Tuesday, December 14, 2010

பெட்ரோல் விலை உயர்வு ஏன்? புதைந்துள்ள மர்மங்கள்...


8 வது முறையாக பெட்ரோல் விலையேற்றம். ஒவ்வொரு முறை விலை ஏற்றத்தின் போதும் எதிர்கட்சிகள், லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்துவார்கள் பின்பு அரசு அதைப்பற்றி முடிவு சொல்லும் போது இது தேவையானது சர்வதேச சந்தையில் விலை உயர்வு அதனால் பெட்ரோல் விலை உயர்வு என அறிவிப்பார்கள் இது அனைவருக்கும் தெரிந்தது. இதைப்பற்றி முபமையாக தெரிந்து கொள்ளும் ஆவலில் நண்பரிடம் கேட்டேன் அவர் துக்ளக் இதழில் ஓர் கட்டுரை இதைப்பற்றி வந்து இருக்கு என எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். அக்கட்டுரை உங்களுக்காக...

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. அந்த விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய்யின் விலை உயர்வையே காரணமாக அரசு காட்டுகிறது. ஆனால் முழுமையான காரணம் அதுவல்ல.

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை விலையில், அரசு விதித்த வரிகளே பாதிக்கும் அதிகமாகும். வரி வசூல் மூலம் நிதி திரட்ட உகந்த ஒன்றாக பெட்ரோலை மத்திய மாநில அரசுகள் பயன்படுத்துகின்றன.

எல்லா நாடுகளும் பெட்ரோலியப் பொருட்களின் மீது வரி விதிக்கின்றன. ஜெர்மன், இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் அதிக வரி விதிக்கும் நாடுகளாக இருக்கின்றன. ஆனால், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகளே காரணம் என்று இவை கூறுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல என்கின்றன எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகள்.

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபெக் 2004-2008 வரையிலான ஆண்டுகளில் தான் விற்பனை செய்த கச்சா எண்ணெயின் மதிப்பு 3,346 பில்லியன் அமெரிக்க டாலர். அதே காலக்கட்டத்தில் ஜி-7 என்னும் ஏழு நாடுகளின் அமைப்பில் அடங்கிய நாடுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதித்த வரிகளின் மூலம் பெற்ற வருவாய் 3,418 பில்லியன் டாலர்கள் என்கிறது. அதாவது எண்ணெய் ஏற்றுமதி செய்த நாடுகளுக்குக் கிடைத்ததைவிட அந்த எண்ணெயின் மூலம் ஜி-7 நாடுகள் திரட்டிய வரி வருவாய் அதிகம்.

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் கொடுக்கும் விலையில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாக வரிகளுக்கே செல்கிறது. கச்சா எண்ணெய்க்கு நுழைவு வரி, மாநிலங்கள் வசூலிக்கும் சுங்கம், துறைமுகக் கட்டணம், மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி(தமிழ்நாட்டில் இது 30 சதவிகிதம்) கல்வி வரி, மத்திய அரசின் விற்பனை வரி என்று பல வரிகளின் மூலமே பெட்ரோலின் விலை பூதாகாரமாக உயர்கிறது.

அரசு தனது சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்த வரி விதிப்பின் மூலம்தான் வருவாய் திரட்ட முடியும் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. என்ன நோக்கங்களுக்காக வரி விதிப்பின் மூலம் வருவாய் திரட்டப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படுகின்றனவா?

உதாரணத்திற்கு, 1991-92ம் ஆண்டில் இருந்து எண்ணெய்த் தொழில் வாரியத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு விற்பனை வரியாக 84,337 கோடி ரூபாயைத் திரட்டியிருக்கிறது. ஆனால் எண்ணெய்த் தொழில் வளர்ச்சி வாரியத்திற்கு 902 கோடி ரூபாயை மட்டுமே தந்திருக்கிறது.

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை மானிய விலையில் தந்து கொண்டிருப்பதாகவும், அதனால் எண்ணெய் நிறுவனங்களும், அரசும் நிதிச் சுமையைத் தாங்க நேரிடுவதாகவும் அடிக்கடி கூறப்படுகிறது. இதில் கொஞ்சமும் உண்மையில்லை. 2009-2010-ம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலியத் துறையின் மூலம் வரிகள் மற்றும் சுங்கத் தீர்வைகள் வாயிலாக தங்களது கஜானாவிற்குக் கொண்டு சென்ற தொகை 1,83,861 கோடி ரூபாய்.

