உள்ளுரில் இருந்து உலகம் வரை........
ஊரெங்கும் பெய்த மழையால்
எல்லா சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மழையினால்
பாதிக்கப்பட்ட சாலை சாலைகளை போர்க்காள அடிப்படையில் சீராக்கினால் மக்கள்
மட்டுமல்ல மந்திரிகளும் சொகுசாக செல்லலாம்..
சமீபத்தில் பவானியில் இருந்து மேட்டூர் செல்லும் சாலையில் பயணிக்கும் போது 27 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 2 மணி நேரம் ஆனது அந்த அளவிற்கு சாலைகள் உள்ளன. அதை சாலை என்று கூற இயலாது. துளை விழுந்த சாலை என்று கூறலாம்..
சீக்கிரமா சாலையை செப்பனீடுங்கப்பா...

............................................................ .............................. .....
2ஜி வழக்கில் இருந்து அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த
கனிமொழிக்கு ஜாமீன் வழங்கப்பட்டு அவரும் வெளியே வந்து விட்டார். 3 ம் தேதி
சென்னை வருகிறார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர் இந்த சிறை வாழ்க்கை
கனிக்கு தமிழக அரசியலில் முக்கியத்துவம் கிடைக்கும் என்று அனைவரும்
எதிர்பார்க்கலாம்..
என்ன கனி வந்துட்ங்கா ராசா ???????
என்ன கனி வந்துட்ங்கா ராசா ???????
............................................................ .............................. .....
முல்லைப்பெரியாறு விவகாரத்தையொட்டி தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும்
வாகனங்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றன. ஆனால் கேரளா வாகனங்கள்
மட்டும் தமிழகத்திற்குள் தங்குதடையின்றி வந்து போய்க் கொண்டுள்ளன.
வெட்கம் மானம் ரோசமுள்ள கேரளாக்காரர்கள் தமிழ்நாட்டுக்கு வராமல், தமிழ்நாட்டில் வாழாமல் கேராளவே திரும்பினால் இன்னும் சந்தோசம் தான்...
வெட்கம் மானம் ரோசமுள்ள கேரளாக்காரர்கள் தமிழ்நாட்டுக்கு வராமல், தமிழ்நாட்டில் வாழாமல் கேராளவே திரும்பினால் இன்னும் சந்தோசம் தான்...
............................................................ .............................. ......
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகேயுள்ள பியாஸ் என்ற நகரை சேர்ந்தவர்
கிறிஸ்டோபி சேம்பியனாஸ் (35). இவரது மனைவி சார்லின் (25), இவர்களுக்கு
பாஸ்டியன் என்ற 3 வயது மகன் இருந்தான். இவன் அங்குள்ள ஒரு நர்சரி பள்ளியில்
படித்து வந்தான். படு சுட்டியான இவன் தன்னுடன் படிக்கும் சக மாணவனின்
ஓவியத்தை வீணடித்ததாக கூறப்படுகிறது.
எனவே, பள்ளி
நிர்வாகம் கிறிஸ்டோபியை அழைத்து கண்டித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்
தனது மகன் பாஸ்டியனின் கை, கால்களை கட்டி வாஷிங் மெஷினுக்குள் போட்டார்.
பின்னர் சுவிட்சை ஆன் செய்து துணி சலவை செய்வது போன்று அவனை துவைத்து
எடுத்தார்.
இதனால் அவன் தலை மற்றும் கை, கால்களில்
அடிபட்டது. இதை சிறிது நேரம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அவரது மனைவி
சார்லின் இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் வந்து
கிறிஸ் டோபியை தடுத்து நிறுத்தி சிறுவன் பாஸ்டியனை வாஷிங் மெஷினியில்
இருந்து மீட்டனர். படுகாயங்களுடன் இருந்த அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு
சென்றனர். ஆனால், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இங்கு எத்தனையோ குடும்பங்கள் குழந்தை இல்லாத அல்லாடிகிட்டு இருக்கு இவனுக இப்படி இருக்கானுக..
இங்கு எத்தனையோ குடும்பங்கள் குழந்தை இல்லாத அல்லாடிகிட்டு இருக்கு இவனுக இப்படி இருக்கானுக..
............................................................ .............................. ......
இன்று
முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு மீண்டும் 0.85 பைசா குறைப்பு.. சந்தோசமான
விசயம் தான் ஆனால் இது தொடரனும்... விலை குறையறத சொன்னேன்...
............................................................ .............................. ........
எப்படியோ ஓட்டு போட்ட மக்களுக்காக கேள்வி கேட்கவில்லை என்றாலும், எதிர்ப்பாவது தெரிவிக்கிறார்களே...
முதன் முறையாக இந்த பிரச்சனைக்காக மத்திய அரசு கூட்டணிக்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு முன் பெட்ரோல் விலையேற்றம் மற்றும் மத்த பிரச்சனைகளில் கூட்டணி அரசை கண்டுகொள்ளாத மத்திய அரசு இன்று அழைக்கிறது...
கூட்டணிக்கட்சிகள் எப்படா கூப்பிடுவாங்க என்று இருக்கிறார்கள் இவர்களும் சென்று மத்திய அரசுக்கு நிச்சயம் ஆதரவளிக்கத்தான் போகிறார்கள்...
............................................................ .............................. ........
இன்று தமிழகமெங்கும் கடை அடைப்பு நடத்தி தமிழ்நாடு வணிகர்கள் மத்திய
அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்ன தான் எதிர்ப்பு தெரிவித்தாலும்
செவிடன் காதில் சங்குதிய கதைதான்...
............................................................ .............................. ........
இன்று எய்ட்ஸ் தினம்.... எய்ட்சை எதிர்ப்போம் வராமல் காப்போம்... எய்ட்ஸ் நோயாளிகளை ஆதரிப்போம்...
............................................................ .............................. ........
தகவல்
தற்போது உலகம் முழுவதும் நீரிழிவு நோயினால் மக்கள் மிகவும்
அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு
வருகின்றனர். அவைகளை தவிர்த்து இந்த நோய் குணமாகும் வழியை நிபுணர்கள்
கண்டறிந்துள்ளனர். நெதர்லாந்தை சேர்ந்த லெய்டன் பல்கலைக்கழக நிபுணர்கள்
புதிதாக ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி இரண்டாம்
பிரிவு நீரிழிவு நோயை உணவு கட்டுப்பாட்டின் மூலம் முற்றிலும் குணப்படுத்த
முடியும். அவர்கள் குறைந்த சக்தி (கலோரி) தரும் உணவு வகைகளை 4 மாதங்கள்
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போதும். அவர்களை பாதித்துள்ள நீரிழிவு நோய்
குணமாகி விடும்.
இதன்மூலம் அளவுக்கு அதிகமாக
இன்சுலின் சுரப்பது குறையும். இதன் மூலம் இருதயத்தில் கொழுப்பு படிவது
தடுக்கப்படும். இதன்மூலம் இருதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும் என்றும்
தெரிவித்துள்ளனர்.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் தினம் ஒரு ஆன்ட்ராய்டு அப்ளிக்கேசன் என்ற பெயரில் தினமும் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேசன் பற்றிய விபரங்களை தருகிறார்கள்.. மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது இப்பதிவு...
தத்துவம்
மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு
உண்டாக்குமோ, அது போல மக்கள்தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே
சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை.
முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே உலகம் உன்னை விழுங்கிவிடும்...
உழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளிடுவீர். உழைப்பவரே உயர்ந்தோர் என்னும் தத்துதவத்தை நிலைநாட்டுவீர்.