Monday, June 9, 2014

மகனும் முதல் நாள் பள்ளியும்....



முதல் நாள் மகன் பள்ளிக்கு எப்போது செல்வான் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களோடு காத்திருந்தேன், அதற்கு முதலில் பள்ளியில் சேர்த்தவேண்டும், நாங்கள் நினைத்த பள்ளிக்கூடத்தில் இடம் கிடைக்கவேண்டும், ஏகப்பட்ட பணத்தை கட்டணமாக கட்ட வேண்டும், என 4 வருட கணவாக இருந்தது மகனை பள்ளிக்கு அனுப்புவது. மகனை பள்ளிக்கு அனுப்புவது என்பது நடைமுறையான ஒன்று, ஆனால் முதல் நாள் பள்ளிக்கு செல்லும் போது அவன் போகமாட்டேன் என்று அடம்பிடிப்பதும், அவனை கட்டாயப்படுத்தி விட்டுவிட்டு வந்து, அவன் என்ன செய்வானோ, ஏது செய்வானோ என்று மனம் அவனைச்சுற்றிக்கொண்டே வரும், நிச்சயம் இதை எல்லாம் அனுபவிக்கும் போது தான் மனது மிக சந்தோசமடைகிறது.

என் மகன் Pre KG வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சிறிய பள்ளியில் அது பள்ளி என்று சொல்ல இயலாது வீட்டில் வைத்து நடத்துகின்றனர் கிட்டத்தட்ட Home Care போலத்தான், அங்கு 1 வருடம் தினமும் அரை நாள் மட்டும் சென்று வந்து கொண்டு இருந்தான், கடந்த அக்டோபரில் இருந்து பல பள்ளிகளுக்கு படை எடுத்து, அப்ளிக்கேஷன் வாங்கி அதை கொடுத்து, நேர்முகத்தேர்வுக்கு பையனைக்கிளப்பி என அப்போதே ஆரம்பித்தோம் பள்ளி செல்லும் அளப்பறையை.

எங்கள் அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து அவர்களும் பள்ளிகளை தேட, நானும் தேடினேன், ஊரில் பாதி சிபிஎஸ்சி பள்ளிகள் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் ஓர் ஒற்றுமை உண்டு கட்டணத்தில். ஒரு இடத்திற்கு இன்னொரு இடம் அதிகமாகத்தான் இருக்கிறது, குறைந்த பாட்டைக் காணம்.

இப்படி வலைவீசி தேடுகையில் எதேச்சையாக அமைந்தது ஓர் 150 வருட பாரம்பரிய பள்ளியில் இருந்து ஓர் நேர்முகத்தேர்வு, மனைவி சகிதமாக சென்றோம், எந்த பள்ளியிலும் நேர்முகத்தேர்வில் பதிலே சொல்லாத மகன் இந்த பள்ளியில் அனைத்து கேள்விகளுக்கும் அழகாக பதில் சொன்னான், அதனாலயே எங்களுக்கு அந்த பள்ளியிலேயே சீட்டும் கிடைத்தது.

பணம் கட்டிய பின் ஏப்ரலில் ஒரு நாள் துணி, புத்தகம் என் ஒவ்வொரு நாளாக கொடுத்தனர், சூன் 2 அன்று பள்ளி என்றதும் சந்தோசத்தில் மகனுடன் நாங்களும் திளைத்தோம். அதே அன்று என் மச்சானுக்கும் திருமணம்  என்றதும் என்ன செய்வது, பள்ளிக்கு அனுப்பி ஆகவேண்டும் என முடிவு செய்தோம்.

ஆசை ஆசையாக புறப்பட்டு பள்ளிக்கு செல்ல முடியவில்லை, மச்சானின் திருமண மேடையில் நாங்கள் இருந்தோம், தாலி கட்டி முடித்ததும் அடிச்சு பிடிச்சு துணியை பையனுக்கு மாற்றிவிட்டு, காரில் வேகமாக சென்றால் அன்று பார்த்து எங்கே பார்த்தாலும் போக்குவரத்து நெறிசல், அங்கிருந்து பள்ளிக்கு சென்றால் காரை நிறுத்த இடம் இல்லை. அப்புறம் வஉசி பூங்காவில் நிறுத்தி விட்டு பையனைத்தூக்கிகிட்டு போனோம், முதலிலேயே பள்ளியில் தெளிவாக சொல்லி இருந்தனர், ஒன்னும் கொண்டு வரவேண்டாம் என்று, ஆனால் அங்கு எல்லா பெற்றோரும் அனைத்து புத்தகத்தையுத் தூக்கி கொண்டு வர, என் மனைவி நீ போய் எடுத்து வா என்று என்னை துரத்த மீண்டும் ஓடி புத்தகத்தை எல்லாம் எடுத்து வந்தேன்.