அதே 2009-2010-ல் பெட்ரோலிய நிறுவனங்களான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன்(ONGC) ரூ.16,767 கோடியும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ.10,220 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.1301 கோடியும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.1,837 கோடியும், ஆயில் இந்தியா நிறுவனம் ரூ.2,610 கோடியும் லாபம் ஈட்டியுள்ளன. இந்த நிறுவனங்களின் ஒட்டு மொத்த லாபம் ரூ.32,735 கோடி ரூபாய். இது இறுதியில் அறிவிக்கப்பட்ட லாபம். ஆனால் உண்மையான லாபம் இதைப் போல ஐந்து மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதே உண்மை. அந்தத் தொகை எங்கே போயிற்று..?

எண்ணெய் நிறுவனங்கள் மிகவும் ஆடம்பரமான செலவுகளைச் செய்கின்றன. அத்துடன் இந்த நிறுவன ஊழியர்களின் சம்பளம் வேறு எந்தத் துறையிலும் கற்பனை செய்ய முடியாதது.

உதாரணத்திற்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 15 வருட அனுபவம் பெற்ற சாதாரணத் தொழிலாளியின் வருடச் சம்பளம் 8,39,757 ரூபாய். எம்.காம். பட்டம் பெற்ற டிரைவர்களின் சம்பளம் வருடத்திற்கு 22 லட்சம் ரூபாய். கெஸ்ட் ஹவுஸ் பராமரிப்பாளர்(படித்தது 5-ம் வகுப்பு) பெறும் வருடச் சம்பளம் 8,56,731 ரூபாய். 8-ம் வகுப்பு மட்டுமே படித்து 1976-ல் வேலையில் சேர்ந்த அட்டெண்டரின் தற்போதைய சம்பளம் ஆண்டிற்கு 45,99,234 ரூபாய்.

எண்ணெய் நிறுவனங்களின் உண்மையான லாபம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இவை ஒரு எடுத்துக்காட்டு.

மக்களுக்கு மான்ய விலையில் தந்து கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். அதனால் நிறுவனங்களுக்கு நஷ்டம் என்கிறார்கள். அரசுக்கு நிதிச் சுமை என்கிறார்கள். கச்சா எண்ணெய்க்காக, எண்ணெய்ப் படுகைகளில் துரப்பணமிடும்போது, அதை எரிபொருளாகப் பயன்படுத்துகிறோம். அதற்குப் பிறகு கச்சா எண்ணெய் கிடைக்கிறது.

அந்தக் கச்சா எண்ணெயில் இருந்து சமையல் எரிவாயு, பெட்ரோல், நாப்தா, கெரசின், விமான எரிபொருளான வெள்ளை பெட்ரோல், டீசல் வகைகள், ஆயில் வகைகள், தார், மெழுகுகள் என பிரித்து எடுக்கப்படுகின்றன. இந்தப் பொருட்களின் மீது சுத்திகரிப்புச்செலவு, அவற்றின் மதிப்புக்குரிய வகையில் பிரித்து, மதிப்புக் கூட்டப்படுகிறதா..?

எத்ரேஆலியப் பொருட்களுக்காக அரசின் பட்ஜெட்டில் இருந்து மானியம் என்ற பெயரில் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. ஆனால், மானியம் அளிக்கப்படுவதாக கணக்குக் காட்டப்படுகிறது. இது மானியம் அளிக்காமலேயே அளிக்கப்படுகிறது என்று காட்டும் மாயையை உண்டாக்கும் போக்கு அல்லவா..?

பெட்ரோலியப் பொருட்களுக்காக அரசின் பட்ஜெட்டில் இருந்து மானியம் என்ற பெயரில் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. ஆனால், மானியம் அளிக்கப்படுவதாக கணக்குக் காட்டப்படுகிறது. இது மானியம் அளிக்காமலேயே அளிக்கப்படுகிறது என்று காட்டும் மாயையை உண்டாக்கும் போக்கு அல்லவா..!?

