Monday, December 13, 2010

காமத்தன்மையை அதிகரிக்கும் புடலங்காய்

 

இயற்கை மருத்துவத்தின் மேல் எனக்கு ஆர்வம் அதிகம். எனது பதிவுகளில் அதிகம் நாம் தினமும் உண்னும் உணவுகளில் என்ன விதமான நன்மைகள் இருக்கின்றன என்று எனது பதிவுகளில் எழுதி வருகிறேன். எனக்கு பிடிச்சமான விசயமாக இருந்தாலும் இதை நண்பர்களிடம் கொண்டு சேர்க்கும் போது மனநிம்மதி அளிக்கிறது. அந்த வகையில் இன்று புடலங்காய்.



புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில் நிச்சயம் சமைக்கும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர். இந்த காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள்..

உள்ள சத்துக்கள் 

உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து.

பயன்கள்...

இது சற்று நீரோட்டமுள்ள காய். ஆகையினால் இது சூட்டு உடம்புக்கு ஏற்றதாகும். 

உடம்பின் அழலையைப் போக்கும். 

தேகம் தழைக்கும். குளிர்ந்த தேகத்துக்கு ஆகாது.

எளிதில் சீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். 

வாத, பித்த, கபங் களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். 

வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றைப் போக்கும். வாத, பித்தங்களை அடக்கி வீரிய புஷ்டியைக் கொடுக்கவல்லது.

இந்தக் காயை உண்டால் காமத்தன்மை பெருகும்....


-------------------------------------------------------------------------------------

இந்த வாரம் தமிழ்மனம் டாப் 20ல் 10ம் இடம் எனக்கு. இது நண்பர்களாகிய உங்களால் தான் சாத்தியம் ஆனது. சக பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும், தமிழ்மனத்திற்கும் என் நன்றி..

------------------------------------------------------------------------------------

வருகிற 26.12.2010 அன்று ஈரோட்டில் நடக்கும் பதிவர் சங்கமத்திற்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்...



சகோதர, சகோதரிகளே ஈரோடு சங்கமத்துக்கு வாங்க  பழகலாம்....

28 comments:

  1. விவசாயி ...
    வி...வ...சாயி ...
    தகவலுக்கு நன்றிங்க .

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் முதலில்!!

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு

    ReplyDelete
  4. முருங்கைக்காய் தான் அப்படின்னு நம்ம பாக்யராஜ் தயவுல கேள்விப்பட்டிருக்கேன். இது என்ன புதுசா இருக்கு. இனிமே நாட்டுல புடலங்காய் க்கும் பஞ்சம் வந்துடுமே...

    ReplyDelete
  5. வாங்க ராஜசேகர் சார்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  6. இது தெரியாம இவ்வளவு நாள் பொடலங்காயே சாப்டலையே?!!

    ReplyDelete
  7. அட, முருங்கைக்காய்-னு தான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவுமா....? பலே...! :-)

    ReplyDelete
  8. அட அது முருங்கக்கான்னு நெனச்சேன், இதுவுமா?

    ReplyDelete
  9. தமிழ்மணத்தில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே,

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    மருத்துவக்குறிப்பு பயனுள்ளது தெளிவாகவும் சிறப்பாகவும் பதிவிட்டுள்ளீர்கள் அருமை

    தொடருங்கள்.......

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு..

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. வாங்க வைகை..

    வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  12. வாங்க சக்தி...

    வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  13. வாங்க ரஹீம் கஸாலி...


    இந்த மாதிரி நிறைய பயனுள்ள காய்கள் உள்ளன நம்ம ஊரில்...

    ReplyDelete
  14. வாங்க சேட்டைக்காரன்...

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  15. வாங்க மாணவன்...

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  16. வாங்க வினோ...

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  17. மருத்துவ குணம் வாய்ந்த பதிவு

    ReplyDelete
  18. புதுசா இருக்கே... நெசமாலுமா...

    ReplyDelete
  19. எல்லா விசயமும் போட்டு தாக்குறீங்க. நல்ல பதிவு

    ReplyDelete
  20. சகோதர, சகோதரிகளே ஈரோடு சங்கமத்துக்கு வாங்க பழகலாம்....//
    பழகிருவோம்

    ReplyDelete
  21. நீண்ட நெடுங்காலமாய் வலைப்பக்கம் வர இயலவில்லை நண்பா....
    பதிவுகளின் தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்

    அத்தனையும் பயனுள்ள பகிர்வு.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  22. 10 ம் இடம் !! வாழ்த்துகள்!!
    புடலங்காய்? அப்படியா சமாசாரம்? தலைப்பில் பலரையும் உள்ளே இழுத்துட்டு பின் மற்றவையும் சொல்லிருக்கீங்க. இப்படி தான் தலைப்பு வைக்கணும் போலருக்கு

    ReplyDelete
  23. உங்கள் தளம் இப்போது தரக்கிறதா என்று பார்க்க வந்தேன். திறக்கிறது.

    ReplyDelete
  24. hi, frnd


    i m new in this blog but i read daily all news in indili

    i m also know photoshop frnd


    thanks
    senthil

    ReplyDelete
  25. முதலில் முறுங்கக்காய், இப்ப புடலங்காய்,அதுக்கப்புறம் பீர்க்கங்காய்,அதுக்கப்புறம்,பயிற்றங்காய்...இப்படியே நீளமான காய்களின் பட்டியல் பாக்யராஜின் பட்டியலுக்கு போய் விடுமோ தெரியாது..தகவலுக்கு ரொம்ப நன்றி..

    ReplyDelete
  26. parattugal nalla seythigal ungal ennam vetriyadaiyattum .

    ReplyDelete