Friday, July 29, 2011

புகழ்பெற்ற அந்தியூர் குதிரை சந்தை 10ம் தேதி தொடங்குகிறது...


நண்பர்களுக்கு வணக்கம்,

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி ஆலயம் உள்ளது இக்கோவில் திருவிழா ஆடி மாதம் நடைபெறும். இத்திருவிழாவின் போது இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற குதிரை சந்தை, மாட்டுச்சந்தை நடைபெறும் .

இந்த வருடம் இத்திருவிழா வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி தொடங்கி 14 வரை நான்கு நாட்கள் நடைபெற இருக்கிறது. குதிரைசந்தை மற்றும் மாட்டுச்சந்தை 10ம் தேதி தொடங்கி 13ம் தேதி நிறைவு பெறுகிறது. இத்திருவிழாவில் கடந்த வருடம் மட்டும் 5 லட்சத்துக்கு அதிகமானோர் கலந்து கொண்டதாக கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இக்கோவில் அந்தியூர் மழை அடிவாரத்தில் உள்ளது வருடா வருடம் இத்திருவிழாவின் போது எங்கள் குடும்பம் சார்பாக நண்பர்களை  அழைத்து வனத்தில் கிடா விருந்து கொடுப்போம். இந்த வருடம் சிறப்பாக கொண்டாடலாம் அனைவரையும் விருந்துக்கு அழைக்கலாம் என்று இருந்தேன். எங்கள் பெரியப்பா தவறியதால் இந்த வருடம் எங்கள் பொங்கல் இல்லை. 

திருவிழா நடக்கும் நான்கு நாட்களும் அங்கே தான் இருப்பேன் அதனால் வரும் நண்பர்களை அழைத்து திருவிழாவில் ஊரைச்சுற்றலாம் என்று முடிவு செய்து அனைவரையும் அழைக்கவே இப்பதிவு.

நண்பர்களே திருவிழாவையும், குதிரை சந்தை மற்றும் மாட்டுச்சந்தையை காண உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.

சில நண்பர்கள் வருவதாக உறுதி அளித்துள்ளனர் வர இருக்கும் நண்பர்கள் முன்கூட்டியே சொன்னால் அனைவரும் சேர்ந்து திருவிழாவை காணலாம். வர இருக்கும் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.

கடந்த வருடம் இக்குதிரை சந்தையைப்பற்றி பதிவிட்டு இருந்தேன் அப்பதிவை காண...



8 comments:

  1. போன மாசம் பரளிக்காடு, அடுத்த மாசம் அந்தியூர்... ரைட்டு

    ReplyDelete
  2. இப்ப எல்லாம் பதிவுகளனைத்தும் தகவல்களாக நிறைந்து வழிகிறதே..

    ReplyDelete
  3. நண்பருக்கு வணக்கம் இதனால் வரை இப்படி ஒரு குதிரை சந்தை நடப்பது எனக்கு தெரியாது இன்றுதான் அறிந்துகொண்டேன் . குதிரை சந்தை பற்றிய உங்களின் பழையப் பதிவையும் வாசித்துவிட்டு மீண்டும் வருகிறேன் . பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி சங்கவி..:)

    ReplyDelete
  5. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. kuthirai santhayai patri virivaaga alasiyulleergal, parattukkal..

    ReplyDelete