Thursday, July 14, 2011

அஞ்சறைப்பெட்டி 14.07.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

மும்பையில் மீண்டும் குண்டுவெடிப்பு கொஞ்ச நாள் அமைதியாக இருந்தது மும்பை நகரம் மீண்டும் குண்டு வெடித்து அமைசியை கெடுத்து விட்டனர் படுபாவிகள் எத்தைனை அப்பாவி மக்கள் இன்று உயிருக்கு போராடுகின்றனர் குண்டு வைக்கும் போது இதை யோசிக்க மாட்டார்களா படுபாவிகள்.

உங்களுக்கும் அரசுக்கும் பிரச்சனை என்றால் அரசிடம் நேரடியாக மோத வேண்டியது தானே?

அதை விட்டு விட்டு அப்பாவி மக்களை பயமுருத்துபவர்கள் தீவிரவாதிகள் என்ற பெயரில் ரத்த வெறி பிடித்த மிருகங்கள்...


...............................................................................................


கோவையில் காவல் நிலையம் முன்பு அதிக மக்கள் நடமாட்டமுள்ள சிக்னலில் பட்ட பகலில் ஒரு கொடூர கொலை வீடியோவைப்பார்த்து வௌவௌத்துப்போனேன்.

இருவர் இருசக்கர வாகனத்தில் வருகிறார் வரும் போது சிக்னலில் எதிரே இருப்பவர் மேல் மோதுகிறார் அப்போது நான்குபேர் சேர்ந்து வாகன ஓட்டியின் மேல் கல்லைத்தூக்கிப்போட்டு கொலை செய்கின்றனர். மேலும் இதைப்பற்றி விசாரிக்கும் போது பாரில் தண்ணி அடிக்கும் போது தும்மலில் ஏற்பட்ட பிரச்சனை என்றார்கள்.

அடப்பாவிங்களா தண்ணி அடிச்சு நீங்க அடிச்சிகிட்டதாலே இன்று 5 குடும்பம் நடுத்தெருவில்......(இறந்தவன் குடும்பம் உள்பட..)


...............................................................................................

சமீபத்தில் கோயிலுக்கு சென்றிருந்த போது சமீபத்தில் திருமணம் நடந்த நண்பனை குடும்பத்துடன் சந்தித்தேன் பரஸ்பரவம் விசாரித்து விட்டு அனைவரும் வரிசையில் நின்று கொண்டு இருந்தோம் கூட்டத்தில் நண்பனின் மனைவி குங்குமம் வாங்காமல் வந்து விட்டார் இதை வெளியில் வந்து அவர் சொல்லும் போது பக்கத்தில் இருந்த அவர்களின் உறவினர் பெண் இந்தாம்மா குங்குமம் என்று கொடுத்தார்.

அந்த பெண் கொடுக்கும் போது அனைவரும் வேண்டாம் வாங்க வேண்டாம் என்ற கண்ணோட்டத்தோடு பார்த்தனர் ஆனால் நண்பனின் மனைவி மகிழ்ச்சியுடன் குங்குமத்தை வாங்கினார். அப்போது தான் குங்குமம் கொடுத்த பெண்ணைப்பார்த்தேன் அவர் பூவை இளந்த பெண்.

நண்பனின் மனைவியிடம் இதைப்பற்றி கேட்கும் போது மற்றவர்கள் கொடுத்த குங்குமத்தை விட அவர்கள் கொடுக்த குங்குமம் சிறப்பானது ஏன் என்றால் மற்றவர்கள் கொடுக்கம் போது குங்குமமாக கொடுப்பர் ஆனால் இவரின் ஆழ்மனதில் இருந்து இந்த குங்குமம் உன் வாழ்நாள் முழுவதும் இருக்கனும் என்று நிச்சயம் மனதில் நினைத்து தான் கொடுத்து இருப்பார் அதனால் அவரின் வாங்கினேன் என்றார். என் கண்ணில் ஆனந்தக்கண்ணீர்.


........................................................................................................

சமீபத்தில் நில அபகரிப்பு வழக்கிலும், மிரட்டல் வழக்கிலும் கடந்த ஆட்சியில் நல்ல பதவியில் இருந்தவர்கள் எல்லாம் நிறைய அனுபவத்துள்ளனர் இப்போது பலர் மேல் வழக்கு பதிவு செய்து உள்ளே செல்வது மக்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது ஏன் எனில் மாட்டியவர்கள் எல்லாம் பலகோடியில் தான் புழங்கி இருக்கின்றனர். ஒரு சாமனியன் நினைத்து பார்க்காத தொகையைத்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பாரித்து இருக்கிறார்கள். இச்செய்தியை அலுவலகத்தில் பேசிக்கொண்டு இருக்கும் போது என் நண்பன் திடீரென் இப்பாடலை பாடினான்...

மாட்டிக்கிட்டாரடி மைனர் காளை......கட்டிப்போட்டதடி கண்டாங்கிச்சேலை...



........................................................................................................

