Wednesday, April 21, 2010

இளமையாக வாழ இளநீர் சாப்பிடுங்க....


கோடை வெய்யிலின் தாக்கம் இந்த வருடம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது கோடை வெப்பத்தை போக்க கம்மங்கூழ், மோர் சாப்பிட்டால் உடல் சூட்டை தணிக்கும் என என் முந்தைய பதிவுகளில் சொல்லியிருந்தேன் அத்துடன் இளநீரையும் சேர்த்துக்கொள்ளலாம். இளநீர் இயற்கை தந்த கொடை என்றும் கூறலாம்.இளநீர் கோடை காலத்தில் மட்டுமல்ல எப்போது சாப்பிடக்கூடிய பொருள்.

இளநீர்:
தென்னைமரத்தின் இளங்காயில் உள்ள நீரைக் குறிக்கும். எனினும், இளந்தேங்காயையும் குறிக்கும். இளந்தேங்காய் மட்டை உரிக்கும் முன் பச்சை நிறத்தில் காணப்படும். சில வகைத் தென்னைமரங்களில் காவிநிறத்தில் காய்கள் காய்க்கும். அவை செவ்விளநீர் எனப்படுகின்றன. புறமட்டையை உரிக்காமல் மட்டையோடு உள்ள இளந்தேங்காயின் நுனியைச் சீவி உள்ளிருக்கும் நீரை உறிஞ்சிக் குடிப்பர். தேங்காய் முற்றாமல் இளசாய் இருப்பதால் அரிவாள் முதலியவற்றால் சீவ இயலும். நீரைப் பருகியவுடன், இளநீர்த் தேங்காயைப் பிளந்து முற்றாது இருக்கும் இளகிய பருப்பை உண்பர். இந்த முற்றாத இளகிய பருப்புக்கு வழுக்கை என்று பெயர். 


இளநீர் மனித உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானதொரு இயற்கை உணவாகும். கோடைக்காலத்தில்  வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க இது மிகவும் விரும்பி அருந்தப்படுகிறது. இளநீர் நன்கு முற்றி காய்ந்தவுடன் அதிலிருந்து தேங்காய் எடுக்கப்படுகிறது. காய்ந்த இளநீருக்கு நெற்று என்று பெயர்.

இளம் தேங்காயில் உள்ள சுத்தமான நீர் இளநீர். இது சிறிது பால்கலந்த நீர்போன்ற வெண்மை நிறமுடையது. சிறிது துவர்ப்பாயும், தித்திப்பாயும் இருக்கும். தூய கலப்படமற்ற சத்துகள் நிறைந்த இளநீர் தாகத்தைத் தீர்க்கும். இளநீர் இளமையைக் காக்கும் அரிய பானமாகும். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான் இளமையும் பொலிவும் உடலிலும் உள்ளத்திலும் பிறக்கும். இளநீர் அருந்தியதும் நமக்கு ஒருவித உற்சாகம் பிறக்கிறது. காரணம் 100 கிராம் இளநீரில் 312 மில்லிகிராம் பொட்டாசியமும் 30 மில்லி கிராம் மக்னீசியமும் உள்ளன. இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக எலும்புகளுக்கும் தசைகளுக்கும் ஒருவிதப் புத்துணர்ச்சியையும் வலுவையும் ஊட்டி விடுகின்றன. இதனால்தான் இளநீர் அருந்தியதும் நமக்குப் புதுத்தெம்பு கிடைக்கிறது.
காலையில் இளநீர் சாப்பிடுவது மிக மிக ஆரோக்கியமான பானமாகும். உடலுக்குச் சத்தும் தந்து ஊக்கமும் தரும் இனிய மருந்து இது. மதுபான அடிமைகள் இளநீருக்கு அடிமையானால் அவர்கள் ஆரோக்கியம் மிக்க மனிதராகத் திகழ்வார்கள். குழந்தைகள் இதை அருந்தினால் ஒடுங்கிப் போகாமல் ஓரளவு சதைப் பற்றுடன் ஆரோக்கியமாக வளருவார்கள். இளநீரில் உள்ள சர்க்கரையை உடல் உடனடியாகக் கிரகித்துக் கொள்கிறது.

இளநீர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:

உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாதுஉப்புக்களைச்சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும்இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது.

மூல நோயாளிகள், நாட்பட்டசீதபேதி, ,ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.

பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச் சமமாகும்.

நீர்க்கடுப்பு மே, ஜூன் ஆகியஇரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் சிறுநீரகம்வற்றித் தடித்துச் சிவந்து சொட்டு சொட்டாகப் போகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.

சிறுநீர்த் தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம்அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகிவர,5 நாளில் அவை நீங்கும்..

பெண்களின் மாத விலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கும் இளநீரே மருந்து.

