Thursday, April 29, 2010

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி


நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.

இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால் முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

  முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும்தான்.
முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது.
ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன்   தோற்றமளிக்க   தேரையர்   என்ற   சித்தர்  தான்  எழுதிய 
தேரன் கண்ட உண்மை என்னும் நூலில்

மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்

பொருள்
முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர்.
அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.

நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.

ஒரு நெல்லிக்கனியில் 482.14 (மய்ண்ற் ர்ச் ள்ன்ல்ங்ழ் ர்ஷ்ண்க்ங் க்ண்ள்ம்ன்ற்ஹள்ங்)  என்னும் அதிக சக்தி வாய்ந்த ச்ணற்டிணிதுடிஞீச்ற்ஞு என அழைக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.

ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம்.

சங்க காலம் தொட்டு நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றி பாடி உள்ளனர்.

மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது.

100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:


நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது.
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.

இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

வாய்ப்புண் தீர

நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

பித்தம் குறைய

15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

இரத்த கொதிப்பு நீங்க

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

கண் நோய்கள் தீர

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.


31 comments:

  1. "muthor sollum muthu nellikaiyum munnae kasakkum pinnae inikum "-thanks for sharing ,good work done

    ReplyDelete
  2. /////ஒரு நெல்லிக்கனியில் 482.14 (மய்ண்ற் ர்ச் ள்ன்ல்ங்ழ் ர்ஷ்ண்க்ங் க்ண்ள்ம்ன்ற்ஹள்ங்) என்னும் அதிக சக்தி வாய்ந்த ச்ணற்டிணிதுடிஞீச்ற்ஞு என அழைக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.//////



    ...... secret code???? ha,ha,ha,ha....
    Very nice blog post! :-)

    ReplyDelete
  3. நெல்லிக்கனி உண்மையிலேயே நல்ல பயனுள்ளது. இங்கே அவித்த நெல்லிக்கனியை சர்க்கரைப்பாகில் ஊறவைத்து சாப்பிடுவோம். டேஸ்டாக இருக்கும். நெல்லிக்காய் ஊறுகாய் ஸ்ஸ்ஸ்ஸ்.....

    ReplyDelete
  4. நல்ல பதிவு, இனி தொடர்கிறேன்

    ReplyDelete
  5. மிக நல்ல பதிவு... படிக்கும்போதே நாக்குல எச்சில் ஊறுதுங்க... அதன் மருத்தவ குணங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி.....

    ReplyDelete
  6. வாங்க சங்கர்....

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  7. வாங்க ரோகிணிசிவா....

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  8. வாங்க சித்ரா வாங்க...

    சீக்ரெட் கோடு கண்டுபிடிச்சீட்டிங்களா?

    ReplyDelete
  9. வாங்க அமைதிச்சாரல்....

    நெல்லிக்கனியின் ஊறுகாய்க்கு தனிப்பதிவே போடலாம்....

    ReplyDelete
  10. வாங்க செந்தில்....

    முதன் முறையாக வந்துள்ளீர்கள் தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  11. வாங்க பாலாசி...

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  12. சங்கவி,

    நீங்க ‘மூலிகை மருத்துவரா’?

    இயற்கை மருத்துவம் பற்றி எக்கச்சக்கமான தகவல் எழுதிட்டு வறிங்களே..!

    எனக்கும் ஆசை வந்துடுச்சி...எப்பவும் இளமையாவே இருக்கனும்னு.!

    ReplyDelete
  13. திரும்பவும் ஒரு தேவையான பதிவு சங்கவி.ஒரு நெல்லிக்காய்ல இவ்ளோ இருக்கு பாருங்க.அதாலதான் அப்பவே ஒளவையார் அதியமானுக்குக் கொடுத்தாங்களாம் அவர் எப்பவும் சுகமா இளமையா இருக்கணும்னு !

