Sunday, October 17, 2010

இணையத்தால் இளைஞர்கள் கெட்டுப்போகிறார்களா?


இன்றும் உலகம் உங்கள் கையில காரணம் வீட்டில் உட்கார்ந்து பொட்டியைத்தட்டினால் என்ன தகவல் வேண்டுமோ அனைத்தும் உங்கள் முன் இதற்கு காரணம் வலைத்தளங்கள் விஞ்ஞான வளர்ச்சி.

இன்று கணினியைத் தெரியாதவர்கள் விரல் விட்டு எண்ணி விடலாம் அந்த அளவிற்கு கணினி மோகம் இது வளர்ச்சியை உணர்த்துகிறது. முக்கியமாக தமிழில் நிறைய வலைப்பூக்கள், புதிய புதிய வலைத்தளங்கள் இவற்றின் வளர்ச்சி கணக்கில் அடங்கா.

இன்று நிறைய பேர் கணினியில் உலா வரும் போது ஆபாசமான வார்த்தைகள் வருகின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர் இது சரியா? தவறா? என்று பார்த்தால் சரி என்றும் கூற முடியாது தவறு என்றும் கூற முடியாது. இதை தவறு என்று சொல்பவர்களிடம் முதல் கேள்வி செக்ஸ் என்பது தவறான விசயமா? இதற்கு அனைவரும் பதில் சொல்ல முடியாது நிறைய பேர் கருத்து தவறாக இருக்கலாம் சரி என்றும் இருக்கலாம்.

அனைவரும் அன்னப்பறவை போல் இருங்கள் இணையத்தில் உலாவரும் போது உங்களுக்கு தவறான வார்த்தைகள் வருகின்றன என்றால் உங்களுக்கு அது தேவை இல்லை என்றால் அடுத்த எழுத்துக்குப் போங்க இத விட்டு விட்டு இன்றைய இளைய தலைமுறையினரை பாதிக்கும் என்று கருத்து வேறு. எதோ இவர்கள் தான் இளைஞர்களின் வழிகாட்டி போல்.



இன்றைய இளைய தலைமுறையினர் விவரமாகத்தான் இருக்கின்றனர் முன்பெல்லாம் கல்லூரி மாணவர்கள் சண்டை, சாலை மறியல் என்று வாரத்திற்கு 4 செய்தகளாவது வரும் ஆனால் இன்று மிகவும் குைறைந்து விட்டது. இப்போதைய மாணவர்கள் எல்லாம் விவரமாக இருக்கிறார்கள் கல்லூரியில் சேரும் போது கேட்கும் கேள்வி இங்கு கேம்பஸ் இன்டர்வியூ இருக்கா இல்லையா என்பது தான் முதல் கேள்வி வந்து கல்லூரியில் படித்தோமா படித்து முடித்தவுடன் வேலைக்கு சென்றமா என்று தான் இருக்கிறார்கள்.

இணையத்தின் மூலம் இன்று வேலை தேடும் இளைஞர்கள் தான் அதிகம் ஒரு நிறுவனம் வேலைக்கு விளம்பரம் கொடுத்து உள்ளார்களா உடனே அந்நிறுவனத்தை பற்றி தெரிய வேண்டுமா செல் இணையத்திற்கு அதைப்பற்றியான அனைத்து தகவல்களும் வந்து விழுகின்றது.

இணையத்தை பயன்படுத்தி பயன் பெறுபவர்கள் தான் அதிகம், இல்லை இணையத்தின் மூலம் நிறைய பேர் கெட்டுப்போகிறார்கள் என்று சொல்பவர்கள் மஞ்சக்காமலை பிடித்தவனுக்கு எதைப்பார்த்தாலும் மஞ்சள் மஞ்சளாக தெரியும் என்ற கதை தான் ஞாபகம் வருகிறது.

24 comments:

  1. இணையத்தில் எல்லாம் இருக்கு பங்காளி. எடுத்துக்கொள்வதிலும் பயன்படுத்துவதிலும்தான் இருக்கிறது...

    பிரபாகர்...

    ReplyDelete
  2. சார் யாரு தப்பா சொன்னது ?

