Monday, July 18, 2011

இயற்கை எழில் கொஞ்சும் கோவை "பரளிக்காடு"

 வெள்ளியாங்காடு

அலுவலகத்தில் ஒரு நாள் பிக்னிக் செல்லலாம் என்று முடிவெடுத்து கோவைக்கு அருகாமையில் காலை சென்று மாலை திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்த இடம் தேடிய போது நம் சக பதிவர்களின் பதிவை புரட்டும் போது கிடைத்த இடம் பரளிக்காடு. காலை சென்று மாலை திரும்பலாம் கோவையில் இருந்து குறைந்த தொலைவு தான் என்று முடிவாகியது அனைவரும் பதிவை பார்த்து விட்டு இந்த இடத்திற்கே போகலாம் என்றார்கள். நண்பர்கள் கொடுத்த தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு வன அலுவலர் ஆண்டவரிடம் பேசினோம் நிச்சயம் வாங்க என்ற அன்பு உபசரிப்போடு தேதி குறித்துக் கொண்டார்.
16ம் தேதி காலை அனைவரும் அலுவலகத்தில் ஒன்று சேர்ந்து புறப்படும்போது காலை 6 மணி. காலையில் வாகன நெறிசல் இல்லா கோவையை ரசித்துக்கொண்டே சென்றோம். தற்போது தமிழகத்தில் மிக மோசமான சாலைகளில் ஒன்றான கோவை மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன் பாளையம் ஆனந்தாசில் காலை உணவாக அனைவரும் சொல்லி வைத்தாற் போல் ஆணியன் ஊத்தாப்பத்தை முடித்து விட்டு காரமடையில் நின்று தாகசாந்திக்காக அரசு கடையை தேடினால் 10 மணிக்கு முன் திறக்கமாட்டோம் என்றனர் அப்புறம் அங்குள்ள நண்பர்களை விசாரித்தால் 16 கிலோ மீட்டர் தான்டி வெள்ளியாங்காடு என்ற கிராமத்தில் அரசு கடை இருப்பாதாக தகவல் சொன்னார்கள்.

கடை திறக்கவில்லை என்ற கோபத்தில்

தாகசாந்தி கடைக்கு செல்லம் போது மணி 9.35 அங்கும் 10 மணிக்கு தான் திறப்போம் என்றனர் காலை கடை திறந்தால் நாம் தான் முதல் ஆள் என்று நினைத்தால் கடை திறந்ததும் வந்தது கூட்டம் சுமார் 20 பேருக்கு அப்புறம் தான் வாங்க முடிந்தது. வாங்கிய பின் பணியாளர் சொன்னார் பாருங்க ஒரு வரி.. சார் திரும்ப வரும்போது நிச்சயம் வாங்க உங்களுக்காக கூலிங் அதிகமாக போட்டுவைக்கிறேன் என்று (இந்த அன்பு இருப்பதால் தான் கூட்டம் அலைமோதுது போல).

வெள்ளியாங்காட்டில் இருந்து ஒரு 8 கிலோமீட்டர் சென்றதும் வலப்பக்கம் பில்லூர் செல்லம் வழி என்றார்கள் வழி எங்கும் விவசாய பூமி தான் ஆனால் நம்மாளுக அங்கியும் காட்டைத் துண்டாக்கி வீடு கட்ட லேஅவுட் போட்டு வைத்திருந்தார்கள் விசாரித்ததில் சென்ட் 80 ஆயிரமாம். வழி நெடுக மல்லிகைப் பூ தோட்டமும், செவ்வந்திப் பூ தோட்டமும், வறண்ட காடுகளும் நிறைந்து இருந்தன.

 செக்போஸ்ட்

முதல் செக் போஸ்ட்டில் வண்டியை நிறுத்தி வன அலுவலரிடம் பரளிக்காடு செல்ல வேண்டும் என்றதும் வாங்க வாங்க இப்பதான் எங்க அலுவலகர்கள் எல்லாம் சென்றார்கள் இன்று நாங்க மட்டும் தானா இல்ல வேற யாராவது புக் செய்திருக்கிறார்களா என்று விசாரித்ததும் இப்பதாங்க சார் ஒரு பேருந்து 4 போச்சு என்றார் பக்கத்தில் நின்றவர் ஒரே பொண்ணுங்க கூட்டமா இருந்துச்சுங்க என்றார் ( அட இத இதத்தாண்டா எதிர்பார்த்தோம்) ஆர்வக்கோளாறில் எங்க ஓட்டுநரை வேகமாக போங்க சார் என்று விரட்டினால் அவரும் விரட்டினார்.

