Tuesday, June 8, 2010

அதிரடி அரசியல் ஆரம்பம்....


நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது எனது அரசியல் விவாதம் எப்போதும் சூடு பறக்கும் எனது வலைப்பதிவை படிக்கும் என் நண்பர்கள் எங்களிடம் இப்படி அரசியல் பேசுகிறாயே இதை பதிவாக போடு நன்றாக இருக்கும் என்பார்கள் பார்க்கலாம் என்பேன். கடந்த சனிக்கிழமை நண்பர் வால்பையனை சந்தித்தேன் அப்போது பேசிக்கொண்டு இருக்கும் போது உங்கள் அரசியல் பார்வை நன்றாகத்தானே உள்ளது இதை நீங்கள் பதிவாக்கலாமே என்றார். நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நாமும் எழுதித்தான் பார்ப்போமே என்று எனது முதல் அரசியல் பதிவை இன்று பதிகிறேன். இனி வாரம் ஒரு அரசியல் பதிவை பதியலாம் என இருக்கிறேன் உங்கள் ஆதரவோடு.....

2011ம் ஆண்டு தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாம் யோசித்துக் கொண்டு இருக்கும் போது தனது ஒவ்வொரு  நடவடிக்கையும் அடிமேல் அடி எடுத்து வைத்து மீண்டும் நாற்காலியை தக்க வைக்க கலைஞரின் ஒவ்வொரு நடவடிக்கையும் உணர்த்துகிறது.


தமிழகத்தைப்பொறுத்தவரை 2011ம் ஆண்டும் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கு இடையேதான் போட்டி இந்த இரண்டு கட்சிகளும் அமைக்கும் கூட்டணியை பொறுத்து தான் வெற்றி தோல்வி அமையும். மற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து மூன்றாம் அணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் வெற்றி பெறுவது மிகக் கடினம். அதற்கான வாய்ப்புகளும் குறைவு.

திமுக, காங்கிரஸ் கூட்டணி மாறுவதற்கான வாய்ப்பு இல்லை. ராகுல் திமுகவிடம் நெருக்கமாக இல்லை என்று கூறுகிறார்கள் ஆனால் சோனியாவின் முழு அதரவு கடந்த 10 ஆண்டுகால நண்பன் திமுகவிற்கு தான். மத்தியைப் பொறுத்தவரை மம்தாவிற்கு அடுத்து திமுகவிற்குத்தான் அதிக எம்பிக்கள் உள்ளனர். மம்தா அவ்வப்போது போர்க்கொடி தூக்குகிறார். அடுத்து சரத்பவார் இவர் ஐபிஎல் பிரச்சனையில் எதிர்கட்சிகள் கேள்வி கேட்டு துளைத்து எடுக்கின்றனர். ஆனால் திமுகவினால் பிரச்சனைகள் இல்லை, அனைத்து பிரச்சனைகளுக்கும், பிரதமர் சோனியாவின் முடிவிற்கு சாதகமாக திமுக செல்வதால் சோனியாவின் சாய்ஸ் திமுகவே.


திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் இப்பொழுது உள்ளது. பாமகவிற்கு கலைஞர் வைத்த செக்கால் என்ன செய்வது என்று இன்னும் யோசித்துக்கொண்டு இருக்கின்றார்கள். இன்று நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தான் தெரியும். கலைஞருக்கு பாமக கூட்டணிக்கு வந்தாலும் இலாபம் வரவில்லை என்றாலும் இலாபமே.

அதிமுக கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் மற்றும் மதிமுக உள்ளது. இவர்கள் இங்கு தான் இருந்தாகவேண்டும் வெளியே வந்து 3ம் அணி அமைப்பதற்கான வாய்ப்பும் இல்லை திமுக கூட்டணிக்கு செல்லவும் வாய்ப்பு இல்லை. அதிமுக கூட்டணிக்கு பாமக வருவது கடினமே. ஏற்கனவே கூட்டணியில் நிறைய அனுபவபட்டு விட்டர்கள் இதில் மீண்டும் கூட்டணிக்கு வருவது கடினம். அதிமுகவின் இன்றைய குறிக்கோள் தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டு வருவது தேமுதிக கூட்டணிக்கு வந்தால் அதிமுக கூட்டணி நன்றாக பலம் பெறும் எப்பாடுபட்டாவது தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டு வர முயல்கிறார்கள். தேமுதிக அதிமுக கூட்டணிக்கு வந்துவிட்டால் 2011ம் ஆண்டு தேர்தல் திமுகவிற்கு சரியான சவாலகவே இருக்கம்.

தேமுதிக தனியாக நிற்கும் வரை அது திமுகவிற்குத்தான் சாதகம். தேமுதிக திமுக கூட்டணிக்கு வருவது கடினம். தேமுதிகவின் கொள்கையான தனித்துப் போட்டி என்பதில் இருந்து இறங்காமல் தனியாகவே போட்டியிட்டால் திமுக கூட்டணி வெற்றி என்ற நிலைப்பாட்டில் இருக்கும். தேமுதிக அதிமுக கூட்டணிக்கு சென்று விட்டால் 2011 தேர்தல் களை கட்டும்.

