Thursday, July 7, 2011

அஞ்சறைப்பெட்டி 07.07.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்திப் பெற்ற பத்மநாப சுவாமி கோவிலையை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். இக்கோவிலில், பாதாள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்க, வைர, வெள்ளிப் பொருட்கள் குறித்து கணக்கெடுத்து இன்று வரை 5 லட்சம் கோடி மதிப்பு என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மதிப்பின் மூலம் உலகில் பணக்கார சுவாமி இதுவாகத்தான் இருக்கும். அந்த காலத்தில் இருந்த கோயில்களில் இந்த ஒரு கோயிலில் மட்டும் இத்தனை நகை என்றால் நமக்குத் தெரிந்த கஜினி முகம்மதுவும், ஆங்கிலேயர்களும் எத்தனை கொள்ளை அடித்திருப்பார்கள் அவை எல்லாம் முறையாக நம்மிடம் இருந்தால் இன்று நாம் நாட்டின் நிலையை நினைக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. என்ன செய்வது நம் நாட்டிற்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..

இந்த மாதிரி தமிழ்நாட்டில் ஒரு கோவில் இருந்து அதில் இத்தனை நகைகள் இருந்தால் நிலைமை என்னவாக இருக்கும்.


...............................................................................................

ஆந்திர அரசியலை கலக்குகிறது இப்போது தெலுங்கானா புயல் தெலுங்கான பகுதி எம்பி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் பிரதமரும், சோனியாவும் அவசர ஆலோசனை நடத்துகின்றனர்.


இதே போல் இரண்டு வருடங்களுக்கு முன் தமிழக எம்பி எம்ஏல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து இருந்தால் இலங்கையில் நிச்சயம் ஒரு இலட்சத்துக்கு அதிகமான தமிழகர்கள் இறந்திருக்க வாய்ப்பில்லை...

...............................................................................................

ஈவிகேஸ் இளங்கோவன் மீண்டும் தனது தாக்குதலை ஆரம்பித்து விட்டார் எப்பவும் இவர் ஆளும் வர்க்கத்தைத்தான் அதிகம் தாக்குவார் ஆனால் இந்த முறை இவர் கட்சியில் உள்ள முக்கிய கூட்டணிக்கட்சியை போட்டுத்தாக்குகிறார்.


........................................................................................................

சென்னை தீவுத்திடல் அருகேயுள்ள ராணுவக் குடியிருப்பு வளாகத்தில் சிறுவன் தில்ஷனை சுட்டுக் கொன்ற நபரை ராணுவம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பழம் பறிக்கப்போன சிறுவனை கொன்றது எல்லாம் என்ன சொல்ல...


........................................................................................................

பேஸ்புக் இணையத்தளத்துக்கு தடை விதித்துள்ள சீன அரசு, அந்த இணையத்தளத்தை விலைக்கு வாங்க முயற்சித்து வருவதாகத் தெரிகிறது.

சீன அரசின் முதலீட்டு அமைப்பான சீனா சாவ்ரீன் வெல்த் பண்ட், பேஸ்புக் இணையத்தளத்தின் முன்னாள் ஊழியர்களிடமிருந்து அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க முயற்சித்து வருகிறது.

பேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களிடமிருந்து பங்குகளை விலைக்கு வாங்கும் நிறுவனத்துடன் இது தொடர்பாக சீன நிதி அமைப்பு பேசி வருகிறது. மேலும் சிட்டி பேங்க் மூலமாகவும் 1.2 பில்லியன் மதிப்புள்ள பேஸ்புக் பங்குகளை வாங்க சீனா முயன்று வருவதாகத் தெரிகிறது.

அதிகபட்சமான பங்குகளை வாங்கி, அதன்மூலம் பேஸ்புக் இணையத்தளத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா முயல்வதாகத் தெரிகிறது.

சுமார் 700 மில்லியன் பயனீட்டார்களைக் கொண்ட பேஸ்புக் இணையத்தளம் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. எப்படியாவது சீனாவிலும் கால் பதிக்க பேஸ்புக் தீவிரமாக உள்ள நிலையில், அந்த நிறுவனத்தையே வாங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா தீவிரம் காட்டி வருகிறது.

