Friday, December 17, 2010

சீக்கிரம் போய்ச் சேரனுமா தம் அடிங்க...


மச்சி வாட ஒரு தம் போட்டுட்டு வரலாம் இன்று நிறைய இடங்களில் நண்பர்களிடம் ஒலிக்கும் வார்த்தைகளில் ஒன்று. புகை நமக்கு பகை, புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்ன சொன்னாலும், எப்படி விளம்பரப்படுத்தினாலும் இன்று புகை பிடிப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. புகைப்பழக்கம் ஒழிக்க முடியாத ஒன்று புகை பிடிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும் உடலுக்கு தீங்கான விசயம் என்று. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் புகைபிடிப்பவர்கள் பார்த்து புகைப்பதை விட்டால் தான் புகையை ஒழிக்க முடியும்.

முக்கியமாக இளைய சமுதாயம் நிறைய புகைப்பழக்கத்தை ஆரம்பிக்கின்றனர் இதற்கு காரணம் அவர்களின் வருவாய். படிக்கும் போது அவ்வப்போது திருட்டு தம் அடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள் அதே வேலைக்கு செல்லும் போது தைரியமாக அடிப்பார்கள் கேட்டர்ல் சம்பாரிக்கறமல்ல இது தான் பதிலாக இருக்கும்.

புகைக்க ஆரம்பிக்க சில காரணம்

1. நண்பர்கள் அவன் பிடிக்கிறதை பார்த்து நாமும் குடித்தால் என்பதால்

2.சினிமாவில் நடிகர்கள் புகைபிடிப்பதை ஒரு ஸ்டைலாகவும், அதை வீரமாகவும் காட்டுவதால் இவர்களும் ஆரம்பித்து விடுகின்றனர்.

3.வீட்டில் அப்பா குடிப்பதை தினமும் பார்க்கும் போது நாமும் குடிச்சா என்ன

4.சக நண்பர்களிடம் நானும் குடிப்பேன் என பெருமை பீத்துவதற்காக

5.வேலைல டென்சனா இருக்குது அதனால குடிச்சேன் என்பது

6.தம் அடிச்சாதான் சுறுசுறுப்பா இருக்கமுடியும் என்ற நினைப்பு

இப்படி பல தேவையில்லாத காரணங்களுக்காகத்தான் புகை பிடிக்கன்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சப்பை கட்டுவது. புகை பிடித்தால் எனக்கு அது நடந்தது இது நடந்தது என யாரும் சொல்ல முடியாது.

புகையை தவிப்பீர் நலமுடன் வாழ்வீர்...

கடந்த வருடம் என் நண்பன் இறந்த புகை பழக்கத்தால் கேன்சர் வந்து இறந்தார் அவரைப்பற்றிய எங்கள் நண்பர்களுடன் பேசியதால் அவர் நினைவாக இப்பதிவு...

35 comments:

  1. புகையை தவிப்பீர் நலமுடன் வாழ்வீர்.
    புகையை தவிப்பீர் நலமுடன் வாழ்வீர்.

    ReplyDelete
  2. நல்லா பகிர்வு... கேட்டா தேவல...

    ReplyDelete
  3. எத்தன பேருக்கு புரியுதோ?!

    ReplyDelete
  4. //

    5.வேலைல டென்சனா இருக்குது அதனால குடிச்சேன் என்பது

    6.தம் அடிச்சாதான் சுறுசுறுப்பா இருக்கமுடியும் என்ற நினைப்பு/

    இந்த மாதிரி போலியான காரணம் சொல்லிட்டு நிறைய பேர் குடிக்கிறாங்க அண்ணா ..
    என்ன பண்ணுறது ..? அவுங்களா திருந்தினாதான் உண்டு ..!!

    ReplyDelete
  5. மிகவும் விழிப்புணர்வுள்ள தகவலை சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை ஆனால் இதை புகைப்பிடிப்பவர்கள் பார்த்து திருந்த வேண்டும்...

    இதெல்லாம் நாங்க நிறைய பார்த்துட்டொம் “புண்பட்ட மனதை புகையை விட்டு ஆற்றுவோம்” என்று மீண்டும் புகைப்பிடித்துக்கொண்டிருந்தால் கூடிய சீக்கிரம் “வாய்ப்பிற்கு நன்றி கூறி விடை பெற வேண்டியதுதான்” இந்த உலகை விட்டு....