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷனின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா, ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு 5,515 கோடி ரூபாயை மான்யமாகத் தந்திருப்பதாக அறிவிக்கிறார்.

எண்ணெய் விநியோக நிறுவனங்கள் 3,661 கோடி ரூபாயை லாபம் ஈட்டியுள்ள காலாண்டில் எதற்காக மான்யம் தரப்பட வேண்டும்..? கூடுதலான விலையில் விற்றிருக்கும் எண்ணெயை குறைந்த விலையில் அந்த நிறுவனங்கள் விற்றனவாம். அதனால் அந்த இழப்பை ஈடுகட்ட ONGC மான்யம் தருகிறதாம்.

விற்றிருக்க வேண்டிய விலை என்று ஒரு தொகையை இவர்களாக நிர்ணயித்து விற்ற விலையுடன் ஒப்பிட்டு இழப்பு ஏற்பட்டதாகச் சொல்லி மான்யம் அளிக்கிறார்கள். ஆக விலை குறைத்து விற்ற நிலையிலேயே அந்த நிறுவனங்கள் 3661 கோடி லாபம் ஈட்டியிருக்கின்றனவே. நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு நாங்கள் மான்யம் தந்து நஷ்டப்படுகிறோம் என்ற மாயையை மக்களிடம் ஏற்படுத்தும் யுக்தியா இது..?

மான்யம் என்பது என்ன..? அதிக விலைக்கு ஒரு பொருளை கொள்முதல் செய்து, அதைக் குறைந்த விலைக்கு மக்களுக்கு விநியோகம் செய்யும்போது ஏற்படும் நஷ்டத்தை அரசே ஏற்றுக் கொள்வதுதானே மான்யம்..

உதாரணத்திற்கு, மத்திய அரசு நெல்லை கொள்முதல் செய்து அரிசியாக்கும்போது ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் 13 ரூபாய் ஆகிறது. அதை மத்திய அரசு, மாநில அரசுக்கு மூன்று ரூபாய்க்குத் தருகிறது. மாநில அரசு அதை மக்களுக்கு ஒரு ரூபாய்க்குத் தருகிறது. ஆக, மக்கள் ஒரு ரூபாய் விலையில் பெறும் ஒரு கிலோ அரிசியில் மத்திய, மாநில அரசுகள் 12 ரூபாயை இழக்கின்றன. இந்த இழப்பை மக்களுக்கு அளித்த மான்யமாக ஏற்றுக் கொள்கின்றன.

இப்படிப்பட்ட தெளிவான முறை பெட்ரோலியப் பொருட்களின் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. காரணம், இவ்விஷயத்தில் மான்யம் என்று எதையும் அரசு தரவில்லை. மாறாக, வரிகள் என்ற பெயரால் லாபம் மட்டுமே அடைகிறது. அதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயத்தில், உண்மை நிலை என்ன என்பதை நிபுணர்கள் ஆராய்வது அவசியம்.

பெட்ரோல் விலை மீதான விலைக்கட்டுப்பாட்டை இப்போது அரசு நீக்கிவிட்டது. அதனால் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப இனி பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படும் என்கிறது அரசு. கச்சா எண்ணெய் விலை ஏறினால், பெட்ரோல் விலை உயரும். கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல் விலை குறையும் என்று இதற்கு அர்த்தம்.

ஆனால் கச்சா எண்ணெய்யுடன் விதவிதமான வரிகளும் சேர்ந்தே பெட்ரோலியப் பொருட்களின் விலையாக உள்ள நிலையில், இனி எந்த நிலையிலும் பெட்ரோல் விலை பெரிதாகக் குறைவதற்கான வாய்ப்பு மிக, மிகக் குறைவுதான்.

நன்றி : துக்ளக் இதழ் 

---------------------------------------------------------------------------

வருகிற 26.12.2010 அன்று ஈரோட்டில் நடக்கும் பதிவர் சங்கமத்திற்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்...



சகோதர, சகோதரிகளே ஈரோடு சங்கமத்துக்கு வாங்க  பழகலாம்....

