Thursday, December 23, 2010

23.12.2010 அஞ்சறைப்பெட்டி

உள்ளுரில் இருந்து உலகம் வரை........


சென்னை சைதை அண்ணாசாலையில் உள்ள என்.சி.ராஜா அரசு மாணவர் விடுதி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் செய்துள்ளனர் இது மிக தவறு தங்களது கோரிக்கைகளை சொல்ல பல்வேறு வழிகள் உள்ளன தை விட்டு விட்டு சாலை மறியல் செய்யும் போது பொதுமக்கள் தான் பலர் பாதிக்கப்டுகின்றனர். தனியார் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல வில்லை என்றால் அரைநாள் சம்பளம் பிடிக்கும் நிறுவனங்கள் எல்லாம் உள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் குழந்தைகள் அன்று அவர்களுக்கு தேர்வு இருக்க வாய்ப்பு இருக்கிறது இதனால் சரியான நேரத்திற்கு தேர்வுக்கு செல்ல முடியாமல் போகலாம். அண்ணாசாலையை பொறுத்த வரை போக்குவரத்து மிகவும் அதிகமான ஓர் இடம் தினமும் லட்சக்கணக்கான வாகனம் செல்லும் இடம். தங்களது கோரிக்கையை நிறைவேற்ற போரடுவது தவறில்லை பொதுமக்கள் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் போராட்டம்.

-------------------------

அந்தியூரில் இருந்து சித்தாருக்கு  இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தேன் வழியில் ஓரு ஊரில் பெண்கள் கூட்டமாக நின்று கொண்டு இருந்தனர் வயதானவர்களும் அடக்கம் கொஞ்ச தூரம் சென்றதும் அடுத்த ஊரில் ஒரு 50 பெண்கள் வரிசையாக சாலை ஓரத்தில் இருக்கும் புல், பூண்டுகளை அகற்றிக்கொண்டு இருந்தனர் பக்கத்தில் ஒருவர் கையில் நோட்டு பேனா சகிதம் நின்று கொண்டு இருந்தார் இவர்கள் என்ன செய்கிறார்கள் சேவை இயக்கத்தினாரா என்று கேட்டேன் இல்ல சார் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் சார். நானும் ஊருக்கு சென்று 3 மணியளவில் திரும்பி வந்தேன் சாலையோரம் வேலை செய்தவர்கள் எல்லாம் மரத்தடியில் இளைப்பாறிக்கொண்டு இருந்தனர்அந்த கூட்டத்தில் எனக்கு சின்னபாட்டி செங்காத்தி ஆயா நின்று கொண்டு இருந்தார் இறங்கி விசாரித்து விட்டு என்ன செய்யறீங்க என்று விசாரித்ததில் ஒரு நாளைக்கு 100 சம்பளத்தில் வேலை செய்கிறேன் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் வேலை செய்வோம் மகராசன் தினமும் 100 தறாங்க நல்ல இருக்கனும் என்றார்வேலையே செய்யாம 100 கொடுத்தா வாங்க கசக்குமா?

------------------------- 
 சனிக்கிழமை இரவு பெங்களூர் செல்வதற்காக ஈரோடு இரயில் நிலையத்திற்கு சென்றோம் 9 மணி இரயிலுக்கு 8.30 மணிக்கு சென்று விட்டோம் இரயில் 1 மணி நேரம் தாமதம் என்றார்கள் ஆனால் வந்த நேரம் 11.30 நாங்களும் ஏறி பெர்த்தில் படுத்து தூங்கினோம் திடீரென 2 மணிக்கு டீ சாப்பிடலாம் என்று எழுந்தேன் வண்டி இது எந்த ஊருங்க என்று அங்க இருந்த ஆண்டிகிட்ட கேட்டேன் ஈரோடு என்றார் என்னது ஈரோடா? இந்த ரயில் நாகர்கோயிலில் இருந்து இப்படி லேட்டாகத்தான் வருதுங்க என்றார் பெங்களூரில் மனைவிக்கு 11 மணிக்கு இரயில்வே தேர்வு சரி போய்விடலாம் என்று நொந்து உட்கார்ந்து இருக்கும் போது மேல்ல மேல்ல ஆடி ஆசைந்து பெங்களூரை இரயில் சென்றடைந்த நேரம் காலை 9.30. ஈரோட்டில் இருந்து TVS 50இல் போயிருந்தாக் கூட 7 மணி நேரத்தில் போய் இருக்காலம் என் தலைவிதி. அப்புறம் விசாரித்தேன் நாங்கள் சென்ற இரயில் ஸ்பெசல் இரயிலாம் ஸ்பெசல் ரயில் எல்லாம் எப்பவும் இப்படித்தான் போகுமாம். இனி டிக்கெட் புக் செய்யும் போது பார்த்து செய்யுங்க.

