Thursday, October 28, 2010

கதை... விடுகதை...1


விடுகதை போடுவதும் அதற்கு பதில் சொல்வதும் சுவாரஸ்யமான விசயம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.. ஏற்கனவே நிறைய விடுகதைகளுடன் கூடிய பதிவை போட்டுள்ளேன் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

ஒவ்வொரு முறையும் விடுகதை சொல்லும் போது அதற்கான பதிலை முதலில் சொல்வோம் அது சரியாக இருந்தால் அந்த சந்தோசம் தனி...

இந்த முறை நிறைய விடுகதைகள் சொல்லப் போறேன் யார் அனைத்து விடுகதைக்கும் பதில் சொல்கிறார்களோ அவர்களுக்கு ஓர் இனிய தீபாவளி பரிசு...

1. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல,  உருண்டோடி வரும்
பந்தும் அல்ல அது என்ன?

2. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?

3.ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?

4. செக்க செவந்த அழகி  நீ கோபத்துக்கு பேர் போனவலடி!!!  யார் நீ?

5. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?

6. வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம் அவன் யார்?

7. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

8. அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண் கலங்கும் அது என்ன?

9. தொடலாம் ஆனால் பிடிக்க முடியாது அது என்ன?

10. குதிரை ஓட ஓட வால் குறையும் அது என்ன?

11. பூக்கும், காய்க்கும், வெடிக்கும் ஆனால் பழுக்க மட்டும் செய்யாது அது என்ன?

12. நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலை  யைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?

13. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான்  அவன் யார்?

14. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானம் அவன் யார்

15. வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன?

16. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?

17. தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன?

18. தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்?

19. கல்லில் காய்க்கும்பூ தண்ணீரில் மலரும்பூ, அது என்ன பூ?

20. எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?

15 comments:

  1. பாதிக்கும் மேல விடை தெரியும்... விடையை போடனுமா பங்காளி...?

    பிரபாகர்...

    ReplyDelete
  2. தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நாடு நிலையை வெளியிடும் வரை ஆதரவு தாரீர் ...அந்நியன்

    ReplyDelete
  3. இப்படியெல்லாம் கேள்வி கேட்டா இந்தப் பக்கமே நாங்க வரமாட்டோம். ஆமா சொல்லிட்டேன்.
    சரி வந்தது வந்தாச்சு. ஏதாவது ஒரு கேள்விக்காவது பதில் தெரியுதானு பாக்கலாம்.

    //மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானம் அவன் யார்??//

    சிலந்தி தானே??

    ReplyDelete
  4. 1.
    2. கண் இமை
    3. தேன்கூடு
    4. கோவைப்பழம்
    5.
    6. கருப்பட்டி
    7.
    8. வெங்காயம்
    9. தண்ணீர்
    10.
    11. இலவம்பஞ்சு
    12. ரோபோ :-)
    13. தென்னை
    14. சிலந்தி
    15.
    16.
    17.
    18. பனங்காய்
    19. பூஞ்சை
    20. எட்டுகால் பூச்சி

    ReplyDelete
  5. 2.கண்
    3.தேன்கூடு
    4.காய்ந்த மிளகாய்
    6.மேகம்
    11.பருத்தி
    14.சிலந்தி

    ReplyDelete
  6. 2. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?

    கண் இமை

    3.ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?

    தேன்கூடு

    4. செக்க செவந்த அழகி நீ கோபத்துக்கு பேர் போனவலடி!!! யார் நீ?

    மிளகாய்ப்பழம்

    9. தொடலாம் ஆனால் பிடிக்க முடியாது அது என்ன?

    நிழல்


    11. பூக்கும், காய்க்கும், வெடிக்கும் ஆனால் பழுக்க மட்டும் செய்யாது அது என்ன?

    பருத்திச்செடியின் காய்

    13. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான் அவன் யார்?

    தென்னை மரம்

    14. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானம் அவன் யார்

    சிலந்தி

    ReplyDelete
  7. நல்ல பதிவு தான் தொடருங்கள். நன்றாக சிந்திக்க வைக்கிறது.

