Tuesday, December 28, 2010

அறியாப் பருவத்திலே

அறியாப் பருவத்தில் அனைவரும் குறும்புகள் செய்வது வழக்கம் நானும் நிறைய குறும்புகள் செய்துள்ளேன் அதை எல்லாம் இப்போது நினைத்தால் ஒரு பசுமை மாறா நினைவுகளாக இருக்கின்றது ஏற்கனவே எனது குறும்புகளை பற்றி பதிவுகள் எழுதி உள்ளேன் இது அதற்கும் அடுத்த நிலை... நீங்களும் நிறைய குறும்புகள் செய்து இருப்பீர்கள் நிறைய பேர் என்னுடன் ஒத்துப்போவார்கள் என நினைக்கிறேன்.. எனது குறும்பை படித்து உங்கள் குறும்புகளை அசைபோடுங்கள்...
நான் பத்தாம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வந்தேன் அப்போது எல்லாம் கொஞ்சம் குறும்பு அதிகமாக செய்வேன். எனது வாழ்வில் மறக்க முடியாத சம்பவங்கள் இந்த வயதில் தான் நடந்தது எனது விடுதி அறை எண் 22. நாங்கள் 5 பேர் இருந்தோம் அனைவரும் 10ம் வகுப்பு படித்து வந்தோம் அங்கு நான் மற்றும் நண்பர்கள் செய்த குரும்பும் மறக்க முடியாத சம்பவமும்.

சம்பவம் 1


காலண்டுத் தேர்வு முடிந்ததும் மதிப்பெண் எல்லாம் கொடுத்தார்கள் நான் படிப்பில் கொஞ்சம் சுமார் தான். நமது மதிப்பெண்களை எல்லாம் ஒரு தபாலில் எழுதி அதை விடுதி காப்பாளரிடம் கொடுக்க வேண்டும். அப்போது 40 மதிப்பெண்ணிற்கு கீழ் எடுத்து இருந்தால் அதை குறித்துக் கொள்வார்கள். எல்லா தபாலையும் போஸ்ட் செய்து விட்டு அன்று இரவு விடுதியில் இருக்கும் காப்பாளர்கள் எல்லாம் ஒவ்வொரு அறையாக சென்று மதிப்பெண் குறைந்தவர்களை எல்லாம் பின்னு பின்னு என்று பின்னுவார்கள்.

அப்படி வரும் போது எங்கள் அறையில் நானும் எனது நண்பன் லட்டு நாகராஜ் மட்டும் 2 பாடத்தில் பெயில் எங்களுக்கு மட்டும் அடி உண்டு என மற்றவர்கள் கிண்டல் அடித்தனர். காப்பாளர்கள் எங்கள் அறைக்கு வந்தனர் வந்து மதிப்பெண்ணை பார்த்துவிட்டு என்னையும் லட்டுவையும் 3 பேரும் கொஞ்சம் அதிகமாக விளாசினர். அடித்து முடித்து அவர்கள் வெளியே கிளம்பினர் அவர்கள் போய்விட்டார்கள் என நானும் லட்டுவும் ஒரு குத்தாட்டம் போட்டோம் இதை அடுத்த அறையில் இருந்து திடீர் என வெளியே வந்த எங்க காப்பாளர்  பார்த்து விட்டார் அப்புறம் என்ன மீண்டும் மூன்று பேரும் சேர்ந்து எங்களை போட்டு காரமடை பெரம்பில் பின்னி எடுத்தனர் எங்களை அடிக்கும் போது நான் வேகமாக ஐயோ என எழுந்து கத்தும் போது என் கை பட்டு எங்க காப்பாளர் கீழே விழந்தார் விழும் போது பெரம்பும் அவரது கையும் அறையில் இருந்த இரும்பு பெட்டி மேல் விழந்து சாருக்கு கை முட்டி விழகியது.