-------------------------

பலவற்றை கடந்து வந்த ஐரோப்பியர்களுக்கு, இம்முறை குளிர்காலம் தாக்குபிடிக்க முடியாமல் தவிக்கும் அபாயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

டிசம்பர் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கும் சவால் விடும் இம்முறை குளிர்காலம் சர்வதேச விமான பயணிகள் மீதே முதலில் கை வைத்திருக்கிறது.

 ஜேர்மனியில் மாத்திரம் 450 ற்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள் இன்றும் இரத்து செய்யப்பட்டுள்ளன. லண்டனில் நூற்றுக்கணக்கான பாடசாலைகளுக்கு வேறு வழியின்றி  விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. போலந்தில் 93 பேர் தமது பலியாகியுள்ளனர். 25 வருட வரலாற்றில் மிக அபாயகரமான பனிக்காலத்தை அந்நாடு சந்தித்துள்ளது
 
-------------------------

 சிங்கப்பூர் நாட்டில் பிறந்த மேனியாக திரிகின்றமை நாகரிகமாக மாறி வருகின்றது.இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் குறைந்தது 105 ஆண்கள் வீதிகளில் நிர்வாணமாக திரிந்து இருக்கின்றார்கள் என்று போலீசாருக்கு முறைப்பாடுகள் கிடைத்து உள்ளன.

குயின்வேய்ஸில் உள்ள மக்டோனால்ட் உணவகத்துக்கு சுமார் கடந்த வார ஆரம்பத்தில் காலை 4.00 மணி அளவில் நிர்வாணமாக சென்ற ஒருவர் சாப்பாட்டுக்கு ஆர்டர் செய்ய முயன்று உள்ளார்.

அதே போல ஓடும் பஸ்ஸில் கடந்த புதன்கிழமை மதியம் ஒரு பெண் நிர்வாணமாக ஏற முயன்றார். ஆனால் பொது இடங்களில் நிர்வாணமாக திரிகின்றமை சிங்கப்பூரில் தண்டனைக்கு உரிய குற்றமாகும்.

-------------------------


 பிரிட்டனில் பாடசாலை சிறுவர்கள் இருவருக்கு 14 வயதில் குழந்தை பிறந்துள்ளது. நாட்டிலேயே மிகவும் இளவயதில் குழந்தை பெற்றுள்ள தம்பதியினராக இவர்கள் கருதப்படுகின்றனர்.

ஜெமி என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள சிறுமி ஏப்ரல் வெப்ஸ்டருக்கு இன்னமும் முகத்தில் குழந்தைத்தனம் மாறவில்லை.


சிறுமி 13 வயதாக இருந்த போது தன்னுடைய காதலன் நாதனுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதால் கருவுற்றிருக்கிறாள். தற்போது இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறந்து 4 வாரங்கள் ஆகியுள்ளது. குழந்தையை நன்றாக வளர்ப்பது குறித்து பெற்றோர் இருவரும் இணைந்து ஆலோசித்தும் வருகின்றனர். தற்போது குழந்தை சிறுமியுடனும் அவர்தம் தாய் தந்தையரிடத்திலும் வளர்ந்து வருகிறது

நாட்டு நடப்பு


ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபுநாயுடு விவசாயிகளுக்கு கூடுதல் வெள்ள நிவாரணம் வழங்க கோரி ஐதராபாத்தில் கடந்த 17-ந்தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி அவரை கைது செய்து மருத்துவமனையிலும் உண்ணாவிரதத்தை தொடர்கிறார். இவரைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டியும் உண்ணாவிரதம் இவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட ஆந்திர மக்கள் எல்லாரும் உன்னும் விரதம் நடத்த வேண்டும்.. இது ஓர் அரசியல் நாடகம். 