    சங்கவி பதிவுக்குப் பதிவு சத்ரியனுக்கு ஆசை அதிகமாயிட்டே போகுது !

    ReplyDelete
  14. வாங்க கண்ணன்...

    நான் மூலிகை மருத்துவர் எல்லாம் இல்லீங்க...

    தினமும் நாம் விரும்பி உண்ணும் உணவில் என்ன இருக்கு என பார்த்தால் இவ்வளவு தகவல்கள்...

    நீங்க எல்லாரும் எப்பவும் இளமையா இருக்கனும் என தகவல்களை அள்ளித்தருகிறேன்....

    ReplyDelete
  15. வாங்க ஹேமா...

    நாம் எந்தப்பொருளை சாதாரணமாக நினைக்கிறோமோ அதில் தான் அதிக பயன் இருக்குறது....

    சத்திரியன் யூத்துங்க அதானல அவருக்கு ஆசை அதிகமாகிவிட்டது...

    ReplyDelete
  16. பங்காளி,

    இளமைக்கு நெல்லிக்கனி, இது போன்ற இடுகைக்கு சங்கவி! சீக்ரட் கோடோடு இடுகை அருமை. தொடருங்க! ரகசியத்த அப்பால நமக்கு சொல்லிடுங்க!

    பிரபாகர்...

    ReplyDelete
  17. பெருநெல்லியைச் சாப்பிட்டு விட்டு, ஒரு மடக்கு தண்ணீர் குடித்தால் தண்ணீரும் தித்திக்கும். சிலருக்கு அது பிடிக்காது; ஆனால், எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பதிவும் அது போலவே தித்திப்பு!

    ReplyDelete
  18. உபயோகமான தகவல்கள். நன்றி!!

    ReplyDelete
  19. சிறப்பான தகவல்கள் நண்பரே. நீங்கள் கூறியுள்ளதைப் போல நாம் சாதாரணமாக நினைக்கும் பொருட்களில் தான் சத்துகள் அதிகமாக இருக்கிறது.

    தொடருங்கள்!!

    ReplyDelete
  20. மிக மிக பயனுள்ள தகவல்.... மிக்க நன்றி.

    முதல் படத்தில்...... நெல்லி இலை இப்படித்தான் பெரிசா இருக்குமா? ஏன்னா நான் மாட்டு பொங்கலுக்கு மாலைக்கட்ட... நெல்லிகொத்து ஒடித்து வந்தேன்..... அந்த மரத்தின் இலை புளியமரத்தின் இலைப்போல் இருந்தது.....ஆனா நெல்லி காய் படத்தில் உள்ளது போலதான் இருந்தது...... மிக குழப்பமாக உள்ளது.

    //’மனவிழி’சத்ரியன்...
    எனக்கும் ஆசை வந்துடுச்சி...எப்பவும் இளமையாவே இருக்கனும்னு.!//

    நீயெல்லாம் மூட்டை மூட்டையா தின்னாலும் 45 வயச 45ன்னுதான் காட்டும்.... முதல்ல பள்ளிகூடத்தில எடுத்த புகைப்படத்தை எடுத்து விட்டு புது புகைப்படதை போடு மாம்சு//

    சங்கவிக்கு மே தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. நல்ல பதிவு. கடந்த ஐந்து வருடமாக நான் திரிபலா சூரணம் சாப்பிடுகிறேன்.சைனஸ் தலைவலிக்கு மிகசிறந்த மருந்து இது.

    ReplyDelete
  22. எப்போதும் போல உபயோகமான பதிவு... நன்றி

    ReplyDelete
  23. நெல்லிக்காய் நல்லதெனத் தெரியும். எவ்வளவு நல்லது எனத் தெளிவு செய்கிறது பதிவு. நன்றி.

    ReplyDelete
  24. மிக நல்ல பதிவு
    vazhga valamudan

    ReplyDelete
  25. nalla payanula takaval!

    ReplyDelete