Wednesday, June 2, 2010

பதிவுலகம் எங்கே செல்கிறது?

நண்பர்களே நீங்கள் எல்லாம் பதிவுலகில் பல காலமாக எழுதிகொண்டு இருக்கறீர்கள் உங்களுக்கு என ஒரு வாசகர் வட்டமும், பதிவர்களும் உங்கள் எழுத்தை படித்து பின்னூட்டமும் இடுகிறார்கள். உங்கள் பதிவுகளை அனைத்தையும் அனைவரும் படித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி...

இப்பொழுது தான் படித்தேன் நண்பர் டி.வி. இராதாகிருஷ்ணன் நான் பதிவுலகம் விட்டு விலகுகிறேன் என ஒரு பதிவு எழுதி இருக்கிறார். ஏன் இப்படி அவர் அவர் அவர்களது கருத்தை சொல்கிறார்கள் தவறாக இருப்பின் சுட்டிக்காட்டுகிறோம். அதை ஏற்கும் பக்குவம் அனைவருக்கும் வரவில்லை என்பதுதான் என் கருத்து. இதனால் தான் கடந்த மூன்று நாட்களாக பல பதிவுகள் இதைச்சுற்றியே. இதில் ஜாதியை வேறு இழு இழு என இழுக்கிறார்கள். ஜாதியைப் பற்றியே பதிவு எழுதுவர்கள் எல்லாம் படித்தவர்களா? என்பதில் சந்தேகம் தான் வருகிறது.

முதலில் அனைவரும் ஒன்றை தெரிந்து கொள்வோம் பதிவுலகிற்கு ஜாதி மதம் எல்லாம் கிடையாது. அப்படி இருப்பின் இத்தனை பதிவர்கள் நிச்சயம் இருக்கமாட்டார்கள். அவர் என் ஜாதிக்காரர் இல்லை அதனால் அவர் பதிவை நான் படிக்கமாட்டேன் என ஒவ்வொருவரும் இருந்தால் அப்புறம் பதிவை படிக்க ஆள் இருக்காது பின்னூட்டமும் வராது.

எது எப்படியோ மறப்போம், மன்னிப்போம் என அனைவரும் நினைத்தால் மீண்டும் நம் பதிவுலகம் ஆரோக்கிமாக செல்லும் என்பது என் கருத்து....

31 comments:

  1. அவருக்கும், இதுக்கும்.
    அவர் ஏன் போறாராமா!?

    ReplyDelete
  2. அற்புதமான ஊடகத்தை ஏன் இப்படி சிதைத்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னை கேட்டால், இனி யாரும் PROFILE ல் புகைப்படத்தை கூட வைக்காதீர்கள். பாலினத்தையும் காட்டிக் கொள்ளாதீர்கள். அப்போதாவது ஏதாவது ஒரு மாற்றம் வருமா என்று பார்ப்போம்.

    ReplyDelete
  3. வாங்க அருண்....

    அது தான் தெரியவில்லை...
    இவரின் எழுத்துக்கள் என்னை கவர்ந்தவை...

    ReplyDelete
  4. வாங்க தமிழ் உதயம்...

    நீங்க சொல்வதும் சரிதான் இப்படியும் செய்யலாம்....

    ReplyDelete
  5. //பதிவுலகிற்கு ஜாதி மதம் எல்லாம் கிடையாது//

    இப்படி நினைத்துத்தான் புதியவர்கள் இந்த அற்புதமான வலையுலத்துக்கு வருகிறோம். ஆனா, நடக்கிறதையெல்லாம் பாத்தா கசப்பா இருக்கு :-(

    ReplyDelete
  6. வாங்க அமைதிச்சாரல்....

    கடந்த சில நாட்களாக ஒரு 10 பதிவு இருந்தால் இன்று அதில் பாதி பதிவு ஜாதி பதிவாகத்தான் இருக்கிறது....

    என்ன செய்வது அது அவர்கள் கருத்து....

    ReplyDelete
  7. சங்கமேஷ்வரா,

    4, 5 நாளா வலைப்பதிவுகள்... படிக்கவே அருவருப்பா இருக்கு.

    ReplyDelete
  8. வாங்க சத்ரியன்....

    //4, 5 நாளா வலைப்பதிவுகள்... படிக்கவே அருவருப்பா இருக்கு.//

    என்ன செய்வது எல்லாம் அவன் செயல்....

