Sunday, April 26, 2015

பயணமும், சுவையும்..

ஞாயிறு காலை அவரசமாக ஆந்தியூர் செல்ல வேண்டி இருந்ததால் இருக்கின்ற வேலை எல்லாம் விட்டுபுட்டு ஊருக்கு புறப்பட்டேன்.. எப்பவும் போல பெருமாநால்லுர் வழியாக சென்றேன். பெருமாநல்லுர் வரை மண்டை காய்ச்சல் தான் புதிய நான்கு வழிச்சாலை என்பதால் வழி எங்கும் ஒதுங்கி நிற்க ஒரு மரத்தையும் காணவில்லை. இந்த சாலை போட்டு முடித்ததற்கு பின் சாலை இரு பக்கத்திலும் உள்ள மிச்ச சொச்ச இடத்தில் மரத்தை நட்டு வைத்தால் புண்ணியமாக போகும்.
 
பவானி போய் அந்தியூர் போலம் என்றால் விசயமங்கலத்தில் டோல்கேட்டில்  50 ரூபாயை புடுங்கி விடுவார்கள் என்பதால் குன்னத்தூர், கோபி வழிய சென்று விடுவேன். எப்பவும் சாமக்கோழி போல ராத்திரியில் சென்றவனுக்கு பகலில் சென்றது ஓர் இன்ப அதிர்ச்சி தான்.
 
குன்னத்தூரில் தொடங்கி கோபி வரை வழி எங்கும் சாலையோர கடைகள். இரு பக்கமும் எதுவும் விளையாத காடுகள், சாலை இருபக்கமும் புளியமரம், இதை விட முக்கியம் அந்த சாலை நேர்த்தியாக போடப்பட்டு இருந்தது. முந்தைய நாள் பெய்த மலைக்கு மண்வாசத்தோடு இருந்தது அந்த சாலை. சாலையா நமக்கு முக்கியம் சாலையோரம் இருந்த கடைகள் தானய்யா முக்கியம்.
 

 
முதலில் நொங்கு கடையில் வண்டியை ஓரம் கட்டி, ஒரு ரவுண்டு கட்டினோம். அதுவும் நொங்கை சீவி அதில் இருக்கும் 3 கண்களை பாத்ததும் வாயில் வாட்டர்பால்ஸ் கொட்டியது. சீவிய நொங்கை வாங்கி பெருவிரலை உள்ளே விட்டு நோண்டி தண்ணீரை குடித்துவிட்டு, அந்த கண்களை பெருவிரல் பதம் பார்க்க நாக்கு நொங்கின் ருசியில் மதிமயங்கி தாண்டவமாடியது. நொங்கின் விலை மிக குறைவு தான் ஆனால் சுவைதான் அருமை.. அந்த சாலையின் செல்பவர்கள் மறக்காம நொங்கு சாப்பிடுங்க..
 
நொங்கை சாப்பிட்டு முடித்து விட்டு அடுத்து பயணத்தை துவக்கினால் கம்மங்கூழ் வா வா என்று வழி எங்கும் அழைக்கிறது. ஒரு பத்து கிலோ மீட்டருக்கு அப்பால் வண்டியை புளிய மரத்தடியில் ஓரங்கட்டினால், கம்மங்கூல் மற்றும் கரும்புச்சாறு கடைகள் இருந்தன.
 
எதை சாப்பிடுவது எதை விடுவது என்று தெரியாமல் அப்போதைக்கு கம்மங்கூழ் சாப்பிட்டோம். கம்மங்கூழ் வீட்டில் இருப்பது போல தயிர் சேர்த்து நன்றாக கரைத்து வைத்திருந்தனர் கூட கொஞ்சம் வெங்காயத்தை போட்டு கொடுத்தார். தொட்டுக்க நிறைய சைடிஸ் இருந்தாலும் நான் சாப்பிட்டது பச்சை மிளகாய் தான். ஒரு மிளகாய் ஒரு வாய் கம்மங்கூழ், காரமும் கூழும் உள்ளே போக போக வயிறு கின்னுன்னு ஆனது.
 