நாட்டு மக்கள் இன்று அதிகம் உச்சரிக்கும் சொல் வெங்காயம். இதன் விலை இன்று விர் என்று உயர்ந்திருக்கிறது 80 முதல் 100 வரை விற்கப்படுகிறது ஏற்கனவே வெங்காயத்தால் டெல்லியில் ஆட்சியை இழந்த பி.ஜே.பி  இன்று வரை ஆட்சியை பிடிக்க முடியவில்லை வெங்காய விலையை அரசு எப்படி கட்டுப்படுத்தும் என்று இந்திய விவசாய அமைச்சர் சரத்பவாரிடம் கேட்டால் இன்னும் 3 வாரங்களில் குறைந்து விடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அது வரை பெட்ரோல் விலையை உயர்த்தாமல் இருந்திருக்கலாம்.  

ராகுல் தமிழ்நாட்டில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்து காங்கிரசின் கூட்டணி பற்றி அறிவிக்கப்போகிறாராம். ராகுல் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்வதால் காங்கிரசுக்கு கூடுதல் ஓட்டு கிடைக்காது..


தகவல்

கடல்குதிரை

மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம்தான் கடல்குதிரை. பார்ப்பதற்கு முதலைக் குட்டியைப் போலிருக்கும். ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற அமைப்பு இருக்கும். ஆண் கடல் குதிரைகளின் இந்தப் பையில்தான் பெண் கடல் குதிரைகள் முட்டையிடுகின்றன. முட்டைகள் பொரிவதும் வெளிவரும் குஞ்சுகள் சிறிது காலம் வளர்வதும் இந்தப் பையில்தான். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் அப்பா கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும். அப்போது அது நீருக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும். உடலை முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும்.

உலகிலேயே ஆண் வர்க்கத்தில்  கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக்கொள்ளும் உயிரினம் கடல்குதிரை தான்.

மொக்கை ஜோக்
 
எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது?
ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச் விட்டுப்போச்சுய்யா.



உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே!
ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்! 


ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
 
அறிமுக பதிவர் 

பத்திரிக்கையாளர் சேக்கிழான் எழுதும் எழுதுகோள் தெய்வம் நாட்டை சீரழிக்கும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கிறது இந்த வலைப்பூ..


தத்துவம்

புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

குறுஞ்செய்தி

படிச்சவனுக்கு 1000 கவலை... எக்ஸாம்’ல என்ன கொஸ்டின் வரும்’னு....
ஆனா படிக்காதவனுக்கு ஒரே கவலை.. இன்னைக்கு என்ன எக்ஸாம்’ன்னு...

நண்பன் – 1: மச்சான்! டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்...
நண்பன் – 2: டெய்லி 10 பீர் சாப்பிட்டா?
நண்பன் – 1: தூக்க ஆள் வரும்!!

சமீபத்தில் ஓர் இருசக்கர வாகனத்தில் பார்த்த வசனம்...
100ல போனா 108 வரும்...

--------------------- 

வருகிற 26.12.2010 அன்று ஈரோட்டில் நடக்கும் பதிவர் சங்கமத்திற்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்...



சகோதர, சகோதரிகளே ஈரோடு சங்கமத்துக்கு வாங்க  பழகலாம்....

41 comments:

  1. சார் அந்த ரயில் அனுபவம் எனக்கும் நடந்திருக்கு......ஸ்பெசல் டிரைன் எப்பவுமே ரொம்ப லேட்டா தான் போகும் ....

    ReplyDelete
  2. படிச்சவனுக்கு 1000 கவலை... எக்ஸாம்’ல என்ன கொஸ்டின் வரும்’னு....
    ஆனா படிக்காதவனுக்கு ஒரே கவலை.. இன்னைக்கு என்ன எக்ஸாம்’ன்னு...////

    ஹி.ஹி.ஹி................... சேம் பிளட் ....நாங்கல்லாம் ரெண்டாவது லைன் குரூப்புங்கோ

    ReplyDelete
  3. //சென்னை சைதை அண்ணாசாலையில் உள்ள என்.சி.ராஜா அரசு மாணவர் விடுதி மாணவர்கள் //
    அந்த விடுதியில் மாணவர்கள் அல்லாதவர்களும் தங்கி இருப்பதாக சொல்லப்படுவதுண்டு,...

