உள்ளுரில் இருந்து உலகம் வரை........
இந்த வருட பருவ மழை தமிழகத்தை பாடாய் படுத்தி விட்டது டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் எங்கு திரும்பின் தண்ணீர். பயிர்கள் எல்லாம் மூழ்கிவிட்டது, தினமும் பள்ளி, கல்லூரி விடுமுறை என பாடாய் படுத்தி விட்டது மழை..
வருடா வருடம் மழை பருவ மழை காலங்களில் மழை வருகிறது எப்ப மழை வந்தாலும் சாலைகள், விவசாய நிலங்கள் மூழ்குகின்றன இதற்கு யார் காரணம் என்றால் இருக்கும் ஓடை பொறம்போக்கு நிலத்தை எல்லாம் பாட்டா போட்டு வீடு கட்டிவிட்டால் தண்ணீர் எல்லாம் வீட்டுக்குள்ளும், விளைநிலங்களிலும் தான் நிற்கும். இதற்கு என்னிக்குத்தான் தீர்வு கிடைக்குமோ..
வருடா வருடம் மழை பருவ மழை காலங்களில் மழை வருகிறது எப்ப மழை வந்தாலும் சாலைகள், விவசாய நிலங்கள் மூழ்குகின்றன இதற்கு யார் காரணம் என்றால் இருக்கும் ஓடை பொறம்போக்கு நிலத்தை எல்லாம் பாட்டா போட்டு வீடு கட்டிவிட்டால் தண்ணீர் எல்லாம் வீட்டுக்குள்ளும், விளைநிலங்களிலும் தான் நிற்கும். இதற்கு என்னிக்குத்தான் தீர்வு கிடைக்குமோ..
தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதால் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை இப்ப அவுங்க தொகுதி எம்.எல்,ஏவும் அமைச்சரும் தேடி வருவாங்க.. முடிஞ்ச அளவுக்கு பயன்படுத்திக்குங்க...
&&&&&&&&&&&&&
திருச்சியில் இருந்து இராமேஸ்வரம் இரவில் செல்லும் பேருந்து திருவாடனைக்குள் செல்லாமல் இராமநாதபுரத்திற்கு சென்று விடுகிறது இதனால் திருவாடனை மக்கள் விடியற்காலையில் நடந்து செல்கின்றனர் கேட்டால் ஓட்டுநரும், நடத்துநரும் பொதுமக்களை திட்டி இறக்கி விட்டுகிறார்களாம். நீ யார் கிட்ட வேண்டு மானலும் புகார் செய்துக்கோ என்கின்றனராம். நேற்று முன்தினம் இதே போல் பொதுமக்களை ஓட்டுநரும், நடத்துநரும் திட்ட இதை பொதுமக்களில் ஒருவர் தன் மொபைல் போனில் பதிவு செய்து அவர்களிடமே போட்டுக்காட்டி உள்ளார் அரண்டு போன இருவரும் பேருந்தை திருவாடனைக்குள் சென்று இறக்கிவிட்டுள்ளனர்..
பொது மக்களுக்கு சபாஸ்.. மக்கள் சக்தி முன் மற்றதொல்லாம் ஒன்றுமில்லை. இப்படி நான்கு இடத்தில் தட்டிக்கேட்டால் தான் அதிகாரம் உள்ளவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள்.
பொது மக்களுக்கு சபாஸ்.. மக்கள் சக்தி முன் மற்றதொல்லாம் ஒன்றுமில்லை. இப்படி நான்கு இடத்தில் தட்டிக்கேட்டால் தான் அதிகாரம் உள்ளவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள்.
&&&&&&&&&&&&&
1 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவில் சீனாவில் அதிவேக மணிக்கு 486 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய புதிய ரெயில் ஒன்று உருவாக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்படுகிறது. இந்த ரயில் 2012 ஆண்டில் இருந்து மக்கள் பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. நல்ல கண்டுபிடிப்பு இதன் மூலம் அதிக தொலைவில் உள்ள ஊருக்கு குறைந்த நேரத்தில் மக்கள் சென்று வர உதவும்..
