Friday, April 9, 2010

அவள் என் தோழி....

அவளும் நானும் பக்கத்து பக்கத்து வீடுதான் எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம் அவள் வீட்டில் நான் சாப்பிட அவள் என் வீட்டில் சாப்பிட என இரு குடும்பத்து உறவுகளும் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. மாதம் ஒரு முறை எங்க ஊர் திரையரங்கிற்கு எல்லாரும் செல்வோம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு மினி சுற்றுலா பக்கத்தில் இருக்கும் மேட்டூர் அணை, மதேஸ்வரன் மலை, கோபி, கொடிவேரி, பண்ணாரி அம்மன் கோயில், பவானி சங்கமேஸ்வரன் கோயில் என எங்கு சென்றாலும் அவளுடன் செல்வதற்குத்தான் எனக்கும் என்னுடன் செல்வதற்கு அவளுக்கும் விருப்பம்.

அவள் வீட்டில் என்ன சாப்பிட செய்தாலும் எனக்கு அவர்கள் அம்மா தருகிறார்களோ இல்லையோ இவள் எனக்காக எடுத்துக் கொண்டு வந்து நான் சாப்பிடுவதை பார்க்கும் போது தான் அவளுக்கு ஏக திருப்தி. அவள் சொந்த ஊர் கன்னியாகுமரி அவள் அப்பா இங்க அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். அவர்கள் இங்கு குடிவந்து 3 வருடங்கள் ஆகின்றது. 3 வருடம் பக்கத்தில் இருப்பதால் எங்கள் குடும்பமும் அவர்கள் குடும்பத்தாரும் பக்கத்து நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

நான் தினமும் தூங்கி எழுந்ததும் எப்ப எங்க வீட்டு கதவு திறப்பார்கள் நான் அவளை பார்க்கலாம் என படுக்கையில் படுத்துக்கொண்டே கதவைப் பார்ப்பேன். அப்பா குளித்து முடித்து கடைக்கு போகும் நேரம் காத்துக்கொண்டு இருப்பேன் அப்பா சென்றதும் அவள் வீட்டு வாசலுக்கு வந்து பார்ப்பேன் அப்போது தான் எனக்கு விடியும். ஊர்த்திருவிழா சமயங்களில் அவள் கையை கோர்த்துக்கொண்டு கோயிலைச் சுற்ற தூரி ஆடும் சுகமே தனிதான்.

நாங்கள் இருவரும் இதுவரை சண்டையிட்டதே இல்லை எங்களுக்குள் கோபமும் வாராது. எப்போதும் எங்களுக்குள் சிரிப்புதான். எங்களைப்பார்த்தால் அவள் மாமா மகனுக்கு எப்பவுமே கோபம் தான் வரும். இதனால் அடிக்கடி என்னுடன் சண்டைக்கு வருவான் அந்த மண்டையன் என்ன செய்ய என் அவளுக்காக நான் இதை எல்லாம் யாரிடமும் சொல்ல மாட்டேன்.

அவள் இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் அவள் இல்லை என்று சென்று கொண்டு இருக்கும் தருவாயில் வந்து விழுந்தது இடி அவள் அம்மாவிற்கும் வேலை கன்னியாகுமரியிலேயே கிடைத்து விட்டது என்று. அவள் அப்பாவிற்கு எங்க மாமா மூலமாக அதே ஊருக்கு மாற்றுதல் வாங்கி கொடுத்து விட்டார். அவள் குடும்பத்துடன் பிரிந்து செல்லும் வேளையில் எங்கள் வீட்டில் உள்ளவர்களும் அவர்களும் அழுதனர். அவள் குடும்த்துடன் ஒரு புதன்கிழமையில் ஊருக்கு செல்ல ஆயுத்தம் ஆனார்கள். அன்று காலை நான் அவர்கள் குடும்பத்தில் எல்லாரிடமும் சிரித்து விட்டு அவள் கையைப்பற்றி டாடா சொல்லிவிட்டு வந்த அந்த புதன் கிழமை தான் எனக்கு வாழ்வில் மறக்க முடியாத நாள் ஆம் அன்று தான் நான் முதன் முதலாக ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதல் வகுப்புக்கு முதல் நாள் வகுப்பிற்கு சென்ற நாள்.

அதன் பின் அவளை நான் பார்க்கவே இல்லை, கொஞ்ச நாள் அவர்கள் அம்மாவும் அப்பாவும் கடிதம் எழுதுவார்கள் அவள் அம்மா பண்ணாரி மாரியம்மனின் தீவர பக்தை அவர்கள் பண்ணாரி வந்து விட்டு எங்க வீட்டுக்கு வரும் நேரத்தில் நான் விடுதியில் தங்கியிருந்தால் அவளை பார்க்க இயலவில்லை.

கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப்பின் அவள் அம்மாவும் அப்பாவும் கோயிலுக்கு வந்து விட்டு எங்க வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள் எப்படி இருக்கறீர்கள் என என் அம்மா விசாரிக்கும் போது அவள் அப்பா ரிட்டேர் ஆகிவிட்டார் எனவும் அவள் அம்மாவிற்கு இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது என்று கூறிவிட்டு. மகள் எப்படி இருக்கிறாள் என்று கேட்டதும் கடந்த 2004ம் ஆண்டு வந்த சுனாமியில் இன்ஜினியரிங் மேல் படிப்பு படித்துக்கொண்டு இருந்த அவள் கடலோடு காலமாகிவிட்டாள் என கூறி சோகத்துடன் என்னைப்பற்றியும் விசாரித்துவிட்டு சென்று இருக்கிறார்கள்.

