Tuesday, July 26, 2011

இயற்கை எழில் கொஞ்சும் கோவை "பரளிக்காடு " 2

 காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

 தோட்டத்தின் நடுவே மரத்தின் மேல் சிறுவீடு

பரிசல் சவாரி முடிந்ததும் உணவிற்கு ஒரு கிலோமீட்டர் தூரம் அழைத்து வந்தார்கள். உணவு தயாராகி விட்டது வந்து கொண்டு இருக்கிறது அதுவரை தூரி ஆடுங்கள் என்று ஆலமரத்தில் நீளமான கயிறு கட்டு கீழே பலகையில் கட்டப்ட்டு இருந்தது ரொம்ப நாளைக்கு அப்புறம் கயிறு தூரி. ஆடி மாத திருவிழாவின் போது வீட்டில் அருகில் உள்ள மரங்களில் கயிறு கட்டி விளையாடியது போன்று இருந்தது. சில்லென்று காற்றும் மிதமான வெய்யிலும் நல்ல சுகமான காலநிலையில் நன்றாக அனுபவித்து விளையாடினோம்.
 தூரியில் ஆட்டம்

கயிற்று கட்டிலும், சேர்களும் போட்டு இருந்தார்கள் அதில் ஆற அமர பேசிக்கொண்டு இருக்கும் போது உணவு வந்து விட்டது என்றார்கள். உணவு மழைவாழ் மக்களே பரிமாறினார்கள்  தட்டுக்களை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்றோம். உணவு  தட்டில் வெளியில் உள்ள உணவகங்களில் இருப்பது போல் இலைகளை அழகாக வெட்டி வைத்திருந்தனர்.
 சைவ உணவு

 களி உருண்டையும், நாட்டுக்கோழி குழம்பும்

உணவுகளில் கேசரி, சப்பாத்தி, குருமா, வெஜ்பிரியாணி, தயிர்பச்சடி, உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவை முதல் ரவுண்டில் கொடுத்தார்கள் அடுத்த களியும் களிக்கு நாட்டுக்கோழி குழம்பு மற்றும் கீரைக்குழம்பு பின் தயிர் சாப்பாடு கொடுத்தார்கள் அனைத்தும் எதிர்பார்க்காத வகையில் சுவையாக இருந்தது இவ் உணவை தயாரித்தவர்கள் மழைவாழ் சுயஉதவிக்குழு மகளிர் இவர்களுக்கு கோவை அவிநாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் உணவு தயாரிக்கும் விதத்தை பயிற்சி அளித்துள்ளனர்.

 மதிய உணவு

உணவு உண்ட பின் மழைவாழ் மக்களின் உதவியுடன் பலாப்பழம் 10 பழம் 150 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு  பவானி ஆற்றில் குளிக்கச்சென்றோம். ஆறு ஆழம் இல்லை ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தது நன்றாக இழுத்துச்செல்லும் அளவில் இருந்தது உடன் வனக்காவலர்கள் பாதுகாப்புக்காக இருந்தனர். ஒரு மணி நேரம் தண்ணீரில் ஆட்டம் போட்டோம் தண்ணீர் நல்ல குளுமையாக இருந்தது.

 ஆற்றில் ஆட்டம்

இனிமையாக இருந்தது பரளிக்காடு. இவ்விடம் ஒரு சுற்றுலாத்தளம் என்று கூற முடியாது ஒரு நாள் பொழுது போக்க அற்புதமான இடம். இந்த இடம் அதிக அளவில் வெளியில் தெரியாததால் கூட்டம் குறைவாக நன்றாக இயற்கையை ரசிக்க முடிகிறது. மொத்தத்தில் இனிமையான பயணமாக அமைந்தது இந்த பரளிக்காடு.

 ஆற்றில் ஆட்டம்

கண்ணுக்கு குளிர்ச்சியாக
எங்கள் பயணத்தில் எங்க Project Manager டேவிட் பறவைகளை புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வமிக்கவர் அவர் பரளிக்காட்டில் எடுத்த சில அற்புதமான புகைப்படங்கள் அடுத்த பதிவில்....

14 comments:

  1. உங்களுடன் கைகோர்த்துக் கொண்டு கூடவே வருகிற மாதிரியான பதிவு..
    பாராட்டுகள்.

    ReplyDelete
  2. பதிவின் சுவாரஸ்யத்தைவிட பசிதான் வருது சங்கவி !

    ReplyDelete
  3. இந்திய மண்ணுல கால வச்சா நானும் கட்டாயம் இங்க போவேன்

    ReplyDelete
  4. நல்ல ரசிக மனம் உங்களுக்கு இயற்கையை ரசிக்கவும் தனி மனம் வேண்டும் ::))))

    ReplyDelete
  5. இயற்கையின் மடியில் ஒரு நாள் !! இது போன்ற பயணங்கள் மனதை மிகவும் உற்சாகபடுத்தும்...!

    இனிமையாக பகிர்ந்த விதம் அருமை சதீஷ்

    ReplyDelete
  6. பயணங்கள் அருமை. தமிழ்மணம் ஏழாவது ஓட்டு மீ...

    ReplyDelete
  7. படங்களெல்லாம் ரொம்ப அழகாருக்கு..

    ReplyDelete
  8. படங்களெல்லாம் ரொம்ப அழகாருக்கு..

    ReplyDelete
  9. குளிர்ச்சியான புகைப்படங்கள்.
    பகிர்விற்கு நன்றி சதிஷ்.

    (என்னானு தெரியல.. என் பின்னூட்டம் மட்டும் பப்ளிஷ் ஆகவே மாட்டீங்கிது..??)

    ReplyDelete
  10. அசத்தலான புகைபடங்கள் மக்கா சூப்பர்...!!!!

    ReplyDelete
  11. அருமையான இடமாக இருக்கிறதே

    ReplyDelete