    ReplyDelete
  3. நல்ல அவசியமான மற்றுமொரு பதிவு.
    பிரபாகர் அண்ணனை வழிமொழிகிறேன்.
    இணையம் என்றவுடன் ஆபாசம் என்ற தப்பான எண்ணம் களையப்படவேண்டும்.

    ReplyDelete
  4. நன்றும் தீதும் பிறர் தர வாரா......வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இணையத்தை பயன்படுத்தி பயன் பெறுபவர்கள் தான் அதிகம், இல்லை இணையத்தின் மூலம் நிறைய பேர் கெட்டுப்போகிறார்கள் என்று சொல்பவர்கள் மஞ்சக்காமலை பிடித்தவனுக்கு எதைப்பார்த்தாலும் மஞ்சள் மஞ்சளாக தெரியும் என்ற கதை தான் ஞாபகம் வருகிறது.


    ...... எந்த பக்கம் பாக்கிறோம் என்பதை பொறுத்து இருக்கிறது என்பதை நல்லா சொல்லிட்டீங்க.... அருமை.

    ReplyDelete
  6. அன்னப்பறவை போல்

    சுருக் நருக்

    ReplyDelete
  7. பதிவுகளை எடுததுக் கொள்ளுங்கள்! எ ந்தப் பதிவை அதிகம் பார்கிறார்கள்? .........

    ReplyDelete
  8. இணையத்தால் இளைஞர்கள் கேட்டுப் போகிறார்கள் என்பதை நானும் மறுக்கிறேன் .. இருந்த போதிலும் ஒரு சில இளைஞர்கள் சேயும் தவறு அனைவரையும் பாதிக்கிறது .. !!ஆயினும் எது தவறு எது சரி என்பதில் தெளிவு வரவேண்டும் . நல்ல கட்டுரை அண்ணா ..!!

    ReplyDelete
  9. கேட்டு போக நினைப்பவருக்கு இணையமும் ஒரு கருவி. அவ்வளவுதான். நல்ல பதிவு.

    ReplyDelete
  10. நல்ல இடுகை சங்கவி...

    நல்லதோ கெட்டதோ, அவங்கவங்க பயன்படுத்துவதில்தான் இருக்கு.

    ReplyDelete
  11. நிஜம் தான் . எல்லாமே அவரவர் பார்வையில் தான் இருக்கிறது.
    நல்ல பதிவு.

    ReplyDelete
  12. ரொம்ப சரி அண்ணே

    இணையத்தை எவ்வளவு பயன்படுத்துகிறோம்னு முக்கியமில்ல எப்படி பயன்படுத்துறோம் அதான்

    ReplyDelete
  13. மிக நல்ல பதிவு!

    ReplyDelete
  14. பூங்கொத்து! சமுதாயத்தில் நல்லதும்...கெட்டதும்!நமக்கு வேண்டியவையை எடுத்துக் கொள்வதில்லையா?அதே போல்தான் இணையமும்!

    ReplyDelete
  15. காமாலைக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்ன்னு அழகா சொல்லிட்டீங்க. நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு. நமக்கு வேண்டியது என்னன்னு தேர்ந்தெடுப்பது நம்ம கையிலதானே இருக்கு..

    ReplyDelete
  16. நானும் அதை வழிமொழிகிறேன்ங்க.

    ReplyDelete
  17. irandume irukku sangavi.. namaku ethu venumo athai eduthkanum

    ReplyDelete
  18. பளிச்சென்று ஒரு பதிவு...கெட்டுப் போகனுமுன்னா இணையம் மட்டுமா இருக்கு?

    ReplyDelete
  19. இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணத்தில் தான் தங்கியுள்ளது.
    ஆனாலும் இணையம் தற்பொழுது பல தீயவற்றுக்கு பயன் படுத்துகின்றனர்.

    ReplyDelete
  20. நல்ல விஷயம் மட்டும் எடுத்துக்கிட்டா பிரச்சினை இல்லை..
    எதுவும் அளவோடு இருந்தால் இன்னும் நல்லது.. :-)

    ReplyDelete