பேஸ்புக்கை சீனா வாங்கத் திட்டமிட்டுள்ள செய்தி சீனர்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. தங்கள் வருத்தத்தை சில சீனர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் பிளாகுகளில் தெரிவித்து வருகின்றனர்.

........................................................................................................

அமெரிக்காவின் சாக்ரமென்டோ நகரில், அழுது கொண்டே இருந்த, பிறந்து 6 வாரமே ஆன தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் போட்டுக் கொலை செய்துள்ளார் அக்குழந்தையின் தாய்.

அவரது பெயர் கா யாங். 29 வயதாகும் இவருக்கு மிராபெல்லி தாவோ லோ என்ற பிறந்து 6 வாரமே ஆன பெண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் போட்டு கொடூரமாக கொலை செய்தார் கா யாங்.

தாய் என்ற சொல்லுக்கு தகுதியில்லாத பெண்...
நாட்டு நடப்பு

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தயாநிதி மாறன் இன்று பதவி விலகிவிட்டார்.


தகவல்

கடந்த 1980-ம் ஆண்டுகளில் இருந்து செல்போன்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செல்போன்களை அதிக அளவில் பேசுபவர்களுக்கு மூளை புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

இதற்கிடையே சமீபத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, சுவீடன் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இதுகுறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.   அதில் செல்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் அதில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சினால் மூளை புற்று நோய் ஏற்படாது. அதற்கான சாத்திய கூறுகள் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அறிமுக பதிவர்


இந்த வார அறிமுகப்பதிவர் என்னுள் நானே என்ற பெயரில் S.Deluckshana என்பவர் எழுதி வருகிறார். பல சமூக நோக்குடன் பல பதிவுகளையும், எதார்தமான பல பதிவுகளையும் பதிந்து வருகிறார்.
http://shanasiva.blogspot.com/



தத்துவம்

சளித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பை பார்க்கிறான்...

முடியாதது என்று எதுவுமில்லை ஆனால் எல்லாமே சுலபமாக முடிவதில்லை

15 comments:

  1. ஒரு பதிவில் இத்தனை தகவல்களா?

    ReplyDelete
  2. அறுசுவையுடன் அஞ்சறைப் பெட்டி மணம் வீசுகிறது..

    ReplyDelete
  3. முறையாக நம்மிடம் இருந்தால் இன்று நாம் நாட்டின் நிலையை நினைக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. என்ன செய்வது நம் நாட்டிற்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..//

    தத்துவம் அருமை.

    ReplyDelete
  4. இந்த மாதிரி தமிழ்நாட்டில் ஒரு கோவில் இருந்து அதில் இத்தனை நகைகள் இருந்தால் நிலைமை என்னவாக இருக்கும். // t\
    தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வீடும் ஒரு கோயில் மாதிரிதானே.ஏகப்பட்ட கோ(கே)டிகள் கிடைக்கும்.

    ReplyDelete
  5. சுவையான விருந்து சங்கவி.

    அந்த ’தாய்’...!!! எதையெதையோ சிந்திக்க வைக்கிறது.

    ReplyDelete
  6. அவள் தாயா இல்லை பேயா?

    ReplyDelete
  7. அஞ்சறைப்பெட்டி அருமை!

    இன்றைய தினத்தந்தி திருச்சி பதிப்பில் ஸ்ரீரங்கம் கோவிலிலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று ஒருவர் மனு போட்டிருப்பதாக ஒரு செய்தி!

    ReplyDelete
  8. அஞ்சறைபெட்டி அசத்தல் பெட்டி.

    ReplyDelete
  9. தாய் என்கிற வார்த்தைக்கே வலிக்கும் செய்தி.தத்துவம் எப்பவும்போல !

    ReplyDelete
  10. Kadaiya moodeettu pogalam.... Dinamani paper padikira madiri erukku...

    ReplyDelete
  11. வைட்டான பொட்டி மாப்ள!

    ReplyDelete
  12. superb..

    Thanks
    Suresh

    ReplyDelete
  13. சுவையான கலவை!

    நேரப்பளு..ஆகவே எல்லா நண்பர்களின் பதிவுகளையும் உடனே படிக்க முடியா நிலைமை.

    ReplyDelete