    ReplyDelete
  9. குழந்தை நலமா நண்பா ??
    என்ன சொல்ல ??? எல்லாரும் மன வருத்தத்தில் இருக்கிறோம்? புதிதாய் எழுத தொடங்கி இருக்கும் பதிவர்கள் இப்பொழுது யோசிகிறார்கள் எழுதுவதா வேண்டாமா என்று

    ReplyDelete
  10. பெண்குறியை படம் எடுத்துப் போட்ட தமிழச்சியை ஆதரிக்கும் வினவு லீனாவை பெண்குறியை எழுதியதற்காக கேங்க் ரேப் செய்து விட்டு இப்போது நர்சிம் சந்தன்முல்லையை வண்புணர்ந்ததாக எழுதுகிறது

    சாரு தன் வளர்ப்பு மகளை வன்புணர்ந்ததாக எழுதிய சிவராமன் இன்று சந்தனமுல்லையின் நட்புக்காக நர்சிமுக்கு துரோகம் செய்து விட்டு வினவை ஆதரிக்க சொல்லுகிறார்

    என்ன மனுஷங்கைய்யா :(

    ReplyDelete
  11. வாங்க எல்.கே....

    குழந்தை நலமே.... மனவருத்தத்தை மறந்து விட்டு மீண்டும் எல்லோரும் எழுத வேண்டும் என்பதே என் ஆவல்...

    ReplyDelete
  12. தம்பி சங்கமேஸ்...

    இந்த தலைப்பு ஏற்புடையதில்லை..

    இப்போது நடக்கும் வலையுலக அரசியல் மிகக் கொடிய சுழல்களைக் கொண்டிருக்கிறது..

    இந்தச் சூழ்நிலையில் இது போன்ற தலைப்புகள் அனைவரையும் கவர்ந்திழுக்கும்....

    கவனமாக இருங்கள்...என்பது என் தாழ்மையான வேண்டுகோள்

    ReplyDelete
  13. சட்டுன்னு அப்படித்தான் தோணும். அப்புறம் ஆற அமர யோசிச்சா சரியாப் போயிரும்.

    ReplyDelete
  14. வாங்க கதிர்....

    உங்கள் வேண்டுகோளை ஏற்கிறேன்...

    இப்ப நடக்கும் வலையுலக அரசியல் மறப்போம், மன்னிப்போம் என ஒரு முடிவிற்கு வரவேண்டும் என்பது தான் என் ஆவல்...

    ReplyDelete
  15. வாங்க V.Radhakrishnan,

    இதையேத்தான் நானும் நினைக்கிறேன்...

    ReplyDelete
  16. //மனவருத்தத்தை மறந்து விட்டு மீண்டும் எல்லோரும் எழுத வேண்டும் என்பதே என் ஆவல்./

    ennudaya viruppamum ithe

    ReplyDelete
  17. நண்பர் கதிர் உங்களின் வேண்டுகோளையும், அறிவுரையும் ஏற்று இந்த அரசியல் எனக்கு வேண்டாம் என தலைப்பை மாற்றிவிட்டேன்....

    எனக்கு தேவை மீண்டும் ஓர் ஆரோக்கியமான பதிவுலகம்...

    ReplyDelete
  18. நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் என்னைப்போன்ற புதிய பதிவர்கள் ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ என்று தோன்றுகிறது.
    தமிழனின் தனிப்பெரும் குணமான அடுத்தவன் காலை வாரிவிடுவது படித்தவர்களிடமும் மறையவில்லை என்பது தெளிவாகிறது.

    ReplyDelete
  19. வாங்க பரிதி நிலவன்....

    அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நீங்கள் புதியவர் ஆயின் உங்களை வரவேற்கிறேன்....

    உங்கள் கருத்து என்னவோ அதை ஆணித்தரமாக சொல்லுங்கள் தனி நபர் தாக்குதல் இல்லாமல்....

    ReplyDelete
  20. நர்சிம் தனது வலைத்தளத்தில் ஒரு வாசகர் கடிதம் வெளியிடுகிறார்
    2. அதை கேலி செய்து தீபா பகடி வெளியிடுகிறார்
    3. பிரச்சனை வருகிறது. சமாதானம்
    அதன் பிற்கு
    1. ஆதி தனது தளத்தில் நர்சிமின் பேட்டி வெளியிடுகிறார்
    2. அதன் பிறகு மதுர நீ தளத்தில் ஒரு அனானி பேட்டி வருகிறது
    3. அந்த மதுர நீ தளத்தின் சுட்டி சந்தன முல்லையா டிவிட்டரில் அளிக்கப்படுகிறது
    கேள்வி 1. அந்த தளத்தை நடத்துவது யார்
    2. அது சந்தனமுல்லைக்கு எப்படி கிடைத்தது அங்கு யாரும் பார்க்க வில்லை

