Saturday, December 11, 2010

விஜய்யின் காவலன் வெற்றி பெற சில வழிகள்


விஜய்யின் சமீபகால படங்கள் எல்லாம் அவரின் வெற்றிப்படங்கள் என்று சொல்லும் அளவில் இல்லை அதைப்பற்றி ஏகப்பட்ட பதிவுகள் நண்பர்களின் வலைப்பூவில் பார்த்தாச்சு.. இப்ப பல தடைகளைத் தாண்டி வரப்போகிறது விஜய்யின் காவலன். இதை வெற்றிப்படமாக ஆக்க சில குண்டக்க மண்டக்க யோசித்தது.

1. ரசிகர் மன்றங்கள் மூலம் ஏதோ ஒரு ஊருக்கு இலவச பொருட்கள் தருவதற்கு பதில் தமிழகம் முழுவதும் எல்லா ஊருக்கும் இலவசம் தரளாம்..

2.அரசியலுக்கு வந்துட்டேன் வந்துட்டேன் என்று தினமும் தொலைக்காட்சியில் பட விளம்பரத்துக்கு பதில் வந்துட்டேன் வந்துட்டேன் என்று விளம்பரம் தரளாம்

3. இணையபதிவர்கள் தான் முக்கியமானவர்கள் அவர்களுக்கு இலவச பிரிவியூ காட்சி போடலாம். சென்னையில் உள்ள பதிவர்களுக்கு மட்டுமின்றி எல்லா பதிவர்களுக்கும் இலவச காட்சி போடனும் அப்ப தான் நல்ல படம் என்று வெளியே தெரியும்..

4. சினிமா விமர்ச்சன பதிவர்களுக்கு ஒரு மாத  இன்டர்நெட் பில் இலவசமா கொடுக்கலாம்.. அப்ப தான் காவலன் இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த படம் என எழுதலாம் என்று யோசிப்போம்

5. இடைவேளையில் திண்பண்டங்களுக்கு பதில் சரக்கு வாங்கி கொடுக்கலாம். அப்பதான் மப்புல படம் பார்த்தா நல்லாயிருக்கு நல்லாயிருக்குன்னு சொல்லமுடியும்.

6.எல்லா தியேட்டரிலும் ப்ரிவியூ சோ நடத்தலாம் அப்ப தான் படம் எப்படி இருந்தாலும் பாக்க வருவாங்க..

7. இது எனது கடைசி படம் என்று அறிவித்தால் கொஞ்சம் பேர் வர வாய்ப்பு இருக்கிறது.

8. டிக்கெட் வாங்கும் போது வடை இலவசமா கொடுக்கலாம் அப்ப தான் எனக்கு முதல் வடை என்று சொல்லிக்கிட்டு ஒரு நாலு பேராவது வருவாங்க...

இதைத்தவிர இன்னும் நிறைய வழிகள் இருக்கும் என்று நினைக்கிறேன் பின்னூட்டத்தில் சொல்லுங்க...

27 comments:

  1. //8. டிக்கெட் வாங்கும் போது வடை இலவசமா கொடுக்கலாம் அப்ப தான் எனக்கு முதல் வடை என்று சொல்லிக்கிட்டு ஒரு நாலு பேராவது வருவாங்க...///

    எனக்கு வடை வாங்குறதுக்கு வேற இடம் இருக்குங்க ..!! ஹி ஹி ஹி ..!!

    ReplyDelete
  2. முதல் முதலாய் மீ த ஃப்ஸ்ட்

    ReplyDelete
  3. ஏங்க சங்கவி இம்புட்டு கொலைவெறி விஜய் மேல்? விஜய் ரசிகர் மன்ற சார்ப்பா நான் போர்க்கொடி எடுக்கப்போறேன்..

    ReplyDelete
  4. //டிக்கெட் வாங்கும் போது வடை இலவசமா கொடுக்கலாம் அப்ப தான் எனக்கு முதல் வடை என்று சொல்லிக்கிட்டு ஒரு நாலு பேராவது வருவாங்க...//

    அங்க கிடைக்குமோ கிடைக்காதோ இங்க முதல் வடை எனக்குத்தான்...

    ReplyDelete
  5. "இப்ப பல தடைகளைத் தாண்டி வரப்போகிறது விஜய்யின் காவலன். இதை வெற்றிப்படமாக ஆக்க சில குண்டக்க மண்டக்க யோசித்தது"

    எனகென்னமோ நீங்க அவர உண்மைலேயே ஜெயிக்க வச்சுடுவீங்கன்னு தோணுது...

    ReplyDelete
  6. @ தமிழரசி
    நான் வடை வாங்கிட்டேங்க ..!!

