Sunday, June 15, 2014

மஞ்சப்பை - இது சினிமா விமர்ச்சனம் அல்ல...


தற்போது வாழ்க்கைக்காக இடம் பெயறுபவர்கள் தான் நிறைய, அதுவும் படித்து முடிச்சு பட்டணத்தில் வேலை பார்த்து, அப்படியே தங்கள் இலட்சியமாக அமெரிக்கா போவது எப்படி என்பதைத்தான் அடுத்த இலக்காக வைத்து செயல்படுகின்றனர், இது தான் இன்றைய இளம் தலைமுறையினரின் இலட்சியமும் கூட.

பட்டணத்தில் வேலை பார்க்கும் இளைஞர்கள் எத்தனை பேர் தன் தாய், தந்தையரை பட்டணத்துக்கு அழைத்து வந்து ஊரைச்சுற்றிக்காட்டுகின்றனர் என்றால், சொற்ப எண்ணிக்கைதான் என்று அடிச்சு சொல்லமுடியும் நம்மால். அதுவும் தாய், தந்தையர் படிச்சு இங்கு கிராமத்தில் வேலையில் இருப்பவர்களாக இருந்தால் அவர்களை அழைத்து வந்து இதுதாம்மா நீ ஆனந்த விகடனில் படித்த வேளச்சேரி மால், கிழற்கு கடற்கரை சாலை என ஒவ்வொன்றையும் சுற்றிக்காட்டுவர். கிராமத்தில் கூலி விவசாயியாக இருந்தால் இதை எல்லாம் தவிர்ப்பவர்களே இங்கு அதிகம்.

கிராமத்தில் ஏழை விவசாயியாக இருந்தால் அதிகபட்சம் சென்னைக்கு வர ஆசைப்படுபவர்கள் தலைவர் எம்ஜிஆர் சமாதியை ஒருநாளைக்காவது கூட்டிட்டுப்போய் காட்டுப்பா என்று தவமாய் தவமிருப்பர், அப்புறம் அவர்களை அழைத்து வந்து ஊரைச்சுற்றிக்காட்டுவது அதிகபட்சம் ஒரு வார இறுதி நாட்களாகத்தான் இருக்கும்.

நான் தற்போது இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த எனது அப்பா, காலை எழுந்ததும் கைலியும், முண்டா பனியனும் போட்டுகிட்டு வாக்கிங் கிளம்பி விடுவார் நான் இப்படி எல்லாம் போகாதே சட்டையும், வெள்ளை வேஷ்டியும் கட்டிட்டுப்போங்க என்று கட்டாயப்படுத்துவேன் இந்த மஞ்சப்பை பார்த்ததும் நான் செய்தது மிக தவறு என்பதை உணர்ந்து வருத்தப்பட்டேன், அடுத்த முறை வரும் போது கைலியும், முண்டா பனியனோடுமே நீங்க வாக்கிங் செல்லுங்க என்று கூறுவது என்று இப்போதே முடிவெடுத்து விட்டேன்.

இந்த மஞ்சப்பை நிச்சயம் அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம், தனது அப்பா, அம்மாவை தன்னோடு வைத்துக்கொள்ளாதவர்கள் நிச்சயம் பட்டணத்தில் படும் பாடு அவர்களுக்கு நன்றாக தெரியும், தன்னை வளர்த்த தாத்தாவை நிச்சயம் இப்போதிருப்பவர்கள் தன்னோடு வைத்துக்கொள்வது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று ஆனால் இந்த படத்தில் தாத்தாவை தன்னோடு வைத்துக்கொண்டு அவர் செய்யும் எதாச்சையான சேட்டைகளை நம்மால் மிக ரசிக்க முடிகிறது. அதனால் அவர் அறியாமல் வரும் விபரீதங்கள் நம் கண்களில் நீர் வரை வைக்கிறது.

படத்தின் முதல் பாதி நல்ல ஜாலியாக போன படம் பின் பாதியில் நிறைய முறை என்னையும் அறியாமல் என் கண்களில் நீர் வரவைத்து விட்டது. சினிமாவுக்கு செல்லும் போது சந்தோசமான இடங்களிலும், நெகிழ்ச்சியான இடங்களிலும் என் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வரும் என்பது நான் அறிந்ததே, படத்திற்கு சென்றால் மனைவியையும் அழைத்து செல்லவேண்டும், அங்கு நான் அழுததை அவள் ரசிப்பாள் என்பதற்காகவே படத்திற்கு செல்வதை தவிர்த்து வந்த நான், என் மச்சானுடன் இந்த படத்திற்கு சென்று, கொஞ்சம் நிறையவே என்னை கண்ணீர் சிந்த வைத்து விட்டது இந்த படம்.. என்ன கடைசியாக மச்சானின் பக்கத்தில் உட்கார்ந்ததால் என் கண்ணீரை யாரும் காணவில்லை, பட் படம் முடிஞ்சு வரும்போது எங்க வீட்டில் எல்லோரும் அழுதிருந்தது நிறைய மனதில் இடம் பிடித்து விட்டது இந்த படம்.

சிலர் விமர்ச்சனம் என்ற பெயரில் இந்த மாதிரி எல்லாம் தாத்தா சேஷ்டைகள் செய்ய மாட்டார் என்றும், கொஞ்சம் ஓவர் என்றெல்லாம் பில்டப்போடுவாங்க, தீவிர சினிமா ரசிகன் அல்லாத எனது பார்வையில் நிச்சயம் இந்த படத்தை பார்க்கவேண்டும், நம் பெற்றோரையும், தாத்தாக்களையும் பாடாது பாடு படுத்துவதை நாம் அறிய இந்த படம் மிக உதவியாக இருக்கும். இந்த படம் பார்த்த அன்று எனக்கு என் தாத்தாவின் நினைவுகளும், நான் அவரிடம் செய்த சேட்டைகளும் மனதில் வந்து நினைவுகளை இனிமையா தந்தது அன்றைய இரவு.

12 comments:

  1. பிள்ளைகளோடு சேர்ந்து பார்க்கக் கூடிய படமா!?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் பிள்ளைகளோடு பார்க்கவேண்டிய படம் தானுங்க...

      Delete
  2. Manathil irunthu varum vaarthaigal Sathish, neengal sonnatharkaagave intha padam paarkkiren !

    ReplyDelete
  3. நானும் படம் பார்த்தேன். ரொம்ப ப்ரமாதமா படம் எடுத்துருக்காங்க.
    இந்த விமர்சனம் பன்றவங்ளுக்கிடா

    ReplyDelete
  4. வணக்கம்

    இந்தப்படம் குடும்பத்தோடு இருந்து பார்க்க கூடியவை... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. வணக்கம்

    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அருமையான படம் நண்பரே
    பார்த்து ரசித்தேன்

    ReplyDelete
  7. அந்த அருமை தாத்தாவுக்காக எத்தனை தரம் பார்க்கவும் நான் தயார் அப்படியே மனதில் நிக்கிறார்

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    WWW.mathisutha.COM

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் நண்பரே... """படித்தது கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியில்.. """

    ReplyDelete
  9. mmmmmmmmmmmmm

    ReplyDelete
  10. உணர்வுகளைச் சொல்லி விட்டீர்கள் சங்கவி... பார்க்க முயல்கிறேன்.

    ReplyDelete