நம்ம ஊர்ல இந்த மாதிரி ரயில் வந்தா கோவையில் இருந்து சென்னைக்கு 1 மணி நேரத்தில் சென்று விடலாம்.. இது நடக்குமா? சீனாக்காரன் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடியில் அதிவேக ரயில் விடுறான்... நம்ம ஆளுங்க அந்த பணத்தில் என்ன செய்வாங்க?
நம்ம ஊர்ல இந்த மாதிரி ரயில் வந்தா கோவையில் இருந்து சென்னைக்கு 1 மணி நேரத்தில் சென்று விடலாம்.. இது நடக்குமா? சீனாக்காரன் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடியில் அதிவேக ரயில் விடுறான்... நம்ம ஆளுங்க அந்த பணத்தில் என்ன செய்வாங்க?
&&&&&&&&&&&&&
இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜியாஸ் டேனியல்ஸ் (வயது 40). இவருடைய காதலி சாரா மோரே (39). இவர்கள் இருவரும் திருமணமாகா விட்டாலும் கணவன்-மனைவி போல ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது தொழில் செக்ஸ் பிரச்சினையில் இருப்பவர்களுக்கு உதவுவதே இவர்களது தொழில்.
“செக்ஸ்”சில் யாராவது திருப்தி அடையாமல் இருக்கும் பெண்களுக்கு உதவுவதை ஜியாஸ் டேனியலும், ஆண்களுக்கு உதவுவதை சாராமோரேவும் தொழிலாக கொண்டுள்ளனர். இந்த வகையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு “செக்ஸ்” மசாஜ் செய்வதுடன் அவர்களுடன் உறவும் வைத்து கொள்வார்கள்.
&&&&&&&&&&&&&
இலங்கையின் இறுதி கட்டப் போரின் போது விடுதலைப்புலிகளின் பெண் நிருபரை கொடூரமாக கற்பழித்து கொன்ற வீடியோவை சேனல்4 வெளியிட்டு உள்ளது.. ரொம்பக் கொடுமையான விசயம்.. எத்தனை தமிழ் பெண்கள் தன் மானத்தை இழந்து உயிரை மாய்த்திருப்பார்கள் நினைக்கவே கொடுமையாக உள்ளது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லுமா?
&&&&&&&&&&&&&
நடிகர் ரஜினிக்கு நாளை அறுபதாம் கல்யாணம் நடக்க இருக்கிறது.. ரஜினிகாந்த் லதா தம்பதியினருக்கு என் வாழ்த்துக்கள்...
&&&&&&&&&&&&&
வருகிற 26ம் தேதி ஈரோட்டில் பதிவர் சங்கமம் நடக்க இருக்குது பின்னூட்டம் போட்டு கும்முனுவங்க எல்லாரும் வாங்க நேர்ல கமெண்ட் அடிச்சு கும்முவோம்.
நாட்டு நடப்பு
பாரளுமன்றம் 19வது நாளாக முடக்கினர் எதிர்கட்சிகள் இது போல் இதற்கு முன் நடந்தது இல்லையாம். பேசாமல் இந்த குளிர்காலத்தொடர் முழுவதும் பல கோடி பணம் நட்டம்.. இந்த பணம் எல்லாம் நம்ம அப்பமூட்டு காசுதான்...
ராசா வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு. பல ஆவணங்கள் சிக்கின என்று செய்தி ஆனால் இதுவரைக்கும் ரெய்டு நடந்த இடத்தில் எல்லாம் சொல்லும் வார்த்தை தான். இவுங்க ரெய்டுல சிக்கி தண்டனை வாங்கயவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு..
நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார் அதிமுகவில் சேருகிறார் என்று பேச்சு அடிபடுகிறது... விதியார விட்டது தமிழன் தலை எழத்து...
உலகின் பல ரகசியங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அஸ்ஸான்ஜ் செக்ஸ் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.. எப்படியோ ஆள மடக்கிட்டாங்க ஆனா அவர் விட்ட செய்தி கசிந்தது கசிந்தது தான்..