    1. கடல்
    2. கண் இமை அல்லது வாய்
    3. தேன்கூடு
    4. சிவப்பு மிளகாய்
    5. சைக்கிள்
    6. மழை மேகம்
    7. வெடி மத்தாப்பு
    8. வெங்காயம்
    9. தண்ணீர்
    10. ஊசி நூல்
    11. இலவம்பஞ்சு
    12. பென்சில்
    13. தென்னை மரம்
    14. சிலந்தி
    15. அகப்பை
    16. பாய்
    17. முதுகு
    18. பனம்பழம்
    19. சுண்ணாம்பு
    20. நண்டு

    கூடுமான வரை முயற்சி செய்து இருக்கிறேன். தீபாவளி பரிசு நிச்சயம் வர வேண்டும் .

    ReplyDelete
  8. எது விடுகதையா..!!!! நான் வரல இந்த விளையாட்டுக்கு..

    ReplyDelete
  9. நண்பா,

    நம்ம அறிவுக்கு 4 , 5 தான் எட்டுச்சி. அத எழுதினாலும் பரிசு கெடைக்காதே. அதான் விட்டுட்டேன்.

    ReplyDelete
  10. விடை சொன்னதுக்கு அப்புறமா வரேன் ..!

    ReplyDelete
  11. அந்தக்காலத்து அருமையான விளையாட்டு , நன்றாக உள்ளது விளையாடுங்கள் ....(கொஞ்சம் விடைகள் தெரியும் )

    ReplyDelete
  12. ada,அட,அந்தளவுக்கு அறிவு இருந்தா நாங்க ஏன் இப்படி இருக்கோம்?கிரிதான் சூப்ப்ர்

    ReplyDelete
  13. விடுங்க கதையை! அடுத்த பதிவில் விடை வரும்ல....

    ReplyDelete
  14. உங்களுக்குத்தான் குழப்பத்தெரியுமா?
    நாங்களும் குழப்புவோம்ல!

    கண்ணுண்டு வாயுண்டு சிந்திக்கும்
    மூளையுண்டு அந்த உயிர்க்குத்
    தலைமட்டும் இல்லை!

    ReplyDelete
  15. விடுகதையை ரசித்தவர்களுக்கும் அதற்கு பதில் சொன்ன அனைவருகுகும் என் நன்றிகள்...

    1. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி வரும்

    பந்தும் அல்ல அது என்ன? கடல்


    2. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன? (கண் இமை)


    3. ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம். அது என்ன ( தேன் கூடு)


    4. செக்க செவந்த அழகி நீ கோபத்துக்கு பேர் போனவலடி!!! யார் நீ? (மிளகாய்)


    5. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன? (சைக்கிள்)


    6. வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம் அவன் யார்? (மழை மேகம்)


    7. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? (பட்டாசு)


    8. அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண் கலங்கும் அது என்ன? (வெங்காயம்)


    9. தொடலாம் ஆனால் பிடிக்க முடியாது அது என்ன? (தண்ணீர்)


    10. குதிரை ஓட ஓட வால் குறையும் அது என்ன (ஊசி நூல்)


    11. பூக்கும், காய்க்கும், வெடிக்கும் ஆனால் பழுக்க மட்டும் செய்யாது அது என்ன (இலவம் பஞ்சு)


    12. நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலை யைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்? (பென்சில்)


    13. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான் அவன் யார்? (தென்னை மரம்)


    14. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானம் அவன் யார் (எட்டுக்கால் பூச்சி)


    15. வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன? (அகப்பை)


    16. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன? (பாய்)


    17. தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன? (முதுகு)


    18. தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்? (பனம்பழம்)


    19. கல்லில் காய்க்கும்பூ தண்ணீரில் மலரும்பூ, அது என்ன பூ? (சுண்ணாம்பு)


    20. எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன? (நண்டு)

    ReplyDelete