Tuesday, July 19, 2011

இயற்கை எழில் கொஞ்சும் கோவை "பரளிக்காடு " 1

தண்ணீர் குறைந்த பில்லூர் அணை
பரிசல் சவாரிக்கு செல்ல காட்டுக்குள் பயணம்

பரிசல் சவாரி

பரளிக்காட்டின்  மிக முக்கியமான நிகழ்வு பரிசல் சவாரி தான். சுக்கு காபி குடித்த பின் பரிசல் சவாரி போகலாம் என்று வனக்காவலர் கூறினார். எங்களுக்கு முன் வந்த மங்கையர் கூட்டம் எல்லாம் கயிரு தூரி ஆடிக்கொண்டிருந்தனர் மங்கையரையும் ரசித்து சுக்கு காபியையும் ரசித்து அருந்தினோம். காபியில் கருப்பட்டி கலந்து வைத்திருந்தார்கள் அருமையான சுவை நான் இரண்டு டம்ளர் குடித்தேன்.

அத்திக்கடவு கூட்டு குடிநீர்  இரண்டாவது திட்டம் வேலை நடைபெற்றுக் கொண்டு இருப்பதால் தற்போது அணையில் தண்ணீர் தேக்குவதில்லையாம் அதனால் பரிசல் சவாரிக்கு ஒரு கிலோமீட்டர் தள்ளி தான் செல்ல வேண்டும் அனைவரும் வாகனத்தில் ஏறுங்கள் உங்களுக்கு துணையாக வனக்காவலர் வருவார் என எங்களை வழி அனுப்பு வைத்தனர். செல்லும் வழியில் எல்லாம் வாழைத்தோட்டம் தோட்டத்திற்கு நடுவே மரத்தில் காவலுக்கு வீடுகட்டி இருந்தார்கள் அடுத்து பரளிக்காடு கிராமம் வந்தது.


மலைவாழ் மக்கள் கிராமம், ஒவ்வொரு வீட்டிலும் சோலார் சிஸ்டம்

இந்த கிராமத்தில் வாகனத்தை நிறுத்தி பரிசலுக்கு செல்லும் போது அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் மலைகிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தது இவர்கள் பயன்படுத்தும் மின்சாரம் சோலார் மின்சாரம் தானாம். தெருவிளக்கும் சோலார் விளக்கைத்தான் பயன்படுத்துகின்றனர். எல்லா வீட்டிலும் டிடிஎச் பொருத்தப்பட்டுள்ளது.

இங்குள்ள கிராமமக்களின் முக்கிய தொழில் விவசாம் ஆடு, மாடு வளர்த்தல், காடுகளில் விளையும் பழங்களை பறித்து ஊரில் உள்ள சந்தைகளில் விற்பது தான் இவர்கள் பிரதான தொழில். 

இவை அனைத்தையும் பார்த்துவிட்டு பரிசலுக்கு கூட்டிச்சென்றனர். அங்கு சென்றதும் கிராம இளைஞர்கள் எங்களுக்கு பாதுகாப்பு கவசம் அணிவித்து பரிசலுக்கு அழைத்துச்சென்றனர். பரிசல் பைபரால் செய்யப்பட்டு அழகான வண்ணத்தில் இருந்தது ஒவ்வொரு பரிசலுக்கும் நான்கு பேர் அனுமதி என்றனர். நாங்கள் நான்கு பேர் பரிசலில் ஏறியதும எங்கள் பரிசல்ஓட்டி இளைஞரை விசாரித்தோம் அவர் பெயர் ஆறுமுகம் என்றும் இங்கு பரிசல் சவாரி துவக்கியதில் இருந்து பரிசல் ஓட்டுகிறாராம் 5ம் வகுப்பு வரை படித்துள்ளேன் இதே அணையில் சிறுவயதில் இருந்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தேன் தற்போது வார இறுதி நாட்களில் பரிசலும் மற்ற நாட்களில் மீனும் பிடிப்பதாக கூறினார்.


பரிசல் சவாரிக்கு முன் பாதுகாப்பு கவசத்துடன்

பரிசல் பயணம் செல்லும் போது வானம் மேகமூட்டமாக சில்லென்று வீசய  குளு குளு காற்றுடன் சுற்றி உள்ள மலைகளை ரசித்துக்கொண்டே ஒரு மணி நேரம் சுற்றினோம் சுற்றும் போது அணை அருகில் உள்ள ஒரு கரையில் இறக்கிங்னோம் அங்கு கொண்டு சென்ற திண்பண்டங்களை எல்லாம் தின்று முடித்து விட்டு தண்ணீர் குடிக்க அணையில் உள்ள தண்ணீரை அள்ளி பருகினோம் தண்ணீரின் சுவை அருமையாக இருந்தது. சுத்தமான தண்ணீர் எனவும் மரத்தில் உள்ள இலைகள் எல்லாம் விழுந்ததால் இதை மூலிகை தண்ணீர் என்றும் கூறுகின்றனர்.