மழை வந்ததால் நிறைய பேருக்கு இப்ப லாபம் ஆகிருச்சு.. தமிழக அரசு வெள்ள நிவாரண நிதியாக 5000 கொடுக்கிறார்களாம் மழையினால் மக்களுக்கு இலாபம். 2011 தேர்தலுக்கான ஒரு முன்னோட்டம்...
ராசா வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு. பல ஆவணங்கள் சிக்கின என்று செய்தி ஆனால் இதுவரைக்கும் ரெய்டு நடந்த இடத்தில் எல்லாம் சொல்லும் வார்த்தை தான். இவுங்க ரெய்டுல சிக்கி தண்டனை வாங்கயவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு..
நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார் அதிமுகவில் சேருகிறார் என்று பேச்சு அடிபடுகிறது... விதியார விட்டது தமிழன் தலை எழத்து...
உலகின் பல ரகசியங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அஸ்ஸான்ஜ் செக்ஸ் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.. எப்படியோ ஆள மடக்கிட்டாங்க ஆனா அவர் விட்ட செய்தி கசிந்தது கசிந்தது தான்..
மழை வந்ததால் நிறைய பேருக்கு இப்ப லாபம் ஆகிருச்சு.. தமிழக அரசு வெள்ள நிவாரண நிதியாக 5000 கொடுக்கிறார்களாம் மழையினால் மக்களுக்கு இலாபம். 2011 தேர்தலுக்கான ஒரு முன்னோட்டம்...
தகவல்
பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 68,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இது ஏன் நிகழ்கிறது என ஆராய்ந்தால் அதற்கும் காரணியாக சமூக ஏற்றத்தாழ்வும், பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வியும், தரப்படாத சமூக சமத்துவமுமே முன்னால் நிற்கிறது. வளர்ந்த உலக நாடுகளை விட வளரும் நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலுமே இத்தகைய அவலங்கள் அதிக அளவு நிகழ்கின்றன என்பது ஒன்றே போதும் இந்தக் கருத்தை வலுவூட்ட.
ஆப்பிரிக்கா போன்ற பின் தங்கிய நாடுகளில் இன்னும் பாலியல் கல்வியோ, கருத்தடையின் தேவைகள் குறித்த விழிப்புணர்வோ பரவவில்லை. வறுமையின் உச்சத்தில் இருந்தாலும் அங்கே தான் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆப்பிரிக்கப் பகுதி உட்பட 35 பின் தங்கிய நாடுகளில் குடும்பம் ஒன்றுக்கு ஐந்து குழந்தைகள் என்னும் விகிதம் இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிவிக்கிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் மேலைக் கலாச்சாரத்தை மேலாடையாய் கொண்டுள்ள நவீன நகர்ப்புறங்களைத் தவிர்த்தால் இன்னும் கலாச்சாரத்தின் ஆடைகளைத் தரித்துத் திரியும் கிராமத்து மூலைகளில் இத்தகைய விழிப்புணர்வு எழவில்லை என்பதே உண்மை.
உலகெங்கும் சுமார் ஐந்து கோடி பெண்கள் சரியான கருத்தடை சாதனங்கள் உபயோகிக்காததால் கருத்தரிக்கின்றனர் எனவும், கூடவே இரண்டரை கோடி பெண்கள் கருத்தடை சாதனங்களின் தோல்வியால் கருத்தரிக்கின்றனர் எனவும் திகைப்பூட்டும் தகவல்களை அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
கருக்கலைப்பு என்பது ஒரு குழந்தையைக் கொலை செய்வது என்பதுடன் தாயின் உடல் நலத்தையும் பெருமளவில் பாதிக்கிறது. பிற்காலத்தில் தாய்மையடையும் வாய்ப்பைக் கூட இது கணிசமாகக் குறைத்து விடுகிறது.
வலுவான அடித்தளமும், சமூகக் கல்வி, விழிப்புணர்வு, முழுமையான அரசு ஈடுபாடு இவை இல்லாவிட்டால் இத்தகைய அவலங்கள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பது மட்டும் வலியூட்டும் உண்மையாகும்.
