Wednesday, June 16, 2010

தமிழ் செம்மொழி மாநாடும் கோவையும்.....


கோவை ரொம்பவே அழகாகிக்கொண்டு இருக்கிறது. காரணம் தமிழ் செம்மொழி மாநாடு. கோவையில் கடந்த ஆறுமாதங்களாக போக்குவரத்து நெறிதல் அதிகமாக இருந்தது அங்காங்கே புதிய சாலை பணிகள் நடைபெற்றதால் போக்குவரத்து நெறிதல் அதிகமாக இருந்தது.

ஒரு ஆறுமாதம் கஷ்டப்பட்டோம் இன்று சாலைகளில் செல்ல சந்தோசமாக இருக்கின்றது. கோவை நகரமெங்கும் 80 சதவீத சாலை பணிகள் முடிந்து இப்போது சாலையில் செல்ல சந்தோகமாகவே இருக்கிறது.

கோவையின் முதுகெழும்பு என அவிநாசி சாலையை சொல்லுவார்கள். அவினாசி சாலையில் ஒரு 10 மாதங்களுக்கு முன்னால் சென்றால் குளு குளு என இருக்கும் ஒரு 8 மாதங்களுக்க முன் அவினாசி சாலையில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி சாலையை அகலப்படுத்தினர். சாலையை அகலப்படுத்தி ஆறு வழி பாதை ஆக்கினர். இப்போது சாலையின் இருபுறமும் நடைபாதை நடுவில் உலகத்தரத்திற்கான விளக்குகள் என அவிநாசி சாலை களை கட்டுகிறது.

கோவையில் இருக்கும் அரசு மதில் சுவர்கள், வஉசி மைதான சுவர், சிறைச்சாலை சுவர், மேம்பால பக்கவாட்டு சுவர் என நீண்ட சுவர் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கேல்லாம் அழகான ஓவியங்கள். இவ் ஓவியங்களில் ஒரு சில இடங்களில் இயற்கை காட்சிகள் வரைந்து உள்ளனர் அதற்கு பதில் நம் தமிழ் பாரம்பரிய கலை, கிராமம் திருவிழா போன்றவற்றை வரைந்து இருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.

தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி மாநகராட்சி சார்பாக நிறைய பூங்காகக்கள், யோக மையங்கள் என 10 மேல் துவங்கி உள்ளனர். பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்ய தனி வழி, குழந்தைகள் பொழுது போக்குமையம், குடும்பத்துடன் விளையாட புல் வெளி என ஒவ்வொன்றும் பார்க்கத் தூண்டுகிறது.

மாநாட்டில் வைக்கப்பட்ட கம்பீர தூண்கள்...

வஉசி மைதானத்தில் அலங்கார ஊர்திகள் தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது வஉசி பூங்காவின் முகப்பு இது கோவை தான என்று வியக்கும் அளவிற்கு உள்ளது. அழகான நீருற்றுடன் அமைந்துள்ளது. மாநாட்டுக்கு வருபவர்கள் கோவையைச் சுற்றிப்பார்க்கவே இரண்டு நாள் போதாது.

மேட்டுப்பாளையம், நீலகிரி மக்களின் நீண்ட நாள் கணவான புறநகர் பேருந்து நிலையம் தயாராகிவிட்டது  15ம் தேதி துணை முதல்வர் அவாகள் திறந்து வைத்து விட்டார். இப்போது பேருந்துகள் எல்லாம் அங்கிருந்து தான் இயங்குகின்றன. இப்பேருந்து நிலையம் ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் பெறப்போகிறது. முதல் தளத்தில் பேருந்து நிறுத்தும் இடமும் தண்ணீர் வசதி, கழிப்பிட வசதி என அனைத்தும் நவீனமயமாக உள்ளது. இனி காந்திபுரத்திலும், 100 அடி சாலையிலும் போக்குவரத்து நெறிதல் மிக குறையும்.

மாநாடு ஊர்வலம் நடக்கும் அவினாசி சாலையிலும், கொடிசியா வளாகத்திலும் இன்னும் பணிகள் இரவு பகலாக நடந்து கொண்டு இருக்கிறன்றது. இன்னும் 3 நாளில் அனைத்து பணிகளும் முடிந்து கோவையில் இப்போது குளிர் காற்றுடன் பருவநிலை அழகாக உள்ளது இத்துடன் உலக தமிழ் செம்மொழி மாநாடும் சேர்வதால் கோவை மக்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கு மாநாட்டுத் திருவிழா களை கட்டும்....

கோவை மாநாட்டுக்கு வரும் பதிவர்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்....

14 comments:

  1. பதிவை படித்ததும் மாநாட்டுக்காக அல்ல அதன் பின் ஒரு முறை கோவை வரணும் என்ற ஆசை வருகிறது.. ஒரே முறை ஒரு திருமணத்திற்காக கோவை வந்து விட்டு உடன் வந்து விட்டேன் கோவை சுற்றி பார்த்ததில்லை

    ReplyDelete
  2. கோவைக்கு இந்த வசதிகள் கிடைக்க காரணமான முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி!அனைத்து தமிழ் ஆர்வலர்களும் வருக! வருக!

    ReplyDelete
  3. //கோவையின் முதுகெழும்பு என அவிநாசி சாலையை சொல்லுவார்கள். அவினாசி சாலையில் ஒரு 10 மாதங்களுக்கு முன்னால் சென்றால் குளு குளு என இருக்கும் ஒரு 8 மாதங்களுக்க முன் அவினாசி சாலையில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி சாலையை அகலப்படுத்தினர்.//

    இது சரியா?
    இப்போது களை கட்டி இருக்கும் சாலையை ஓரிரு வருடங்கள் கழித்துப் பாருங்கள். அப்போ புரியும் எது சரி என்று

    மரங்களை அழிக்கும் செயலுக்கு கண்டனம் தெரிவித்த பதிவு - மரங்களை வெட்டி அழித்து தமிழ் வளர்ப்போம்- http://www.virutcham.com/?p=1889

    ReplyDelete
  4. உலகத்தமிழ் நாடு காரணமாக, சில அடிப்படை பல நாட்களாக மறுக்கப்பட்ட வசதிகள் வருவது நல்லதே. ஊட்டியில் கழக கண்மணிகளின் கூட்டம் அதிகமாக இருக்குமே. கோவை தாங்குமா அந்தக் கூட்டத்தை. 4000 பேருந்துகளில் வருகிறார்கள்.

    ReplyDelete
  5. எப்படியோ ஊரு பொலிவான சரி ,

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. வாங்க மோகன்குமார்....

    வாங்க வந்து சுத்தி பாருங்க.....

    ReplyDelete
  9. வாங்க ரம்மி....

    அனைவரையும் உங்களுடன் இணைந்து வரவேற்கிறேன்...

    ReplyDelete
  10. வாங்க Virutcham...

    சரிதான்... மக்கள் தொகையும், வாழ்க்கை தரமும் உயரும் போது சாலையின் தரமும் உயரவேண்டும் அல்லாவா?

    ReplyDelete
  11. வாங்க பின்னோக்கி....

    நிச்சயம் ஊட்டி களை கட்டும் ஆனால் இப்போது ஊட்டியில் மழை சீசன்...

    ReplyDelete
  12. வாங்க சித்ரா வாங்க...

    அப்படியே மாநாட்டுக்கும் வாங்க....

    ReplyDelete
  13. வாங்க ரோகிணிசிவா...

    இதுவும் சரிதான்....

    ReplyDelete
  14. வாங்க சசி...

    வாங்க புஷ்பா...

    தங்கள் வருகைக்கு நன்றி....

    ReplyDelete