தற்போது முதல்வர் அளித்த மருத்துவர் காப்பீட்டுத்திட்டம் நிறைய பயன்கள் உள்ளது. பாராட்டப்ட வேண்டிய திட்டம்.

இத்திட்டத்துடன் அரசு மருத்துவமனைகளை உயர் தொழில்நுட்பத்துடன் மாற்றி அனைத்து திட்டங்களையும் அரசு மருத்துவமனையில் நிறைவேற்ற முயற்சி செய்யலாம். இன்றும் சாமானிய மக்கள் அரசு மருத்துவமனையில் தான் அதிகம் சிகிச்சை எடுக்கின்றனர் அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்தினால் இன்னும் ஏராளமானோர் பயன் பெறுவார்கள்.


அரசு மருத்துவமனை என்றாலே நிறைய குறை கூறுபவர்கள் தான் அதிகம் ஆனால் அங்கும் தரமான சிகிச்சைகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. தரமான மருந்துகள் கொடுத்து வருகின்றனர் என்பதை தற்போது நேரடியாக உண்ர்ந்தேன்.


உயர் இரத்த அழுத்தத்திற்கும், சர்க்கரைக்கும் எனது தந்தைக்கு மாதம் தனியார் மருத்துவமனையில் எல்லா டெஸ்ட் உடன் மாத்திரைக்கு மாதம் 2000 செலவு செய்து வருகிறேன். ஆனால் அவர் எங்கள் ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரிடம் விசாரித்து இருக்கிறார் அவர் வாரம் வாரம் செவ்வாய்கிழமை இங்க எல்லா டெஸ்ட்டும் செய்து இலவசமாக மருந்துகள் தருகிறோம் வாருங்கள் என்று அழைத்திருக்கிறார் இவரும் சென்று மருந்துகள் அனைத்தையும் வாங்கி வந்து உபயோகப்படுத்துகிறார். ஊரிற்கு சென்றிருந்த நான் அந்த மருந்துகளையும் இதற்கு முன் தனியார் கொடுத்த மருந்தையும் பார்த்தால் கம்பெனிதான் வேறு மற்றபடி இரண்டும் ஒன்று தான் அப்பொழுது விசாரிக்கும் போது இங்கு குறைந்த பட்சம் வாரம் 200 பேர் மருந்துகளை வாங்கிச்செல்கின்றனர் என்றனர்.


அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தினால் இன்னும் நிறைய பயனாளர்கள் பயன் பெறுவர்.


நாட்டு நடப்பு

மாநிலங்களவை உறுப்பினராக செய்தியாளர் ரவிபெர்னாட் அதிமுக சார்பாக தேர்வு, இது விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு.

மிரட்டல், நில அபகரிப்பு வழக்கில் தமிழகம் எங்கும் தினமும் பரபரப்பான செய்தி சுடச்சுட வந்து கொண்டே இருக்கிறது.


திருவனந்தபுரத்தை அடுத்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் புதையல் இருக்கும் என புரளி கிளம்பியுள்ளது இருந்தால் நமக்கு மிக்க மகிழ்ச்சி தான்...



தகவல்



இஸ்ரேலில் உள்ள பென்-குரியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆப்ரகாம் தமிர் என்பவர், தனது மாணவர்கள் துணையுடன் மனித மூக்குகள் குறித்த ஆராய்ச்சியில் இறங்கினார்.
மனிதர்களின் முக்கிய உறுப்புகளில் மூக்கும் ஒன்று. முகத்துக்கு அழகை சேர்ப்பது மூக்கு என்றால் அது மிகையாகாது. மனிதர்களுக்கு எத்தனை வகை மூக்குகள் உள்ளன? என்பதை கண்டறியவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆராய்ச்சியில் மனிதர்களுக்கு 14 விதமான மூக்குகள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.
பிறைவடிவிலான மெல்லிய மூக்கு, சதைப் பிடிப்பு மூக்கு, உருண்டை மூக்கு, ரோமன் மூக்கு என மொத்தம் 14 விதமான மூக்குகள் பட்டியலிடப்பட்டு உள்ளது.
சதைப் பிடிப்பிடிப்புள்ள மூக்குகள் ஆண்களிடம் தான் அதிகமாக காணப்படுகின்றன. இந்த மூக்குக்கு உதாரணம் கூற வேண்டுமானால், இளவரசர் பிலிப்பை சொல்லாம். நடிகர் டாம் குரூஸிடம் “ரோமன்” மூக்கு அமைந்துள்ளது. மூக்கு விஷயம் சாதாரணமானது அல்ல. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுகளை வெளிப்படுத்துவதாக பேராசிரியர் ஆப்ரகாம் தபிர் கூறுகிறார்.   
எந்த வகையான மூக்கை விரும்புகிறீர்கள் என்று பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் லேசாக விளைந்த பிறை வடிவ மூக்கை விரும்புவதாக 13 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தள்ளனர். நீண்ட மூக்கை பெரும்பாலானோர் விரும்பவில்லை. தடிமனான மூக்குக்கு 5 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தள்ளனர். 
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் சூர்யஜீவா திருவண்ணாமலையைச் சேர்ந்த இவரின் அரசியல் கட்டுரைகள் ஒவ்வொன்றும் சிறப்பாக இருக்கும் ஆணிவேர் என்ற பெயரில் எழுதி வருகிறார்.

http://suryajeeva.blogspot.com/

 
தத்துவம்


கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.