மொக்கை ஜோக்
ஒரு நாய் கோபுரதிட்கு கிழே நின்னுகிட்டு
மேல பார்க்குது.அப்புறம் கீழ பார்க்குது. ஏன்?
ஏன்ன ஒரே நேரத்தில இரண்டு இடத்தயும்
அதனால ஒன்ன பார்க்க முடியாதே.
மேல பார்க்குது.அப்புறம் கீழ பார்க்குது. ஏன்?
ஏன்ன ஒரே நேரத்தில இரண்டு இடத்தயும்
அதனால ஒன்ன பார்க்க முடியாதே.
--------------
அம்மாவை கூபிடும் போது மம் என்று சொல்லி கூபிடுவோம்
அப்டினா பெரியம்மா &சின்னம்மாவை எப்படி கூப்பிடறது ?
வேற எப்படி?
மேக்சிமம் &மினிமம்
அறிமுக பதிவர்
எளிமையான முறையில் ஆங்கிலம் கற்க ஓர் அற்புதமான வலைத்தளம். ஆங்கில இலக்கணத்தை முறையாக தகுந்த எடத்துக்காட்டுக்களுடன் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதி வருகின்றனர். தற்போது படிக்கும் மாணவர்கள் எல்லாம் ஆங்கிலம் சரியாக பேச முடியாதவர்கள் இந்த வலைத்தளத்தில் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு பகுதியாக படிக்கும் போது ஆங்கிலம் எளிதாக பேச எழுத உதவும்.
http://tamiltospokenenglish.blogspot.com/
http://tamiltospokenenglish.
தத்துவம்
சந்தோஷத்தின் ஊற்றைத் தனக்குள்ளே அதிகம் காணக் காண மனிதன் அதிக இன்பமடைவான். மிக உயர்ந்த, பலதரப்பட்ட, நீடித்திருக்கும் இன்பங்கள் மனத்திலிருந்து எழுபவையே.
--------------
எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம்.
--------------
ஒரு பெண்ணின் வயதை மறந்துவிட்டு, அவள் பிறந்தநாளை மட்டும் நினைவில் வைத்திருப்பவனே புத்திசாலி.
குறுஞ்செய்தி
ஒரு உயிரின் மதிப்பு செத்த பின் தான் தெரிகிறது
எப்படி
உயிருடன் கோழி 60, உரிச்ச கோழி 120
எப்படி
உயிருடன் கோழி 60, உரிச்ச கோழி 120
-----------------
சார் மார்க் போடும் போது முட்டை போடாதீங்க சார்
ஏன்டா
எங்க அப்பா ஐப்பனுக்கு மாலை போட்டு இருக்கார் சார்..
ஏன்டா
எங்க அப்பா ஐப்பனுக்கு மாலை போட்டு இருக்கார் சார்..
சார் மார்க் போடும் போது முட்டை போடாதீங்க சார்
ReplyDeleteஏன்டா
எங்க அப்பா ஐப்பனுக்கு மாலை போட்டு இருக்கார் சார்..
GREAT
vadai vadai
ReplyDeleteசந்தோஷத்தின் ஊற்றைத் தனக்குள்ளே அதிகம் காணக் காண மனிதன் அதிக இன்பமடைவான். மிக உயர்ந்த, பலதரப்பட்ட, நீடித்திருக்கும் இன்பங்கள் மனத்திலிருந்து எழுபவையே.
ReplyDeleteSEMA THATHUVAM MAKKA
உங்க கடுமையான உழைப்பு தெரியுது தல.... சூப்பர்
ReplyDeleteஅருமை தோழர்ரே.. பகிர்வுக்கு நன்றி :-)
ReplyDeleteவாங்க சக்தி..
ReplyDeleteஇன்னிக்க வடை உங்களுக்கா...
SEMA THATHUVAM MAKKA
ReplyDeleteநன்றி சக்தி....
வாங்க அருண்...
வடை போச்சா...
