Sunday, December 26, 2010

ஈரோடு சங்கமத்தில் குவிந்தனர் பதிவர்கள்...

ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமத்தின் சார்பாக இன்று நடந்த பதிவர் சங்கமத்தில் பதிவர்கள் குவிந்தனர்.

இந்த மாத தொடக்கத்தில் ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பதிவர் சங்கமம் சிறப்பாக நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு இன்று நடந்தது.

சனிக்கிழமை மதியத்தில் இருந்தே பதிவர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர் அவர்களுக்கு இரவு உணவு பறிமாறப்பட்டு தங்கவைக்கப்பட்டனர். காலை 9 மணியில் இருந்து பதிவர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். சரியாக 10.30 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களும் பேச்சும்

சிறுகதைகளை உருவாக்குவோம்  என்ற தலைப்பில் எழுத்தாளர். பெருமாள் முருகன் சிறுகதைகளை எப்படி எழுதுவது அதற்கு எப்படி தயார் செய்ய வேண்டும் என்று சிறப்பாதொரு விளக்கம் அளித்தார்.

உலக மொக்கையர்களே ஒன்று படுங்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர். பாமரன் அவர் இணையத்தையும் கணினியையும் எவ்வாறு பழகினார் அவர் எவ்வாறு இணையத்தில் எழுத ஆரம்பித்தார் என்று அவருக்கு உரிய கோவை வழக்கில் பேசினார்.

குறும்படம் எடுக்கலாம் வாங்க என்ற தலைப்பில் அருண் (தமிழ்ஸ்டுடியோ. காம்) குறும்படம் எப்படி எடுப்பது, குறும்படம் எடுக்க என்ன செய்ய வேண்டும் என்று அழகான விளக்கத்தை அளித்தார். குறும்படம் எடுப்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு நிச்சயம் உதவுகிறேன் என்றார்.

இவர்கள் பேசியதும் பதிவர் அறிமுகம் நிகழ்ச்சி நடை பெற்றது. அதற்கு பின் கொங்கு மண்டலத்திற்கே உரித்தான விருந்தோம்பலுடன் அற்புதமான சைவ அசைவ உணவுகள் பறிமாறப்பட்டது.

நிழற்படங்களில் நேர்த்தி என்ற தலைப்பில் ’கருவாயன்’  சுரேஷ்பாபு அழகான விளக்கத்தையும் அதற்கு பல புகைப்படங்களின் வேறுபாடுகளை எடுத்துக்கூறினார்.

உலகத்திரைப்படங்கள் ஒரு பார்வை என்ற தலைப்பில் சிதம்பரன்.கி அவர்கள் உலக திரைப்படங்கள் பற்றியான அவர் பார்வையை அழகாக கூறினார்.

இன்றைய இணையமும் வலைப்பூக்களும் என்ற தலைப்பில் ஓசை செல்லா அவர் பதிவுலகின் ஆரம்ப காலம் முதல் இன்று வரை எப்படி இருந்தது என்பதையும் இணையத்தில் எவ்வாறு சம்பாரிப்பது என்பதை பற்றியும் கூறினார்.

நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல் என்ற தலைப்பில் லட்சுமண ராஜா (கூழாங்கற்கள்) பல புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு அப்புகைபடத்தை விளக்கம் கூறி விவரித்தார்.

பதிவர்கள் கலந்துரையாடலை திருப்பூர் சேர்தளம் நண்பர்கள் சிறப்பாக நடத்தினர்.

இந்த வருடம் ஈரோடு சங்கமம் மிகச்சிறப்பாக நடைபெற்றது புதிய பதிவர்கள் வந்து குவிந்தனர். பல பிரபல பதிவர்களும், வாசகர்களும், எழுத்தாளர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவை ஈரோடு பதிவர் குழுமத்தின் சார்பாக கதிர், ஆருரன், பாலாசி, ஜாபர், ராஜா, சந்துரு மற்றும் குழும உறுப்பினர்கள் விருந்தினர்கள் ஒவ்வொருவரையும் அன்பாக அரவணைத்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி அனைவரையும் ஆனந்தத்தில் மூழ்கடித்தனர்...

விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் ஈரோடு வலைப்பதிவர் குழுமம் சார்பாக நன்றி...

குறிப்பு 
நான் எடுத்த புகைப்படம் பங்காளி பிரபாகர்கிட்ட இருப்பதால் புகைப்படம் போடமுடியவில்லை. நாளை கிடைத்ததும் வெளியிடுகிறேன்.

சென்னையைச் சேர்ந்த பிரபல பதிவர் எங்கள் அன்பு பங்காளி ஜாக்கி சேகர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். 

மேலும் பல விவரங்களும், புகைபடங்களும் நாளைய பதிவில்...

25 comments:

  1. Unmaiyil pirabala padhivarkalukku padhivu poduvathaan mulunera thozhila chennaiyilirundhellam koodava padhivar sandhippukku varuvaarkal.

    ReplyDelete
  2. Valaiyulakin pudhivanana en sandhegaththai theerthu vaikkavum sangavi

    ReplyDelete
  3. Congratulations for the successful event guys.

    ReplyDelete
  4. Congratulations guys for the successful event.

    ReplyDelete
  5. உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நன்றி!!
    http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

    ReplyDelete
  6. மகிழ்ச்சிய இருக்கிறது நண்பரே படித்தவுடன்...

    ReplyDelete
  7. தொடர்ந்து நல்ல பதிவுகள் போடுவோம்.
    பக்குவப்பட்ட மனதுடன் சந்திப்போம்.

    ReplyDelete
  8. //அதற்கு பின் கொங்கு மண்டலத்திற்கே உரித்தான விருந்தோம்பலுடன் அற்புதமான சைவ அசைவ உணவுகள் பறிமாறப்பட்டது.//

    அஹா... மிஸ் பண்ணிட்டமே. மிச்சம் மீதி ஏதாவது இருக்கா?? :))

    ReplyDelete
  9. வாழ்த்துகள்
    வாழ்த்துகள்
    வாழ்த்துகள்
    வாழ்த்துகள்
    வாழ்த்துகள்
    வாழ்த்துகள்
    வாழ்த்துகள்
    வாழ்த்துகள்
    வாழ்த்துகள்...

    ReplyDelete
  10. கலந்துகொள்ள முடியாமல் போனதில் வருத்தம்தான்....

    ReplyDelete
  11. உண்மைலேயே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது ..!!
    கலக்கல் சந்திப்பு ..

    ReplyDelete
  12. நீங்கள் என்னை என் தளதீர்க்கு வந்து பின்னூட்டமிட்டு அழைத்திருந்தீர்கள் .. கலந்து கொள்ள முடியாமல் போனதிர்க்கு வருந்துகிற்பேன் .... நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. நாளைய பதிவ ஆவலா எதிர்பாக்குறோம்

    ReplyDelete
  14. வியந்தேன் மகிழ்ந்தேன்....

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்... மகிழ்ந்தேன் நண்பரே..

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்... மகிழ்ந்தேன் நண்பரே..

    ReplyDelete
  17. இப்படியெல்லாம் இடுகை போட்டு வராதவங்களைக் கடுப்பேத்தறது அவ்வளவு நல்லாயில்லே! வவுத்து வலி வரப்போகுது! வெந்தயம் ரெடியா இருக்கா? :-)))))

    ReplyDelete
  18. நல்ல தொகுப்பு சங்கமேஸ்

    ReplyDelete
  19. நினைவுகளை அசை போடுவதில் சுகம்தானுங்க தம்பி.

    ReplyDelete
  20. பகிர்வுக்கு நன்றி. புகைப் படங்கள் இருக்குமா என்று பார்க்க வந்தேன்.. அடுத்த பதிவிலா...

    ReplyDelete