 வனம்

வழி நெடுக தொலை தூரத்தில் உள்ள வீடுகள் என்று இயற்கையை ரசித்துக்க ரசிக்க ஆனந்தம் மனதில் வழியில் அத்திக்கடவில் நின்று தாகசந்தி அருந்திவிட்டு பரளிக்காடு புறப்பட்டோம். வழி நெடுக வாழைத்தோப்பும் அங்கு யாணை வராமல் இருக்க சோலார் பென்ஸ்ம் போட்டு இருந்தார்கள் ஒவ்வொரு வாழைத்தோப்பிற்கும் நடுபில் மரத்தின் மேல் வீடுகட்டு இருந்தார்கள் விசாரித்ததில் யாணை வந்தால் துறத்துவதற்காம். அடுத்த செக்போஸ்ட். அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பரளிக்காடு.

 பழையகால பாலம்

பரளிக்காட்டில் இறங்கியதும் வெறும் வண்ணமயம் எல்லா வகையாக பொண்ணுகளும் பசங்களுக்கு வழி விடாமல் இவர்களே ஆலமரத்தில் வனத்துறையினரால் கட்டப்பட்டிருந்த கயிறு தூரியில் ஆட்டம் பாட்டமாக இருந்தனர். அங்கு நண்பர்களுக்கு முன் ஒரு காதல் ஜோடி சக நண்பர்களுக்கு தெரியாமல் கண் அடித்து விளையாடியது எனக்கு பழைய நினைவுகள் ( அடுத்தவன் சந்தோசமாக இருந்தால் பிடிக்காதே)

இறங்கி சென்றதும் வனஅலுவலர் ஆண்டவர் எங்களை வாங்க வாங்க என அன்புடன் வரவேற்றார். மகளிர் சுயஉதவிக்குழுவினர் சுக்கு காபி கொடுத்தனர் கருப்பட்டியில் செய்ததாம் இதமாக இருந்தது. வன அலுவலர் சார் தற்போது அத்திக்கடவு கூட்டு குடிநீர் திட்டம் வேலை நடைபெற்றுக்கொண்டு இருப்பதால் தண்ணீர் தேக்கவில்லை அதனால் இரண்டு கிலோமீட்டர் தள்ளி நாம் பரிசல் சவாரி போகலாம் என்றார் சரி என்று அங்கே புறப்பட்டோம்.


பரிசல் சவாரிக்கு சென்றதும் அங்கு இளைஞர்கள் எங்களை வரவேற்று அனைவருக்கு பாதுகாப்பு கவசம் அணிவித்தனர். அதன் பின் 4 பேர் மட்டும் பரிசலில் ஏற்றினர் இந்த பரிசல் பைபரால் செய்யப்பட்டது அதன் வடிவமைப்பு நேர்த்தியாக இருந்தது. எங்களுக்கு பரிசல் ஓட்டியாக வந்தவர் ஆறுமுகம். நான் எந்த இடங்களுக்கு சென்றாலும் அதன் வரலாறு தெரிந்து கொள்ள ஆசைப்படுபவன் அதனால் அறுமுகத்தை விசாரித்தோம் பரளிக்காடு எப்படி சுற்றுலாத்தளம் ஆனது என்று காட்டுவாசி இளைஞர்கள் கூறியதாவது.

பரளிக்காடு ஒர் மலை கிராமம் இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் விவசாயம. இங்கு பில்லூர் அணை கட்டும் போது தான் தார் சாலை போடப்பட்டுள்ளது அதற்கு முன் வண்டி சாலை தான். காரமடையில் இருந்து வெள்ளியாங்காடு வழியாக வனத்துக்குள் சென்று நீலகிரி மாவட்டத்தின் அப்பர் பவானி, மஞ்சூர் செல்லலாம். பில்லூர் அணையின் உட்புறம்தான் பரளிக்காடு.

இங்கு வாழும் காட்டுவாசிகளுக்கு வன அலுவர்கள் தான் உதவி செய்பவர் குழந்தைகளின் படிப்பு முதல் மருத்துவம் வரை. இந்த வனப்பகுதியில் ரேஞ்சராக இருந்தவர் நாகராஜன், பாரஸ்டர் கிருஷ்ணசாமி, கன்ஸ்வெடடர் கண்ணன் இவர்கள் காரமடை வனப்பகுதியில் பணியாற்றும் போது மலைவாசிகளுக்கு பல வகையில் உதவி செய்தார்கள். இவர்கள் யோசனையில் இங்கு உள்ள அனையின் பின்புறத்தில் சுற்றுலாப்பயணிகளை பரிசல் சவாரி கூட்டி சென்றால் இங்குள்ள இளைஞர்களுக்கு வாழ்வாதாரமாக அமையும் என அப்போது மாவட்ட வன அதிகாரியாக இருந்த அன்வர்ஜான் என்பவரிடம் கூறிஉள்ளனர். அவரும் சரி என வன அதிகாரிகளிடமும், மின்வாரிய அதிகாரிகளிடமும் அனுமதி வாங்கி இவர்கள் கொஞ்சம் பணம் போட்டு தப்பையால் செய்யப்பட்ட பரிசல் 4 வாங்கி சுற்றுலாவாக துவக்கினார்கள்.