சம்பவம் 2

விடுதியில் வெள்ளிக்கிழமை அன்று காலை எப்போதும் இட்லி போடுவார்கள் இட்லிக்கு செதாட்டுக்க கொஞ்சம் சுடுதண்ணி (சாம்பார்) பச்சத் தண்ணீர் (சட்னி) கொடுப்பார்கள். இட்லி கிரிக்கெட் பந்து போல இருக்கும். 10ம் வகுப்பில் மட்டும் விடுதியல் நாங்க 40 பேர் இருந்தோம் வரிசையாக 7 அறையில் நாங்க மட்டுமே. நாங்கள் 22ம் அறைக்கும் 21ம் அறைக்கும் சாப்பாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை காலையில்தான் வைத்துக் கொள்வோம் இந்த அறையைச் சார்ந்தவர்கள் ஒரு வரிசையாகவும் மற்றொரு அறையைச் சார்ந்தவர்கள் எதிர்வரிசையில் உட்கார்ந்து போட்டியை ஆரம்பிப்போம் ஆளுக்கு 12 முதல் 15 இட்லி சாப்பிட்டு போட்டியை முடிப்போம் இது போக போக 10 வகுப்பு படித்த நாங்கள் எல்லாரும் தனித்தனியாக போட்டி என முடிவு செய்து 40 பேரில் யார் அதிகம் சாப்பிடுகின்றனர் என போட்டி வைத்து சாப்பிட ஆரம்பி்ப்போம் நாங்கள் ஆரம்பித்த நாள் முதல் 11 மற்றும் 12 வகுப்பு அண்ணன்களுக்கு இட்லி கிடைப்து இல்லை.

ஒரு நான்கு ஐந்து வாரம் அவர்களுக்கு எல்லாம் இட்லிக்கு பதில் கோதுமை உப்பு மாவே கிடைக்கும், அதுவும் வெள்ளிக்கிழமை காலை முதல் பெல் அடித்ததும் நாங்கள் எல்லோரும் தட்டை தட்டிக்கொண்டு வரிசையாக செல்வோம் இதைப்பார்த்து எல்லோரும் ஆகா போக ஆரம்பிச்சுட்டானுக் இனி நமக்கு உப்புமாதான் என்று புலம்புவார்கள்.

இச்சம்வத்தை தலைமை வார்டன் ஒரு நாள் மாலை அசம்பளியில் இந்த வருட 10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ நன்றாக இட்லிசாப்பிடுகிறார்கள் இவர்கள் இட்லி சாப்பிடுவதை தடுக்க இனி 11, 12ம் வகுப்பினர் சாப்பிட்ட பின்தான் இவர்கள் சாப்பிட வேண்டும் என ஒரு குண்டை போட்டார். ஆனாலும் எங்களுக்கு இட்லி கிடைத்தது.

அந்த வருடம் நடந்த சாப்பாட்டு போட்டியில் எங்கள் 10வகுப்பைச் சார்ந்த நண்பர் கோடீஸ் 28 இட்லி சாப்பிட்டு முதல் இடத்தையும் மற்றும் 3 பரிசுகளையும் எங்கள் அணியே வென்றது நான் 21 இட்லி சாப்பிட்டு டெபாசிட் வாங்கினேன். 10 வகுப்பு மாணவர்கள் மட்டும் 25 பேர் கலந்து கொண்டோம்.

சம்பவம் 3

விடுமுறை முடிந்து விடுதிக்கு வராமல் பள்ளிக்கும் விடுமுறை போட்டு விட்டு ஈரோடு ராயல் தியேட்டரில் ஜென்டில்மேன் படம் பார்த்து விட்டு நான் மற்றும் என் நண்பன் தியாகராஜன், கே.சி.பி.கார்த்தி 3 பேரும் நண்பன் வீட்டுக்குச்சென்று விட்டு அடுத்தநாள் காலை விடுதிக்கும், பள்ளிக்கும் சென்றோம். தினமும் இரவு பதிவேடு எடுத்து வந்து கணக்கு பார்ப்பார் காப்பாளர் செவ்வாய்கிழமை இரவு எதுவும் சொல்லாமல் விட்டு விட்டார்.

புதன் இரவு வரும்பொழுது உள்ளே வந்து பதிவெடுத்தி மீண்டும் திரும்பி ஏண்டா சங்கமேஸ்வரா வருவதற்கும் போவதற்கும் இது என்ன மாமியார் வீடா என என்னை போட்டுத் தாக்கு தாக்கு என தாக்கினார். சார் சார் இனி மேல் செய்யல சார் என சொல்லிவிட்டு அடி வாங்கி வந்து நின்றேன் என்ன செய்வது இவரை பழிவாங்க என திட்டம் தீட்டினேன். அடுத்த நாள் மாலை கிரிக்கெட் மைதானத்திற்கு எப்படியும் வருவார் இன்று போட்டுத் தாக்கி விடலாம் என முடிவு செய்து காத்திருந்தேன். நாங்கள் எல்லோரும் வரிசையாக பந்து வீசுவோம் காப்பாளர் மட்டையைப் பிடித்து அடிப்பார்.

