Monday, December 27, 2010

ஈரோடு சங்கமத்தில் முட்டை பூரி... (உணவுக்கான சிறப்பு பதிவு)


ஈரோடு மாவட்டம் எப்பவும் விருந்தினர்களை கவனிப்பதிலும், வரவேற்பதிலும் காலம் காலமாக பேர் பெற்றது. வரும் விருந்தினர்களுக்கு விருந்து வைத்து அசத்தி அனுப்புவதில் ஈரோட்டு மக்களுக்கு நிகர் தேடித்தான் பிடிக்கனும்.

கடந்த முறை சங்கமத்தில் வந்திருந்த விருந்தினர்களை இரவு உணவில் அசத்தியிருந்தார்கள். இதைப்பற்றி கடந்த முறை வந்திருந்த அனைத்து பதிவர்களும் அவர்களது பதிவில் குறிப்பிட்டு இருந்தனர். இம்முறை அதை விட அசத்த வேண்டும் என முடிவு செய்தோம். ஈரோடு மாவட்டத்தில் கிடா விருந்துக்கு என்று தனி அடையாளம் உண்டு. அது போல கிடா விருந்து மாதிரி தனியாக சமையல்காரரை ஏற்பாடு செய்து அசத்தலாம் என்றதும் தாமோதர் அண்ணனின் விசேசங்களுக்கு சமைக்கும் பரமு என்ற சமையல்காரரை ஏற்பாடு செய்தார்.

விருந்து ஆரம்பம்...


முதலில் இரவில் வரும் பதிவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்தோம் இரவு வந்த பதிவர்களில் என் பங்காளி பிரபாகர், கார்த்திகை பாண்டியன், ஸ்ரீ, கும்க்கி, எழில் மற்றும் ஈரோடு குழும உறுப்பினர்கள் தான் இருந்தோம் நான் கடைசியாகத்தான் வந்தேன் உள்ளே வரும் போதே அரூரன் ஒரு தட்டு நிறை ஆம்லெட் உடன் வந்தார். தாமோதர் சந்துரு அண்ணாவிடம் என்ன சிறப்பு உணவு இரவுக்கு என்றேன் இரவு முட்டை என்றார். 

முட்டை தோசை, ஆம்லெட், கலக்கி என்று வரிசையாக வந்தது. நாம் எப்பவும் இட்லிக்கு சாம்பார் சட்னி சேர்த்து தான் சாப்பிடுவோம் ஆனால் இரவு உணவிற்கு சிக்கென் குழம்பு வைத்திருந்தார் பாருங்க சட்டினியுடன் சேர்த்து சாப்பிட்டாலும் அதன் சுவை தனி (இரவு வராத பதிவர்கள் ரொம்ப மிஸ் பன்னீட்டீங்க).

தாமோதர் அண்ணனிடம் என் பங்காளி அண்ணா காலை என்ன சிறப்பு என கேட்க முட்டை பூரி என்றார் என்னது முட்டை பூரியா என்று எல்லோரும் வாயைப் பிழந்தோம். காலைல மட்டுமல்ல மதியம் வந்து சாப்பிட்டு பாருங்க அப்புறம் பேசுவோம் என்றார்.

இரவு நானும், பங்காளியும் அதைப்பற்றி  ஒரு சிறு விவாதமே நடத்தினோம். காலை எங்க அடுத்த பங்காளி அண்ணன் ஜாக்கி வந்தார். நான் பிரபாகர், ஜாக்கி, கார்த்திகை பாண்டியன், ஆர்.கே சரவணன் பேசிக்கொண்டு இருக்கும் போது நான் இரவு உணவைப்பற்றியும், முட்டை பூரியைப்பற்றியும் சொன்னேன் கார்த்திகை பாண்டியன் நீங்க சொல்றத பார்த்தா இப்பவே பசிக்குதுங்க என்றார். ஜாக்கியோ என்னடா சொல்ற முட்டைல பூரியா வந்து பார்க்கிறேன் என்றார்.