    ReplyDelete
  4. பதிவர் சங்கமத்திற்கு//////////

    வாழ்த்துக்கள் சார் ..... சாப்பாடுல நான்வெஜ் வேற இருக்காமே ????? ஒரு நான்வெஜ் பார்சல்

    ReplyDelete
  5. செய்திகள் அனைத்தும் அருமை :-)

    ReplyDelete
  6. அஞ்சறைப்பெட்டியின் ஒவ்வொரு பாகமும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. மங்குனி அமைச்சர் said...
    பதிவர் சங்கமத்திற்கு//////////

    வாழ்த்துக்கள் சார் ..... சாப்பாடுல நான்வெஜ் வேற இருக்காமே ????? ஒரு நான்வெஜ் பார்சல்///
    இதெல்லாம் வேறயா அப்போ பள்ளிபாளையம் சிக்கன் கெடைக்குமா...

    ReplyDelete
  8. அஞ்சறைப்பெட்டி வழக்கம்போல கலக்கல்..

    ReplyDelete
  9. //தங்களது கோரிக்கையை நிறைவேற்ற போரடுவது தவறில்லை பொதுமக்கள் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் போராட்டம்.//

    ரொம்ப சரியா சொன்னீங்க அண்ணா .. அங்க மட்டும் தான் அப்படின்னு இல்ல . பொதுவா எல்லா இடத்துலயும் மறியல்னா ரோடுல தான் பண்ணுறாங்க .. அதனால நிறைய பாதிப்பு வருது .. ஆனா அப்படி பன்னுனாதான் நம்ம தலைவர்களுக்கும் தெரியுது ..!

    ReplyDelete
  10. வாங்க பாரத் பாரதி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  11. //பிரிட்டனில் பாடசாலை சிறுவர்கள் இருவருக்கு 14 வயதில் குழந்தை பிறந்துள்ளது. நாட்டிலேயே மிகவும் இளவயதில் குழந்தை பெற்றுள்ள தம்பதியினராக இவர்கள் கருதப்படுகின்றனர்.//

    அட பாவமே ..!!

    ReplyDelete
  12. வாங்க மங்குனி அமைச்சர்...

    //சார் அந்த ரயில் அனுபவம் எனக்கும் நடந்திருக்கு......ஸ்பெசல் டிரைன் எப்பவுமே ரொம்ப லேட்டா தான் போகும் .... //

    அதனால தான் ஸ்பெசல் டிரைன்னு நினைக்கிறேன்...

    ReplyDelete
  13. மங்குனி அமைச்சர் said...

    படிச்சவனுக்கு 1000 கவலை... எக்ஸாம்’ல என்ன கொஸ்டின் வரும்’னு....
    ஆனா படிக்காதவனுக்கு ஒரே கவலை.. இன்னைக்கு என்ன எக்ஸாம்’ன்னு...////

    ஹி.ஹி.ஹி................... சேம் பிளட் ....நாங்கல்லாம் ரெண்டாவது லைன் குரூப்புங்கோ

    நாங்களுந்தான்... இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம்ப்பா...

    ReplyDelete
  14. //பாரத்... பாரதி... said...

    //சென்னை சைதை அண்ணாசாலையில் உள்ள என்.சி.ராஜா அரசு மாணவர் விடுதி மாணவர்கள் //
    அந்த விடுதியில் மாணவர்கள் அல்லாதவர்களும் தங்கி இருப்பதாக சொல்லப்படுவதுண்டு,...//

    இருக்க வாய்ப்பு இருக்கிறது... அந்த உண்மை என்றைக்கு வெளிய வருமோ...

    ReplyDelete
  15. //மங்குனி அமைச்சர் said...

    பதிவர் சங்கமத்திற்கு//////////

    வாழ்த்துக்கள் சார் ..... சாப்பாடுல நான்வெஜ் வேற இருக்காமே ????? ஒரு நான்வெஜ் பார்சல்//

    கிடா வெட்டி விருந்தே போடுகிறோம் வந்துருங்க....

    ReplyDelete
  16. ..karthikkumar said...

    மங்குனி அமைச்சர் said...
    பதிவர் சங்கமத்திற்கு//////////

    வாழ்த்துக்கள் சார் ..... சாப்பாடுல நான்வெஜ் வேற இருக்காமே ????? ஒரு நான்வெஜ் பார்சல்///
    இதெல்லாம் வேறயா அப்போ பள்ளிபாளையம் சிக்கன் கெடைக்குமா...
    ..

    பள்ளிபாளையமே அங்க தான் இருக்குது மறக்காம வாங்க...

    ReplyDelete
  17. கடல் குதிரை பத்தின விஷயம் உண்மைலேயே ஆச்சர்யமா இருக்கு அண்ணா ..! தகவல் அருமை ..

