Tuesday, June 15, 2010

அதிமுக கூடாரம் காலி....

ஜெ சேவல் சின்னத்தில் போட்டியிடும் போது அவருடன் 15 முக்கியத் தலைவர்கள் இருந்தார்கள். அதில் இன்று அம்மாவுடன் இருப்பவர் செங்கோட்டையன் மட்டும் தான். சிலர் அரசியலை விட்டு ஒதுங்கியும், சிலர் வேறு கட்சியிலும் இன்னும் சிலர் இன்று திமுகவில் அமைச்சர்களாகவும் உள்ளனர்.

அம்மா அன்று முதல் இன்று வரை கட்சியைவிட்டு ஒருவர் சென்றால் ஏன் செல்கிறார் எதற்கு செல்கிறார் என்று அதற்கு பின் யோசிப்பதே இல்லை. யார் போனாலும் கவலை இல்லை கட்சியில் இருப்பவர்கள் இருக்கலாம் இது மட்டுமே கருத்து.

எம்.ஜீ.ஆர் பார்த்து பார்த்து வளர்த்த ஆலமரம் அதிமுக இன்று வேர்கள் ஒவ்வொன்றும் காணமல் சென்று கொண்டு இருக்கிறது அன்றைய எம்.ஜீ.ஆர் விசுவாசிகள் அனைவரும் இன்று எம்.ஜீ.ஆரின் நண்பர் கலைஞர் இடத்தில் இருக்கிறார்கள். எம்.ஜீ.ஆர் அவர்களை எப்படி வைத்து இருந்தாரோ அதே போல் தான் இன்றும் அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ராஜ மரியாதையோடு இருப்பதை பார்த்த மற்றவர்கள் திமுகவிற்கு போக விரும்புகிறார்கள்.

தூத்துக்குடி அனிதா இவர் தொண்டர்களிடம் மிகவும் செல்வாக்கு பெற்றவர், சத்தியமூர்த்தி இவர் ஒரு மாவட்ட செயலாளர் என்று சமீபத்தில் திமுகவிற்கு வந்தவர்களில் இவர்கள் முக்கியமானவர்கள்.

அம்மாவின் ஆசியுடன் பதவிக்கு வந்தவர் செல்வகணபதி இளவயதில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகுபார்த்தார். அவரும் அம்மாவிற்கு விசுவாதியாகவே இருந்தார். சேலத்தில் நடந்த ஒரு மக்களவை தேர்தலில் வாழப்பாடியைரை எதிர்த்து போட்டியிட்டார் அப்போது வாழப்பாடியார் 3 இலட்சம் இலவச காஸ் இணைப்புகள் தொகுதி முழுவதும் கொடுத்து இருந்தார் அவரை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம் என்று அனைத்து பத்திரிக்கையிலும் கருத்துக்கணிப்பிலும் சொன்னார்கள் ஆனால் செல்வகணபதியின் அதிரடி அரசியலில் சேலத்தில் வாழப்பாடியாரை எதிர்த்து வென்றார். இந்த அளவிற்கு அதிரடி அரசியல் செய்யும் ஒரு தொண்டரை  கட்சியை விட்டு தூக்கியதால் அவர் திமுகவிற்கு சென்று அங்கும் தனது உழைப்பைக் காட்டி இன்று துணை முதல்வரின் நம்பிக்கைக்கு உரியவராகி மாநிலங்களவை உறுப்பினர் ஆகி விட்டார்.

கரூர் சின்னசாமி 2 நாட்களுக்கு முன்பு 12 ஆயிரம் பேருடன் திமுகவில் ஐக்கியம். இருவடன் வந்தவர்கள் நிறைய பேர் மாவட்ட பொறுப்பாளர்கள். இவர் கரூரில் தொண்டர்களை அரவணைத்து செல்வதில் வல்லவர் என்று கலைஞரே கூறி உள்ளார்.

