Monday, October 25, 2010

எப்பொழுதும் தேவை ஆசை


ஆசை இல்லாதவன் இன்று மனிதனாக இருக்க முடியாது அனைவருக்கும் ஆசை உண்டு. புத்தர் சொன்னார் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று  கூறி நாம் ஆசைப்படக்கூடாது என்று  அவர் ஆசைப்பட்டார். ஆசையால் தான் ஒவ்வொருவருடைய முன்னேற்றமும் இன்று வெற்றியுடன் செல்கிறது. சிறுவயதில் இருந்தே ஒவ்வொருவக்கும ஆசை ஆரம்பமாகிறது. ஒருவடைய துன்பத்திற்கும், சந்தோசத்திற்கும் ஆசையே காரணம். அதிக ஆசையால் அழிந்தவர்களும் உண்டு. நம் ஆசையை நாம் எவ்வாறு நிறைவேற்றுகிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது.

நடந்து செல்பவனுக்கு சைக்கிளில் செல்ல ஆசை
சைக்கிளில் செல்பனுக்கு பைக்கிள் செல்ல ஆசை
பைக்கில் செல்பனுக்கு காரில் செல்ல ஆசை
காரில் செல்பவனுக்கு உயர் ரக காரில் செல்ல ஆசை


மனிதன் வாழ்நாள் முழுவதும் ஆசையால் தான் நடந்து கொண்டு இருக்கிறது. அவர் அவர் தகுதிக்கேற்ப ஆசை இருந்தால் அது நிறைவேறும் போது அடுத்த ஆசைக்கு மனம் செல்கிறது. தான் ஆசைப்பட்டது நடக்கும் போது இருக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இருக்காது அது அனுபவிக்கும் போது தான் அந்த இன்பவலி தெரியும்.

ஆசையைப்பற்றி  பேராசை பெரு நட்டம் என்றொரு பழமொழி உண்டு. ஒருவன் ஆசைப்படலாம் ஆனால் அவன் தகுதியும் திறமையும் பொறுத்து. ஒருவன் படிக்கும் போது அவன் அப்பா அவனை கூலி வேலை செய்து படிக்க வைத்திருப்பார் அப்பொழுது அவன் ஆகாய விமானத்தில் பறக்க ஆசைப்படலாம் அப்பொழுது அவனுக்கு பொருளாதார வசதி இருப்பதற்கு வாய்ப்பு குறைவு ஆனால் பிற்காலத்தில் அவன் படித்து பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததற்கு பின் அவனது தகுதியையும் திறமையையும் வைத்து முன்னேறிக்கொண்டு இருக்கும் போது அது சாத்தியாகிறது. அன்று அவன் ஆசைப்பட்டதால்  சாத்தியம்.

என் சிறுவயதில் என்னைப்படிக்க வைக்கும் போது என் பெற்றோர் என் மகன் படித்து பெரிய அதிகாரி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டனர் அது நடக்கல. ஆனால் நான் ஆசைப்பட்டது எப்பவும் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு ஆட்டம் போட்டுக் கொண்டு இருப்போம் ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் நீ வருங்காலத்தில் என்ன ஆகப்போற என்ன படிக்கப்போற என்று கேட்டார் எனக்கு அவரைப் பிடிக்காது எப்ப பார்த்தாலும் என்ன அடிச்சிகிட்டே இருப்பார் (இது அவர் ஆசையா இருக்கலாம்) அப்ப என் வரிசை வரும் போது நான் அரசியல்வாதியாக ஆசைப்படுகிறேன் என்று சொன்னேன் அந்த ஆசை நிறைவேறவில்லை ஆனால் அந்த ஆசிரியர் அன்றில் இருந்து என்னை அடிப்பதை குறைத்துக் கொண்டார்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை நிச்சயம் இருக்கும் அந்த ஆசை நிறைபேருக்கு நிறைவேறி இருக்கலாம் நிறைவேறாமலம் இருக்கலாம் எனது சிறுவயது முதல் நான் ஆசைப்பட்டது நிறைய எனக்கு கிடைத்திருக்கிறது நிறைய கிடைக்காமல் போய் இருக்கிறது. கிடைக்காமல் போனதை பற்றி கவலைப்படாமல் கிடைத்ததை வைது சந்தோசப்பட்டேன் இப்பொழுது இன்னும் நிறைய ஆசைகளை சுமந்து கொண்டு அது நிறைவேற உழைத்துக்கொண்டு இருக்கிறேன் ஆசைகள் நிறைவேறும் என்று..

என்னைப்பொறுத்த வரை அனைவரும் ஆசைப்பட வேண்டும் அந்த ஆசை சிறுவயது முதல் இருக்க வேண்டும் அப்போது தான் வெற்றி என்னும் கனியை எளிதாக பறிக்க முடியும்.

அனைவரும் ஆசைப்படுங்கள்

முயற்சி செய்யுங்கள்

வெற்றி நமக்கே....

14 comments:

  1. / அந்த ஆசிரியர் அன்றில் இருந்து என்னை அடிப்பதை குறைத்துக் கொண்டார். /

    எப்படி எல்லாம் மிரட்டுகிறீங்க..

    ReplyDelete
  2. "அத்தனைக்கும் ஆசைப்படுவோம், கிடைத்தால் சந்தோஷம், கிடைக்கவில்லையெனில் இன்னும் முயற்சிப்போம்”. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    வெங்கட் நாகராஜ்
    புது தில்லி
    www.venkatnagaraj.blogspot.com

    ReplyDelete
  3. எனக்கு ஐஸ்வர்யாராயை முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசை ...அது நிராசை யாகிவிட்டது

    ReplyDelete
  4. நல்ல இருக்கு கலக்கிறிங்க

    ReplyDelete
  5. கண்டிப்பாக ஆசைகள் இல்லாத வாழ்க்கை அரை வாழ்க்கையாகத்தான் இருக்கும்...

    ஆசைப்படு அளவோடு...

    ReplyDelete
  6. சதீஷ் எனக்கும் நீண்ட நாளைக்கு பிறகு உங்க வலைப்பக்கம் வந்ததால் பின்னூட்டமிடும் ஆசை வந்தது:)

    ReplyDelete
  7. நன்று.

    வெற்றி நமக்கே!.

    ReplyDelete
  8. பேராசை தவிர்த்து ஆசை தேவையே..

    ReplyDelete
  9. அளவான ஆசை என்றுமே தப்பில்லை

    ReplyDelete
  10. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்..

    ReplyDelete
  11. மனிதன் வாழ்நாள் முழுவதும் ஆசையால் தான் நடந்து கொண்டு இருக்கிறது. அவர் அவர் தகுதிக்கேற்ப ஆசை இருந்தால் அது நிறைவேறும் போது அடுத்த ஆசைக்கு மனம் செல்கிறது.

    en manadhaikkavarwdha varikaLஎன் மனதைக்கவர்ந்த வரிஅக்ள்

    ReplyDelete
  12. சிறு வயதில், பதிவர் ஆகணும் என்று ஆசைப்பட்டீர்களா? அருமையாக வெற்றி பெற்று விட்டீர்களே! வாழ்த்துக்கள்! :-)

    ReplyDelete
  13. all the best for become politician...

    ReplyDelete