 பரளிக்காடு தூரி ஆடும் இடம்

4 வருடங்களுக்கு முன் துவக்கப்பட்ட இச்சுற்றுலா  மையத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு உணவு செய்து கொடுத்தால் மழைவாழ் பெண்களுக்கு வருமானம் கிடைக்கும் என்று கோவை அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரி உணவு பிரிவு மாணவிகள் மூலம் உணவு செய்யும் முறையை  அவர்களுக்கு கற்றுத்தர வனஅதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுத்தனர். அவர்களிடம் கற்ற இப்பெண்கள் சிறப்பான உணவை கொடுத்து வரும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. இப்பெண்களே காரமடை சென்று பொருட்கள் வாங்கி சமைத்து தருகின்றனர். இதற்கு கூலியாக ஒரு நபருக்கு 100 ரூபாயும் கொடுத்து வந்துள்ளனர் தற்போது அது 125ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.

பரிசலை ஓட்டும் இளைஞர்களுக்கு ஒரு நாள் கூலியாக ரூபாய் 200 தருகின்றனர் இதுபோக இதில் வரும் இலாபத் தொகை இங்கு குழந்தைகளுக்கு படிப்பு செலவிற்கு உபயோகப்படுத்துகின்றனராம். இங்கு பணியாற்றிய வன அலுவலர்கள் செய்த உதவியால் இப்போது நிறைய மாணவர்கள் படித்துவருகின்றனர். அடுத்து வந்த வனஅலுவலரான ஸ்ரீனிவாசம் நிறைய சுற்றுலாபயணிகளை இங்கு கூட்டிவந்ததில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. பரளிக்காட்டை சுற்றுலாத்தளம் ஆக்கியதால் இங்கு நிறைய குடும்பங்கள் வாழ்கின்றன.   எங்கள் குழந்தைகள் படிக்கின்றர் என்றனர் இளைஞர்கள் இவர்ளில் ஒருவர் பெயர் ஆளுமுகம்.

ஆறுமுகத்திடம் பேசிக்கொண்டே பரிசல் பயணம் இனிதாக நடந்தது. அடுத்து நாங்கள் பார்த்த விலங்குகள், வாங்கிய பழங்கள், மலைவாழ்மக்களின் உணவு,  தூரி ஆடுதல், இயற்கை காட்சி படங்கள், ஆற்றுக்குளியல் போன்றவற்றை தொடர்பதிவாக வருகிறது....

15 comments:

  1. நல்ல அனுபவத்தை அழகாக பகிர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. புதிய தகவல் தெரிந்துக் கொண்டேன்...

    ReplyDelete
  3. படங்களும் அருமை..
    அதற்க்கு தங்கள் தந்துள்ள துணுக்கு செய்திகளும் அருமை...

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. //காரமடையில் நின்று தாகசாந்திக்காக அரசு கடையை தேடினால் 10 மணிக்கு முன் திறக்கமாட்டோம் என்றனர்//

    இனிமேலாவது கு.மு.க-வுக்கு ஓட்டுப் போடுங்க! :-)

    நல்லா இருக்கு! ஆனால், திரும்பத் திரும்ப வந்ததென்னவோ "தாகசாந்தி’தான். :-))

    ReplyDelete
  6. கவர்மென்ட் ஆபீசுல நேரத்தை சரியா பின்பற்றாங்களோ இல்லையோ... இந்த அரசு கடையில் மட்டும் நேரம் மிக சரியாக பின்பற்றுகிறார்கள்.

    ReplyDelete
  7. அனுபவ பகிர்வு அருமையா சொல்லியிருக்கிங்க... அடுத்த பார்ட் மீ வெயிட்டிங்

    ReplyDelete
  8. சுற்றுலா சுகமாய்த் தொடங்கி இருக்கிறது. தொடருங்கள்... நாங்களும் உங்களுடனேயே வருகிறோம்...

    ReplyDelete
  9. அனுபவ பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  10. // காரமடையில் நின்று தாகசாந்திக்காக அரசு கடையை தேடினால் 10 மணிக்கு முன் திறக்கமாட்டோம் என்றனர்...//

    அட மக்கா,

    அதுவரைக்கும் கூட தாங்கமுடியலையா?
    (சாலையில வாகனங்கள் வருவதில்லை என் முடிவான பின்பு ‘தர்ணா’ போஸ் வேற.!)

    ReplyDelete
  11. //காட்டுவாசி//

    சங்கவி,

    இந்த சொல்லாடலை நீக்கிவிட்டு ‘மலைவாழ்’ என எழுதினால் நன்றாக இருக்குமே!

    ReplyDelete
  12. என்னை ஏன் கூப்பிடலை?

    சங்கவி - யோவ்.. கூட கூட்டிட்டுப்போக நீ என்ன ஃபிகரா?


    ஹி ஹி

    ReplyDelete
  13. மேட்டுபாளையதான்:- சே..இந்த இடத்தை எப்படி மிஸ் பண்ணினேன்!!!???

    வரிகளை வாசிக்கும் போதே - பார்க்கணும் என்று தோணுதே

    ReplyDelete
  14. பயணம் சிறப்பாக இருந்தது

    ReplyDelete