இன்று  வீசும் பந்தெல்லாம் எம்பி எழும் வகையில் போட்டு பல்லை உடைக்கலாம் என திட்டம் தீட்டி வைத்திருந்தேன். வழக்கும் போல் அவர் வந்தார் அன்று மட்டையை பிடிக்காமல் என்னையை பிடிக்கச் சொல்லிவிட்டு பந்து வீச ஆரம்பித்தார் தலை தப்பிரான் புன்னியம் என்று தப்புவதற்குள் எனக்கு போதும் போதும் என ஆகிவிட்டது. மூன்று நாட்கள் கழித்து வசமாக சிக்கினார் ஒரு பத்து பவுன்சர் பந்து வீசி 10வது பந்தில் மூக்கை உடைத்தேன்....

இப்படி பல குறும்புகளும் சேட்டைகளும் செய்து விடுதியில் படிக்கும் போது அடிவாங்கியும் மற்றவர்களை அடித்தும் விடுதி பீஸ் கேரியரை பிடுங்கி கரண்ட் இல்லாமல் செய்வது பீடி குடித்து ரோட்டில் போகிறவர்கள் மேல் வீசுவது. காப்பாளர் குளிக்க தண்ணீர் காய வைததிருந்தால் அதை கீழே ஊற்றிவிட்டு பச்சத்தண்ணீர் கலந்து விடுவது, பாத்ருமில் படம் வரைவது, டிவி அறையில் ஆண்டனா ஒயரை புடுங்குவது. அசம்பளியில் வேண்டும் என்றே தும்புவது, தேங்காய் திருடி திண்பது, விடுதி மதில் சுவர் ஏறி பக்கத்து வீட்டு பண்ணையில் சென்று கொய்யாக்கா, மாங்காய் திருடுவது இதை பார்த்த அவர்கள் நாய் குழைக்கும் போது மதில் மேல் நின்று நாயை கல்லால் அடித்து கீழே இறங்கி வாய்க்காலில் படுத்து தூங்குவது, இரவு சினிமாவிற்கு சென்று விட்டு பைப்பை பிடித்து எனது அறைக்கு செல்வது, வயிறு வலிக்குது என்று பொய் சொல்லி மருத்துவமனைக்கு சென்று விட்டு வரும் பாதையில் பான்பராக் ஒன்று 2ருபாய்க்கு வாங்கி வந்து இங்கு 5 ரூபாய்க்கு விற்பது என பல சேட்டைகள் இதை இன்று நினைத்தால் இப்படி எல்லாம் 10வது படிக்கும் போது செய்தாமா என நினைக்க நினைக்க கூச்சமாகவும், அது ஒரு சந்தோசமான தருனம் மீண்டும் நிச்சயம் கிடைக்க வாய்ப்பில்லை..

29 comments:

  1. வடை கிடைக்குமாணே..,!!!

    ReplyDelete
  2. என்னா ஒரு ரவுடித்தனம்..

    ReplyDelete
  3. அனுபவ பகர்வு அருமை தல..!!
    பள்ளிப்பருவத்தை நினைப்படுத்திய விதம் யதார்த்தம்..!!

    ReplyDelete
  4. கொக்காமக்கா... டேஞ்சர் பார்ட்டிடா இது...

    ReplyDelete
  5. சுவாரஸ்யமான குறும்புகள்தான்..

    ReplyDelete
  6. பள்ளிப்பருவ நிகழ்வுகளை அழகாக பகிர்ந்துள்ளீர்கள் அருமை சார்,

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  7. வடை கிடைக்குமோ கிடைக்காதோ நிச்சயம் ப்ரவீனுக்கு இட்லி கிடைக்காது. சம்பவம் 1 and 2 நல்லா இருக்கு,

    ReplyDelete
  8. பசுமையான நினைவுகள் தான்.

    தனித்தனிப் பதிவுகளாகப் போட்டிருக்கலாமே..

    ReplyDelete
  9. என்னா ஒரு அனுபவ பகர்வு

    ReplyDelete
  10. அப்ப நீங்களும் நம்ம ஆளுதானா?!!