    3. மயில் விஜி போன் செய்து நர்சிம் உங்களை பற்றி எழுதுகிறேன் என்கிறார்
    6. மதுர நீயில் இருந்து பேட்டி மறைந்து மயில் தளத்தில் வருகிறது
    கேள்வி
    3. மதுர நீ தளத்திற்கும் மயிலுக்கு என்ன சம்மந்தம்
    கேள்வி 4 : ஏன் முதலில் அது மயில் தளத்தில் வெளியிடப்படவில்லை

    கேள்வி 5 மயில் விஜி இது போல் எத்தனை அனானி / போலி தளங்களை நடத்துகிறார்

    7. மயில் தளத்தில் சந்தனமுல்லை நர்சிமை குறிவைத்து தாக்குகிறார்
    8. இடுகையை நீக்குமாறு சிலர் கூறுகிறார்கள்
    9. சந்தனமுல்லை முடியாது என்கிறார்

    கேள்வி 6 : அந்த இடுகை மயில் எழுதியதாக இருந்தால் சந்தனமுல்லை ஏன் முடியாது என்கிறார்

    10. இப்ப நர்சிம் பூக்காரி எழுதுகிறார். அதில் பூக்காரியை (பார்க்க பூக்கரியை - எந்த பெயரும் இல்லை) விபச்சாரி என்கிறார்
    ஆனால் மயிலோ நர்சிமிடம் தொலைபேசி அது நீ என்று சொல்லிவிட்டார்
    நர்சிம் பெயர் குறிப்பிட வில்லை

    கேள்வி 7 : பிறகு ஏன் இவர்களுக்கு பொத்துகிட்டு வருது
    ஏன். அப்படி என்றால் இது வரை முல்லை செய்தது தெரிந்தவர்களுக்கு தானே பொருள்படும். அப்படி பட்டவர்கள் முல்லையை கண்டிக்காமல் நர்சிமை மட்டும் வெளுத்து வாங்குவது சரியா

    ReplyDelete
  21. அனானிம்ஸ் நண்பரே....

    நீங்க கேட்ட கேள்வி எல்லாம் உங்கள் சொந்தப் பெயரில் ஒரு பதிவே போடுங்களேன்....

    ஏன் பெயரில்லாமல் வருகிறீர்கள்.... பரவாயில்லை....

    இந்த மூன்று நாள் நடந்தவற்றை மறந்து, மன்னியுங்கள் என்பதே என் கருத்து.....

    ReplyDelete
  22. thavaraaga karuthavittal oru yosanai nanabre, naam anaivarum ithai vivathipathai niruthuvom.

    ReplyDelete
  23. கட்டப்பஞ்சாயத்து,கோஷ்டி சேருதல்,ஒருவர் மீது மற்றவர் சேற்றை வாரி இறைத்தல் இவையெல்லாம் பிரபலமான, அனுபவசாலிகளான பதிவர்கள் செய்யத்தக்க செயலா? என்ன கொடுமை இது?

    இதில் மத,ஜாதி,பாலினச் சண்டை வேறு! எவ்வளவு மோசமான முன்னுதாரணங்கள்?? :-((

    ReplyDelete
  24. வாங்க சேட்டை....

    நீங்க சொல்வது சரிதான்....

    படித்தவனும், இதைத்தான் செய்கிறான்.... படிக்காதவனும் இதையே செய்கிறார்கள்.....

    அப்புறம் படித்து என்ன பயன்?

    ReplyDelete
  25. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

    பாலசந்தர் பாலகுமாரனிடம் எதற்காகச் சொன்னாரோ? ஆனால் இன்று வரை பெயரை மட்டும் மாற்றிக்கொண்டு பயன்படுத்தும் அளவிற்கு எல்லோருக்கும் பொருந்தி போய்விடுகிறது.

    ReplyDelete
  26. நீங்க அக்மார்க் நல்லவருங்க! உங்க எழுத்தை பார்த்தாலே தெரியுது.

    - சிவா, கடலூர்

    ReplyDelete
  27. அனைவரும் புரிந்துகொண்டால் நலமே !

    ReplyDelete
  28. நர்சிம், பயித்தியக்காரன், சுகுணா, வினவு இவர்களை எனக்கு தெரியாது. ஆனால் என்ன நடக்கிறது என்று ஓரளவு அறியமுடியரது. இருந்தாலும் சில விசயங்களை ஆராய்ச்சி செய்ததால் வந்த பின்னூட்டம் இது:

    வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று ஒரு குற்றச்சாட்டு. அப்படி செய்திருந்தால் (Note: செய்திருந்தால்) இது முதல் தடவையாக இருக்க முடியாது. கட்டயாம் இது முதல் தடவையாக இருக்க முடியாது. அப்படியிருக்க ஏன் அவ்வாறு பயித்தியக்காரன் இப்பொழுது அதை வெளியில் கொன்டு வர வேண்டும்—அதாவது நரசிம்மை இப்படி எல்லோரும் கொதறும் போது– அதாவது தான் எழுதிக்கொடுத்ததை தான் வினவு பதிவாக போடுகிறார் என்று.?

