Thursday, June 19, 2014

புலம்பல்களுடன் வாழும் மனசு

தினமும் காலை எழுந்தோமா ! வேலைகளை முடிச்சோமா ! மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு, குழந்தையை பள்ளியில் விட்டு, நாம் அலுவலகத்துக்கு வந்தோமா!! என்று தான் பயணிக்கிறது நமது வாழ்க்கை. ஆனால் நம் மனசு அப்படி பயணிப்பதில்லை, பேருந்தில் புட் போர்டு அடிச்சு செல்பவனை முதலில் திட்ட நினைக்கிறது, நாம் போலீஸ்காரனாக இருந்தால் அவன் பட்டக்சில் நாலு சாத்து சாத்தி இருப்பேன் என்கிறது மனசு. யாராலும் அவ்வளவு சுலபமாக அடக்க இயலாதது மனசு.

ஒரு மனிதன் இரண்டு வாழ்க்கை தான் வாழ்கிறான், நானும் அப்படித்தான் வாழ்கிறேன், நிறைய தவறுகளை தட்டிக்கேட்டவேண்டும் என்ற மனம் இருந்தாலும் காலமும், சூழ்நிலையும், அடுத்த வேளை சோறும் தான் கண் முன்னே உள்ளது.

தினமும் சாலையில் பயணிக்கும் போது அடுத்தவன் எப்படி போனல் நமக்கு என்ன நாம் சாலை விதிகளை பயன்படுத்துவோம் என்று முடிவெடுத்தாலம், பச்சை லைட் முடிஞ்சு, மஞ்சள் லைட் வரும் போது நாமும் வேகமாக வண்டியை இயக்கி சிக்னலை கடக்கத்தான் செய்கிறோம் இது தவறு என நம் மனதிற்கு 100 சதவீதம் தெரியும் ஆனாலும் லேட்டாக சென்றால் பாதி நாள் சம்பளத்தை கட் செய்திடுவாங்க என்ற பயத்தால் ஓடுகிறோம்.

இன்றைய சமூகத்தில் நடக்கும் அத்தனை சமூக குற்றங்களும் நமக்க தெரியும், அதற்கான தண்டனைகளும் தெரியும், அதற்கான போராட்டங்களும் தெரியும், ஆனால் செயல்படுத்த முடியாது நம்மால் காரணம் நாளைய தேவையும், நமக்கு ஏன் வம்பு என்ற படிப்பனையும்.

சாலையில் நடக்கும் விபத்துக்களை பல ஆயிரம் பேர் பார்த்தாலும், அவர்களுக்கு உதவி செய்ய நிச்சயம் அனைவருக்கும் மனது இருக்கும், ஆனால் உதவுபவர்கள் ஒரு சிலராகத்தான் இருப்பர். உதவாமல் போனவர்களுக்கு மனசு இல்லை என்று நாம் நினைத்தால் நிச்சயம் அது நம் தவறு, அவனின் காலங்களும், அப்போதைய சிந்தனையும் நமக்கு தெரியாது, ஆனால் அவனுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும், இவை அத்தனையும் கடந்து அவன் சாலை விபத்தை நினைக்கும் போது, உதவமுடியவில்லையே என்று அவன் மனம் அன்று அழுதிருக்கும்.

எத்தனையோ ஊழல்களை தினமும் தினசரியில் படிக்கின்றோம், அதைப்பற்றி தீவிரமாக பேசுகிறோம், அதற்கான தீர்வையும், அடுத்து இதில் என்ன நடக்கும் என்பதைப்பற்றி எல்லாம் பேசும் நாம் அதற்கான நமது பங்களிப்பை முயற்சியை எடுப்பதில்லை.

ரேசன் கார்டு வாங்க போகிறோம் போகும் போது லஞ்சம் கொடுக்காம வாங்கிவிட வேண்டும் என்று எண்ணத்தோடு தான் போகிறோம், இன்று போய் நாளை வா, என இரண்டு நாளைக்கு நம்மை அழைக்களிக்கும் போது, பேசாமல் காசை கொடுத்து காரியம் சாதிப்பவர்கள் தான் நாம். கொள்கைப்படி வாழ முடியாது என்பதால் கொள்கையில் சில சமரசங்களை செய்து கொள்கிறோம், நம் கொள்கை தானே, நம்மை யார் கேட்கப்போகிறார்கள் என்ற தைரியம் தான் காரணம். பட் மனசு கொள்கையை மீறிவிட்டோம் என்று ஓரிரு முறை உணர்த்தும் அப்புறம் அதுவும் மறந்து விடும்.

சமரசமே நமது வாழ்க்கையாகிவிட்டது, கொள்கைகள் எல்லாம் தூக்கி குப்பையில் எறியப்பட்டது தான் நம் வாழ்க்கை, இப்படித்தான் நான் நேர்மையாகவும், அனைத்து சட்ட திட்டங்களை அறிந்திருந்தும் அதன் படி வாழ நினைப்பவன் போகும் இடம் குப்பைத்தொட்டியாகத்தான் இருக்கனும். பிழைக்க தெரியாதவனாக இருக்கிறான் என்ற இந்த வார்த்தையை அடிக்கடி கேட்டாலும் நம் மனதை சமரசம் செய்து தான் நாம் வாழவேண்டி இருக்கு. மனசாட்சியோடும் அதன்படியும் வாழ்வது நம் சமூகத்திற்கு ஏற்றதல்ல. எப்போதும் புலம்பல்களோடு தான் வாழ்கிறது நம் மனசு...



7 comments:

  1. அருமையாக சொன்னீர்கள்! எல்லாவற்றிலும் சமரசம் செய்து கொள்ள ஆரம்பித்துவிட்டோம்! சிறப்பான பதிவு!

    ReplyDelete
  2. வணக்கம்

    ஒவ்வொரு மனிதனின் யதார்த்த நிலையும் இதுதான்.. மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. எல்லோரும் தவறென்று தெரிந்தாலும் சரியானதை செய்ய முடியாத கையறு நிலையிலேயே இருக்கிறோம். கோழைகளா? சந்தர்ப்பவாதிகளா? சமூகத்தோடு அனுசரித்து செல்பவர்களா? ஒண்ணும் புரியல போங்க...

    ReplyDelete
  4. //ஒரு மனிதன் இரண்டு வாழ்க்கை தான் வாழ்கிறான், நானும் அப்படித்தான் வாழ்கிறேன், நிறைய தவறுகளை தட்டிக்கேட்டவேண்டும்//

    அடுத்தவன் தவறுகளை தட்டிக் கேட்க வேண்டும் என்று நினைக்கும் நம் மனசு நம் தவறை அடுத்தவர்கள் அடுத்தவர் தட்டிக் கேட்கும் போது அடங்க மறுக்கிறதுதானே

    ReplyDelete
  5. பதிவு மிக அருமை

    ReplyDelete
  6. நல்ல சிறப்பான பதிவு......

    ReplyDelete