Thursday, December 9, 2010

அறிமுகம் விவசாயிகளுக்கான செய்தித்தாளும், மின்னிதழும்…


அன்புள்ள உழவின் நண்பர்களுக்கு,

வணக்கம்

உலகின் முதல் தொழில் விவசாயம். கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி. 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்கிறார் திருவள்ளுவர். உழுவார் உலகத்திற்கு அச்சாணி என்றும் கூறுவார்  அவர்.

அத்தகைய விவசாயம் இப்போது என்ன நிலையில் இருக்கிறது?

நாமனைவரும் வயிறார உண்டிட உதவும் தொழில், இப்போது கேட்க நாதியற்ற அனாதைப்பிள்ளை போல பரிதாபமாகக் காட்சியலிக்க்கிறது.  ரியல் எஸ்டேட்களாலும், தொழில்துறையின் அளவு கடந்த பசியாலும்,   அரசியல்வாதிகளால்  தாரைவார்த்து தரப்படும்  சீதனமாக   விளையும் நிலங்கள் சுரண்டப்படுகின்றன. விளைநிலத்தை  விற்றுவிட்டு, கிடைத்த காசில்  டாஸ்மாக் மது அருந்திவிட்டு விட்டத்தை நோக்கிப் படுத்திருக்கும் விவசாயிகள் எண்ணற்றோர். இந்த இழிநிலைக்கு என்ன காரணம்?

செயற்கை உரங்களால் மலடாக்கப்பட்ட நிலம், வானம் பார்த்துக் கிடக்கும் மானாவாரி முறை, வேளாண்மை ஆராய்ச்சி என்ற முறையில் நடத்தப்படும்  கொள்ளை, பாடுபட்டு விளைவித்த பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காத கொடுமை, விவசாயத்தைவிட தொழில்துறைக்கு அரசால் அதிகமாக கொடுக்கப்படும் கவனம், ... என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

காரணங்கள் தெரிகின்றன. இவற்றுக்கு தீர்வு என்ன?

காரணம் என்ன என்று அறிய முயற்சிக்கும்போதே அதற்கான தீர்வைத் தேடும் எண்ணமும் துவங்கிவிடுகிறது. அந்த அடிப்படையில்தான்,  இதோ எங்களால் முடிந்த முயற்சியாக விவசாயிகளுக்காக பிரத்யேக  இணையதளமும், செய்தித்தாளும் வெளிவர இருக்கின்றன. முதற்கட்டமாக இதோ இணையதளத்தினை நாங்கள் வெளியிட்டுவிட்டோம்.

பத்திரிகைக்கு 'விவசாயி' என்று பெயர் சூட்டி அதற்கு அரசாங்கத்தின் முறையான அனுமதிக்காக காத்திருக்கிறோம். தமிழர் திருநாளம் தைத் திருநாள் அன்று   முதல் பதிப்பு வெளியிட இருக்கிறோம். மாதம் இரு முறை வெளியாகும் இதழாக  வெளியிட தற்போது திட்டமிட்டு வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. பத்திரிகையின் அதிகாரபூர்வ இணையதளத்தையே  இன்றுமுதல் விவசாய தகவலுக்காக வெளியிடுகிறோம்.

எமது  இணையதளத்தில் விவசாயத்திற்கு உள்ள அனைத்து அரசாங்க இணையதளங்களின் இணைப்பையும்  கொடுக்க திட்டமிட்டு உள்ளோம்.  மற்றும் விவசாயிகளுக்காக பல தகவல்கள் வலம் வர இருக்கின்றன. விவசாயிகளின் நம்மைக்காக பணிபுரியும் விவசாய சங்கங்கள், தன்னார்வலர்களின் சேவைகள் குறித்த தகவல்களை வெளியிடவும் திட்டமுள்ளது.

எங்களின் நோக்கம் பத்திரிகையே. இணையதளம்  மூலம் அதிக விவசாயிகளுக்கு   நம் கருத்துக்களை கொண்டு செல்ல முடியாது என்பதை உணர்ந்துள்ளோம்.  எனவேதான்,  மாதமிருமுறை வெளியாகும் இதழை அறிமுகம் செய்கிறோம்.  எனினும் அந்த பத்திரிகைக்கு உறுதுணையாக இந்த இணையதளம் செயல்படும்.

இப் பத்திரிகை, சேவை நோக்குடனும்,  வியாபார ரீதியான அணுகுமுறையுடனும்  இருக்கும்.  மக்களிடம் விவசாய கருத்துக்களை கொண்டுசெல்வதும்,  விவசாயம் மீதான பற்றை அதிகரிக்கவும் எங்கள் பனி தொடரும்.

விவசாயிகளுக்கு  சந்தை விலையை அறிமுகப்படுத்தவும்,  விளைபொருட்களை ஏற்றுமதி செய்யவும் 'விவசாயி' இதழ்  பெரும் பங்களிக்கும். விவசாயத்தில் புதிதாக அறிமுகமாகியுள்ள தொழில்நுட்பங்கள், சிக்கன பாசன முறைகள், இயற்கை வேளாண்மை முறைகள், பாரம்பரிய விவசாய நடைமுறைகளையும் 'விவசாயி' பத்திரிகை முன்வைக்கும்.