அஞ்சரைப்பெட்டி நிறைய தகவல் தொகுப்புக்களுடன், பயனுள்ளதாய் இருக்கிறது பங்காளி...
ReplyDeleteபிரபாகர்...
//ஒரு பெண்ணின் வயதை மறந்துவிட்டு, அவள் பிறந்தநாளை மட்டும் நினைவில் வைத்திருப்பவனே புத்திசாலி.//
ReplyDeleteபிறந்தநாளை எல்லாம் இப்ப யார்ங்க ஞாபகம் வச்சுக்குறாங்க??? அத தான் முதல்ல மறக்குறாங்க. அப்புறம் பொண்ணுங்ககிட்ட திட்டு வாங்கிட்டு முழிக்கிறாங்க.
அஞ்சரைப்பெட்டி நிறைய தகவல் தொகுப்புக்களுடன், பயனுள்ளதாய் இருக்கிறது
ReplyDeleteசீனாக்காரன் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடியில் அதிவேக ரயில் விடுறான்... நம்ம ஆளுங்க அந்த பணத்தில் என்ன செய்வாங்க///
ReplyDeleteஊழல் செய்வாங்க
அஞ்சரைப்பெட்டி பல தகவல்கள்
ReplyDeleteஅஞ்சரை பெட்டியில் ஒவ்வொரு பகுதியும் அருமை..
ReplyDeleteகாரம்,மணம்,சுவை குன்றாமல் இருக்கிறது
ReplyDelete//நம்ம ஆளுங்க அந்த பணத்தில் என்ன செய்வாங்க?//
ReplyDeleteஏவ்வ்வ்வ்வ்வ்........(அப்டியே முழுங்கிட்டு ஏப்பந்தான்)
மிக அருமை .
ReplyDeleteநல்ல தகவல்கள். சீனா அதிவேக ரயில் வண்டி விடுது. நம்ம?
ReplyDeleteவழக்கம் போலவே உலகம் முதல் உள்ளூர் வரை அனைத்தையும் சொல்லிட்டீங்க அண்ணா .!!
ReplyDeleteசெய்திகளும் தகவல்களும் அருமை நண்பரே,
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பொன்னான பணி
//தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லுமா?//
ReplyDeleteஇறுதியில் தர்மமே வெல்லும் நிச்சயம் ஒருநாள் வெல்லும்.....
நிறைய புதிய தகவல்கள்! நன்றி சங்கவி
ReplyDeleteஇவர்களது தொழில் செக்ஸ் பிரச்சினையில் இருப்பவர்களுக்கு உதவுவதே இவர்களது தொழில்//////////////////////////
ReplyDeleteஇந்தமாதிரி இந்தியாவில் இல்லையா சங்கவி?!!! ஹி! ஹி!
முட்டை ஜோக் சூப்பர்!
ReplyDelete//பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 68,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.//
ReplyDeleteகொடுமையான விஷயம் ........விழ்ப்புணர்வு இன்னும் தேவை ..........
அம்மாவை கூபிடும் போது மம் என்று சொல்லி கூபிடுவோம்
ReplyDeleteஅப்டினா பெரியம்மா &சின்னம்மாவை எப்படி கூப்பிடறது ?
வேற எப்படி?
மேக்சிமம் &மினிமம்
ITHU ROMBA PALAYA JOKKUNGA SVSEKAR OR CRAZY DRAMA JOKKUNNU NENAKKIREN
செய்திகளை சுருங்க- தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள் -
ReplyDeleteபாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 68,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
ReplyDelete.....சரியான விழிப்புணர்வும் உதவியும் இல்லாததால் நேரிடும் வேதனையான விஷயம்.
அஞ்சறைப்பெட்டி..அருமை...
ReplyDeleteசித்தாரின் ஆல் இன் ஆல் அழகுராஜாவே
ReplyDeleteகலக்குங்க
அஞ்சறைப்பெட்டியில் காரம்,மணம் குணம் எல்லாம் கலந்து கட்டி சுவையாக தந்துள்ளீர்கள்.
ReplyDeleteVery good
ReplyDelete