Wednesday, July 20, 2011

அஞ்சறைப்பெட்டி 21.07.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

சமச்சீர் கல்வியினால் தற்போது யார் சந்தோசமாக இருக்கிறார்களோ இல்லியோ குழந்தைகள் மிக சந்தோசமாக உள்ளனர். கல்விமுறையை அமுல் படுத்தும் வரை எல்லாரும் சந்தோசமாக இருங்க...
...............................................................................................

நண்பனின் நண்பன் வீட்டுக்கு எதெச்சையாக சென்றேன் நண்பரின் மகன் 7 ம் வகுப்பு படிக்கிறேன் என்று சொல்லிவிட்டு  டைனிங் டேபிளில் படித்துக்கொண்டு இருந்தான், நண்பருடன் நலம் விசாரிப்பிற்கு பின் என்ன ஞாயிற்றுக்கிழமை கூட கொஞ்ச நேரம் விளையாடமல் படிக்கிறாய் என்றேன் சிரித்து விட்டு மீண்டும் படித்தான் என்னடா இது இன்னும் பள்ளியில் பாடம் நடத்தவே ஆரம்பிக்கவில்லை இவ்வளவு சின்சியராக படிக்கிறானே என்று பக்கத்தில் சென்றேன் அது காந்தியைப்பற்றிய ஆங்கில புத்தகம், பக்கத்தில் தமிழ் புத்தகமும் வைத்திருந்தான் ஆச்சரியத்துடன் நண்பரை விசாரித்தேன் .
எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இப்பதான் ஏற்பட்டது இநத் அருமையான பழக்கத்தை மகனுக்கு ஏற்படுத்தி தரவேண்டும் என்று கடந்த 1 வருடமாக அவனுக்கு மாதம் ஒரு புத்தகம் வாங்கித்தருகிறேன் தற்போது தலைவர்களைப்பற்றியான புத்தகங்கள் தான் வாங்கிக்கொடுத்தேன் நான் எப்போது புத்தகம் வாங்கினாலும் அதன் ஆங்கிலப்பதிப்பையும் வாங்கி விடுவேன் முதலில் படி படி என்றேன் தற்போது அவனே ஒவ்வொரு தலைவர் பேராக சொல்லி வாங்கித்தரச்சொல்கிறான் இப்புத்தகத்தை வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் படித்துவிடுகிறான் தற்போது பள்ளியில் பாடம் நடத்ததாததால் மாலையிலும் படிக்கிறான் என்றார். அற்புதமான விசயம் மிகவும் ஆச்சர்யப்பட்டேன் நாமும் இதை செய்வோமா என்ற யோசனை மனதில்....

அருமையான யோசனைக்கு நன்றி நண்பரே....

...............................................................................................

ஒவ்வொரு மாவட்டமாக கைது படலம் ஆரம்பமாகி உள்ளது. எங்க பார்த்தாலும் கோடிகளில் தான் பேசுகிறார்கள் புகார் தருகிறார்கள். 
தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும்.

........................................................................................................

கோவையில் நடக்க இருக்கின்ற திமுக செயற்குழு, பொதுக்குழுவிற்கு ஊரேங்கும் ப்ளக்ஸ் பேனர்களும், தோரணங்களும் களை கட்டுகிறது.

இதை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.


........................................................................................................

உள்ளாட்சித்தேர்தலில் மேயர்கள் நகரசபை தலைவர்கள் நேரடியாக தேர்வு செய்யும் திட்டம் வரவேற்கத்தக்கது. 10 கவுன்சிலர் சேர்ந்து தேர்ந்தேடுப்பவர்கள் கட்சி யாரை அறிவிக்கின்றதே அவர் தான் தலைவராக இருப்பார் இதை விட மக்களே தேர்ந்தெடுக்கும் உரிமை அருமை. 


........................................................................................................

சமீபத்தில் கோவை அருகே உள்ள பரளிக்காடு  என்ற கிராமத்துக்கு சென்று இருந்தேன் கோவைக்கு மிக அருகே ஒரு நாள் முழுக்க ரசிக்கும் மலைப்பகுதியாகும் இதைப்பற்றி எனது பதிவில் தொடராக பதிந்து வருகிறேன் இதற்கு நம் சகபதிவர்கள் பலர் அந்த இடமும் சொன்ன விதமும் அருமை நாங்கள் வந்தால் நிச்சயம் எங்களை அங்கே கூட்டிச்செல்லுங்கள் என்று தொலைபேசியிலும், மின் அஞ்சல் வழியாக கேட்டுக்கொண்டனர் நிச்சயம் வாங்க நண்பர்களே அழைத்து செல்கிறேன்.


எனது நண்பர் பறவைகளை புகைப்படம் எடுப்பதில் மிக்க ஆர்வமிக்கவர் அவரையும் அழைத்து சென்று இருந்தேன் அவர் எடுத்த பறவைகளின் புகைப்படங்கள் எல்லாம் அருமை அந்தப்படங்களை விரைவில் பதிவாக பதிய இருக்கிறேன் நிச்சயம் உங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும்.

நாட்டு நடப்பு
சமச்சீர் கல்வியின் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது பெற்றோர்கள் குழப்பத்திலும் மாணவர்கள் உற்சாகமாகவும் காணப்படுகின்றனர்.