மனிதனுக்கு சரியான பொது அறிவு இல்லாமல் போகுமானால் எந்த அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறுகிறதோ அந்த அளவுக்கு அவன் துயரத்தையும் அனுபவிப்பான்.

15 comments:

  1. //////
    தற்போது முதல்வர் அளித்த மருத்துவர் காப்பீட்டுத்திட்டம் நிறைய பயன்கள் உள்ளது. பாராட்டப்ட வேண்டிய திட்டம்.//////

    இதில் நிறைய ஏழைகள் பயன்பட்டால் சரி..

    ReplyDelete
  2. அருமையான தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. என்னை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி, மேலும் இலவச காப்பீட்டு திட்டம் என்பதே தனியார் மருத்துவமனைகளை வளர்த்து அரசு மருத்துவமனைகளை ஒழித்து கட்டுவதற்கு தான் உதவி புரியும் என்பது என் எண்ணம்... ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவம் நடைபெற்று வருவதால், இலவச காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்தை அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த செய்தாலே போதுமானது... மருத்துவ துறையை சேர்ந்தவன் என்பதால் கொஞ்சம் தெரியும்...

    ReplyDelete
  4. ஒரு பதிவில் இவ்வளவு தகவல்களா ?
    நன்றி ..

    ReplyDelete
  5. நண்பனின் மனைவியிடம் இதைப்பற்றி கேட்கும் போது மற்றவர்கள் கொடுத்த குங்குமத்தை விட அவர்கள் கொடுக்த குங்குமம் சிறப்பானது ஏன் என்றால் மற்றவர்கள் கொடுக்கம் போது குங்குமமாக கொடுப்பர் ஆனால் இவரின் ஆழ்மனதில் இருந்து இந்த குங்குமம் உன் வாழ்நாள் முழுவதும் இருக்கனும் என்று நிச்சயம் மனதில் நினைத்து தான் கொடுத்து இருப்பார் அதனால் அவரின் வாங்கினேன் என்றார். என் கண்ணில் ஆனந்தக்கண்ணீர்.//

    என் கண்ணில் கண்ணீரே வந்துருச்சி மக்கா....அவிங்க மனசு நல்ல மனசு...!!!!

    ReplyDelete
  6. தலைப்புக்க் ஏற்ற பதிவுகள் போட்டு அசத்துரீன்களே....!!

    ReplyDelete
  7. நாலு பதிவை ஒரே பதிவில் பல அட்டகாசமான விஷயங்களை உள்ளடக்கி அளித்தமைக்கு நன்றி மாப்ள!

    ReplyDelete
  8. nalla padhivu thozharey melum thodara vazhthukal.....

    ReplyDelete
  9. குங்குமம் மனதிலும் விழுந்தது.மூக்கு பற்றிய புதுத் தகவல் வாசனை !

    ReplyDelete
  10. தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  11. குங்குமத்தைப்பத்தி அந்த இளம்பெண் சொன்னது சரியானதே.. இழந்தவங்களுக்குத்தானே அதன் அருமை இன்னும் நல்லாப்புரியும்.

    ReplyDelete
  12. "குங்குமம்" பற்றிய நிகழ்ச்சி நெகிழ்ச்சியாக இருந்தது..!

    ReplyDelete
  13. குங்குமம் கொடுத்த அந்தப் பெண்மணியைப் பற்றிய குறிப்பு அருமை! கொடுத்தவரைக் காட்டிலும் வாங்கிக்கொண்ட அந்தப் பெண்மணி பாராட்டுக்குரியவர்! இதை ஒரு புனைவாக எழுதியிருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.

    ReplyDelete
  14. //அரசு மருத்துவமனைகளை உயர் தொழில்நுட்பத்துடன் மாற்றி அனைத்து திட்டங்களையும் அரசு மருத்துவமனையில் நிறைவேற்ற முயற்சி செய்யலாம்.//

    உண்மைதான் நண்பரே! ஒவ்வொரு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளையும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளாய் மாற்றினாலே போதுமானது. ஆரம்பகால சுகாதார நிலையங்களில் மேலும் சில உபகரணங்கள், சில சிறப்பு சிகிச்சைகளை அளிக்கலாம். ஆனால், இவற்றை நிறைவேற்ற முடியாமல் போவதன் காரணம், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பெரும்பாலும் முன்வருவதில்லை என்று பலர் கூறுகிறார்கள்.

    இது குறித்து மேலும் சில தகவல்களைச் சரிபார்த்து ஒரு இடுகை எழுத உத்தேசம். பார்க்கலாம்.

    கமகம அஞ்சறைப்பெட்டி! :-)

    ReplyDelete