    ReplyDelete
  7. //
    3. இணையபதிவர்கள் தான் முக்கியமானவர்கள் அவர்களுக்கு இலவச பிரிவியூ காட்சி போடலாம். சென்னையில் உள்ள பதிவர்களுக்கு மட்டுமின்றி எல்லா பதிவர்களுக்கும் இலவச காட்சி போடனும் அப்ப தான் நல்ல படம் என்று வெளியே தெரியும்.//

    செம்ம கலக்கல்.......

    தொடருங்கள்.......

    ReplyDelete
  8. இணையபதிவர்கள் தான் முக்கியமானவர்கள் அவர்களுக்கு இலவச பிரிவியூ காட்சி போடலாம். சென்னையில் உள்ள பதிவர்களுக்கு மட்டுமின்றி எல்லா பதிவர்களுக்கும் இலவச காட்சி போடனும் அப்ப தான் நல்ல படம் என்று வெளியே தெரியும்..///
    ஆமாங்க இப்போல்லாம் அத ஒரு ட்ரெண்டா FOLLOW பண்ணனும்.

    ReplyDelete
  9. இப்பிடியெல்லாம் ஐடியா கொடுத்தா உண்மைலேயே ஜெயிச்சுரபோது!!!

    ReplyDelete
  10. இது சித்திகின் பாடிகார்ட் என்ற மலையாளப்படத்தின் ரீமேக். சித்திக் இயக்கி இருப்பதால் இந்தவாட்டி டாக்குடர்ரு தப்பிக்க வாயப்பிருக்கு...

    பிரச்சனை என்னன்னா ஒருபடம் ஜெயிச்சா இவரு கொடுக்கற பில்டப்பை தாங்கமுடியாதே...அதை நினைச்சாத்தான் இப்பவே திகிலடிக்குது...

    ReplyDelete
  11. இப்பிடியெல்லாம் ஐடியா கொடுத்தா உண்மைலே நல்லா ஓடிராம!!

    ReplyDelete
  12. //8. டிக்கெட் வாங்கும் போது வடை இலவசமா கொடுக்கலாம் அப்ப தான் எனக்கு முதல் வடை என்று சொல்லிக்கிட்டு ஒரு நாலு பேராவது வருவாங்க...///

    சோறு கொடுத்தாத் தான் நான் வருவேன்...

    ReplyDelete
  13. எனக்கு கல்யாண் பிரியாணிலேருந்து அரை பிளேட் வரவழைச்சுத் தரணும். இல்லாட்டா நான் ஆட்டத்துக்கு வரலே....! :-)

    ReplyDelete
  14. இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 10-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. காவலன் (வழக்கம்போல) கவுந்துவிட்டால் வருடத்துக்கு 10படம் நடிப்பேன் என்று பொதுமக்களை பிளாக்மெயில் செய்யலாம்.

    ReplyDelete
  16. விஜய்...பாவம்தானே.எல்லாருமா சேர்ந்து ஏன் இப்பிடிக் கலாய்க்கிறீங்க அவரை !

    ReplyDelete
  17. ஹேமா said...

    விஜய்...பாவம்தானே.எல்லாருமா சேர்ந்து ஏன் இப்பிடிக் கலாய்க்கிறீங்க அவரை !./////

    அவரு எத்தனை பதிவர்களை வாழ வைத்திருக்கிறார்.

    ஒரு வேளை ஹிட்டு குடுத்தா பதிவு எழுத யாரும் வரமாட்டாங்கன்னு நெனச்சி பிளாப் படம் குடுக்கிறார்.

    அவரு மனச யாருமே புரிஞ்சிகளையே...............

    ReplyDelete
  18. மசாலா ரூட்டுக்கு தாவி இருக்கீங்க..நல்லா வந்திருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. இன்னொரு ஐடியா: டிராபிக் ஜாம் ஆகும் இடங்களில் வேட்டியை விரித்துக் கட்டிக் காவனை ஓட்டிக் காட்டலாம். டிராபிக் ஜாமும் சீக்கிரம் க்ளியர் ஆகும், படமும் ஓட்டின மாதிரி இருக்கும்.

    ReplyDelete
  20. இது ஒண்ணு தான் வழி...

    //1. ரசிகர் மன்றங்கள் மூலம் ஏதோ ஒரு ஊருக்கு இலவச பொருட்கள் தருவதற்கு பதில் தமிழகம் முழுவதும் எல்லா ஊருக்கும் இலவசம் தரளாம்.//

    தமிழகம் முழுதும் எல்லா ஊருக்கும் இலவச டிக்கெட் தரலாம்...

    ReplyDelete
  21. கஜினி 17 முறை படையெடுத்து கடைசியில் ஜெய்த்தமாறி விஜயும் வெற்றி படத்தை தருவார்னு நம்புவோம்.

    ReplyDelete