தற்போது முத்துசாமி இவருடன்  முன்னாள் எம்எல்ஏக்கள், பல கவுன்சிலர்கள் 700 பேருந்துகளில் 30 ஆயிரம் தொண்டர்கள் என திமுகவில் ஐக்கியம். முத்துசாமி 1977ம் ஆண்டு எம்எல்ஏ ஆகி அன்று எம்.ஜீ.ஆரின் அமைச்சர் அவையில் போக்குவரத்து அமைச்சர் மட்டுமின்றி எம்.ஜீ.ஆரின் நம்பிக்கைக்கு உரியவர். இவர் தந்தை இறந்ததற்கு இவரின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு எம்.ஜீ.ஆரே நேரில் வந்து ஆறுதல் கூறும் அளவிற்கு செல்வாக்கு பெற்றவர். 1989ம் ஆண்டு கட்சியின் சின்னம் முடக்கப்பட்ட போது அதை மீட்டு அம்மாவிடம் தந்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. முத்துசாமி திமுகவிற்கு செல்கிறார் என்ற உடன் அம்மா அதிமுகவில் இருந்து ஒரு தொண்டரையும் நான் இழக்க விரும்பவில்லை என்று கூறியவர் முத்துசாமியை இழக்காமல்  இருந்திருக்கலாம். ஈரோட்டில் முத்துசாமிக்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. ஈரோடு நகர் முன்னேற்றத்திற்கு இவரும் ஓர் காரணம் .

இவர்களைத் தவிர தற்போது அதிமுகவில் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்களை யார் என பார்த்து அவர்களுக்கு என தனிப்பட்ட செல்வாக்கு உள்ளதா என விசாரித்து இன்னும் பல பேர் திமுகவிற்கு போக நிறைய வாய்ப்பு இருக்கிறது.

இதுவரை வெளியே சென்றவர்கள் போகட்டும் இனி யாரும் இருப்பவர்களையாவது போகமல் பார்க்க வேண்டும் செய்வாரா அம்மா பொறுத்திருந்து பார்ப்போம்.

14 comments:

  1. ஒரே சந்தேகம் மட்டுமே. திமுகாவில் சேருகிற அனைவருக்கும் எப்படி பதவி கிடைக்கிறது. அங்கே ஏற்கனவே உள்ளவர்களுக்கு மனக்கசப்பு வராதா ?.

    ReplyDelete
  2. pathavi aasail pokiravarkal pokadum... unmaiyana thondarkal jj pakkam than. 2011 election athu sollum....

    kaligarku kaalam pathil sollum...


    kuttam sayrthvan ellm jaipathu kidaiyathu...

    ReplyDelete
  3. வாங்க பின்னோக்கி....

    மனக்கசப்பு வரும் ஆனா வராது..... வந்தாலும் தலைவர் சரி செய்து விடுவார்.....

    ReplyDelete
  4. அ.தி.மு.க இனி இரண்டு சகோதரிகளை மட்டுமே உறுப்பினர்களாக கொண்டிருக்கும்!

    ReplyDelete
  5. கடுமையாக உழைத்தால் மட்டுமே கட்சியை கடைந்தேற்ற முடியும்

    ReplyDelete
  6. கட்சியை பற்றிய நல்ல அலசல் இடுகை. :-)

    ReplyDelete
  7. அய்யாவைப் போல அம்மாவும் ஆனைவரையும் அரவணைத்துச் சென்றால்தான் ஜெயிக்க முடியும் சங்கவி

    ReplyDelete
  8. வாங்க அருண்....

    அந்த காலம் விரைவில் அரங்கேறும்

    ReplyDelete
  9. வாங்க சித்ரா வாங்க....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  10. வாங்க தேனம்மை....

    எல்லோரையும் அரவணைத்தால் பிரச்சனையே இல்லையே....

    ReplyDelete
  11. //வால்பையன் said...
    அ.தி.மு.க இனி இரண்டு சகோதரிகளை மட்டுமே உறுப்பினர்களாக கொண்டிருக்கும்!//

    The day is not too far

    ReplyDelete
  12. அவர் என்று நான், எனது, என் ஆட்சி என்பதை விடுகிறாரோ அன்று தான் அவருக்கு நல்ல காலம் பிறக்கும்.. அது வரை.. கொடநாடு தான் ஒரே கதி.

    ReplyDelete
  13. அ.தி.மு.க. இனி அவ்ளோ தான்.

    ReplyDelete
  14. அண்ணா தி.மு.கவை இனி அம்பேல் தி.மு.க என்று தாராளமாக அழைக்கலாம்! சில வருடங்கள் ஈரோட்டில் வசித்தவன் என்ற முறையில், முத்துசாமியின் செல்வாக்கு குறித்தும், அவர் ஈரோட்டுக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அம்மாவுக்கு சரியாக ஆலோசனை சொல்லவும் ஆளில்லையே! அனுபவிக்கட்டும்!

    நல்ல பதிவு!

    ReplyDelete