காலை உணவு இட்லி, தோசை, பூரி, முட்டை பூரி அதற்கு தக்காளி குருமா, அற்புதமான தேங்காய் சட்னி, உருளைக்கிழங்கு மசால் என அசத்தினர். பூரில முட்டைய பார்த்ததும் எனக்கு எப்படி சாப்பிடவது என்று தெரியவில்லை. வழக்கமாக ஆப்பாயில் சாப்பிடற மாதிரி சாப்பிட்டு அசிங்கப்பட்டேன் ஆனால் எம் பங்காளி பிரபாகர் தாமோதர் அண்ணனை கூப்பிட்டு எப்படி சாப்பிடுவது என கேட்க சூப்பரா சொன்னார் பூரி, முட்டை மேல மசால் ஊற்றி மூன்று சுவையையும் ஒன்றாக சாப்பிடு என்றார். பிரபா சாப்பிட்டு விட்டு அருமையான சுவை என்றார். ஜாக்கி காலைல அடிச்ச கமெண்ட் பாசக்காற பயலுக காலைல சாப்பாடே அசத்திட்டீங்க மதியம் எதிர் பார்க்கிறேன் என்றார்.

மதியம் ஈரோட்டு மண்ணிற்கே உரித்தான தலைவாழை இலையுடன் சாப்பாடு போடுங்க என்றார் பறிமாறுபவர் இருங்க வரும் என்று சொல்லைவிட்டு மட்டன் வறுவல் கொஞ்சம் கிரேவியுடன் ஒரு கால்கிலோ வைத்தார், அடுத்து பள்ளிபாயைம் சிக்கன் ஒரு கால்கிலோ, தக்காளி முட்டை , தலைக்கறியும் குடலும் வைத்தனர் கடைசியாக கொஞ்சம் சாப்பாடு, சாப்பாட்டுக்கு ஓர் அற்புதமான கறிக்குழம்பு, ரசம், தயிர் என வயிறு நிரம்ப என்றும் சொல்லும் படியான ஓர் சாப்பாடு.

தேநீர் காலையும், மாலையும் தேநீர் மீண்டும் மீண்டும் குடிக்கலாம் என்ற வகையில் இருந்தது பாராட்டத்தக்கது.

இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் எதை மறந்தாலும் நிச்சயம் சாப்பாட்டை மறக்க முடியாது என்று கூறினால் மிகையாகது..
இந்த அற்புதமான உணவிக்கு பின் நிறைய நண்பர்களின் உழைப்பு இருக்கிறது காலை 4 மணிக்கே சென்று ஜாபரும், கார்த்தியும் கறி எடுத்து வந்தனர். அண்ணன் தாமோதர் சந்துரு வெங்காயத்தை தூக்கிட்டு அங்கே இங்கே என்று பறக்கிறார் ஆருரன் ஒவ்வொருவராக உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டு கேட்டு பறிமாறுகிறார். கதிர் கறியை இரத்தம் சொட்ட சொட்ட இரண்டாவது மாடிக்கு தூக்கி செல்கிறார். இவர்களின் உழைப்பே இன்று அனைவரும் பாராட்டு வகையில் உணவு அமைந்ததற்கு முக்கிய காரணம்..

இந்த முறை வரஇயலாத பதிவர்கள் எல்லாம் அடுத்த முறை வாங்க வாங்க அடுத்த ஸ்பெசல் காத்திருக்கு.

43 comments:

  1. போட்டோவ எல்லாம் பாத்தா எனக்கு இப்பவே பசிக்கிது

    ReplyDelete
  2. சங்கமம் விழாவில் கலந்து கொண்டு நாம் பேசி மகிழ்ந்தது மனதிற்கு இனிமையாய் இருந்தது வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  3. அடடா மிஸ் பண்ணிடேனே... அடுத்த முறை பாப்போம்..

    ReplyDelete
  4. இந்த முறை வரஇயலாத பதிவர்கள் எல்லாம் அடுத்த முறை வாங்க வாங்க அடுத்த ஸ்பெசல் காத்திருக்கு.

    //

    கண்டிப்பா வருவோமில்ல....

    ReplyDelete
  5. போட்டோவை போட்டு நல்லா கடுப்பு ஏத்துங்க....இப்போ தான் நான் காரகுழம்பு சாப்பிட்டு வரேன்

    ReplyDelete
  6. அய்யோ முடியலப்பா...எத்தனை ரகங்கள்... மிஸ் பண்ணிட்டேன் ..அடுத்த முறை ஆபீசெகு எப்படியாவது டிமிக்கி குடுத்திட்டு வரணும்.... இவ்வளவு நன்றாக ஏற்பாடுகள் செய்த நன்ப்ர்களுக்கு பாராட்டுகள் கோடி...

    ReplyDelete
  7. அறுசுவையான உணவுடன் அசத்திட்டீங்க நிகழ்வுகள் இனிமையாக நடைபெற்று நிறைவு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே,

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. சாப்பிட்ட பின் தான் ஈரோடு மாவட்டத்து கிடா விருந்து பற்றி கேள்விபடுகிறேன் . நிஜம்மாவே இன்னும் நினைத்து பார்த்து பிரமிக்க வைக்கிறிர்கள் . தாமோதர் சந்துருவுக்கு பாராட்டுக்களும் நன்றியும்

    ReplyDelete
  9. அன்பு இலை(ழை)யோடுது!

