உள்ளுரில் இருந்து உலகம் வரை........
சென்னை அண்ணாமேம்பாலத்தில்
பஸ் கவிழ்ந்தது கேக்கவே அவ்வளவு பயமாக உள்ளது. தினமும்
பல்லாயிரக்கணக்கானோர் பயணிக்கும் மேம்பாலத்தில் விபத்து என்றால்
எல்லாருக்கும் அப்படித்தான் இருக்கும். இதற்கு பல பேர் பல காரணங்கள்
சொன்னாலும் ஓட்டுநரின் அஜாக்கிரதை தான் மிக முக்கிய காரணமாக இருக்கும்.
கொண்டை ஊசி வலைவைபோல் உள்ள அந்த வலைவில் ரொம்ப நிதானமாகத்தான் ஓட்ட
வேண்டும். காயமடைந்தவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் நம் ஆழ்ந்த
இரங்கள்கள்..
ஓட்டுநர்களுக்கு நிறைய பிரச்சனைகள் உள்ளன ஆட்கள் பத்தாததால் எக்ஸ்ட்ரா சிப்ட் பார்ப்பவர்கள் அதானல் தான் நிறைய விபத்துக்கள் ஏற்படுகின்றன. அடுத்து அரசு பேருந்துக்களின் பராமரிப்பு சொல்லித் தெரிவதில்லை நமக்கு... இனியாவது அரசு அதிக ஆட்களை வேலைக்கு எடுத்து பேருந்து பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பராமரிப்பு சரியாக இருந்தால் விபத்துக்கள் நிறைய குறையும்.
ஓட்டுநரின் ஆஜாக்கிரதை அனைவரும் அறிந்ததே. மாநகரத்தில் மட்டுமல்ல பட்டி தொட்டி எல்லாம் இது தான் நடக்கிறது.. வண்டியின் பேனர் மேல் பெண் பயணிகளை உட்கார வைத்துக்கொண்டு அவர்களிடம் பேசியபடி பேருந்தை இயக்குவது, செல்போன் பேசியபடி இயக்குவது, வேகமாக ஓடுக்கொண்டி இருக்கும் பேருந்தில் சிகெரெட் பத்தவைப்பது, ரிமோட்டை எடுத்து ஒவ்வொரு பாட்டாக மாற்றுவது என்று இவர்களின் அஜாக்கிரதையை சொல்லிக்கொண்டே போகலாம்...
எத்தனை தான் சொன்னாலும் கவனக்குறைவால் தான் விபத்து நடக்கிறது என்பது மறுக்க இயலாத உண்மை....

............................................................ .............................. .....
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் மட்டும் குய்யோ முய்யோ என்று
கொக்கரிக்கும் எண்ணெய் நிறுவனங்கள் விலை வீழ்ச்சி அடையும் போது பேசாமல்
இருப்பது ஏனோ???
அப்படியே விலை குறைத்தாலும் அவர்கள் சமீபத்தில் ஏற்றிய விலையில் பாதிதான் குறைக்கின்றனர் ஆனால் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி 65 ரூபாய்க்கு நாம் பெட்ரோல் போடும் போது இருந்த விலையை விட குறைவாக இருக்கிறது...ஆக இலாபம் சம்பாரிப்பதில் மிக உறுதியாக உள்ளனர் எண்ணெய் நிறுவனங்கள் அவர்களுக்கு உற்ற தோழனாக இருப்பது பெட்ரோல் துறையையை கையில் வைத்திருப்பவர்கள்...
பெட்ரோல் பெட்ரோல் விலை 4 வரை குறைகிறாம்... கொஞ்சம் சந்தோசமான செய்திதான் ஆனால் ஏத்துவது மட்டும் 4 மடங்கு இறக்குவது 1 மடங்கு விலை என்ற போது தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு... எது எப்படியோ விலை இறக்குனா சரிதான்...
அப்படியே விலை குறைத்தாலும் அவர்கள் சமீபத்தில் ஏற்றிய விலையில் பாதிதான் குறைக்கின்றனர் ஆனால் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி 65 ரூபாய்க்கு நாம் பெட்ரோல் போடும் போது இருந்த விலையை விட குறைவாக இருக்கிறது...ஆக இலாபம் சம்பாரிப்பதில் மிக உறுதியாக உள்ளனர் எண்ணெய் நிறுவனங்கள் அவர்களுக்கு உற்ற தோழனாக இருப்பது பெட்ரோல் துறையையை கையில் வைத்திருப்பவர்கள்...
பெட்ரோல் பெட்ரோல் விலை 4 வரை குறைகிறாம்... கொஞ்சம் சந்தோசமான செய்திதான் ஆனால் ஏத்துவது மட்டும் 4 மடங்கு இறக்குவது 1 மடங்கு விலை என்ற போது தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு... எது எப்படியோ விலை இறக்குனா சரிதான்...
............................................................ .............................. .....