    பகிர்வுக்கு நன்றி நண்பரே,

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  6. அது எதுக்குங்க, பெண்கள் புகை பிடிக்குற மாதிரி புகைப்படம்...

    ReplyDelete
  7. புகை பிடிப்பவர்க்கும் பகை, அருகில் இருப்பவர்களுக்கும் பகை..
    நல்ல பதிவு. வாழ்த்துக்கள் சங்கவிக்கு...

    ReplyDelete
  8. “புகைப்பிடிப்பவர் கவணத்திற்கு”

    சிகரெட்...!
    என்னைப்பற்ற வைத்து
    கொஞ்சம் கொஞ்சமாய் எரித்து
    சாம்பலாக்குகிறாய்....
    முடிவில் ஒருநாள் நான் உன்னை
    முழுவதும் எரித்து சாம்பலாக்கப்போகிறேன்
    என்று தெரியாமல்.....

    ReplyDelete
  9. புகையை தவிப்பீர் நலமுடன் வாழ்வீர்.
    புகையை தவிப்பீர் நலமுடன் வாழ்வீர்.
    புகையை தவிப்பீர் நலமுடன் வாழ்வீர்.
    புகையை தவிப்பீர் நலமுடன் வாழ்வீர்.
    புகையை தவிப்பீர் நலமுடன் வாழ்வீர்.
    புகையை தவிப்பீர் நலமுடன் வாழ்வீர்.
    புகையை தவிப்பீர் நலமுடன் வாழ்வீர்.
    புகையை தவிப்பீர் நலமுடன் வாழ்வீர்.
    புகையை தவிப்பீர் நலமுடன் வாழ்வீர்.
    புகையை தவிப்பீர் நலமுடன் வாழ்வீர்.

    ReplyDelete
  10. super thalaiva very nice my father also died in this canser

    thanks
    senthil

    ReplyDelete
  11. நேரம் கிடைக்கும்போது நம்ம தளத்துக்கும் வந்து உங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பரே,

    நன்றி
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  12. புகை பிடிப்பவருக்கு மட்டுமில்லாமல் அடுத்தவர்களுக்கும் பிரச்சினையை கொடுக்க கூடியது. நல்ல பதிவு சார்.

    ReplyDelete
  13. பொதுநலமிக்க பதிவு நண்பரே..!

    ReplyDelete
  14. அண்ணே ஒரு நாளைக்கி ரெண்டு தான் ...,நிறுத்தனும் பாக்கிறேன் முடியலை

    ReplyDelete
  15. நல்ல பதிவு. “Cigaratte: Fire at one end and fool at the other” என்ற வாசகம் நியாபகம் வருகிறது. புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டுமே.

    ReplyDelete
  16. புகை நமக்கு பகை!
    நல்ல பதிவு!

    ReplyDelete
  17. நல்ல பகிர்வு நண்பரே

    ReplyDelete
  18. புகைத்தால்...வாழ்வும் புகைந்துவிடும் சீக்கிரமா !

    ReplyDelete
  19. சிகரெட் பிடிக்கிறவங்களைவிட அந்தப்புகையை சுவாசிக்கிறவங்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாம்..

    ReplyDelete
  20. என்னுடைய தந்தையும் புகை பிடித்ததால் கேன்செர் நோய் தாக்கி இறந்தார்.. எனக்கு அப்போது 13 வயது. தந்தை இல்லாத வீட்டில் மகன் வறுமையோடு எப்படி வளருவான் என்பதற்கு நான் ஒரு எடுத்துகாட்டு. வறுமையின் பிடியில் இருந்த குடும்பத்தை தூக்கி நிறுத்த நான் பட்ட பாடு எனக்கு மட்டுமே தெரியும். 13 வயதில் எடுத்த சபதம், இனி என்றும் புகை பிடிப்பதில்லை என்று..மரணத்தை கண்டு அஞ்சி அல்ல.. நாளை என் பிள்ளையும் தந்தையை இழந்து வறுமையில் வாட கூடாதென்று.. இன்று எனக்கு 26 வயது.. இன்னும் எதனை வருஷமானாலும் புகை பிடிப்பதே இல்லை என்று வாழ்கிறேன்... மிக நல்ல பதிவு சங்கவி. சுருக்கமாய் சொன்னாலும் சுருக்கென்று சொல்லியிருகறீர்கள்.