33 comments:

  1. இது எல்லா பத்திரிகைளையும் வந்திருக்குங்க... இதே மாறி இல்ல.. நான் ரெண்டு மூணு புக்ல படிச்சிருக்கேன்

    ReplyDelete
  2. கச்சா எண்ணெய் விலை ஏறினால், பெட்ரோல் விலை உயரும். கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல் விலை குறையும் என்று இதற்கு அர்த்தம்

    கடல் எப்போ வற்றுவது
    கருவாடு எப்போ பிடிப்பது
    எல்லாம் நம் தலைவிதி என நொந்து கொள்வதை தவிர வேறு வலி ஒன்றுமில்லை:(

    ReplyDelete
  3. இந்தியாவை பொறுத்த வரை தமிழ்நாட்டில் தான் அதிக வரி வசூல் செய்கிறார்கள் .............எல்லோரும் படிக்கணும் ......எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க

    ReplyDelete
  4. வாங்க அருண்பிரசாத்..

    ..இது எல்லா பத்திரிகைளையும் வந்திருக்குங்க... இதே மாறி இல்ல.. நான் ரெண்டு மூணு புக்ல படிச்சிருக்கேன்..

    நிறைய பேர் மறந்திருப்பாங்க இன்னிக்கு மீண்டும் பெட்ரோல் விலை ஏறுது அதனால மீள்பதிவு நண்பா...

    ReplyDelete
  5. வாங்க அரசன்...

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  6. வாங்க சக்தி...

    ..கடல் எப்போ வற்றுவது
    கருவாடு எப்போ பிடிப்பது
    எல்லாம் நம் தலைவிதி என நொந்து கொள்வதை தவிர வேறு வலி ஒன்றுமில்லை:(..

    உண்மைதான் தலைவிதி...

    ReplyDelete
  7. வாங்க இம்சை அரசன் பாபு...

    ....எல்லோரும் படிக்கணும் ......எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க..

    அதுக்குத்தான் இந்த மீள் பதிவே நண்பா...

    ReplyDelete
  8. நல்ல பதிவுங்க

    நிறைய விஷயங்கள் தெரிஞ்சுகிட்டேன்

    ReplyDelete
  9. 8,39,757 ரூபாய். எம்.காம். பட்டம் பெற்ற டிரைவர்களின் சம்பளம் வருடத்திற்கு 22 லட்சம் ரூபாய். கெஸ்ட் ஹவுஸ் பராமரிப்பாளர்(படித்தது 5-ம் வகுப்பு) பெறும் வருடச் சம்பளம் 8,56,731 ரூபாய். 8-ம் வகுப்பு மட்டுமே படித்து 1976-ல் வேலையில் சேர்ந்த அட்டெண்டரின் தற்போதைய சம்பளம் ஆண்டிற்கு 45,99,234 ரூபாய்.//////////////

    முடியல......... கண்ணக்கட்டுது சாமி!!!!

    ReplyDelete
  10. உங்கள் பதிவுகளில் உள்ள கருத்துக்கள் மேலோட்டமாக அல்லாமல் ஆழ்ந்து ஆராய்ந்து எழுதப்படுகிறது.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. இதுல இவ்ளோ இருக்கா ..?
    அட கொடுமையே .? ஆனா நஷ்டம் நஷ்டம் னு தான் சொல்லுறாங்க ..?
    தகவலுக்கு நன்றி அண்ணா ..!!

    ReplyDelete
  12. மிக தெளிவாக சொல்லி இருக்கீங்க சார்.

    ReplyDelete
  13. பெட்ரோலும், டாஸ்மாக்கும் இல்லாட்டி அரசாங்க சக்கரம் ஓடாதோ!!!??

    ReplyDelete
  14. பெட்ரோல் விலை உயர்வு குறித்து அறியாத பல தகவல்கள். தொகுத்த விதமும், தொடர்புள்ள தகவல்களை அளித்த நேர்த்தியும் மிக அருமை.

    பொதுமக்கள் எவ்வளவு அடிதான் இன்னும் வாங்குவார்களோ தெரியவில்லையே!

    ReplyDelete
  15. பயனுள்ள தகவல்கள்....

    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  16. உண்மைத் தமிழன் இதை ஏற்கனவே போட்டிருக்கிறார். அவரைக் கேட்ட கேள்விகளையே உங்களையும் கேட்கிறேன். அவர் தந்த பதில்களில் எனக்குத் திருப்தி இல்லை.

