உள்ளுரில் இருந்து உலகம் வரை........
அலுவலகம்,
வீடு இரண்டிலும் ஜெனரேட்டர் வசதி இருப்பதால் மின்தடை பற்றி அதிகம்
உணரவில்லை படிப்பதோடு சரி எங்கள் ஊருக்கு சென்றாலும் எனக்கு மின்தடை இல்லை
எங்கள் ஊரில் தண்ணீர் உந்து நிலையம் மூலம் வெளியூருக்கு தண்ணீர் கொண்டு
செல்வதால் அங்கும் எப்போதும் மின்சாரம் இருக்கும் ஆனால் இம்முறை ஊருக்கு
சென்றபோது கிட்டத்தட்ட 14 மணி நேரம் அதாவது நண்பன் கூட்டில் UPS போட்டு
இருந்தும் அது சார்ஜ் ஆகவே மாட்டிங்குது...
ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை பவர்கட் எப்ப போகும் எப்ப வரும் என்று யாருக்கம் தெரியாது.. கிராமம் என்பதால் எல்லார் வீட்டிலும் அம்மி, ஆட்டங்கல் இருப்பதால் சமைப்பதற்கு பிரச்சனை இல்லை ஆனால் விவசாயத்திற்கு கிணற்றில் நீர் இருந்தும் நீரை இரைக்க தண்ணீர் இல்லை.. இந்த வருடம் மழையும் இல்லை மின்சாரமும் இல்லை...
ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை பவர்கட் எப்ப போகும் எப்ப வரும் என்று யாருக்கம் தெரியாது.. கிராமம் என்பதால் எல்லார் வீட்டிலும் அம்மி, ஆட்டங்கல் இருப்பதால் சமைப்பதற்கு பிரச்சனை இல்லை ஆனால் விவசாயத்திற்கு கிணற்றில் நீர் இருந்தும் நீரை இரைக்க தண்ணீர் இல்லை.. இந்த வருடம் மழையும் இல்லை மின்சாரமும் இல்லை...
........................................................... .............................. .....
சமீபத்தில் சுந்தர பாண்டியன் திரைப்படம் பார்த்தேன் மிகநேர்த்தியாக
எதார்த்தமாக இருந்தது.. படத்தில் பேருந்தில் வரும் காட்கிகள் எல்லாம் 10
வருடம் பின் நோக்கி பயணிக்க வைத்தது.. நிறைய வசனங்கள் நன்றாக மனதில் பதிந்த
காதல் வரிகளானது...
இந்த படத்தின் ஹிரோயின் கிராமத்து மண் வாசனையில் ஆழமாக மனதில் பதிந்து விட்டார்....
பேருந்தில் சைட் அடிப்பதும் பெண்ணிற்கு நூல் விடுவதும் மிக எதார்த்தமாக இருந்தது.. நல்ல பொழுது போக்கான படம் நிச்சயம் அனைவரும் பார்க்கலாம்...
" எத்தனையோ பேர் வாக்கு தவறி இருக்கலாம் ஆனா அவுங்க நாக்கு சுத்தம் இல்லைன்னு சொல்வதில் அர்த்தம் இல்லை என்போம் அவர்களின் சூழ்நிலை அறியாமல் "
படத்தில் பிடிச்ச வசனத்தில் இதுவும் ஒன்று..
............................................................ ..............................
த்திய
பிரதேசத்தில் வைகோவின் போராட்டம் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தது
உண்மைதான்.. இந்த அளவிற்கு யாரும் இறங்கி போராடமாட்டார்கள் பல பேரை
திரட்டிக்கொண்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் பக்த்து நாட்டு தலைவரை
எதிர்த்தது வரலாற்று நிகழ்வு ஆனால் இதை மீடியாக்கல் ரொம்ப பெரிது
பண்ணவில்லை இதையே ஒரு வடநாட்டு தலைவர் செய்திருந்தால் அது மட்டுமே செய்தி
ஆகியிருக்கும்..
வைகோ என்னதான் மக்களின் பிரச்சனைக்கு போராடினாலும் அவருக்கு என ஓட்டு போடும் மக்கள் மிக குறைவுதான்.. அவரின் போராட்டத்தையும், மக்களுக்காக அவர் கொடுக்கும் குரலையும் ஆதரிக்கும் மக்கள் அவரை தேர்தலில் ஆதரிப்பதில்லை என்பது தான் நிதர்சண உண்மை...
வைகோ என்னதான் மக்களின் பிரச்சனைக்கு போராடினாலும் அவருக்கு என ஓட்டு போடும் மக்கள் மிக குறைவுதான்.. அவரின் போராட்டத்தையும், மக்களுக்காக அவர் கொடுக்கும் குரலையும் ஆதரிக்கும் மக்கள் அவரை தேர்தலில் ஆதரிப்பதில்லை என்பது தான் நிதர்சண உண்மை...
............................................................ .............................. ......