    ReplyDelete
  18. அட நீங்க வேற சார் , இங்க லண்டன்ல போன சனிக்கிழமை பேஞ்ச பனி , இப்போ தான் உருக ஆரம்பிக்குது .. தினமும் -4 , -5ன்னு டெம்ப்ரேச்சர் பாத்து பாத்து கடுப்பா இருக்கு .

    நடக்கும் போது ஸ்கேடிங் போற மாதிரியே இருக்கு , எப்போ எங்க வழுக்கி விழுவோம்ன்னு தெரியல

    அந்தியூர் பக்கத்துல ஒரு கோயில் இருக்கே சார் . என்ன கோயில் அது . ஷூட்டிங் எல்லாம் நெறைய நடக்குமே .கல்லூரி காலத்துல போன ஞாபகம்

    ReplyDelete
  19. ஈரோடு பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள் மற்றும் அட்வான்ஸ் பாராட்டுக்கள்

    ReplyDelete
  20. சும்மா ஜெட் வேகத்தில் பதிவிடுவதற்கு உங்களுக்கு ஒரு சபாஷ் சங்கவி

    ReplyDelete
  21. கடல் குதிரை பற்றி முன்பே அறிந்திருப்பினும் மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  22. சற்றே நீஈஈஈஈஈஈளமான பெட்டிகளாக இருக்கிறதே..
    ஆனாலும் தகவல்கள் அருமை.

    ReplyDelete
  23. எப்பவும் போல சூப்பர் தல... சாரி கொஞ்சம் லேட்

    ReplyDelete
  24. தகவல்கள் அனைத்தும் அருமை சார்,

    அஞ்சறைப்பெட்டி கம கம...

    ஈரோட்டில் நடக்கும் பதிவர் சங்கமத்திற்கு இனிய வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  25. கடல்குதிரை பற்றிய செய்தி
    எனக்குப் புதிது.முக்கியமான செய்திகள் அத்தனையும்.
    அஞ்சறைப்பெட்டி வாசனை !

    ReplyDelete
  26. நான்தான் கடைசியா....லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டேன். வழக்கம் போல அருமை.

    ReplyDelete
  27. சங்கவி, நானும் இந்த பனி மழையால், விமானம் ரத்தாகி முக்கியமான ஒரு பணிக்கு செல்ல முடியாமல் போனது... :(

    லண்டன் ஹீத்ரோவ் ஏர்போர்ட் ஐந்து நாட்கள் கழித்து இன்று தான் முழுமையாய் திறக்கப் போகிறார்கள்.

    ReplyDelete
  28. வழக்கம் போலவே நல்ல தொகுப்பு பாஸ்!

    ReplyDelete
  29. இத பாருங்க ..
    http://www.youtube.com/watch?v=1CZXFOH68og

    வினோ லண்டனுக்கு இப்போ தான் வாரீங்களா ..

    ReplyDelete
  30. அம்மாடியோ!எவ்வளவு தகவல்கள்!!
    சபாஷ் சங்கவி!

    ReplyDelete
  31. நல்ல தகவல்கள்.

    "100ல போனா 108 வரும்..."

    :) விழிப்புணர்வு.

    ReplyDelete
  32. எப்பொழுதும் போல நல்ல தொகுப்பு மக்கா ......எல்லா ஈரோடு பதிவர்களுக்கும் என்னோட புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க மக்கா........

    ReplyDelete
  33. ஒரு நாளைக்கு 100 சம்பளத்தில் வேலை செய்கிறேன் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் வேலை செய்வோம் மகராசன் தினமும் 100 தறாங்க நல்ல இருக்கனும் என்றார். வேலையே செய்யாம 100 கொடுத்தா வாங்க கசக்குமா?"