    தலைவரே, நீங்க கொடுத்திருப்பது எல்லாம் ஆண்டு சம்பளமா இல்ல ஆயுள் சம்பளமா? நான் வேற மாதிரி இல்ல படிச்சேன்?

    http://www.iocl.com/Talktous/RTIIOCManual.aspx#10

    \\உதாரணத்திற்கு, 1991-92ம் ஆண்டில் இருந்து எண்ணெய்த் தொழில் வாரியத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு விற்பனை வரியாக 84,337 கோடி ரூபாயைத் திரட்டியிருக்கிறது. ஆனால் எண்ணெய்த் தொழில் வளர்ச்சி வாரியத்திற்கு 902 கோடி ரூபாயை மட்டுமே தந்திருக்கிறது.\\

    இந்தக் கணக்கு எடுபடாது தலைவரே. ஒங்ககிட்ட இருந்து ஒரு எட்டு லட்சம் வருமான வரி அரசாங்கம் வசூல் செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். அரசு உங்களுக்கே அதை செலவு செய்ய வேண்டுமா அல்லது வருமான வரி இலாகாவிற்கு செலவு செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களா? அப்புறம் ராணுவ செலவு யார் செய்றது? பார்லிமென்ட் நடத்துற செலவ யார் செய்றது?

    \\விற்றிருக்க வேண்டிய விலை என்று ஒரு தொகையை இவர்களாக நிர்ணயித்து விற்ற விலையுடன் ஒப்பிட்டு இழப்பு ஏற்பட்டதாகச் சொல்லி மான்யம் அளிக்கிறார்கள். ஆக விலை குறைத்து விற்ற நிலையிலேயே அந்த நிறுவனங்கள் 3661 கோடி லாபம் ஈட்டியிருக்கின்றனவே. நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு நாங்கள் மான்யம் தந்து நஷ்டப்படுகிறோம் என்ற மாயையை மக்களிடம் ஏற்படுத்தும் யுக்தியா இது..?\\

    நம் நாட்டில் APM என்று சொல்லப்படுகிற administered pricing mechanism என்ற முறையில் தான் பெட்ரோல், டீஸல் விலைகள் இதுவரை நிர்ணயிக்கப்பட்டு வந்துள்ளன. மேலதிகத் தகவலுக்கு இங்கே சென்று பார்க்கவும்.

    http://www.petroleum.nic.in/apppric.htm

    அந்த மானியமும் பணமாகக் கொடுக்கப்படுவதில்லை. இந்திய அரசாங்கத்தின் கடன் பாத்திரங்களாக வழங்கப்படுகின்றன. எண்ணெய் நிறுவனகள் அதை சந்தையில் விற்றுப் பணமாக எடுத்துக் கொள்கின்றன.

    \\ஆனால் கச்சா எண்ணெய்யுடன் விதவிதமான வரிகளும் சேர்ந்தே பெட்ரோலியப் பொருட்களின் விலையாக உள்ள நிலையில், இனி எந்த நிலையிலும் பெட்ரோல் விலை பெரிதாகக் குறைவதற்கான வாய்ப்பு மிக, மிகக் குறைவுதான்.\\

    இதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. வரி வசூலிக்காமல் அரசு இயங்க முடியாது. அல்லது கடன் வாங்க வேண்டும். அதற்கு வட்டி கட்ட வேண்டும். அதற்கு மறுபடியும் கடன் வாங்க வேண்டும் அல்லது வரி விதிக்க வேண்டும்.

    ReplyDelete
  17. நல்ல பகிர்வு! எளிமையான எழுத்து நடையில் தெளிவா எழுதி இருக்கிங்க, வாழ்த்துக்கள் சதீஷ்!

    ReplyDelete
  18. ரொம்ப அநியாயமா இருக்குங்க. நாம் தான் ஏமாற்றப் படுகிறோம். நீண்ட அத்தியாவசியமான தகவலுக்கு நன்றி!!

    ReplyDelete
  19. பயங்கரமான அனாலிசிஸா இருக்கே... விவரமா விவரிச்சிருக்கீங்க.. பயனுள்ள தகவல் நண்பரே... வலைப்பூவை எப்படி மீட்டிங்க?