    ReplyDelete
  10. Arun Prasath said...
    அடடா மிஸ் பண்ணிடேனே... அடுத்த முறை பாப்போம்///

    இப்போ பொலம்பு... நானும் மிஸ் பண்ணிட்டனே....

    ReplyDelete
  11. சங்கவி நீங்க கிச்சன்லயே இருந்தீங்கன்னு சொல்ல இதைவிட சாட்சி இல்லை..அன்பை பதிவர் சந்திப்பு வெளிக்காட்டிய விதம் அலாதி தான். சந்திப்பா இல்லை திருமணா என இருக்கு பந்தி அமைப்பு..பாராட்டுக்கள் அனைவருக்கும்..

    ReplyDelete
  12. சங்கமம்னு சொல்லிட்டு இப்படி வெளுத்துக்கட்டி விருந்துவச்சிருக்கீங்க நடக்கட்டும் கலக்கல்

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் ... பாராட்டுக்கள் ...

    ReplyDelete
  14. சங்கமம்னு சொல்லிட்டு இப்படி வெளுத்துக்கட்டி விருந்துவச்சிருக்கீங்க

    HAHAHA

    ReplyDelete
  15. போட்டோவப் பாத்தாலே சாப்பிடனும்னு தோணுது... அதுவும் நீங்க விவரிச்சதுல... இன்னும் கொஞ்சம் பசி எடுத்துக்கிச்சுங்க..

    ReplyDelete
  16. பதிவர் சங்கமம்னு சொன்னீங்க.. கெடா வெட்டுன்னு சொல்லலையே..

    வடை போச்சே மாதிரி கிடா போச்சே..:))

    ReplyDelete
  17. சங்கவி நமது ஈரோடு குழும உறுப்பினர்களின் ஒட்டு மொத்த உழைப்பே இந்த விழாவின் வெற்றி. இணந்து பணியாற்றி அடுத்த வெற்றிக்கு உழைப்போம்.
    அன்புடன்
    தாமோதர் சந்துரு

    ReplyDelete
  18. ஈரோடு பதிவர் சங்கமம் பற்றி எல்லாரும் எழுதிருக்காங்க,ஆனால் சமையல் பற்றியும் சாப்பாடு பற்றியும் எழுதி அசத்திய உங்களுக்கு பாராட்டுக்கள். அருமையாக சமைத்து அசத்தலாக பரிமாறிய விதம் சூப்பர்..முட்டை பூரி எங்கேயும் கேள்விபடலை.புதுசாக இருக்கு.வெஜ் சாப்பாடு இருந்ததா?

    ReplyDelete
  19. அடப்பாவிங்களா... நிகழ்ச்சி நிரல்னு பதிவு போட்டதுக்கு பதிலா மெனுவ போட்டிருந்தா எத்தனை பேர் வந்திருப்போம்... சாப்பிட்டமா, கைய கழுவுனமா, சங்கமத்துல பேசுனத பத்தி பதிவு போட்டமான்னு இல்லாம என்ன இது சின்னபுள்ள தனமா? (இதுல வேற close up ல போட்டோ வேற. ) எங்க வயித்து பசிய சாரி சாரி வயித்தெரிச்சல கிளப்பாதீங்க...

    ReplyDelete
  20. பசியைத் தூண்டும் பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. அடடா வடை மிஸ் பண்ணிட்டேனே....

    ReplyDelete
  22. கண்ணையும் கருத்தையும் படங்கள் கவருகின்றன. அவைகளை பார்த்தாலே அங்கு நடக்கும் விருது உபசரிப்பின் தன்மை விளங்குகிறது. மிகவும் தூய்மையான இட வசதி. அரங்க அமைப்பும் ,விருந்து உபசரிப்பின் இடமும் மிக மிக சுத்தமாக இருபது உயர்வான விஷயம். அன்பர்களின் உபசரிப்பு அதற்கு சிகரம் வைத்தது போல உள்ளது.
    சென்று வந்திருக்கலாம் என்ற ஏக்கமே வருகிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  23. முட்டை பூரி ஜஸ்ட் மிஸ் நல்லா இருந்ததுங்க உங்கள் அனைவரின் பாசமான கவனிப்பும் விருந்தோம்பலும்:)))