'விவசாயி' இதழுக்காக புகழ் பெற்ற விவசாய ஆராய்ச்சியாளர்கள் பலர் கட்டுரைகளைத்  தரவும்,  விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனத்தினர்  தங்கள் கருத்துக்களைக் கூறவும் சம்மதித்துள்ளனர்.  அரசு தரும் பல மானியங்கள் விவசாயிகளை சென்றடைவதில்லை அந்த விஷயங்களை சிறு விவசாயிகளுக்கும் கொண்டு செல்வது எங்கள் இலக்கு.

எங்கள் இதழில் விவசாயம் சார்ந்த கட்டுரைகளை வாசகர்களிடம் இருந்து வரவேற்கிறோம்.  நீங்கள் அளிக்கும் கட்டுரைகளை உங்கள் புகைப்படத்துடன் வெளியிடுகிறோம்.  உங்கள் கட்டுரைகளை எங்களது மின்அஞ்சலுக்கு அனுப்புங்கள் vivasayamnews@gmail.com (or) sat10707@gmail.com

இணையதளத்தை  அணுகும்  வாசகர்கள், தங்களுக்கு தெரிந்த விவசாயிகளிடம் எங்கள் இதழை பற்றி சொல்லுமாறு கோருகிறோம்.  வாசகர்களாகிய நீங்கள் படிக்கப்  படிக்கத்தான் எங்கள் கருத்துக்கள் அனைவரையும் சென்றடையும். நமது நாட்டின் முதன்மைத் தொழிலும் ஆதாரத் தொழிளுமான விவசாயம் காக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.

வாசகர்களே வாருங்கள்,

வாழ்த்துங்கள், வளர்கிறோம்...

கூட வாருங்கள்... வளர்வோம்...

இணைந்து செயல்படுவோம்; விவசாயம் வளர்ப்போம்!

நன்றி.
சங்கமேஸ்வரன்.செய்தி ஆசிரியர்
www.vivasayam.com
www.sangkavi.blogspot.com

24 comments:

  1. விவசாயம் தலைக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கட்டாயமாக செய்ய வேண்டியது தாங்க....நீங்கள் வளர வளர நாடு வளர்வதாகத் தானே அர்த்தம்.......வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்ல ஆரம்பம் தொடரட்டும்.

    ReplyDelete
  4. அனைவரும் பயன் பெற்று, வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நல்ல முயற்சி ,வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. உள்ளம் கனிந்த வாழ்த்து தல

    ReplyDelete
  9. Arun Prasath said...
    உள்ளம் கனிந்த வாழ்த்து தல//

    உள்ளம் என்ன காயா கணியரதுக்கு?

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வாழ்த்துகள் சங்கமேஷ். வளர்க.

    ReplyDelete
  12. மிகசிறந்த முயற்சி,, உங்களுக்கு வாழ்த்தும், பாராட்டும் ...

    ReplyDelete
  13. விவசாயி அதிக விவசாயிகளை சென்று அடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. மிகவும் வரவேற்கத்தக்க சேவை. பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் நண்பரே..! வெறும் வாய்வார்த்தைகளாக இல்லாமல்...
    செயலில் ஈடுபட்டு அசத்தியிருக்கீங்க..!! நிச்சயம் இது மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். தங்கள்சேவை மென்மேலும் மெருகேற்றத்துடன் வளர மீண்டும் வாழ்த்துகள்..!

    ReplyDelete
  15. கடந்த இரு தினங்களுக்கு முன்னர்- நானும் எனது நண்பரும் - கொட்டில் முறை ஆடு வளர்ப்பு குறித்து பேசிக் கொண்டிருந்தோம் -பேச்சு விவசாயம் சார்ந்த பத்திரிக்கைகள் குறித்து திரும்பியது - நண்பர் இதழ்களில் வெளியிடப்படும் விவசாயத் தகவல்களின் நம்பகத்தன்மை 20 % மட்டுமே- யதார்த்ததிற்கு சரிப்படாத தகவல்களை நம்பும்படி செய்திகளை அவைகள் தருகின்றன எனக் கூறி - சில உதாரனங்களையும் தெரிவித்தார் -அந்த உதாரணங்கள் ஏற்கும்படியே இருந்தன -

    யதார்த்தத்தை ஒட்டிய செய்திகளையும், பயனுள்ள குறிப்புகளையும் தந்து விவசாயம் செழிக்க உதவ - எனது வாழ்த்துகள்

    ReplyDelete
  16. நல்லதோர் முயற்சி ..
    நன்றிகள் பல ...

    ReplyDelete
  17. ஆகச்சிறந்த முயற்சி, வெற்றிபெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  18. மிகச்சிறந்த முயற்சி...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. முயற்சி திருவினையாக்கும்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    விவசாய வலைப்பூக்களில் எனது வலைப்பூவான அகசூலையும் இணைக்க வேண்டுகிறேன்.

    www.agasool.blogspot.com

    நன்றி

    விஜய்

    ReplyDelete
  21. விவசாயம் இன்றைய நிலையில் பாடப் புத்தகங்களில் மட்டுமே காட்சித் தரும் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது . இதுபோன்ற சிறந்தப் பதிவுகள் நமது இயலாமையை மிகவும் அழகாய் வெளிப்படுத்தி விழிப்புணர்வை தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது . பகிர்வுக்கு நன்றி தோழர்

    ReplyDelete