தகவல்


உடலை குளிர வைக்கும் ஏர்கண்டிசன் சட்டையை ஐப்பான் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆபீசில், வீட்டில் ஏர்கண்டிசனில் இருந்தே பழக்கப்பட்டவர்கள் வெளியே வெயிலில் செல்லும்போது மிகவும் சிரமப்படுவர்.

வெயிலின் தாக்கம் அவர்களை கடுமையாக பாதிக்கும். அப்படிப்பட்ட நபர்களுக்கும், வெயிலில் நின்று வேலை செய்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக ஏர்கண்டிசன் சட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த குச்சோபுடு என்னும் அந்த நிறுவனம், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, ஏர்கண்டிசன் சட்டையை தயாரித்துள்ளது.

மழைக்கோட்டு போன்ற வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டையில் உள் பகுதியில் 2 மின்சார விசிறிகள் பொருத்தப்பட்டு இருக்கும். அவை உயர் சக்தி கொண்ட பேட்டரிகளுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த பேட்டரிகளை ஒரு முறை சார்ஜ் செய்தால் 11 மணி நேரம் தாக்குப்பிடிக்கும்,

பேட்டரிகள் மூலம் இயங்கும் மின்சார விசிறிகள் ஒரு நிமிடத்துக்கு 20 லிட்டர் காற்றை உற்பத்தி செய்து, சட்டையின் உள்பகுதி முழுவதும் பரவச் செய்கிறது. இந்த காற்று உடனக்குடன், சட்டையின் கழுத்துப் பகுதி மற்றும் கையின் மணிக்கட்டு வழியே வெளியேற்றப்படுகிறது. இதனால், உள்ளே சுழலும் காற்று, சூடாகாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது.

குளிர் தன்மை அப்படியே பராமரிக்கப்படுகிறது. இந்த சட்டையை அணிந்து கொண்டால், ஏர்கண்டிசனில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். தொடர்ந்து 11 மணி நேரம் பயன்படுத்த முடியும். மற்ற ஏர்கண்டிசனுடன் ஒப்பிடும்போது, இதை இயக்கச் செய்ய ஆகும் செலவு குறைவு. தனி நபர் ஏர்கண்டிசன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சட்டையின் விலை குறைந்த பட்சம் 87 பவுண்டுகள் ஆகும். இதை விட அதிகமான விலைக்கும் சட்டைகள் உள்ளன.

இந்த சட்டைக்கு ஜப்பானில் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, மேலும் பல நிறுவனங்கள் ஏர்கண்டிசன் சட்டை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் ஈரோடு தங்கதுரை இவரின் வலைப்பதிவின் பெயரும் இதுவே. பல தொழில் நுட்ப பதிவுகளை எளிமையாக எழுதி வருகிறார். மிகவும் பயன் உள்ள தகவலாக இருக்கிறது இவரது வலைப்பதிவு...

http://erodethangadurai.blogspot.com/


தத்துவம்

நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.

மனிதனுக்கு சரியான பொது அறிவு இல்லாமல் போகுமானால் எந்த அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறுகிறதோ அந்த அளவுக்கு அவன் துயரத்தையும் அனுபவிப்பான்.

15 comments:

  1. சமச்சீர் கல்வியினால் தற்போது யார் சந்தோசமாக இருக்கிறார்களோ இல்லியோ குழந்தைகள் மிக சந்தோசமாக உள்ளனர்.///

    ம்ம்
    சரி தான் !!!

    ReplyDelete
  2. எப்பவும்போல வாசனைதான்.
    தத்துவம்தான் மிகவும் பிடிக்கிறது !

    ReplyDelete
  3. // ஏர்கண்டிசன் சட்டை

    போன மாசமே நானும் ஒரு பதிவ போட்டுட்டேனே


    நம்ம ஊருக்கு ஏத்த சட்டை
    http://speedsays.blogspot.com/2011/07/blog-post.html

    ReplyDelete
  4. அனைத்தும் சுவாரஸ்யமான தகவல்கள்.
    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  5. எப்பவும் போல அஞ்சறைப் பெட்டி அருமை.

    ReplyDelete
  6. இதுவரை கேட்டிராத அருமையான தகவல்கள்.நன்றி.

    ReplyDelete
  7. வாசனையான பெட்டி..
    ஏ.சி சட்டையப்பத்தி என் பையருக்கு வாசிச்சுக்காமிச்சேன்.நம்மூரு காட்டன் சட்டையைவிடவா ஒசத்தி?..ன்னு கேக்கறார் :-)

    ReplyDelete
  8. வாசனையான பெட்டி..
    ஏ.சி சட்டையப்பத்தி என் பையருக்கு வாசிச்சுக்காமிச்சேன்.நம்மூரு காட்டன் சட்டையைவிடவா ஒசத்தி?..ன்னு கேக்கறார் :-)

    ReplyDelete
  9. சுவாரஸ்யமான தகவல்கள்...

    ReplyDelete
  10. பத்தாவது படிக்கும் பிள்ளைகளை பற்றி எண்ணி இருந்தால் இப்படி பதிவு போட்டிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்... திருவண்ணாமலை மாணவர்கள் ஒவ்வொரு பாடத்தையும் [எதன் அடிப்படையில் என்று முறையான தகவல் இல்லை] இனைய தளத்தில் இருந்து இறக்கி படித்து கொண்டிருக்கிறார்கள்...

    ReplyDelete
  11. மிதமான சூடு இன்று தகவல்கள் இருப்பினும் சுவை குறையவில்லை...

    ReplyDelete