இதை என்னிடம் அம்மா சொன்னதும் தூக்கம் கலைந்து துக்கம் நிறைந்தது என் மனது என்ன சொல்லது என் முதல் தோழி என் குழந்தைப் பேச்சை நானும் அவள் குழந்தைப்பேச்சை அவளும் புரியாத அந்த வயதில் கேட்ட என் அவள் இன்று இல்லை இதை நான் கேட்காமல் இருந்திலுருந்தாலும் கூட என்மனது வேதனையில் இருந்திருக்காது.

என் முதல் தோழியை நான் ஞாபகம் அறிந்து பார்த்ததும் இல்லை அவள் பேச்சை கேட்டதும் இல்லை ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அவள் நினைவு...

அவள் அவள் தான் என் தோழி இலக்கியா.........

35 comments:

  1. ச்சே வருத்தமா இருக்கு.
    சுனாமி :-(

    ReplyDelete
  2. படித்ததும் பகீரென இருந்தது நண்பா!

    பிரபாகர்...

    ReplyDelete
  3. //அவள் அவள் தான் என் தோழி இலக்கியா.........//

    இலக்கிய நட்பு.

    படித்த எனக்கே மனசு கனக்குது...! வாழ்வை அதன் திசையிலேயே எதிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

    உங்களின் ‘அவளு’க்காக ...பிரார்த்தனைகள் மட்டுமே!

    ReplyDelete
  4. குழந்தைப்பருவ நட்பின் பிரிவை அழகா சொல்லியிருக்கிறீர்கள். சுனாமி.. :-((

    ReplyDelete
  5. சுனாமி விட்டுச் சென்ற ஆறாத வடுகளில் ஒன்றாக இதுவும்:(!

    ReplyDelete
  6. ரொம்ப கஷ்டமாதாங்க இருக்கு... கலங்குகிற உங்கள் நெஞ்சத்துக்கு என் ஆறுதல்கள்....

    ReplyDelete
  7. இத்தனை காலமாய் உங்களுக்குள் நட்பாய் வாழ்ந்த அந்த தோழியின் பிரிவின் வலியை எதார்த்தமாய் பதிவு செய்திருக்கிறீர்கள்..

    ReplyDelete
  8. சுகமான நினைவென படித்தேன்..ஏதோ வலி நெஞ்சுக்குள்...

    ReplyDelete
  9. நெகிழ்ச்சியான பதிவு! நெஞ்சைத்தொட்டது!!

    ReplyDelete
  10. இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதி..தீரா வலி..

    ReplyDelete
  11. மிகவும் வருத்தமும், துயரமும் நிறைந்த சம்பவம்.

    ReplyDelete
  12. good remembrance ,
    may be her soul is some where to listen this, and be happy that some one remembers her after such long time ,
    let her soul rest in peace
    -with prayers

    ReplyDelete
  13. நெஞ்சைத் தொட்ட நெகிழ்ச்சியான பதிவு!!

    ReplyDelete
  14. \\இதை நான் கேட்காமல் இருந்திலுருந்தாலும் கூட என்மனது வேதனையில் இருந்திருக்காது.\\
    இல்லை என்பதை விட எங்கோ இருக்கிறாள், என்பதாவது நிம்மதியாயிருந்திருக்கும்.
    நெகிழ்ச்சியான இடுகை.

    ReplyDelete
  15. Our sincere prayers to you and to your friend's family for peace and comfort.

    ReplyDelete
  16. மனசு வலிக்குதப்பா ....

    ReplyDelete
  17. தெரியாமல் இருந்திருந்தால் நினைவில் வாழ்ந்திருப்பார் தோழி:((

    ReplyDelete
  18. உங்கள் பதிவுகளை ஆவலாய் படிக்க வந்து நெகிழ்ச்சியாய் போனது..

    :(

    ReplyDelete
  19. சுனாமிக் கொடூரன்...செய்த பாவங்களுக்குதான் அலைகள் மீண்டும் மீண்டும் வந்து மனிதன் காலில் விழுகின்றன போலும்..

    ReplyDelete
  20. வாங்க கபீஷ்....

    வாங்க பிரபாகர் நண்பா....

    வாங்க சத்ரியன்....

    வாங்க ராதாகிருஷ்ணன்

    வாங்க அமைதிச்சாரல்....

    தங்கள் வருகைக்கும் பிராத்தனைக்கும் நன்றி.....

    ReplyDelete
  21. வாங்க ராமலஷ்மி...

    வாங்க இரசிகை....

    வாங்க பாலாசி....

    வாங்க பிரேமா மகள்....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  22. வாங்க தமிழரசி....

    வாங்க சேட்டை...

    வாங்க கண்ணகி

    வாங்க ராதாகிருஷ்ணன்

    வாங்க ரோகிணி சிவா....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  23. வாங்க மேனகசத்யா...

    வாங்க அம்பிகா...

    வாங்க ஸ்ரீ...

    வாங்க சித்ரா வாங்க....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  24. வாங்க ஜெரி சார்...

    வாங்க செந்தில்வேலன்....

    வாங்க வானம்பாடிகள் ஜயா...

    வாங்க சூர்யா...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  25. Sinna vayasu..aazamaana natpu.!

    ReplyDelete
  26. உண்மைதான் படித்ததும் பகீரென்றுதான் இருந்தது சங்கவி

    ReplyDelete
  27. அய்யோ இப்படி முடியும்னு நினைக்கலை..

    ReplyDelete
  28. இறுதியில் மனம் துயர்கொண்டது.

    ReplyDelete
  29. முதல் தோழி எப்பவும் மனசுல ஒரு மூலைல இருக்கற நினைவு தான். நெகிழ்ச்சியான பதிவு

    ReplyDelete