வயிறு கின்னுன்னு ஆனா சும்ம விட முடியுமா அதை போக்க எதவாது குடிக்க வேண்டும் என்று தோன்றியது கோபி, குன்னத்தூர், கொளப்பலுர் ஏரியாவில் கிடைக்கும் ஒயிட்ரோஸ் ஞாபகத்துக்கு வந்தது. அந்த ஏரியாவின் தண்ணீருக்கு சுவை அதிகம் அதுவும் கேஸ் கூட சேர்ந்ததால், கோலிசோடவில் ஒயிட்ரோஸ் வைத்திருந்தனர். ஒயிட்ரோஸ் நிரம்பி இருந்த வயிரை ஜீரணமாக்கியது.
 
அப்புறம் எங்கேயும் நிற்காமல் ஊர் செல்ல வேண்டும் என்று சென்று கொண்டு இருந்தோம். கோபி தாண்டி அத்தாணி செல்லும் சாலையில் வலைந்து நெளிந்து செல்ல வழி எங்கும் அப்போது பறித்த வெள்ளரி பிஞ்சுகளும், வெள்ளரி பழமும். வெள்ளரி பிஞ்சு அடிக்கடி சாப்பிடுவேன். பழம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆனதால் என் நாவின் கட்டுப்பாட்டில் நின்றது வண்டி. ஒரு வெள்ளரி பழம் 25 ரூபாய்க்கு வாங்கினேன். எப்படியும் 4 கிலோ வரும். வெள்ளரி பழம் வாங்கி செல்கையிலே வெள்ளரிபழத்தின் மனதோடு என் நாசி ஒன்ற, கூடவே நாக்கும் சேர்ந்து கொண்டது.
 

வீட்டுக்கு சென்றதும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து வெள்ளரி பழத்தை ஒரு பிரட்டு பிரட்டி சாப்பிட வேண்டும், இல்லையேல் வெள்ளரி பழத்தோடு நாட்டுச்சக்கரை சேர்த்த பழரசம் சாப்பிடவேண்டும் என்ற கற்பனையோடவே சென்று விட்டேன் ஊருக்கு.. சென்றதும் வெள்ளரிபழத்தோடு நாக்கு சண்டையிட்டு தோல்வி அடைந்திருந்தது.
 
இரவு ஊருக்கு கிளம்பி வந்ததால் பகல் எங்கும் பட்டைய கிளப்பிய சாலையோர கடைகள் எல்லாம் உறங்கி இருந்தன.
 
அந்த சாலையில் பயணிக்கும் போது மறக்காமல், நேரத்தை பற்றி கவலை இல்லாமல் நாக்கை கொஞ்சம் தாண்வமாடவிடுங்கள்...

8 comments:

  1. வணக்கம் நண்பா, நீ தான் என்னை மறந்துட்டே என் கடைப்பக்கம் கூட வாரதில்லை. முட்டைபூரி பதிவில் பறிமாரினான் என்பது பரிமாறினான் என்றிருக்க வேண்டும். அடுத்த முறை நுங்கு சாப்பிடறச்சே இத்தை நினைத்துக் கொள் நண்பா.......

    ReplyDelete
  2. //வெள்ளரிபழத்தோடு நாக்கு சண்டையிட்டு தோல்வி அடைந்திருந்தது.//

    நகைச்சுவையில் மட்டுமல்ல உரைநடையிலும் கலக்குறீங்க அய்யா.

    அரவிந்த்ராமலிங்கம்

    ReplyDelete
  3. வயதானவன் தானே என்று இளக்காரத்தில் என்பதிவில் வந்து வாந்தி பேதி வருண் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு எழுதினால் தெரியாது போய்விடாது தம்பி. எனக்கும் முட்டை பூரி பதிவில் நீ செய்த தமிழ் பிழை நினைவில் இருக்கிறது இன்றும். ”ர”க்கு ற -வும் ”ற”க்கும் ர இன்று வரை அதற்கு வருந்தவில்லையே நீ.

    ReplyDelete
  4. அனானி ஆப்ஷன் எடுத்திட்டேன் தம்பி இனி வாந்தி பேதி எல்லாம் கிடையாது

    ReplyDelete
  5. என்ற சைட்டில் மட்டும் இத்தனை பின்னூட்டம் போட்டியே தம்பீ இப்ப ஏன் என் பின்னூட்டங்களை வெளியிட மாட்டேங்கிற. நாங்க பண்பட்டவங்க தம்பீ... பண்பட்டவங்க...

    ReplyDelete
  6. என்ன கண்ணு புதுசா பதிவு எதையும் கானோங்களே! அவ்ளோ பிசி ஆயிட்டீங்களா ?

    ReplyDelete
  7. உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி!

    ReplyDelete