Tuesday, August 19, 2014

பம்பாய் மிட்டாய்... ( ஜவ்வு மிட்டாய்)

 
ஒரு பெரிய மூங்கில் குச்சியில் ஓர் அழகான பெண் பொம்மை, கைதட்டும் அது கை தட்டும் போதெல்லாம் மணி அடித்து நம் கவனத்தை ஈர்க்கும் இந்த பம்பாய் மிட்டாய் வண்டி. பெரும் பாலும் கைகளில் தூக்கிக்கொண்டு வருவர். சிலர் சைக்கிளில் பம்பாய் மிட்டாயை கொண்டு வருவார்கள்.
இவர்களின் சத்தத்தை கேட்டதுமே இவர்கள் பின்னால் ஓடும் சிறு பிள்ளைகளின் கூட்டம். அம்மா நாலனா கொடும்மா ஒரு வாட்ச் வாங்கிக்கிறேன் ஜவ்வு மிட்டாய்க்காரர் வந்து இருக்கார் எனவும் அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி நாலணா வாங்குவதற்குள் அழுது புரள வேண்டும்.
பெரும்பாலும் இந்த ஜவ்வு மிட்டாய்கள் இரு வண்ணங்கள், அல்லது 3 வண்ணங்களில் இருக்கும். சிகப்பு வெள்ளை, சிகப்பு பச்சை வெள்ளை என்ற வண்ணங்கள் தான் அதிகம் இருக்கும்.

அம்மாவிடம் நாம் காசு வாங்குவதற்குள் பக்கத்து வீட்டுக்கார நண்பனுக எல்லாம் கையில் வாட்ச் கட்டிக்கொண்டு எனக்கு கொக்கானிக்கா காட்டிக்கொண்டு நிற்பர். சில பெண்குழந்தைகளோ கழுத்துக்கு நெக்லசும், சில வாண்டுகள் கார், ஜீப் என செய்து வாங்கி இருப்பர் ஆனால் அனேகம் பேருக்கு வாட்ச் தான் மிக பிடிக்கும்.
இப்போது எல்லாம் இந்த பம்பாய் மிட்டாய்க்காரை பார்ப்பது மிக அரிதாகிவிட்டது, அப்படியே அவர்கள் வந்தாலும் அவர்களை சுற்றி வரும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக குறைவு தான்.
சமீபத்தில் தேர்கடையில் பம்பாய் மிட்டாயை பார்த்ததும் என் குழந்தைகளிடமும், அக்கா குழந்தைகளிடமும் இந்த மிட்டாய் பேர் பம்பாய் மிட்டாய் எனவும் ஜவ்வு மிட்டாய் எனவும் அழைப்போம் என்று கதை சொல்லி வாங்கிக்கொடுத்தோம். எங்க வாண்டுகள் எல்லாம் ஆளுக்கு ஒன்றாக வாங்கி இரண்டு முறை ருசி பார்த்து விட்டு அப்பா இது five start மாதிரி இல்ல எனக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டனர்.

ஒரு காலத்தில் உங்க அப்பன் இந்த மிட்டாய் சாப்பிடுவதற்கு அழைந்தது ரொம்ப, என்று சொன்னதும் அது உன் தலைஎழுத்து மாமா என்று பன்னு கொடுத்து என்னை ஆப் செய்து விட்டனர்..

ஆனாலும் என் நினைவுகள் இந்த ஜவ்வு மிட்டாயை கையில் மிட்டாயை ஒட்டி கொண்டு மிட்டாயின் இனிப்பு சுவையோடு கையில் வெய்யிலின் வேர்வையும் கலந்து உப்பு சுவை யோடு, மணிகணக்கில் அந்த ஜவ்வு மிட்டாயாய் சுவைப்பதே தனி ருசிதான்...
அநோகமாக படிக்கும் நீங்களும் இந்த ருசியை நிச்சயம் ருசிச்சு இருக்குங்க தானே நண்பர்களே...


4 comments:

  1. நான் வாட்ச் வாங்கி கட்டியிருக்கிறேன்.

    ReplyDelete
  2. அந்த சுவையின் அருமை இந்த காலத்து பசங்களுக்குத் தெரியாது! அருமையான நினைவுகள்! நன்றி!

    ReplyDelete
  3. நெய்வேலியில் கிடைத்ததில்லை. ஆனாலும் திருவிழா சமயத்தில் எங்கோ சாப்பிட்டதுண்டு.

    ReplyDelete
  4. சவ்வு மிட்டாய்... ஆஹா... அந்தச் சுவை... இதைப் படிக்கும்போது நாவில் தெரிகிறது...

    ReplyDelete