    ReplyDelete
  11. //பிரவின்குமார் said...

    வடை கிடைக்குமாணே..,!!!
    //

    வடை என்ன மதிய சாப்பாடே உங்களுக்குத்தான்...

    ReplyDelete
  12. //வெறும்பய said...

    என்னா ஒரு ரவுடித்தனம்..
    //

    நாங்களும் ரவுடி தான்...

    ReplyDelete
  13. //அருண் பிரசாத் said...

    கொக்காமக்கா... டேஞ்சர் பார்ட்டிடா இது...
    //

    ஐயேப இப்ப நான் ரொம்ப நல்லவன்...

    ReplyDelete
  14. //ஸ்ரீராம். said...

    சுவாரஸ்யமான குறும்புகள்தான்..
    //

    இன்னும் நிறைய இருக்கு..

    ReplyDelete
  15. //மாணவன் said...

    பள்ளிப்பருவ நிகழ்வுகளை அழகாக பகிர்ந்துள்ளீர்கள் அருமை சார்,

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.......
    //

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.......sir...

    ReplyDelete
  16. //சாதாரணமானவள் said...

    வடை கிடைக்குமோ கிடைக்காதோ நிச்சயம் ப்ரவீனுக்கு இட்லி கிடைக்காது. சம்பவம் 1 and 2 நல்லா இருக்கு,
    //

    மதிய நேரத்துல சோறு கிடைச்சா பத்தாதா?

    ReplyDelete
  17. //இந்திரா said...

    பசுமையான நினைவுகள் தான்.

    தனித்தனிப் பதிவுகளாகப் போட்டிருக்கலாமே..
    //

    நினைவுகள் என்றுமே பசுமைதான்...

    ReplyDelete
  18. //r.v.saravanan said...

    என்னா ஒரு அனுபவ பகர்வு
    //

    உங்க அனுபவத்த ரெண்ட வெளிய எடுத்து விடுங்க..

    ReplyDelete
  19. //வைகை said...

    அப்ப நீங்களும் நம்ம ஆளுதானா?!!
    //

    எப்பவும் உங்க ஆளுதான்...

    ReplyDelete
  20. பள்ளிப்பருவத்தை நினைப்படுத்திய விதம் யதார்த்தம்.

    ReplyDelete
  21. நினைவுகூர்ந்தவிதம் அருமை..

    பச்சைத்தண்ணீரைத்தொட்டுக்கொண்டு கிரிக்கெட் பந்தை சாப்பிட்டா இந்தமாதிரி குறும்புகளெல்லாம் தானாவே வருமோ என்னவோ :-)))

    ReplyDelete
  22. ஆஹா சங்கவி நீங்க இம்புட்டு பெரிய ஆளா? உண்மைதாங்க இந்த மாதிரி சம்பங்கள் இப்ப நினைக்கும் போது சந்தோஷத்தை கண்டிப்பா தரும்...எங்களையும் பழைய நினைவுகளுக்கு கொண்டு போயிட்டீங்க..

    ReplyDelete
  23. படிக்கும்போது அப்படியே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது

    ReplyDelete
  24. 10-ம் வகுப்பே இப்படியா? 11, 12-ம் வகுப்புல செய்த குறும்புகள் எல்லாம் எப்ப பதிவிடுவீங்க?..

    ReplyDelete
  25. //ஒரு பத்து பவுன்சர் பந்து வீசி 10வது பந்தில் மூக்கை உடைத்தேன்//

    எனக்கு பயமா இருக்கு தல! நான் எதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுகோங்க!

    ReplyDelete
  26. //பான்பராக் ஒன்று 2ருபாய்க்கு வாங்கி வந்து இங்கு 5 ரூபாய்க்கு விற்பது//

    உங்களுக்குள்ள ஒரு தொழிலதிபர் ஒளிஞ்சிருக்குறது தெரியுதே!

    ReplyDelete
  27. அந்தப் படமும் நீங்க சொன்ன நிகழ்வுகளும்...அப்பாடி...அது நீங்கதானா சங்கவி !

    ReplyDelete
  28. fiLaashpeekkil ஃபிளாஷ்பேக்கில் மனதில் ஃபிளாட் போட்டு அமர்ந்து விட்டீர்கள்

    ReplyDelete