Thursday, July 28, 2011

அஞ்சறைப்பெட்டி 28.07.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
இப்போது ஊழல் பிரச்சனையில் சிக்கித் தவிப்பதில் அடுத்து சேர்ந்துள்ளவர் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. இவர் பதவிக்கு வந்த நாளில் இருந்து இன்று வரை இவருக்கு வந்துள்ள பிரச்சனைகளை தீர்ப்பதிலேயே எல்லா நாட்களும் சென்று விட்டது அநேகமாக அடுத்த பதிவிற்குள் அடுத்த பிரச்சனையை சந்திக்க நிறைய வாய்ப்பிருக்கிறது...

...............................................................................................

சமச்சீர் கல்வி விவகாரத்தில் இன்னும் முடிவு தெரிந்தபாடில்லை நீதிமன்றத்தில் மேல் முறையீடு போய்கிட்டே இருக்கு..

...............................................................................................

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசாவின் வாதத்தை கேட்கும் போது இதில் அவர் கூறியவர்களுக்கும் தெரிந்திருக்குமா, தெரிந்திருக்காதா ஒரே குழப்பமாக இருக்கிறது.


........................................................................................................

லண்டன் அருகே உள்ள யார்க்ஷைர் நகரில் வசிப்பவர் ஆல்பிரடோ மெரிகோ (43). இவரது மனைவி லிண்டா (40).  

இவர்களுக்கு 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 வயதில் ஒரு மகன் உள்ளான். மனைவி நடத்தையில் மெரிகோவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கணவரின் சித்ரவதை தாங்க முடியாமல் திருமணமான ஒரு வருடத்திலேயே லிண்டா கணவரை பிரிந்து அருகில் உள்ள டிரிப்பீல்டு என்னும் இடத்தில் குழந்தையுடன் தனியே வசித்து வந்தார்.

கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். சமரசத்தை ஏற்க மனைவி மறுத்ததால் அவரை கொடூரமாக கொலை செய்ய திட்டமிட்டார். இதற்கு முன்பு நடந்த கொலைகள் பற்றிய விவரங்களை இண்டர்நெட்டில் தேடினார்.

அதில் ஒருவரை கொல்வது எப்படி? என்ற தலைப்பில் 10 டாப் டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. எப்படி கொலை செய்யலாம், கொலைக்கு என்னென்ன வகையான தண்டனைகள் கிடைக்கும் என் பதையும் இன்டர்நெட் மூலம் அவர் தெரிந்து கொண்டார்.

பின்னர் கொலை திட்டத்துடன் மெரிகோ நேற்று முன்தினம் மனைவி வீட்டுக்கு வந்தார். 2 வயது குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்த லிண்டோவை மெரிகோ கத்தியால் சரமாரியாக குத்தினார். 100 முறை மாறி மாறி வெறியுடன் குத்தினார். இதில் லிண்டோ துடிதுடித்து செத்தார்.

பின்னர் உடலை தனது காரில் ஏற்றிக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசி விட்டார். போலீசார் விசாரணை நடத்தி மெரிகோவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி முன்பு மெரிகோ மேற்கண்ட தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்தார். 


........................................................................................................


பாமக திமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டோம் என்று அறிவித்திருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் தனியாக ஒரு அணி அமைத்து போட்டியிடப்போகிறார்களாம். 

எப்படியோ இப்பவாவது தோணுச்சே., இனி தெரியும் அவர்கள்  பலம் அவர்களுக்கு...

தகவல்


ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த கோடீசுவரர் ஹமாத். சமீபத்தில் அவர் அபுதாபி அருகே உள்ள அல்புடய்சி என்ற தீவை விலைக்கு வாங்கினார். அதில் தனது பெயரை 3 கி.மீட்டர் நீளத்துக்கு எழுதி வைத்தார்.

தனது பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் சுமார் 0.5 கி.மீட்டர் நீளத்துக்கு ஆங்கில எழுத்தில் பொறித்து தரையில் பதித்து வைத்துள்ளார்.   அந்த எழுத்துக்களை விண்ணில் பறந்தபடியே பார்க்க முடிகிறது. இந்த எழுத்துக்கள் “பேஷ்புக்” இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றை தண்ணீரால் அழிக்க முடியாதபடி எழுதப்பட்டுள்ளது.

சமீபத்தில், இவர் ரூ.12 கோடிக்கு உலகின் மிக விலை உயர்ந்த அதிநவீன காரை வாங்கினார். அபுதாபியில் இவருக்கு ஆட்டோமொபைல் மியூசியம் உள்ளது. அதில் கவர்ச்சிகரமான 200 வெளிநாட்டு கார்கள் உள்ளன. இவர் மிகப்பெரிய ஒரு லாரியை வடிவமைத்துள்ளார். அது அவரது மாளிகையை விட 64 மடங்கு பெரியது.


அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் ஓம் சிவாய நமக என்னும் பெயரில் குரு பால மாதேசு என்பவர் எழுதி வருகிறார். இவர் பதிவில் நிறைய கோயில்களைப்பற்றி பல அற்புதமான தகவல்களை அளித்துள்ளார்.

http://kavithaimathesu.blogspot.com/

 

தத்துவம்


சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாக கணிக்கப்படுகிறது.


உரலில் தலையை விட்ட பிறகு உலக்கைக்கு அஞ்சக்கூடாது.

 ........................................................................................................

அலுவலகத்தில் நிறைய வேலைப்பளு காரணமாக நண்பர்களின் பதிவையும் படிக்கவும் ஓட்டுப்போடவும் முடியவில்லை எழுதி வைத்த பதிவை மட்டும் தற்போதைக்கு பதிவிடுகிறேன். விரைவில் வேலைப்பளு குறைந்ததும் வருகிறேன். 

நன்றி...

12 comments:

  1. நல்ல மிக்ஸிங்.. தகவல் "பத்தி" சூப்பர்.. உடனே கூகுள்'ல போய் பார்த்தேன்.. பணத்தை எப்படியெல்லாம் செலவழிக்கறானுங்க..

    ReplyDelete
  2. என் ப்ளாக்கில் எழுதப்படும் பதிவுகள் கூகுள் ரீடரிலும் டாஷ்போர்டிலும் அப்டேட் ஆகவில்லை.
    என்ன செய்ய வேண்டுமென நண்பர்கள் ஆலோசனை கூறுங்களேன்.

    ReplyDelete
  3. வழக்கம் போல அஞ்சறைப் பெட்டி அசத்தல்.. தகவல் - சூப்பர் ..

    ReplyDelete
  4. அப்படி பாத்தா சுறுசுறுப்பை அவசரத்தனம்னு எடுத்துக்கணுமா... நாங்கெல்லாம் ஹெல்மெட் போட்டுகிட்டு உரல்ல தலைய கொடுப்போமில்ல.. பதிவு வழக்கம் போல் அருமை...

    ReplyDelete
  5. கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். சமரசத்தை ஏற்க மனைவி மறுத்ததால் அவரை கொடூரமாக கொலை செய்ய திட்டமிட்டார். இதற்கு முன்பு நடந்த கொலைகள் பற்றிய விவரங்களை இண்டர்நெட்டில் தேடினா


    அப்ப எவ்வளவு கஷ்ட பட்டாரோ !!!!!!

    ReplyDelete
  6. //சமீபத்தில், இவர் ரூ.12 கோடிக்கு உலகின் மிக விலை உயர்ந்த அதிநவீன காரை வாங்கினார். அபுதாபியில் இவருக்கு ஆட்டோமொபைல் மியூசியம் உள்ளது. அதில் கவர்ச்சிகரமான 200 வெளிநாட்டு கார்கள் உள்ளன. இவர் மிகப்பெரிய ஒரு லாரியை வடிவமைத்துள்ளார். அது அவரது மாளிகையை விட 64 மடங்கு பெரியது.//
    சுத்த பயித்தியக்காரத்தனம். I envy warren buffet, 3rd richest person in the world, who still lives in his 3 bedroom house he bought in 1950s..

    ReplyDelete
  7. அஞ்சறைப்பெட்டி அசத்தல்.

    ReplyDelete
  8. இந்தவார அஞ்சறைப்பெட்டியில் தங்களது பிளாக்கில் (28.7.11) எமது பிளாக்கை www.kavithaimathesu.blogspot.com அறிமுகம் செய்த உங்களுக்கு எம் மனமுவந்த நன்றிகள். உங்களுக்கும் எம்பெருமான் சிவ கடாட்சம் கிட்டும் என்பது திண்ணம். நட்புடன் குரு.பழ.மாதேசுஇந்தவார அஞ்சறைப்பெட்டியில் தங்களது பிளாக்கில் (28.7.11) எமது பிளாக்கை www.kavithaimathesu.blogspot.com அறிமுகம் செய்த உங்களுக்கு எம் மனமுவந்த நன்றிகள். உங்களுக்கும் எம்பெருமான் சிவ கடாட்சம் கிட்டும் என்பது திண்ணம். நட்புடன் குரு.பழ.மாதேசு

    ReplyDelete
  9. //சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாக கணிக்கப்படுகிறது.//


    அப்படினா சோம்பேறிகளும் பொறுமைசாலிகளும் ஒரே ரகத்தை சேர்ந்தவர்களா???
    (டவுட்டு..)

    ReplyDelete
  10. அஞ்சறைப் பெட்டியில் உள்ள விஷயங்கள் அத்தனையும் சூப்பர்! சந்தேகமே இல்லீங்ணா! ஆனா ஒரு குறை! தப்பா நினைச்சுக்கப்படாது. அஞ்சறைப் பெட்டிங்கிற தலைப்பு ரொம்பப் பழசா தெரியுது. ‘பேலட்’னு ஏதாச்சும் புதுசா வைக்கலாமே? :)

    ReplyDelete