Wednesday, May 26, 2010

இளமையாக வாழ பப்பாளி சாப்பிடுங்கள்


நாம் நோயின்றி வாழ மருத்துவமனையை நாடுவதை விட நம் உணவுப் பழக்கத்தை கொஞ்சம் மாற்றினாலே போதும்.கொஞசம் உடற்பயிற்சி, கொஞ்சம் உணவு, நிறைய பழங்கள் சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் உள்ள நோய்களை விரட்டி அடிக்கலாம்.

பப்பாளி
எழிதில் அனைவருக்கம் கிடைக்ககூடிய பழம். ஆப்பிளைக் காட்டிலும் மிகவும் விலை குறைவு. இதன் பயன்கள் மிக அதிகம். பப்பாளி பல மருத்துவ குணங்களைக் கொண்டது. பப்பாளி உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். பப்பாளியில் மிக குறைவான கலோரிகளே உள்ளன. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் சேர்த்துக் கொண்டால் நோயின்றி வாழ உதவும்.

பப்பாளியில் உள்ள சத்துக்கள்:

பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ,போலிக் அமிலம், பொட்டசியம், காப்பர், பாஸ்பரஸ், இரும்பு, நார்ச்த்துக்கள் உள்ளன. 

பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் வைட்டமின் சியும் மிக அதிகமாக இருக்குமாம். பப்பாளியில் சிறிதளவு வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நியாசினும் உண்டு. நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும்.

பப்பாளி தொடர்ந்து 4 வாரங்கள்சாப்பிட்டால் கொழுப்புசத்து 19.2விழுக்காடுகள் குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பப்பாளிபழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம்.வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு.

பப்பாளி பழத்தை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும் .

சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும்.இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு.பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறி விடும்.

கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடலாமா? 
பப்பாளிப்பழத்தை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாது என்ற கருத்து உள்ளது. இவர்கள், பப்பாளிப் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடல் வெப்பநிலை அதிகரித்து, ஆரம்ப நிலையில் உள்ள கரு கலைந்துவிடும் அல்லது கரு உருவாகுதல் தள்ளிப்போகும் என்பதால் அப்படிச் சொல்கிறார்கள். அதேநேரம், மேற்படி பெண்கள் இந்த பழத்தில் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சாப்பிடுவதில் தவறே இல்லை. ஒருவேளை, அளவுக்கு அதிகமாக பப்பாளிப் பழத்தை அவர்கள் எடுத்துக்கொண்டால், அந்த பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் பால் குடிப்பது உடல் வெப்பநிலை அதிகரிப்பதை தடுத்து நிறுத்திவிடும்.

பப்பாளியின் மருத்துவப் பயன்கள்:
  • நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.
  • பித்தத்தைப் போக்கும்.
  • உடலுக்குத் தெண்பூட்டும்.
  • இதயத்திற்கு நல்லது.
  • மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
  • கல்லீரலுக்கும் ஏற்றது.
  • கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
  • சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்
  • கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்
  • முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.
  • இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.
  • மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.
  • பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்
  • பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.
  • பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.
  • இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர். * உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.
  • இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.
  • ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.
  • நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
  • பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.
  • பப்பாளியின் இலைகளும் வேர்களும் சிறுநீர் பெருக்கியாகவும், பழமானது மூலநோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது.
  •  தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ் அருந்துபவர்களுக்கு உடலில் கழிவுகளே இருக்காது.
  • நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும்.  
  • பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.
பப்பாளி மரத்தோலானது கயிறு தயாரிக்கவும், இலைகள் சோப்புக்கு மாற்றாகவும் கூட சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மிகச் சிறந்த கறை நீக்கியாக செயல்படுகிறது. ஜாவா தீவு மக்கள் பப்பாளி பூக்களை சாப்பிடுகின்றனர்.

இத்தனை சிறப்புள்ள பப்பாளியை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ என் இனிய வாழ்த்துக்கள்....


10 comments:

  1. எனக்கு பப்பாளி கொஞ்சம் அலர்ஜியான பழம் :)பிடிக்காதே ஆனா அதுல இவ்வளவு நல்ல விஷய்ம இருக்குன்னு வேற சொல்லறீங்க :(

    ReplyDelete
  2. ஆஹா அருமை !
    இவளவு பயன்களா.
    மிகவும் வியப்பாககத்தான் இருக்கிறது .
    இன்றுமுதல் நான் பப்பாளி ரசிகன் .

    ReplyDelete
  3. ஆகா, ஒரே தகவல் மழையா இருக்கே..

    ReplyDelete
  4. வியக்கவைத்தன பப்பாளியின் பயன்கள்.

    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. Nice Article. I will also try to follow as per the availability of the particular fruit

    ReplyDelete
  6. ஆஹா! பப்பாளியின் சுவையை மறக்க முடியுமா? நினைவூட்டியதற்கு நன்றி!

    ReplyDelete
  7. சங்கமேஷ்வரா,

    இனிமே கண்டிப்பா சேத்துக்கறேம்ப்பா..!

    ReplyDelete
  8. வெண்டைக்காய் பற்றி சிக்கிரம் எழுதுவிர்கள் என்று நினைக்கிறேன். வளுவளுப்பாக இருக்கும் வேண்டைகையில் Folic Acid அதிகமாக இருக்கிறது, அது கர்பகாலத்தில் குழந்தையின் மூளை வளர்சிக்கு நல்லது, மேலும் சிறுகுழந்தைகளின் மூளை வளர்சிக்கும் நல்லது, கூடவே Omega 3 உள்ள மீன் உணவும் மிக நல்லது. வேன்டைக்கை சாப்பிட்டால் கணக்கு நன்றாக போடுவார்கள் என்று என் அம்மா சின்ன வயதில் சொன்னதை இப்போது அறிவியல் பூர்வமாக உணர்ந்து என் குழந்தைகளுக்கு கொடுக்கிறேன்.
    சிக்கிரம் வெண்டைக்காய் பற்றிய க்பதிவை எதிர்பார்கிறேன்.

    ReplyDelete