பள்ளிக்கு உள்ளே வந்ததும் பையனை மட்டும் வாங்கிக்கொண்டு எங்களை வெளியே அனுப்பினர். அவனும் அழுகாமல் சமத்தாக சென்றவன் பைபை கூட சொல்ல முடியவில்லை, அதற்குள் வகுப்புக்கு அழைத்து சென்றுவிட்டனர், பின் நாங்க திருமண மண்டபத்துக்கு சென்றோம், இப்படித்தான் சென்றது கடந்த வாரம் முழுவதும், திருமண வீடு, பள்ளி என சுவாரஸ்யம் குறைவாகத்தான் போனது.

இன்று காலை பள்ளிக்கு மகனை தூக்கத்தில் இருப்பவனை எழுப்பினால் நான் போகவில்லை, எனக்கு பள்ளி பிடிக்கவில்லை என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தவனை தூக்கி கொஞ்சி, ஒவ்வொரு வேலை செய்யும் போதும் அவனுக்கு கதை சொல்லி, சின்ன சினுங்களுடன் மிரட்டி என 1 மணி நேரம் போராடி புறப்பட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

பள்ளிக்கு புறப்பட்டவனை வேனில் ஏற்றுவது தான் அடுத்த பெரும் வேலை, வேன் வாசலை நோக்கி வந்ததும் அழுக ஆரம்பித்தவனை வலுக்கட்டாயமாக தூக்கி வண்டியில் உட்காரவைக்க, உள்ளே சென்றவன் கண்களில் நீர் இல்லாமல், அழுகாமல் இங்கியே இரு, இங்கியே இரு என்று டாட்டா சொல்லிக்கொண்டே பள்ளிக்கு சென்றுவிட்டான்...

மகன் முதல் நாள் பள்ளி சென்றதை விட இன்று தான் எனக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டாம் மற்றும் திண்டாட்டமாக இருந்தது அவனை வழி அனுப்புவதில்...


11 comments:

  1. இனிய அனுபவம்.. உள்ள விடாதனால டீச்சரை பற்றிய குறிப்பு ஒன்றும் வரவில்லை. அப்படித்தானே.. ;-)

    ReplyDelete
    Replies
    1. அது தனிக்கதை மச்சி... அது விரைவில்....

      Delete
    2. அந்த அனுபவமே தனிதான்!
      வரப்போகும் தனிக்கதையும்தான்!

      Delete
  2. இப்படிலாம் என் பசங்க எதும் அழிச்சாட்டியம் பணதா நினைவில் இல்ல சகோ! சமர்த்தா ஸ்கூலுக்குப் போய்ட்டாங்க. ஒருவேளை அம்மாவை விட ஸ்கூல் பெஸ்ட்ன்னு அப்பவே முடிவு பண்ணிட்டாங்களோ!!

    ReplyDelete
    Replies
    1. " பண்ணிட்டாங்களோ!! "

      யக்கா... முடிவு பண்ணித்தான்... ஸ்கூலுக்கு போய்ட்டாங்க போல...

      ஒரு வேளை உங்க பேச்சுக்கு டீச்சர் பேச்சையே கேக்கலாம்னு போய் இருப்பாங்களோ???
      டவுட்டு

      Delete

    2. அம்மாவின் பேச்சை கேட்டால் பேஸ்புக்கிலும் ப்ளாக்கிலும் பதிவுதான் எழுத வேண்டும் எதிர்காலத்தில் அதனால் நாலு காசு பிரயோசனம் இல்லை பேசாமல் ஸ்கூலுக்கு போய் டிச்சர் பேச்சை கேட்டால் அப்பா மாதிரி நாலு காசு சம்பாதிக்கலாம் என்று நினைத்து சேட்டை பண்ணாமல் போயிருப்பார்கள் சகோ

      Delete
  3. வணக்கம்

    இது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை அல்லவா? அந்த கடமையை மிகச் சரிவர செய்துள்ளீர்கள்.... மகன் கல்வியில் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. புது இடம், புது சூழல் பழகப் பழக சரியாகிவிடும்
    தங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  5. இந்தக் காலத்து பசங்க ஸ்கூலுக்குப் போகும்போது அழுது ஆர்ப்பாட்டம் பண்றதில்ல, நம்மளத்தான் சமாதானம் பண்ணிட்டுப் போகுதுகள்....

    இனிய நினைவுகள்...

    ReplyDelete
  6. இனிய நினைவுகள்....

    என் மகளை பள்ளிக்கு அனுப்பிய நினைவுகள் வந்து போனது!

    ReplyDelete