Saturday, December 18, 2010

எனது எதிரிகள்...

நமது சமுதாயத்தில் தினமும் நாம் பல முகங்களை பார்க்கிறோம், பழகுகிறோம் நமக்கு அனைவரும் பிடிப்பதில்லை வெகு சிலரே நம்மை கவருகின்றனர் மீண்டும் அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நண்பர்கள் ஆகிவிடுகிறோம். இதில் நண்பர்கள் குறைவு, பிடிக்காதவர்கள் (எதிரிகள்) அதிகம். ஏன் அவர்கள்  பிடிக்கவில்லை இதுவே எனது எதிரிகள்.....


பொது இடத்தில்
புகை பிடிப்பவர்கள்.......

எச்சில் துப்புபவர்கள்.....

தண்ணி அடித்து விட்டு
வாகனம் ஓட்டுபவர்கள்...
பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்.....

பேசுகிறேன் என்று சொல்லி
மொக்கை போடுபவர்கள்......

நான் சொல்வது தான் சரி
என்பவர்கள்.......

தனது தவறை
ஓத்துக்கொள்ளாதவர்கள்......

மனைவியை அடிப்பவர்கள்.......

முககவசம் அணியாமல்
வாகனம் ஓட்டுபவர்கள்.......

ஏழை மக்களை வயிற்றில்
அடிப்பவர்கள்.......

வேலை வாங்கித்தருகிறேன் என்று
அப்பாவிகளை ஏமாற்றுபவர்கள்.......

கூடவே இருந்து குழி
பறிப்பவர்கள்........

என்னிடம் பணம் இருக்கிறது
என்னால் எல்லாம் செய்யமுடியும்
என்று அகந்தையில் இருப்பவர்கள்........

மக்களுக்கு சேவை செய்கிறேன்
என்று சுருட்டும் ஓட்டுப்பொறுக்கிகள்.......

இவை அனைத்தையும் விட
நம் வீட்டில் பழகி நமது நண்பன் / தோழி
என்னும் பெயரில் நம்பிக்கைத் துரோகம் செய்யும்
துரோகிகள்.......

இன்னும் நிறைய இருக்கு.........
என்ன செய்வது இதுதான் நமது சமுதாயம்.......

24 comments:

  1. மக்களுக்கு சேவை செய்கிறேன்
    என்று சுருட்டும் ஓட்டுப்பொறுக்கிகள்///
    சூப்பர்

    ReplyDelete
  2. ஓட்டுப்பொறுக்கிகள்....// அவர்கள் திருந்தமாட்டார்கள். நாம்தான் திருந்த வேண்டும்.

    ReplyDelete
  3. //பேசுகிறேன் என்று சொல்லி
    மொக்கை போடுபவர்கள்......
    கூடவே இருந்து குழி
    பறிப்பவர்கள்........

    மனைவியை அடிப்பவர்கள்..//
    nice

    ReplyDelete
  4. இந்த பதிவின் பட்டியலில் இருப்பவை எல்லாம் மிக சிறிய விஷயங்களாக சிலர் நினைக்கலாம் ,ஆனால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துபவைகள்..

    ReplyDelete
  5. என்னங்க இங்க வந்துட்டு ஒன்றை மறந்துட்டீங்களே... பதிவு போடுறேன்,பின்னூட்டம் போடுறேன் என்றும் மொக்கைப் பதிவும் மொக்கைப் பின்னூட்டம் போடுபவர்களையும்(என்னை மாதாரி) விட்டுட்டிங்களே?

    ReplyDelete
  6. //இவை அனைத்தையும் விட
    நம் வீட்டில் பழகி நமது நண்பன் / தோழி
    என்னும் பெயரில் நம்பிக்கைத் துரோகம் செய்யும்
    துரோகிகள்.....//


    மேல உள்ள ஆள்களை காட்டிலும் இந்த வகையான ஆட்கள் ரொம்ப பயங்கரமான ஆட்கள் ........BE CAREFUL

    ReplyDelete
  7. பேசுகிறேன் என்று சொல்லி
    மொக்கை போடுபவர்கள்......////

    சார் இதுல எதுவும் உள்குத்து இல்லையே ........... என்னைய சொல்றமாதிரியே ஒரு பீலிங் சார் ...........

    ReplyDelete
  8. சிறிய விசயங்களில் சீறிய கருத்துகள் பதிவது இயல்பு தானே.!!!

    ReplyDelete
  9. இவை அனைத்தையும் விட
    நம் வீட்டில் பழகி நமது நண்பன் / தோழி
    என்னும் பெயரில் நம்பிக்கைத் துரோகம் செய்யும்
    துரோகிகள்.......


    .......சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.. சுய நலத்திற்காக, நம்பிக்கை துரோகிகளாய் மாறுகிறவர்கள், விட்டு செல்லும் வலியும் காயமும் ஆறுவது கடினம்.

    ReplyDelete
  10. அரசியல்வாதிகளை போட்டு காய்ச்சி எடுத்துட்டீங்களே

    ReplyDelete
  11. நான் என்னைத் தான் சொல்லுறிங்களோ என நினைத்தேன்...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    இலங்கைப் பதிவர்களின் கிரிக்கேட் போட்டி ஒரு பார்வை

    ReplyDelete
  12. //இன்னும் நிறைய இருக்கு.........
    என்ன செய்வது இதுதான் நமது சமுதாயம்..//

    அதேதான்... என்ன செய்வது வேறொன்றும் சொல்வதற்கில்லை...

    தொடரட்டும்...

    ReplyDelete
  13. உலகில் உள்ள நல்ல விஷயங்களையே மனதில் கொள்வோம் சார். எதிரிகள் விஷயத்தை மனதில் இருந்து விலக்கி, நல்லவையை எந்நேரமும் நினைப்பது மூலம் சில சமயம் எதிரிகள் கூட திருந்தி விடுவர்

    எனினும் உங்கள் தொகுப்பு நன்றாக உள்ளது

    ReplyDelete
  14. இந்த முறை உங்கள் தளம் தமிழ் மணத்தில் 7-ஆவது இடம் பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. எல்லாமே உண்மை கூற்றுக்கள் பாரதி

    ReplyDelete
  16. //தண்ணி அடித்து விட்டு
    வாகனம் ஓட்டுபவர்கள்.//

    - உள்ளதிலேயே ரொம்ப மோசமான எதிரிகள்

    ReplyDelete
  17. பதிவை படித்து விட்டு கமெண்ட் போடாதவர்கள்!

    ReplyDelete
  18. மனக் குமுறலை மளமளன்னு பட்டியலாக்கிட்டீங்க,அத்தனையும் சத்தியமான உண்மை.

    ReplyDelete
  19. 'நான் சொல்வது தான் சரி
    என்பவர்கள்.......'

    'தனது தவறை
    ஓத்துக்கொள்ளாதவர்கள்......'


    பதிவு அற்புதம்.

    ReplyDelete