உடம்பெல்லாம் அனல்போல் தகித்தால் இளநீர் 8 மணிக்கொரு முறை பருகிவரத் தேக அனல் தணியும்.

பேதி, சீதபேதி,இ,ரத்த பேதிஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.

டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, வாந்திபேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.

வயிற்றுப் பொருமல் மந்தம் உணவு செரியாமை பெருங்குடல் வீக்கம் ஈரல் கோளாறு குடல் கோளாறுகள் என அனைத்திற்கும் இது மருந்து மற்றும் உணவும் ஆகும்.

காலரா நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும்.

பித்தக் கோளாறு பித்தக்காய்ச்சல் உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து டானிக் ஆகும்.

காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் அருந்துங்கள்.
மதியம் தாகத்தைத் தீர்த்து உடலில் சக்தியைப் புதுப்பிக்க ஓர் இளநீர் அருந்தி வாருங்கள்.

மதுபானம் சாப்பிடுபவர்கள் பானத்துடன் இளநீர் மிக்ஸிங்கிற்காக சேர்த்து சாப்பிட்டால் கேஸ் பிரச்சனைகள் வராது, அடுத்த நாள் காலை உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எந்த உடல் உபாதைக்கும் இடமிருக்காது என இளநீரீன் பயன்களை நான் டைப் செய்து கொண்டு இருக்கும்போது என் நண்பன் கூறியது இது.

32 comments:

  1. ///////சீவ இயலும். நீரைப் பருகியவுடன், இளநீர்த் தேங்காயைப் பிளந்து முற்றாது இருக்கும் இளகிய பருப்பை உண்பர். இந்த முற்றாத இளகிய பருப்புக்கு வழுக்கை என்று பெயர். //////////


    ஆஹா இதைப் பற்றி இப்பொழுதான் புதிதாக அறிந்துகொண்டேன் .

    ReplyDelete
  2. காலத்திர்க்கு தகுந்த மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே அருமை . .

    பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள்
    மீண்டும் வருவேன் உங்களுக்கு போட்டியாக இளநீர் விற்பனை செய்ய ஆமா .

    ReplyDelete
  3. அப்பாடா இவ்வளவு விசயம் இருக்கா இந்த இளநீரில்.. ம்ம் நல்ல இடுக்கை. ஆனா எல்லாரும் இளநீர் குடிச்சா தேங்காய்க்கு என்ன பண்ணுறது.....,,,???
    பாத்து அளவோடு குடியுங்க நீடித்து நிலைபெறுதல்(sustainability) வேண்டும்
    வாழ்த்துக்கள் தொடருங்கள்

    ReplyDelete
  4. படித்தவுடன் உடனே போய் ஒரு இளநீர் குடித்தே ஆக வேண்டும் போல ஒரு ஆர்வம் மேலிடுகிறது. அவ்வளவு சுவையான, உபயோகமான தகவல்கள். குளிர்ச்சி!!

    ReplyDelete
  5. மதுபானம் சாப்பிடுபவர்கள் பானத்துடன் இளநீர் மிக்ஸிங்கிற்காக சேர்த்து சாப்பிட்டால் கேஸ் பிரச்சனைகள் வராது, அடுத்த நாள் காலை உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எந்த உடல் உபாதைக்கும் இடமிருக்காது என இளநீரீன் பயன்களை நான் டைப் செய்து கொண்டு இருக்கும்போது என் நண்பன் கூறியது இது.


    .....அந்த சத்யராஜ், மணிவண்ணன் காமெடியை உங்கள் நண்பர் பார்த்து விட்டு சொல்லிட்டாரா? ஹா,ஹா,ஹா,ஹா.....

    பயனுள்ள குறிப்புகள் - உங்கள் இடுகையை சொன்னேன்.

    ReplyDelete
  6. கோடைக்கு உகந்த பதிவு

    ReplyDelete
  7. இளனீர் குடிச்சா குளிர்ச்சி. விலைய நினைச்சா கடுக்குதே:))

    ReplyDelete
  8. //வானம்பாடிகள் said...
    இளனீர் குடிச்சா குளிர்ச்சி. விலைய நினைச்சா கடுக்குதே:))//

    க்க்கும்.... பிஸ்லெரி வாட்டர் வெல மட்டும் இனிக்குதோ.... :-))

    மற்றுமொரு நல்ல பகிர்வுங்க... நன்றியும்....

    ReplyDelete
  9. இப்பவே ஒரு இளனி 15 ரூபாய். இதையெல்லாம் மட்டும் அந்த தாத்தா படிச்சா 20 ரூபாய் ஆக்கிடுவார்

    ReplyDelete
  10. குளிர்மை குளிர்மை பதிவு.
    தேவையான பதிவி சங்கவி.