கடந்த வாரம் பாண்டியில் கழிந்தன வார இறுதி நாட்கள்.. இங்க இருந்து
போன் செய்து கேட்டால் எல்லா விடுதிகளும் ரொம்ப பிஸி போலத்தான் பேசறாங்க.
அங்க போய் ஒரு 2 மணி நேரம் தேடியதில் குறைவான விலையில் நீச்சல் குளத்துடன்
கூடிய விடுதி கிடைத்தது... சோ பாண்டி போறவங்க அங்க போய் கொஞ்சம் தேடினால்
சாகய விலையில் அற்புதமான ரிசாட்கள் கிடைக்கின்றன... கூடவே ஆட்டம்
பாட்டமும்...
............................................................ .............................. ......
ஒரு வழியாக ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு பேர்தான் வேட்பாளர்கள் என்று முடிவாகிவிட்டது இனி தான் ஓட்டு வேட்டை எல்லாம். மாநில கட்சிகளிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற அதிக சான்ஸ்...
........................................................... .............................. ......
நிறைய பேர் நிறைய இடங்கிளில் தங்கள் கருத்தாக
தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தான் சொல்கின்றனர் ஆனால் அதை
பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவுதான். படித்தவர்களே இப்படி
நடந்து கொண்டால் மற்றவர்களை என்ன சொல்வது.
சமீபத்தில் பலியான அமைச்சரின் மகன் தலைக்கவசம் அணிந்திருந்தால் நிச்சயம் உயிரிலக்கும் வாய்ப்பு மிக குறைவுதான்..
தலைக்கவசம் அணியுங்கள் உயிர் சேதத்தில் இருந்து தப்புங்கள்...
சமீபத்தில் பலியான அமைச்சரின் மகன் தலைக்கவசம் அணிந்திருந்தால் நிச்சயம் உயிரிலக்கும் வாய்ப்பு மிக குறைவுதான்..
தலைக்கவசம் அணியுங்கள் உயிர் சேதத்தில் இருந்து தப்புங்கள்...
......................................................... .............................. ........
ரஷ்ய பெண் ஒருவர் தனது 7 மற்றும் 4 வயது மகன்களை 15வது மாடியில் இருந்து தள்ளிக் கொன்றுள்ளார்.
ரஷ்ய
தலைநகர் மாஸ்கோவைச் சேர்ந்தவர் கலினா ரயப்கோவா(30). அவருக்கு 7 மற்றும் 4
வயதில் இரண்டு மகன்கள். அவர் மாஸ்கோவில் உள்ள குடியிருப்பில் 8வது மாடியில்
குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்
தனது 2 மகன்களையும் குடியிருப்பின் 15வது மாடிக்கு அழைத்துச் சென்று
அவர்களை அங்கிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்த சம்பவம்
நடந்தபோது அவரது கணவர் வியாபார நிமித்தமாக வெளியே சென்றிருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கலினாவை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த குடியிருப்பில் வசிப்பவர் ஒருவர் கூறுகையில்,
என்
மனைவி என்னை எழுப்பி குழந்தைகள் மாடியில் இருந்து கீழே விழுவதாகத்
தெரிவித்தாள். உடனே வெளியே ஓடிப் போய் பார்த்தபோது இரண்டு குழந்தைகள் கீழே
கிடந்தனர். அப்போது அவர்களின் தாய் அங்கிருந்து வெளியே சென்றார். இவர்கள்
உங்கள் குழந்தைகளா என்று கேட்டதற்கு, ஆம் நான் தான் தள்ளிவிட்டேன் என்றார்.
போலீஸ்
விசாரணையில் கலினா கூறுகையில், குழந்தைகள் இருப்பது தொல்லையாக இருந்ததால்
தான் அவர்களை மாடியில் இருந்து தள்ளி விட்டேன். தற்போது அவர்கள் வானில்
தேவதைகளாகிவிட்டனர் என்றார்.
............................................................ .............................. ........
9ம் வகுப்பு படிக்கும் மாணவியை கணக்கு தீர்த்த கணித
ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்கள் ஆனால் இதெல்லாம் மிக
குறைவான தண்டணை என்பேன் நான். ஆசான் வேலையில் இருந்த கொண்டு சாமியார் வேலை
செய்யும் இவர்களை எல்லாம் கல்லால் அடித்தே கொள்ளவேண்டும்...
............................................................ .............................. ........
உலகப் புகழ்பெற்ற லண்டன் பிக் பென் கடிகாரத்தின் பெயர் விரைவில்
மாற்றப்பட இருக்கிறது. இங்கிலாந்து ராணியாக எலிசபெத் மகுடம் சூட்டி இந்த
ஆண்டோடு அறுபது ஆண்டுகள் ஆகிறது.
இதை கொண்டாடும்
விதமாகவும், ராணியை சிறப்பிக்கும் விதமாகவும் பிக்பென் கடிகாரம் 'எலிசபெத்
டவர் கடிகாரம்' என பெயர் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.
இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் கூறியதாவது;
88
வயதாகும் எலிசபெத் ராணி மகுடம் சூட்டி,இந்த ஆண்டோடு 60 ஆண்டுகள்
நிறைவடைகிறது. இவரை சிறப்பிக்கும் விதமாக ஹவுஸ் ஆப் காமன்ஸ் எனப்படும்
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிக்பென் கடிகாரத்தின் பெயர் இனி எலிசபெத்
டவர் கடிகாரம் மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
பாராளுமன்ற
உறுப்பினர்கள் அனைவரும் இந்த கோரிக்கையை ஏகமனதாக வரவேற்று, ஏற்றுக்
கொண்டுள்ளனர். இதன்படி விரைவில் இப்பெயர் மாற்றம் குறித்து அதிகார பூர்வமாக
அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிக்
பென் டவர் என்பது லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வடக்கு முனையில்
அமைந்திருக்கும் ஒரு மணிக்கூண்டு ஆகும். நான்கு-பக்கங்கள் கொண்ட
மணிக்கூண்டுகளில் இதுவே உலகின் மிகப் பெரியது ஆகும். அத்துடன் உலகின்
மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்.
இம்மணிக்கூண்டு
1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது. இங்கிலாந்தின்
பிபிசி செய்தி நிறுவனத்தில் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும்
சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான்.
இரண்டாம் உலகப் போரின் போது, இதைக் குண்டு வீசித் தகர்க்க, ஜெர்மனி எவ்வளவோ முயன்றும், அது பலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின்
பிரபல குத்துச் சண்டை வீரரான பென் கான்ட் என்பவரின் புனைப் பெயர் பிக்
பென் ஆகும். அவரது நினைவாகவே இம்மணிக்கூண்டிற்கு 'பிக் பென்' என
அக்காலத்தில் பெயரிடப்பட்டதாம்.
தகவல்
வயதானவர்கள் தினசரி மூன்று கப் காபி சாப்பிட்டால் அவர்களின் மூளை சுறுசுறுப்பாக அலர்ட்டாக இருக்குமாம். அவர்களுக்கு மூளை பாதிப்பு நோய் எனப்படும் அல்சீமர் நோய் எட்டிப்பார்க்காது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
விடியும் போதே சிலர் காபியில்தான் கண் விழிப்பார்கள். ஒரு கப் காபி குடித்தால்தான் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்று அதற்கு காரணம் கூறுவார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தினசரி காபி மூன்று கப் காபி குடிப்பதால் அவர்களுக்கு அல்சீமர் எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படுவது தள்ளிப் போகிறதாம்.
வயதானவர்களை அதிகம் பாதிக்கும் அல்சீமர் நோய் குறித்து தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தம்பா மற்றும் மியாமி நகரங்களைச் சேர்ந்த 65 வயது முதல் 88 வயதிற்கு மேற்பட்ட 124 மூத்த குடிமக்கள் பங்கேற்றனர்.
அவர்களுக்கு தினசரி 3 கப் காபி குடிக்கக் கொடுக்கப்பட்டது. இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை படிப்படியாக அவர்களை கண்காணித்தனர். பின்னர் அவர்களை ஆய்வு செய்ததில் அவர்களுக்கு டிமென்சியா நோய் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. மேலும் அல்சீமர் நோய் பாதிப்புகள் ஏற்படும் அறிகுறிகளும் தென்படவில்லை. இதற்குக் காரணம் காபியில் உள்ள காஃபின் எனப்படும் பொருள்தான் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
திடீர் ஞாபகமறதி நோயளிகள், தங்களை அல்சீமரில் இருந்து தற்காத்துக் கொள்ள தினசரி 3 கப் காபி குடிப்பதில் தவறேதும் இல்லை என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வினை நான்கு ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வாளர்கள், அதன் முடிவுகளை அல்சீமர் நோய் பற்றிய பத்திரிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளனர்.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக பதிவர் முரண்சுவை என்ற பெயரில் கோவையைச் சேர்ந்த கோவி என்பவர் எழுதி வருகிறார். நிறைய பயன் உள்ள விசயங்களை அழகாக தொகுத்து கொடுத்துள்ளார்...
http://muransuvai.blogspot.com/
தத்துவம்
பயமில்லாமை தைரியமல்ல. பயநேரங்களிலும் சரியாய் செயல்புரிவதே நிஜ தைரியம்.
தூக்கத்தை ஒழித்தால் ஆயுள் விருத்தியாகும்.
இந்த உலகம் உன் வெற்றிக்கதையை படிக்க காத்துக்கொண்டு இருக்கிறது...
தூக்கத்தை ஒழித்தால் ஆயுள் விருத்தியாகும்.
இந்த உலகம் உன் வெற்றிக்கதையை படிக்க காத்துக்கொண்டு இருக்கிறது...