென்று பார்த்தால் வெறும் இருட்டில் உருவம் மட்டும் ஆடுகிறது. எப்படி எடுத்தாய் என்று பார்த்தால் எங்களுக்கு பின்புறம் வெளிச்சம் நாங்கள் 50 பேர் ஆடியதில் சுத்தமாக வெளிச்சம் மறைந்து விட்டது.//

    சங்கவி,

    நல்லவேளை, அவரு புண்ணியத்துல நங்க எல்லாம் தப்பிச்சிட்டோம்.

    ReplyDelete
  2. ஊர்த்திருவிழாவுக்குப் போய் வருவதே ஒரு அலாதியான அனுபவம் தான்! பல புன்னகை சிந்தும் முகங்களைப் பார்த்துப் பூரிக்க முடியுமல்லவா? நல்ல பகிர்வு!

    ReplyDelete
  3. நல்லா இருந்தது பயணம்.

    ReplyDelete
  4. ஆஹா.. கம்பத்து வட போச்சே.. பரவாயில்ல, அடுத்த திருவிழாவுக்காவது சுட்டுக்கிட்டு வாங்க :-))

    ReplyDelete
  5. வாங்க கண்ணன்...

    கவலைப்படாதீங்க இன்னும் திருவிழா முடியலை இன்னும் 5 நாட்கள் இருக்கு, இது சும்மா விசிட் தான்....
    நீங்க எங்க திருவிழாவப் பார்த்தே ஆகனும் தப்பிக்க விடமாட்டமல்ல...

    ReplyDelete
  6. வாங்க சேட்டை....

    ஊர்த்திருவிழா இப்பதான களை கட்டியிருக்குது இனி ஒவ்வொரு நிகழ்வையும் பதிவாக்கி விட வேண்டியது தான்.....

    ReplyDelete
  7. வாங்க ஸ்டார்ஜன்....

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  8. வாங்க அமைதிச்சாரல்....

    கம்பத்து வடை போனால் என்ன திருவிழா வடையும், திருவிழா பச்சமாவும் உங்களுக்காக காத்திருக்குங்க....

    ReplyDelete
  9. நீங்களெல்லாம் கொடுத்துவச்சவங்க.
    சந்தோஷமாயிருக்கு பதிவு.

    ReplyDelete
  10. //''சந்தோசம் பொசுக்கென்று போய்விட்டது. என்ன செய்வது போனால் போகட்டும்.''//
    அனுபவம் பேச்சு நடையில் சுவாரசியமாக இருந்தது.

    ReplyDelete
  11. nalla pathivu.. mobile camerala ithu problem . pesama oru digital cangidavendithana vilai ippa kuraivu

    ReplyDelete
  12. நேரில் வந்து பங்காளி ஆடுவதை வீடியோவில் பார்க்கவேண்டும் என சொன்னதற்கு இப்பவே மழை, லைட்டிங் என சல்ஜாப்பா? ம்... பங்காளி ஆடுவதைப்பார்த்து ஆகாயமே பொத்துக்கொண்டு அழுது ஊருக்கெல்லாம் எவ்வளோ நன்மை பாருங்க!

    நம்ம ஊர்லயும் ஒரு ஆட்டம் போட்டிடுவோமா?

    பிரபாகர்...

    ReplyDelete
  13. VISIT MY BLOG
    www.vaalpaiyyan.blogspot.com

    ReplyDelete
  14. சூப்பர்! போட்டோஸ் எங்கே?

    ReplyDelete
  15. சூப்பர்... பழைய திருவிழா நாள் நினைவுகளை கொண்டு வந்துடீங்... அண்ணா உங்களுக்கு கோயம்புத்தூர்ங்களா... நமக்கும் அங்கதானுங்க.... ரெம்ப சந்தோஷம்

    ReplyDelete
  16. அனுபவம் பேச்சு நடையில் சுவாரசியமாக இருந்தது.

    ReplyDelete
  17. திருவிழான்னாலே சந்தோஷம்தான். கம்பத்து ஆட்டம்னா எப்படி ஒயிலாட்டம் மாதிரியா?

    ReplyDelete