18 comments:

  1. முதல் அரசியல் இடுகை, முத்தாய்ப்பாய் இருக்கிறது. பிடியுங்க பூங்கொத்து பங்காளி.

    இன்னும் நாள் இருக்கு, அணிகள் மாறும், ஆட்சியும் மாறுமா என்பது சந்தேகமே!

    பார்க்கலாம்! இதுபோல் அடிக்கடி எழுதுங்க!

    பிரபாகர்...

    ReplyDelete
  2. வாங்க பங்காளி...

    வருகைக்கும், வாழ்த்துக்கும், பூங்கொத்துக்கும் நன்றி....

    என் மனதில் நான் படித்து தெரிந்த அரசியலை எனது பார்வையில் எப்படி என்பதை எழுதலாம் என முடிவு செய்து உள்ளேன்...

    ReplyDelete
  3. தாய் தமிழ் மண்ணே வணக்கம்..... நாட்டு நடப்பை பாத்தா.......... கண்ணுல வாட்டர்......!!!

    ReplyDelete
  4. அரசியல் கட்டுரை அருமை ... யதார்த்த பார்வை.

    ReplyDelete
  5. வாங்க சித்ரா வாங்க....

    கவலைப்படாதீங்க கண்ணுல வாட்டர் வந்தாலும் அதை துடைக்க ஒரு கைக்குட்டை நிச்சயம் இருக்கும்....

    ReplyDelete
  6. வாங்க கருணாகரசு....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  7. ஒரு விஷயம். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு முயலும். பல பிரச்சனைகள் அப்போது தான் வெடிக்கும்.

    ReplyDelete
  8. வாங்க தமிழ் உதயம்....

    நிச்சயம் முயலும் ஆனால் யாரை அமைச்சர் ஆக்குவது என வரும் பிரச்சனையால் இதற்கு வாய்ப்பு குறைவு.....

    ReplyDelete
  9. அரசியல் எழுதறேன்னு அரசியல் ஆருடமே சொல்லிப்புட்டீங்க! அசத்தல்!

    ReplyDelete
  10. தேமுதிக அதிமுக கூட்டணிக்கு சென்று விடும் என பத்திரிக்கைகள் சில நாட்களாக எழுதின்றன. அப்படி நடந்தால் அ. தி. மு. க ஜெயிக்கலாம்

    ReplyDelete
  11. சங்கவி,

    நல்ல அலசல்!

    எது ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு சேவை செய்யும்னு ஒரு கண்ப்பும் எழுதுங்க.

    ReplyDelete
  12. என்னவோ பெருசா அரசியல் பத்தி சொல்ல போறார் பார்த்த...இதுவா உங்க நண்பர்கள் உசுப்பு எத்துனது. இது தான் நாளை ராத்திரி பிறக்குற குழந்தைக்கும் தெரியுமே! நண்பர்கள மாது அப்பு.

    ReplyDelete
  13. வாங்க சேட்டை...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  14. வாங்க மோகன்...

    அப்படி நடந்தால் வாய்ப்பு உண்டு....

    ReplyDelete
  15. வாங்க சத்ரியன்...

    அதைப்பற்றி இனி வரும் காலங்களில் அலசுவோம்...

    ReplyDelete
  16. வாங்க Thameez...

    பெருசா எல்லாம் ஒன்னும் சொல்லலீங்க... ஏதோ எனக்கு தெரிஞ்சத தான் சொன்னேன்... நாளை க்கு பொறக்குற குழந்தைக்கு கூட தெரியும் என எனக்கு தெரியலிங்க.... தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  17. பதிவு நல்லா இருக்கு.நல்ல அலசல்.அதிமுக நிலவரம் தான் என்ன ஆகுமோ தெரியவில்லை.பெரியம்மா எல்லா பொறுப்பையும் சின்னம்மா கையில கொடுத்துட்டாங்க.அவங்க வச்சது தான் இப்போ சட்டமா இருக்கு.அடுத்த தேர்தலுக்குள் மீதி இருக்கும் அதிமுக விசுவாசிகளும் வேறு இடம் தேடி ஓடி விடுவார்கள் என நினைக்கிறேன்.பார்ப்போம்.

    ReplyDelete
  18. உங்களுக்கு இருக்கும் அரசியல் பார்வை மிகவும் தீர்க்கமான ஒரு பத்திரிக்கை நிருபருக்குறியது, மேலும் நீங்கள் பத்திரிக்கையில் பணியாற்றியது தெரிந்ததும் மேலும் அதிர்ந்தேன்!
    முன் கூட்டியே சாத்தியகூறுகளை தீர்மானிக்கும் கலை வெகு சிலருக்கே உள்ளது,(இது மண்டபத்தில் எழுதி கொடுத்தது)

    அடிக்கடி அரசியல் பதிவுகள் எழுதி என்னை போன்ற சிறுவர்களுக்கு அரசியல் சொல்லி தர வேண்டுகிறேன்!

    ReplyDelete