Monday, May 31, 2010

என் குழந்தையின் மழழைச் சத்தம்...

மே 26ம் தேதி வீட்டில் இருந்து போன் நாளை காலை மருத்துவமனைக்கு வரச்சொல்லி இருக்கிறார்கள். அநேகமாக சிசேரியனாகத்தான் இருக்கும் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு குறைவு என மருத்துவர்கள் கூறிவிட்டார்கள் என என் மனைவி கூறியதும் படபடப்புடன் நான்கு நாட்கள் விடுமுறை போட்டு விட்டு மனைவியைக் கான அந்தியூர் சென்றேன்.

இன்னும் ஒரு நாளில் குழந்தை பிறக்கப்போகிறது என்றதும் தகப்பனாகிய என் மனதில் பல கனவுகள் இருந்தாலும் மனைவி படும் பிரசவ வேதனையை நினைத்து முகம் சிரித்தாலும் உள்ளம் அழுதது. அப்பொழுது ஒரு பேச்சாளர் பேசியதுதான் ஞாபகத்திற்கு வந்தது ஆண்களுக்கு என்ன ஒரு சொட்டு செமன் விட்டால் போதும் ஆனால் பெண்ணுக்கு பத்து மாதம் சுமந்து தானும் உண்டு குழந்தைக்கும் உண்டு இதற்கு மேல் மருத்துவமனையில் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை உண்டு எந்த வேலையும் செய்ய முடியாமல் பத்து மாதம் அவள் படும் வேதனை சொல்லிமாளது.

நான் என் மனைவியை 9 மாதம் வரை என் பாராமரிப்பில் தான் வைத்து இருந்தேன். அவளது வேலைகளை நான் செய்து அவ்வப்போது பேசி குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் பார்த்து பார்த்து ரசித்தேன் முகத்தில் ஆனால் அவள் படும் வலி என் மனதை அழ வைத்தது. 9 மாதமும் இருந்த வேதனையை விட கடைசி மாதம் அவள் பட்ட வலிகள் என்ன சொல்வது உட்கார முடியாமல் திரும்பி படுக்க முடியாமல் எழு முடியாமல், குளிக்கும் போது தண்ணீர் குனிந்து எடுத்து ஊற்ற 2 நிமிடம் நான் கோவையில் இருந்து வார விடுமுறைக்கு இரண்டு நாட்களும் அவள் வலி என் கண்ணீரைத்தான் வரவலித்தது.

மே 27 அன்று குழந்தை பிறந்தால் அவள் 10 மாதம் பட்ட கஷ்டம் கொஞ்சம் குறைகியும் என்று நினைத்துக்கொண்டேன். மே 26 இரவு 11 மணிக்கு வீட்டிற்கு போன் சிசேரியன் செய்ய இருப்பதால் மயக்க மருந்து நிபுணர் அவசர வேலை காரணமாக ஊருக்கு சென்று விட்டார். நாம் சனிக்கிழமை சிசேரியன் செய்து விடலாம் என்று அவர்கள் சொல்லிவிட்டார்கள். நான் இங்கு விடுமுறையில் சென்றதால் அந்த இரண்டு நாட்கள் என்ன சொல்வது கொடுமையுடன் தான் சென்றது.

மே 29 மாலை மருத்துவமனயைில் அனுமதி நேரம் ஆக ஆக என்ன செய்வது என்று தெரியவில்லை யாராவது எதாவது வேலை சொன்னால் என் மனம் முழுவமும் மனைவியின் மேல் இருக்க வேலை சொன்னவர்களிடம் எரிந்து விழுந்தேன். அவள் வலி எனக்கு இல்லை என்றாலும் அவளுக்கு வலிக்கும் வலி என் மனதிற்கு தெரியும் அல்லாவா?

சரியாக 10 மணிக்கு மனைவி சிசேரியன் அறைக்கு சென்றது மனம் அனைத்து கடவுளையும் வேண்டியது. பிரசவ அறையில் மனைவி வெளியில் கணவன் மற்றும் உறவினர்கள் அந்த ஒவ்வவொரு நிமிடமும் மனதில் யாரும், யாரையும் பார்க்காமலும் ஒவ்வொருவர் மனதிலும் அழுகை மாமா மட்டும் அனைவரையும் தேற்றிக்கொண்டு இருந்தார். ஒரு 38 வது நிமிடம் குழந்தையை குளிக்க வைத்து வெளியில் கொண்டு வந்து ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்றதும் அப்போது இருந்த சந்தோசம் என்ன சொல்வது ஆனந்தமாக அனுபவித்தேன். மீண்டும் 35 நிமிடத்திற்குப் பின் மனைவியை மயக்கம் தெளிய தெளிய வெளியே கூட்டி வந்தனர். மனைவியைப் பார்த்த உடன் தான் என் மனம் ஒரு சந்தோசத்தின் உச்சியில் இருந்தது.

வலியில் மனைவியும், இவ்வுலகத்திற்கு எங்களால் வந்த என் மகனின் அழகையும் அனு அனுவாய் மகிழ்ந்தேன். அந்நேரம் வாழ்க்கையில் மறக்க முடியாத நேரமும் கூட...

ஒவ்வொருவனும் ஒரு சந்தர்ப்த்தில் தந்தை ஆகிறான். அந்த புது உறவை உணரும் தருணம் அற்புதமானது. அந்த மணப்பூர்வமான உணர்தலில் மற்ற உணர்ச்சிகள் அடங்கிப்போய் விடுகின்றன.