80 அடி ஆழ தண்ணீரில் இருந்து இயற்கை காட்சிகள்.

தண்ணீர் பார்ப்பத்ற்கு பச்சை பசேல் என்று காட்சியளித்தது கையில் அள்ளியதும் தெள்ளத்தெளிவாக இருக்கிறது. இந்த தண்ணீரை குடிக்கவே இன்னொரு முறை செல்லாம்.

எங்களை இறக்கிவிட்ட இடத்தில் ஒரு மணி நேரம் காற்றுப்பகுதியில் சுற்றினோம் பல பறவைகளின் சத்தம் கேட்டது இதற்கு ஒவ்வொரு சத்தத்தையும் விளக்கினார் எங்களுடன் வந்த ஆறுமுகம். பின் மீண்டும் ஒருமணி நேர பரிசல் பயணம் குளிர் காற்றுடன் சூரிய ஒளி இல்லாததால் அந்த இடத்தின் சீதோஷணநிலை ரொம்ப பிடித்திருந்தது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் படகை சுற்றியே இருந்தோம். (எந்த ஒரு சுற்றுலா மையத்துக்கு சென்றாலும் இவ்வளவு நேரம் படகில் செல்ல இயலாது என்று நினைக்கிறேன்)



பில்லூர் அணையின் உட்புற தோற்றம்

பரிசல் பயணம் முடிந்தது வரும்போது உணவு தாயாராகிவிட்டது ஆலமரத்து இடத்துக்கு சென்று இளைப்பாருங்கள் என்று அன்புக்கட்டளை இட்டார் வன அலுவலர். அப்போது அங்கு வந்த எங்கள் பரிசல் ஓட்டி ஆறுமுகத்திடம் பலாப்பழம் வேண்டும் என்றோம் நீங்க சாப்பிட்டு விட்டு வாங்க சார் உங்களை காட்டுக்குள் கூட்டி செல்கின்றேன் எந்த பழம் வேண்டுமோ அதை பறித்து தருகிறேன் அப்படியே காட்டுக்குள் செல்கின்றோம் என்று வன அலுவலரிடம் சொல்லிடுங்கள் என்றார்.

அருமையான மதிய உணவு, பாலாப்பழம் வாங்கியது, ஆற்றில் குளித்தது மற்றும் வனத்தில் எடுத்த பல பறவைகளின் புகைப்படங்கள் வரும் பதிவுகளில்...

இக்கட்டுரையின் முதல் தொகுப்பு இங்கே

இயற்கை எழில் கொஞ்சும் கோவை "பரளிக்காடு"

http://www.sangkavi.com/2011/07/blog-post_18.html

12 comments:

  1. நன்கு ரசித்திருப்பீர்கள் போலும் இயற்கை அன்னையின் எழில் மிகு காட்சிகளை வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நல்ல பயணக் கட்டுரை

    நிறைய தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
  3. சூப்பர் அனுபவம் பாஸ்... அண்மையில் தென்னிந்தியாவுக்கு வந்திருந்தேன்..ஆனால் இது போன்ற இடங்களுக்கு செல்ல வாய்ப்பிருக்கவில்லை

    ReplyDelete
  4. nice, we plan to go for the last 2 months, but time didnt set!

    ReplyDelete
  5. அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.
    போட்டோஸ் அருமை.

    ReplyDelete
  6. கண்ணுக்கு குளிர்ச்சியான புகைப்படங்கள்


    அழகான பயண கட்டுரை.. எல்லோரையும் போக தூண்டும்

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. அழகான எழில் மிகு காட்சிகளுடன் சவாரிபயணங்கள்...ஆமா ஒரு போட்டோவில் யாரோ யாரையோ தூக்கிக்கொண்டு போவதுபோல் படம் இருக்கிறதே அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே

    ReplyDelete
  9. அனுபவம் அருமை..... இன்னும் வருதா...பார்க்கிறேன்'

    ReplyDelete
  10. போட்டோஸ் எல்லாம் அருமை பங்காளி... ஒரு நாள் நம்ம குடும்பத்தோடு போவோம்..

    ReplyDelete
  11. நல்ல பயணக் கட்டுரை

    ReplyDelete