Tuesday, June 22, 2010

உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் மக்கள் வெள்ளம்.... படங்களுடன்...

கலைஞர் செம்மொழி மாநாட்டை அறிவித்ததும் கோவை களை கட்ட ஆரம்பித்தது. மாநாடு தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் நேற்று எனது அலுவலகம் முடிந்ததும் 6 மணிக்கு மாநாடு அரங்கம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என நானும் எனது நண்பனும் சென்றோம். அவிநாசி ரோட்டில் வழக்கமான போக்குவரத்து நெறிசலே இருந்தது. மாநாடு முகப்பை அடைந்தது ஆச்சர்யம் பல ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நின்று கொண்டு இருந்தது நாங்களும் உள்ளே சென்ற போது தான் ஆச்சர்யம் அங்கு இருந்த ஆயிரக்கணக்கான மக்களில் கட்சி வேட்டி கட்டிக்கொண்டு இருந்தவர்கள் ஒருவரை கூட நாங்கள் பார்க்க வில்லை.

எங்கு காணினும் மக்கள் வெள்ளம் கோவையில் இதற்கு முன் இது போல் எந்த விழாவும் நடக்க வில்லை இது தான் முதல் முறை. மாநாடு 23ம் தேதிதான் தொடங்குகிறது ஆனால் 21ம் தேதி கோவை மக்களின் கூட்டத்தால் மாநாடு அரங்கம் நிரம்பி வழிந்தது. மாநாடு உணவகத்தை நேற்று காலை தான் துணை முதல்வர் திறந்திருக்கிறார் மாலை உணவகம் நிரம்பி வழிந்தது.

பொதுமக்கள் அதிகம் பேர் குடும்பத்துடன் தான் கலந்து கொண்டனர் செம்மொழி மாநாடு என முகப்பில் எழுத்துக்களால் வைத்து இருக்கிறார்கள் அங்கு புகைப்படம் எடுக்கும் கூட்டம் அதிகம். அநேகமாக வந்தவர்கள் பாதிபேர் புகைப்படக்கருவி உள்ள கைபேசி மூலம் புகைபடங்களை எடுத்து குவித்துக்கொண்டு இருந்தனர்.

மாநட்டை சுற்றிப்பார்த்துக்கொண்டு இருக்கும் போது மாநாட்டு வளாகத்தை காண கலைஞர் வந்தார் பொதுமக்கள் அனைவரும் அதிக கெடுபிடி இன்றி அவரை பக்கத்தில் பார்த்ததில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கை அசைத்தனர். கலைஞர் கண்காட்சியை பார்வையிட சென்ற போது மூத்த அமைச்சர்கள் எல்லாம் தரைத்தளத்தில் உட்கார்ந்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தது அனைவரையும் கவர்ந்தது..

மாநாட்டு பணிகளை முதல்வரும், துணை முதல்வரும் பார்வையிட செல்லும் போது இரண்டு நிமிடங்கள் மட்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பொதுமக்கள் இடையூறு இல்லாமல் போக்குவரத்து நெரிசலை தவிர்த்தனர் காவல்துறையினர். இருசக்கர வாகனத்தை நிறுத்தும் போது போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு மிகவும் உதவினர். மூத்த குடிமகன்கள் எல்லாம் வாகனத்தை நிறுத்தும் போது தடுமாறினர் அப்போது பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் அவர்களுக்கு மிகவும் உதவினர்.

மாநாட்டுக்கு சென்று என்னுடைய கைபேசியில் எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு....


கோவையில் வரலாற்றில் பதியும் இம்மாநாட்டை அறிவித்து வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கும் தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள்....

உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் ஜூலை 25, 2010ம் நாள் பிற்பகல் 3.45 மணியிலிருந்து மாலை 4.15 வரையிலும், மாநாட்டு வளாகத்தில் இருக்கும் முரசொலி மாறன் அரங்கத்தில், கவிஞர்.திலகபாமா, சிவகாசி அவர்கள் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வலைப்பூக்களால் நிகழ்ந்த சாதனைகள் எனும் தலைப்பில் உரையாற்றவிருக்கிறார் ஈரோடு கதிர் அவர்கள். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

அனைவரும் வந்து உலக தமிழ் செம்மொழி மாநாட்டை கண்டுகளிக்குமாறு அன்புடன் வரவேற்கிறேன்......


14 comments:

  1. நீங்க மாநாட்டு PRO போல பதிவை போட்டு தாக்குறீங்க.. ??

    ReplyDelete
  2. நல்ல போட்டோக்கள்.

    ReplyDelete
  3. புகைப்படங்கள் நல்லாயிருக்கு.. நன்றி..

    ReplyDelete
  4. குடுத்து வைச்சவங்க..

    கோவையில் இருந்து மாநாட்டைப் பார்க்கறீங்க..

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு சங்கவி. நன்றி.

    ReplyDelete
  6. நல்லாயிருக்கு.. நன்றி

    ReplyDelete
  7. பதிவு நன்றாக உள்ளது.உங்களை நினைக்கும் போது ரொம்ப பொறாமையாக உள்ளது.மாநாட்டு நிகழ்ச்சிகளைஉடனுக்கு உடன் தெரிவித்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும்.

    ReplyDelete
  8. புகைப்படங்களும், வர்ணனைகளும் சிறப்பாக உள்ளது . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  9. ஐந்தாம் உலக்த் தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர். மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் செயல்படுமெனத் தெரிவித்தார். அவர் 14.15 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார். ஆனால் இன்று அங்கு கழிவுநீர் ஓடுகிறது. அதற்குப் பின் மூன்று முறை முதல்வராய் இருந்த கலைஞர் அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார் என்று பார்த்தால், இன்று வரை ஒன்றுமில்லை..


    தமிழ்நாட்டுப் பள்ளிகளில் 7000 தமிழாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமலிருக்கிறது


    மொத்தமுள்ள 7800 நடுநிலைப் பள்ளிகளில் 600 பள்ளிகளுக்கு மட்டுமே தமிழாசிரியர்கள் இருக்கிறார்களாம்.

    772 மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலைத் தமிழாசிரியர்கள் 9 ஆண்டுகளாய் இல்லையாம்..!! உயர்நிலைப் பள்ளிகளில் சுமார் 200 பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லை..!!


    இதில் எங்கே எங்கும் தமிழ்..!! எதிலும் தமிழ்..!!??

    வாழ்க செம்மொழி மாநாடு..

    ReplyDelete
  10. பார்க்கமுடியாத தூரத்திலிருக்கும் எங்களுக்கு இந்த உதவி செய்கிறீர்கள் சங்கவி.நன்றி நன்றி.

    ஈரோடு கதிர் அவர்களுக்கு இப்பவே வாழ்த்துச் சொல்லிடலாம்.

    ReplyDelete
  11. ஊர்ல இல்லாத எங்கள மாதிரி மக்களுக்கு முடிஞ்சவரைக்கும் இது மாதிரி போட்டோஸ் போட்டீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவோம். ஒரு சின்ன திருத்தம் -ஈரோடு கதிரோட உரையாற்றுதல் ஜூலை 25 ன்னு போட்டுட்டீங்க :-)

    ReplyDelete
  12. தமிழ் நாட்டில ஆக்கள் சேர்க்கிறதாய்யா பெரிய வேலை?? ஒரு பிரியாணி பாசலுடன் 300 குடுத்தால் தன்னால வந்து சேருது. இதில வேடிக்கை என்னவென்றால் கற்புக்கரசி kushbooக்கு முன்னால கண்ணகி ஊர்தி போது ;)

    ReplyDelete
  13. போட்டோக்களும் தொகுப்பும் நல்லாருக்கு.

    ReplyDelete