உலகிலேயே மிக குள்ளமான சிறுமியாக சார்லட்
கள்சைட்டை கின்னஸ் சாதனை புத்தகம் அறிவித்துள்ளது. 5 வயதான இவள்
இங்கிலாந்தை சேர்ந்தவள். இவளது உயரம் 68 செ.மீட்டர். எடை 9 பவுண்டு. அதாவது
4 கிலோவுக்கும் குறைவுதான்.
தற்போது பள்ளியில்
படித்து வருகிறாள். இவளது தந்தை ஸ்காட் கார்சைட். தாயார் பெயர் எம்மா
நியூமேன். பிறக்கும்போது இவள் 25 செ.மீட்டர் உயரமே இருந்தாள். எடை 2
பவுண்டு அதாவது 900 கிராமே இருந்தது. பொம்மைக்கு அணிவிக்கும் உடைகள் போன்று
மிக சிறிய உடைகள் இவளுக்கு அணிவிக்கப்பட்டது.
........................................................... .............................. ......
இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை பெருமைப் படுத்தும் விதமாக லண்டனில் புதுவித உணவுக்கு அவருடைய பெயரிடப்பட்டுள்ளது. நம் ஊரில் பஞ்சாபி தாலி என்று இருப்பதுபோல் அங்கு ‘மகாத்மா தாலி' (Mahatma Thali) என்று சூட்டப்பட்டது.
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள கணபதி சௌத் இந்தியன் கிச்சன் என்ற அந்த ஹோட்டலில் 12 வகை டிஷ்களுடன் கூடிய வாழை இலையில் பரிமாறப்படும் உணவிற்கு ‘மகாத்மா தாலி' உணவு எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மகாத்மா காந்திபற்றி அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அவர் சாப்பாட்டு விசயத்தில் சைவ உணவுகளை சிறந்த முறையில் கடைபிடித்துள்ளார் என்பது யாரும் அறிந்திராத ஒன்றாகும். அவரது உணவுப்பழக்கம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியதன் காரணமாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உணவிற்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது என்று ஓட்டல் உரிமையாளர் மணாலி ஜக்தாப் நையீம் விளக்கமளித்தார்.
லண்டன் போனாலும் தேசப்பற்று போகலையே!
......................................................... .............................. ........
உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் புருனே சுல்தான்.
அவருக்கு 3 மனைவிகள் மூலம் 5 மகன்கள், 7 மகள்கள் உள்ளனர். இவர்களில் 5 வது
மகள் ஹபிசாவுக்கு திருமணம் கோலாகலமாக நடந்தது.
ஹபிசா
மன்னர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவருக்கு 32
வயதாகிறது. தன்னைவிட 3 வயது குறைவான முகமது ருசானியை திருமணம் செய்து
கொண்டார். முகமது ருசானி பிரதமர் அலுவலக ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர்களது திருமணம் 1700 அறைகள் கொண்ட மன்னர் அரண்மனையில் நடந்தது.
பல
நூறு கோடி ரூபாய் செலவு செய்து மிக விமரிசையாக திருமணத்தை நடத்தினார்கள்.
திருமண விழாவில் தாய்லாந்து பிரதமர், மலேசிய பிரதமர், கம்போடியா பிரதமர்
உள்பட ஏராளமான வெளிநாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
தகவல்
கடந்த 2003-ம் ஆண்டில் ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் சார்ஸ்
(எஸ்.ஏ.ஆர்.எஸ்) என்ற வைரஸ் கிருமிகளால் சுவாச நோய் பரவியது. அதில் 800
பேர் உயிரிழந்தனர். தற்போது இதுபோன்று புதிய உயிர்க்கொல்லி வைரஸ்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு ஆசியாவை சேர்ந்த கத்தார் நாட்டை
சேர்ந்த ஒருவர் புதுவிதமான சுவாச நோய் பாதித்து சிகிச்சைக்காக லண்டன்
வந்தார்.
அவரிடம் நடத்திய பரிசோதனையில் அவரை புதிய
வகை உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்தது. சமீபத்தில் இவர்
சவுதி ஆரேபியா சென்று இருந்தார். அங்கு இவரை இந்த நோய் தாக்கியுள்ளது.
அங்கு இது போன்ற நோய்க்கு ஏற்கனவே ஒருவர் பலியாகி இருக்கிறார்.
தொடக்கத்தில் ஜலதோஷம் போன்று ஏற்படும் இந்நோய் படிப்படியாக நுரையீரலில்
பரவி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம்
அறிவித்துள்ளது.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக பதிவர் கண்ணன் இவர்க கவிதைகள் உணர்வுகளின் வெளிப்பாட்டில் கண்முன் காட்சி அளிக்கிறது இவரது வரிகள்..
http://www.kannam.com
http://www.kannam.com
தத்துவம்
முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது
எல்லாச் செல்வங்களிலும் ஞானமே அழியாத செல்வமாகும்.
நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்
எல்லாச் செல்வங்களிலும் ஞானமே அழியாத செல்வமாகும்.
நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்