    எல்லா ஊர்களிலும் இதே நிலைமை தான். எனது நண்பனின் கிராமத்துக்கு சில மாதங்கள் முன்பு சென்றேன்.நண்பனின் உறவினர் ஒருவர் சொன்ன விஷயம் இன்னும் அதிர வைத்தது. அந்த ஊரில் 3 மணி நேர வேலைக்கு சென்றால் 100 ரூபாயாம்.அந்த 3 மணி நேரமும் செல்லவில்லை எனில் 80 ரூபாயாம்.இந்த 20 ருபாய் கமிசன்(லஞ்சம்,...?).
    தோட்டத்தில் களை வெட்டுவது போல் ரோடின் ஓரத்தில்,குளத்தில் புல்லை மட்டும் வெட்டினால் அடுத்த மழைக்கு புல் முளைக்கபோகிறது. இத்திட்டம் மூலம் சாலையை விரிவு படுத்துவது,குளத்தை ஆழப்படுத்துவது ,மற்றும் பல நல்ல பணிகளுக்கு பயன்படுத்தினால் இது அனைவருக்கும் பயன் அளிக்கும் திட்டமாக மாறும். இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் வறட்சி காலத்தில் மட்டும் செயல் படுத்த வேண்டும்.விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வரும் இந்த காலத்தில் செயல்படுத்த படுவது விவசாய பணிகளை அடியோடு பாதிக்கின்றது.ஆள் பற்றாக்குறை காரணமாக களைஎடுப்பு உள்ளிட்ட பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே விவசாய நிலங்கள் தரிசாகவும்,பிளாட்டுகளாகவும் மாறி வரும் இந்நிலையில் இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் .

    ReplyDelete
  34. படிச்சவனுக்கு 1000 கவலை... எக்ஸாம்’ல என்ன கொஸ்டின் வரும்’னு....
    ஆனா படிக்காதவனுக்கு ஒரே கவலை.. இன்னைக்கு என்ன எக்ஸாம்’ன்னு...

    நண்பன் – 1: மச்சான்! டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்...
    நண்பன் – 2: டெய்லி 10 பீர் சாப்பிட்டா?
    நண்பன் – 1: தூக்க ஆள் வரும்!!

    சமீபத்தில் ஓர் இருசக்கர வாகனத்தில் பார்த்த வசனம்...
    100ல போனா 108 வரும்...

    THREE CHEERS joke super

    ReplyDelete
  35. நல்ல பதிவு.
    14 வயதில் குழந்தை.... இதை விட இளம் வயதில் சிலர் குழந்தைகள் பெறுகிறார்கள். பெரும்பாலும் வெளியே செய்தி கசிந்து விடாமல் மறைத்து விடுகிறார்கள்.

    ReplyDelete
  36. //ராகுல் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்வதால் காங்கிரசுக்கு கூடுதல் ஓட்டு கிடைக்காது.//

    பாவம் அந்த மனுசன். இப்படி பொசுக்குன்னு உண்மைய சொல்லிபுட்டீங்களே!!!


    //2 மணிக்கு டீ சாப்பிடலாம் என்று எழுந்தேன் வண்டி இது எந்த ஊருங்க என்று அங்க இருந்த ஆண்டிகிட்ட கேட்டேன் ஈரோடு என்றார் என்னது ஈரோடா?//

    -- சில (பல)சமயத்துல இப்படித்தாங்க நடக்குது...

    ReplyDelete
  37. அனைத்துமே அருமையான தகவல்கள்.நன்றி. நம்ம நாட்லையும் வெங்காயம் தேங்காய் இரண்டுமே நெருப்பு விலை.சிலர் கரிக்கு வெங்காயம் போடுறத விட்டுட்டாங்க.இன்னும் சிலர் தேங்காய்ப்பாலுக்கு பதிலாக கரிக்கு பால்மாவைப் பயன் படுத்துறாங்க. கடல் குதிரை தகவல் புதியது.இதே போல் மனிதரிலும் பெண்ணின் சுமை குறைந்தால்?

    ReplyDelete
  38. 100ல போனா 108 வரும்...

    சிரிக்க மட்டுமல்ல சிந்திக்க வைக்கிறது.

    ReplyDelete
  39. குறுஞ்செய்தி

    படிச்சவனுக்கு 1000 கவலை... எக்ஸாம்’ல என்ன கொஸ்டின் வரும்’னு....
    ஆனா படிக்காதவனுக்கு ஒரே கவலை.. இன்னைக்கு என்ன எக்ஸாம்’ன்னு...

    நண்பன் – 1: மச்சான்! டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்...
    நண்பன் – 2: டெய்லி 10 பீர் சாப்பிட்டா?
    நண்பன் – 1: தூக்க ஆள் வரும்!!

    சமீபத்தில் ஓர் இருசக்கர வாகனத்தில் பார்த்த வசனம்...
    100ல போனா 108 வரும்...


    good jokes and aware info

    ReplyDelete