    இங்கு கவனிக்க வேண்டியது இவர்களுடைய “Relationship.”
    பயித்தியக்காரன்-வினவுக்கு-தொழில் முறை “Relationship.”
    பயித்தியக்காரன்-நர்சிம்-நண்பர்கள்! மற்றும் ஒரே ஜாதி என்றும் கேள்விப்பட்டேன்!!

    இதில் நடுவில் சுகுணா. சுகுணாவிற்கு கோபம்—வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று. ஒரே ஆறுதல் தன்னைப்பற்றி பயித்தியக்காரன் அசிங்கமாக எழுதியதை வினவு “Edit” செய்துவிட்டார் என்று. இருந்ததாலும் சுகுணா வினவை மன்னிக்க தாயாராக இல்லை. அதனால் வந்த பதிவு தான் சுகுணா எழுதியது.

    சுகுனாவிர்ர்க்கு ஒரு கேள்வி? இதை அதாவது, மேற்கூறியவற்றை (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று.) உங்களிடம் இப்பொழுது சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஏன் இவ்வளவு நாட்களாக உங்களிடம் வினவு இப்படித்தான் தந்து எல்லா பதிவையும் போடுகிறார் என்று சொல்லவில்லை? இதை நீங்கள் யோசிக்க வேண்டும், அதாவது நரசிம்மை இப்படி எல்லோரும் கொதறும் போது!

    இந்த உண்மையை வினவு தான் எடுத்து சொல்ல வேண்டும் : அதாவது, தான் அது மாதிரி பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று மற்றும் சுகுணா சொன்ன மாதிரி “Edit” செய்திகளும் வினவிற்கு அனுப்பப்பட்டதா என்று? அப்படி “Edit” செய்ததாக சொல்லப்பட்டவைகள் வினவிற்கு அனுப்ப வில்லை என்றாலும் வினவால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி. ஆனால் அவ்வாறு சுகுனாவைபற்றி “Edit” செய்ததாக சொல்லப்பட்டவைகள் வினவிற்கு அனுப்ப வில்லை என்றால் வினவு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு (நர்சிம் மன்னிப்பு கேட்ட மாதிரி மன்னிப்பு கேட்கலாம்.) பயித்தியக்காரன் தோலை உரிக்கலாம். அப்புறம், நர்சிம்-பயித்தியக்காரன் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இருவர் தோலையும் உரிக்கலாம்.

    சுகுணா! நீங்கள் அவசரப் பட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். நர்சிம்-பயித்தியக்காரன் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் ஒரு கருவியாக மட்டும் பயன் படுத்தப்பட்டு இருக்கிறீர்கள். அவர்கள் “Double-game” or double-cross” செய்து விட்டார்கள்.

    என்னைப் பொறுத்தவரை இது நர்சிம்-பயித்தியக்காரன் கூட்டு சதி. வினவுக்கு திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று). சுகுணா திவாகர் ஒரு கருவி. ஆகா மொத்தம் ஏமாந்தது நீங்கள் தான். வென்றது அவர்கள். உங்களையே நீங்கள் அவசரப்பட்டு அசிங்கபடுத்திக் கொண்டீர்கள் .எதற்கும் எப்பொழுதும் கூட்டு வைக்ககூடாத ஒரே கும்பல் அவாள் தான்.

    வாய்மையே வெல்லும் இது பழமொழி!
    வருணாஸ்ரமே வெல்லும் இது புது மொழி!!

    அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?

    ReplyDelete
  29. தமிழ் உதயம்...சரியாகச் சொல்கிறீர்கள்.

    ReplyDelete
  30. ///எது எப்படியோ மறப்போம், மன்னிப்போம் என அனைவரும் நினைத்தால் மீண்டும் நம் பதிவுலகம் ஆரோக்கிமாக செல்லும் என்பது என் கருத்து....///

    அருமை அருமை நண்பரே! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. //முதலில் அனைவரும் ஒன்றை தெரிந்து கொள்வோம் பதிவுலகிற்கு ஜாதி மதம் எல்லாம் கிடையாது.//

    அப்படித்தான் எல்லாரும் நெனச்சோம். ஆனா, அப்படி இல்ல போலருக்கே.

    ReplyDelete