    ReplyDelete
  21. இஃகி..இஃகி..இஃகி! இதுக்கு "நான்" என்ன கருத்துச் சொல்லுறது? :-))))))

    பின்பற்ற முயற்சிக்கிறேன்! ஓ.கேவா? :-)

    ReplyDelete
  22. நீங்க தம் அடிபீங்களா?இல்ல அடிச்சிட்டு இருந்து இப்போ அடிக்கறத விட்டுடீங்கள? இல்ல விடபோரீங்கலா?

    ReplyDelete
  23. எங்கள் ஊரில் ஒரு மாதத்திற்கு முன் நடந்த உண்மைச்சம்பவம். எமது சகோதர மொழி ஏழைக் குடும்பத்தைச்சேர்ந்த 12 வயதுச் சிறுவன் சேரக் கூடாதவர்களுடன் சேர்ந்து எப்படியோ புகை பிடிக்கப் பழகி விட்டான்.இதை ஒரு நாள் கண்ட அவனது தாயார் "ஏன்டா இந்த கெட்ட பழக்கத்தைப் பழகினாய்?இதன் பிறகு பிடிக்காதே" என்று 2 அடியை அடித்து விட்டார் போலும்,அடித்த கோபத்தில் பையன் தூக்குப் போட்டுக்கொண்டு இறந்து விட்டான்.என்ன பரிதாபம் பார்த்தீர்களா? தான் பெற்ற பிள்ளையை நல்வழிக்கு திருத்தும் உரிமையைக் கூட இன்றைய பிள்ளைகள் கொடுக்கவில்லை.அந்தத் தாய் தன் தலையில் அடித்துக் கொண்டு அழுகிறாள் "மகனே உன்னை இந்தக் கோலத்தில் பார்க்கவா உன்னைக் கண்டித்தேன், நீ நல்லவனாக வர வேண்டும் என்றுதானே அடித்தேன்..."என்று புலம்புகிறார்.அந்தத் தாயைப் பாவம் எனபதா? இறந்த சிறுவனைப் பாவம் எனபதா? உங்கள் பதிவைப் பார்த்ததும் எனக்கு இந்த சம்பவம் நிழலாடியது... உலகின் அனைத்து உயிர்களையும் படைத்த அவனே காப்பாற்ற வேண்டும்...

    ReplyDelete
  24. அது எதுக்குங்க, பெண்கள் புகை பிடிக்குற மாதிரி புகைப்படம்...
    ///////////////////////

    சென்னைல இதான் பேஷன்

    ReplyDelete
  25. பகிர்வுக்கு நன்றி தோழரே

    ReplyDelete
  26. நல்ல உபயோகமான பதிவு நண்பரே..புகைக்க ஆரம்பிக்க காரணம் மிகவும் சரி..

    --செங்கோவி

    ReplyDelete
  27. எனக்குத் தெரிந்த ஒருவர் புகை பிடித்தால்தான் புது ஐடியா கிடைத்து ப்ரசனைக்குத் தீர்வு கிடைக்கும் என்பார். அவரிடம் passive smoking-கினாலும் உடல்நலம் பாதிக்கும், உங்களுடன் உங்கள் குடும்பத்துக்கும் பாதிப்பை கொடுக்காதீர்கள் என்று எடுத்துக் கூறினாலும் கேட்பதில்லை.

    ReplyDelete
  28. தமிழ்மணத்துல 22 ஓட்டா?கலக்குங்க ,இந்த வாரம் டாப் 5 க்கு வந்துடுவீங்க

    ReplyDelete
  29. அரசாங்கமே சட்டத்தை மதிக்காத அவலம்: சட்டம் உண்டு - புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை படம் இல்லை

    காண்க:

    http://arulgreen.blogspot.com/2010/12/blog-post.html

    ReplyDelete
  30. sonna சொன்னபடி 7வது இடம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. அடப் போங்கண்ணே :)

    இதுலாம் ஒரு பேசனாவே ஆயிட்டு தல , தம்மடிகிலனா என்னயலாம் பால்வாடிங்குறானுங்க ம்ம்ம் என்னத்த சொல்ல :(

    ReplyDelete