    ReplyDelete
  11. அருமையான பதிவு சார். நமது பாரம்பரியமான உடையான வேஷ்டி அணிவது பற்றிய பதிவு, பெப்சி, கோக் என மாறி வரும் இளம் தலைமுறையினருக்கு இளநீரின் மகத்துவம் பற்றிய பதிவு போன்றவற்றால் உங்கள் மீதான அன்பும் மதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது.

    ReplyDelete
  12. சவுதியில் இளநீர் கிடைக்காது. ஆனால் பெப்சி, கோக் போல டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. அது அத்தனை தரமானதாகவும் சுவையானதாகவும் இல்லை. நமது ஊர் இளநீரைப் போல் வராது. இளநீர் உடலுக்கு மிக நல்லது என்றாலும் பாலா சார் சொல்வதைப்போல அதன் விலை கொஞ்சம் பயமுறுத்துவதும் உண்மை.

    நல்ல பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  13. //வானம்பாடிகள் said...
    இளனீர் குடிச்சா குளிர்ச்சி. விலைய நினைச்சா கடுக்குதே:))//

    அண்ணோவ்வ்வ்வ்வ்வ்..

    பாட்டல் வாட்டரு 14 ரூவாங்னா...

    இருங்க.. இன்னும் முழுசா கள் மட்டும் எங்க ஏரியாவுல கட்டட்டும்... 30 ரூவாக்கு எளஞி கெடைக்காது

    ReplyDelete
  14. மிக அற்புதமான இடுகை சங்கமேஸ்

    ReplyDelete
  15. சங்கவி,

    சீசன் பாத்து ‘சிக்ஸர்’ அடிக்கிறீங்கலே சாமி.

    ReplyDelete
  16. //இளனீர் குடிச்சா குளிர்ச்சி. விலைய நினைச்சா கடுக்குதே:))//

    வானம்பாடி சார்,

    படிச்சிட்டோம்னு எல்லாரும் ( நானுந்தான் சாமி) இளனீ
    ‘விளைய’ னினைக்காம , ‘விலைய’ நெனைச்சா வேறெப்படி இருக்கும்?

    ReplyDelete
  17. பங்காளி,

    நாமெல்லாம் விவசாய குடும்பத்துல பிறந்ததால, இளநிய சாப்பிடறது ஒரு வேலையா இல்ல வெச்சிருப்போம் கோடைக்காலத்துல! சும்மா சில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லுனு இருக்கு உங்க பதிவு.

    பிரபாகர்...

    ReplyDelete
  18. //வானம்பாடிகள் said...

    இளனீர் குடிச்சா குளிர்ச்சி. விலைய நினைச்சா கடுக்குதே:))//

    உண்மைதான்...
    நல்ல தகவல்கள்.

    ReplyDelete
  19. Good info about tender coconut.now a days due to intensive cultivation and commercial point of view, farmers adopting root feeding of nutrition to coconut tree.i.e, dap and urea mixer solution taken in a poly bag ,then cut the tip of a root,then the bag is tied to root.in this method tree will get maximum nutrient resulting in bigger coconut(some times pesticide also).so we are not only drinking tender coconut also some fertilizer and pesticide along with coconut water.what to do?

    ReplyDelete
  20. பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  21. சீசனுக்கான பொருத்தமானப் பதிவு.

    ReplyDelete
  22. பயனுள்ள குறிப்புகள்...Thanks for sharing!

    ReplyDelete
  23. //சவுதியில் இளநீர் கிடைக்காது. ஆனால் பெப்சி, கோக் போல டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. அது அத்தனை தரமானதாகவும் சுவையானதாகவும் இல்லை. நமது ஊர் இளநீரைப் போல் வராது.//

    ஆமா சார்.

    விலை அதிகமானாலும். கண்டதை குடிப்பதற்கு இளநீர் குடிக்கலாம்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  24. மிக பயனுள்ள பதிவு

    ReplyDelete
  25. ஒரு இளநீர் 25ரூபாய்க்கு விற்கிறது. பணக்காரர்களின் பானமாகி விட்டது.

    ReplyDelete
  26. [url=http://cialisnowdirect.com/#pigeb]cheap cialis[/url] - buy generic cialis , http://cialisnowdirect.com/#awdxg cialis 20 mg

    ReplyDelete
  27. [url=http://viagraboutiqueone.com/#gxpzg]viagra online without prescription[/url] - cheap viagra , http://viagraboutiqueone.com/#drcmp viagra 50 mg

    ReplyDelete
  28. [url=http://buyonlineaccutanenow.com/#nrihq]buy accutane[/url] - cheap accutane , http://buyonlineaccutanenow.com/#mqcol accutane 5 mg

    ReplyDelete
  29. ILANEER NALLA BANAM

    ReplyDelete