    ReplyDelete
  24. //அடப்பாவிங்களா... நிகழ்ச்சி நிரல்னு பதிவு போட்டதுக்கு பதிலா மெனுவ போட்டிருந்தா எத்தனை பேர் வந்திருப்போம்... சாப்பிட்டமா, கைய கழுவுனமா, சங்கமத்துல பேசுனத பத்தி பதிவு போட்டமான்னு இல்லாம என்ன இது சின்னபுள்ள தனமா? (இதுல வேற close up ல போட்டோ வேற. ) எங்க வயித்து பசிய சாரி சாரி வயித்தெரிச்சல கிளப்பாதீங்க... //

    நான் சொல்லவந்ததும் இதே இதே! சாப்பிட்டதும் இல்லாமல் ஃபோட்டோ வேற போடணுமாய்யா? வயித்தெரிச்சலா இருக்கு

    ReplyDelete
  25. ennappa mukkiyama vadai yai marandhutteengale.. so sad.

    its ok. but naan miss pannittennae...

    but nw enaku pasikkudhu.. what i do.?

    ReplyDelete
  26. சங்கமத்தில் இவ்வளவு சங்கமங்களா? :)

    பசியைத்தூண்டிவிட்டீர்கள்.

    சிறப்பாக விழா நடத்தியதற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
  27. Chandru,

    I know ... You are the Man, you proved once again to all over TN.

    Subu

    ReplyDelete
  28. முட்டைப்பூரி சரிதான். அதை சாப்பிடற படம் ஒன்னு போட்டிருக்கலாம்தானே!

    தவற விட்டுட்டியேடா சத்ரியா....!

    (அடுத்தமுறை வாத்துக்கலாம்.வயித்த தேத்திக்க.)

    ReplyDelete
  29. யோவ்...வகை வகையா போட்டு தாக்கிட்டு, அத படம் புடிச்சு வேற போட்டு ஏற்கனவே நோயாளி மாதிரி bread'யும், பார்த்தாலே கொமட்ற பர்க்கரையும் தின்னுகிட்டு இருக்கிற எங்கிட்ட காட்டி, காட்டி ஏன்ய நாக்குல எச்சி ஊற வைக்கிற...!



    இருக்கட்டும்...இருக்கட்டும்...எனக்கும் ஒரு காலம் வராமலா போகப்போவுது..!

    இருந்தாலும்..நல்லா இருந்தது....! வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  30. பாராட்டுக்கள்

    ReplyDelete
  31. முட்டை பூரி? ரெசிப்பி போடலாமே...புகைப் படங்களைப் பார்க்கும்போதே பசி ஏற்படுகிறது! பின்னூட்டத்தில் படித்தது மாதிரி மெனுவையும் அழைப்பிதழில் சேர்த்திருக்கலாம்! முட்டை பூரி தக்காளி குருமா ரெசிப்பி தரவும்!

    ReplyDelete
  32. நானும் மிஸ் பண்ணிட்டனே....

    ReplyDelete
  33. அனானி காமெண்ட் போடும் நண்பனுக்கு நன்றி.. என் பதிவை கிட்டத்தட்ட ஒரு 10 தடவையாவது படித்து இருப்பீங்க... இதே மாதிரி எல்லா பதிவையும் படிங்க... அடுத்த முறை உங்களுக்கு ஒரு புல் வாங்கி கவனிக்கிறேன்...

    ReplyDelete
  34. சாப்பாட்டும் புகைப்படத்துக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை நீங்க அங்கே பேசியதைப்பற்றி சொல்லாதது கவலையா இருக்கு

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள் தோழரே,

    சங்கமம் என்றால் எல்லா வித உணவும் சங்கமிக்கும் இடம்னு புரிஞ்சிகிட்டேன்.

    ReplyDelete
  36. சாப்டுறது சாப்பிட்டு இதுல போட்டோ வேற
    போங்க சார்
    ஆமா மதுரை வாசிகளே எழுத்தர்களே எப்போ நம்ம மீட்டிங்

    ReplyDelete
  37. தன்சேகர்,

    ”பறி” மாறுகிற வரை உன் மற்ற பதிவுகளை தொடவே மாட்டேன்.

    உன் பேச்சுக் ”கா”...... ”கா”

    பெரிசுன்னு திட்டாதே

    ReplyDelete
  38. சாம்பார் சாம்பார்

    ReplyDelete
  39. ஆழந்த அனுதாபங்கள் தம்பி.


    விவசாய மானவன்

    ReplyDelete
  40. மீண்டு வா எழுந்து வா..

    விவசாயி

    ReplyDelete