45 comments:

  1. precious moment , treasured well .,
    congrats for u and ur wife .,

    ReplyDelete
  2. திருமணம் ஒரு மனிதனை ஓரளவு மாற்றுகிறது, குழந்தை பிறப்பு, அந்த மனிதனை முழுமையாக மாற்றி பொறுப்பை உணர வைக்கிறது. உங்கள் குழந்தையை வாசித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. மிகுந்த மகிழ்ச்சி.

    வாழ்த்துகள் சங்கவி.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சங்கவி. ஒவ்வொரு நிமிடங்களும் அழகான பொக்கிஷமாய் உங்கள் நினைவில் நிற்கும்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் நண்பரே . அந்தத் தருணங்கள் மிக மிக கொடுமையான ஒன்று. நீங்கள் அருகிலாவது இருந்தீர்கள். என் மகள் பிறந்த பொழுது நான் சென்னையில் அவர்கள் கோவையில் . சொல்லிய தேதிக்கு பல நாட்கள் முன்பே அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல்.

    மீண்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. புதுவரவால் மகிழ்ந்திருக்கும் பெற்றோருக்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. வாங்க தமிழ்உதயம்

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி....

    ReplyDelete
  8. வாங்க ரோகிணி சிவா...

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி....

    ReplyDelete
  9. வாங்க ஆருரன்....

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி....

    ReplyDelete
  10. வாங்க சூர்யா...

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி....

    ReplyDelete
  11. மகிழ்ச்சி.

    வாழ்த்துக...!

    ReplyDelete
  12. வாங்க அமைதிச்சாரல்....

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி....

    ReplyDelete
  13. வாங்க எல்.கே...

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி....

    ReplyDelete
  14. வாங்க ராமலஷ்மி....

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி....

    ReplyDelete
  15. வாங்க தமிழ் அமுதன்....

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி....

    ReplyDelete
  16. எனக்கும் ரெண்டு சிசேரியன் குழந்தைகள்தான் சங்கவி.. என் கணவர் அப்போது சொன்னதை., அழுததை வார்த்தையால் படித்து உணர்கிறேன்

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் தம்பி..
    ஒரு குழந்தையின் வரவு தந்த குதூகலம் என்னையும் தொற்றிக் கொண்டது...
    மருமகனுக்கு ஆசிகள்..அவங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வாழ்த்தும் அன்பும்...
    -அமுதா தமிழ்...

    ReplyDelete
  18. வாழ்த்துகள் வாழ்த்துகள் சங்கவி.
    நீங்கள் சொன்ன சந்தோஷமே படபடக்க வாசிக்க வைத்தது.நல்ல கணவனாய் அன்பு அப்பாவாய் என்றும் இதே அன்புடன் இருங்கள்.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் அண்ணா..

    ReplyDelete
  20. உங்கள் குடும்பத்தின் புதிய வரவை அன்புடன் வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் சங்கவி .ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தைப்பேறு மறு பிறவி.

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் சங்கவி !!

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் சங்கவி!!!!!!!!

    :-))))

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் சங்கவி :))

    ReplyDelete
  25. மிக்க மகிழ்ச்சி சங்கவி! வாழ்த்துகள்! :)

    அனுபவித்தவன் என்ற முறையில் இந்த இடுகை மூலம் மீண்டும் உணர்ந்தேன்!!

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் நண்பரே . காலையில் நீங்கள் அழைத்து இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்த பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் .

    ReplyDelete
  27. தாயென்ற உறவுக்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை தந்தையென்ற உறவு!
    புதிய பதவியேற்றிருக்கும் உங்களுக்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. பிறந்த குழந்தைக்கும் பெற்றவர்களுக்கும் என் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. மிக்க மகிழ்ச்சி சங்கவி! வாழ்த்துகள்!

    Kanchana radhakrishnan
    T V Radhakrishnan

    ReplyDelete
  30. வாங்க தேனம்மை...

    வாங்க தமிழினிமை...

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

    ReplyDelete
  31. வாங்க ஹேமா...

    வாங்க அகல்விளக்கு...

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

    ReplyDelete
  32. வாங்க ரோமியோ....

    வாங்க நிலாமதி...

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

    ReplyDelete
  33. வாங்க வாத்தியாரே (கார்த்திகை பாண்டியன்)

    வாங்க கதிரவன்...

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

    ReplyDelete
  34. வாங்க கனிமொழி...

    வாங்க மயில்...

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

    ReplyDelete
  35. வாங்க ஷங்கர்...

    வாங்க பனித்துளி சங்கர்...

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

    ReplyDelete
  36. வாங்க மனோ சாமிநாதன்

    வாங்க ராசு...

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

    ReplyDelete
  37. வாங்க சுந்தரா...

    வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன்...

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

    ReplyDelete
  38. மனமார்ந்த வாழ்த்துக்கள்... உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும்.... குட்டி பையன் போட்டோ நெறைய போடுங்க... ஆவலா இருக்கோம்...

    ReplyDelete
  39. மிகுந்த மகிழ்ச்சி.

    வாழ்த்துகள் சங்கவி.

    ReplyDelete
  40. ஆஹா!

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் பங்காளி!

    அடுத்த விடுமுறையில் வரும்போது சுட்டியோடு உங்களையும் பார்க்கிறேன்!

    வாழ்த்துக்கள்...

    பிரபாகர்...

    ReplyDelete
  41. வாழ்த்துகள் சங்கமேஷ்வரா!

    தங்கைக்கும் எனது வாழ்த்துகளை அறியத்தாருங்கள்.

    தாமதமாய் வந்து வாழ்த்தியதற்கு மன்னியுங்கள்.

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள் சங்கவி :))

    ReplyDelete