    ReplyDelete
  20. அட இம்புட்டு விசயம் ஒழிந்திருக்கிறதா...??

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பொது அறிவுக் கவிதைகள் - 4

    ReplyDelete
  21. விரிவான அலசல்.

    ReplyDelete
  22. தமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

    இவன்
    http://tamilthirati.corank.com/

    ReplyDelete
  23. // 1976-ல் வேலையில் சேர்ந்த அட்டெண்டரின் தற்போதைய சம்பளம் ஆண்டிற்கு 45,99,234 ரூபாய்.

    உண்மையாவா? அப்படினா இந்த வேலையில சேரவே கோடி ரூபா லஞ்சம் தரவேண்டி இருக்குமே

    நல்ல அலசல் நண்பா

    ReplyDelete
  24. பதிவு நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. நட்டம் என்று அரசும் எண்ணெய் நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் கூறுவது உண்மையா என்று பார்த்தால் அதில் கொஞ்சமும் உண்மை கிடையாது. லாப வருவாய் இழப்புதான் இவர்களால் நட்டம் என காட்டப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் லாபத்திலேயே இயங்குகின்றன. 2009_2010 ஆம் நிதியாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 10,200 கோடியும், பாரத் பெட்ரோலியம் 1,500 கோடியையும், ஹெச்.பி.சி.எல் 1,300 கோடியையும், ஓ.என்.ஜி.சி 16,700 கோடியையும், கைல் 3,140 கோடியையும் லாபமாக ஈட்டியுள்ளனர் இவை அறிவிக்கப்பட்டதால் எவ்வளவு லாபம் வெளியில் தெரிகிறது. ஆனால் அம்பானி மற்றும் எஸ்ஸார் எண்ணெய் நிறுவனங்கள் அடித்த கொள்ளை லாபம் எவ்வளவு என்று வெளியில் தெரியாது. வருமானம் இப்படி இருக்க எண்ணெய் நிறுவனங்கள் நட்டம் அடைகின்றன, அரசுக்கு கடுமையான இழப்பு என்று ஏமாற்றுவது அரசுக்கு மக்கள் குறித்த கேவலமான சிந்தனையின் வெளிப்பாடு ஆகும்.

    ReplyDelete
  26. இப்போது, ரிலையன்ஸ், எஸ்ஸôர் போன்ற தனியார் நிறுவனங்கள் பெட்ரோலிய விநியோகத்திலும், எண்ணெய் சுத்திகரிப்பிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்குத் தங்களது நஷ்டத்தை ஈடுகட்ட, அல்ல அல்ல, லாபத்தில் ஏற்படும் குறைவை சரிகட்ட அரசு உதவாமல் இருந்தால் தகுமா? இந்தத் தனியார் நிறுவனங்கள் தங்களது லாபம் குறைந்தால் அதை நஷ்டம் என்று கூறிக் கூக்குரலிடுவார்கள் என்றுகூடத் தெரியாத, அல்லது தெரிந்தும் தெரியாதவர்கள் போல நடிப்பவர்கள் நமது இன்றைய ஆட்சியாளர்கள் என்றுதான் கூறத் தோன்றுகிறது

    ReplyDelete
  27. மக்களை முட்டாளுக்கும் விசியத்தில் மத்தியஅரசும் மாநிலஅரசும் ஒற்றுமையாக செயல்படுகிறது .இதெல்லாம் நம் நாட்டின் சாபகேடு ! எத்தனையோ நம் நாட்டின் ஊழல்களை அறிந்துகொள்ளத்தான் முடிகிறது .இதற்கு முடிவு என்பது நம்மை தாண்டி எத்தனை தலைமுறைகள் ஆகிறதோ என்பது கடவுளுக்குத்தான் தெரியும் .இப்படி ஊழல்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்திய வல்லரசு நாடாக ஆகபோகிறது என்கிறது ஒரு குருப்பு . நாமெல்லாம் கனவு மட்டும் தான் காணமுடிகிறது .அது எப்ப நனவாகும் என்பது .........இதுமாதிரிதான் தொடந்துகொண்டிருக்கும்

    ReplyDelete