Wednesday, October 6, 2010

எங்க ஊரு கூட்டாஞ்சோறு....1


எத்தனை உணவு விடுதிகள் வந்தாலும் என்னதான் வீட்டில் ருசியாக சமைத்துப்போட்டாலும் கூட்டாஞ்சோறு சாப்பிடுவது தனி சுகமே. கிராமத்தில் இருந்து நகரத்துக்கு இடம் பெயர்ந்தவர்களாகட்டும் கிராமத்து இளைஞர்களாகட்டும் நிச்சயம் கூட்டாஞ்சோறு சாப்பிட்டு அதன் சுவையை அறிந்தருப்பார்கள் இதன் சுவையும் அனுபவமும் அனுபவித்தால் தான் அறியமுடியும். அந்த வகையில் நான் அதிஷ்டசாலி இன்று வரை கூட்டாஞ்சோறு சமைப்பதை செய்து கொண்டு இருக்கிறோம்.

காலத்துக்கும் வயதிற்கும் ஏற்றவாறு கூட்டாஞ்சோறு மாறிக்கொண்டு இருக்கிறது முதலில் பொங்கல், தக்காளி சாதம், காய் சாப்பாடு (எல்லா காயையும் போட்டு சமைப்பது), மீன் சோறு (மீனை சுட்டு சாப்பாட்டுடன் சாப்பிடுவது), நண்டு வறுவல், நாட்டுக்கோழி வறுவல் உடன் சாப்பாடு என வயது ஏற ஏற இந்த கூட்டாஞ்சோறின் வகைகளும் மாறிக்கொண்டு இருக்கின்றன.

முதன் முதலில் 5ம் வகுப்பு படிக்கும் போது வீட்டிற்கு பின் இருக்கும் சாமி சிலைக்கு எங்கள் பக்கத்து வீட்டு அக்காக்கள் எல்லாம் இணைந்து அவர் அவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த அரிசி, நாட்டுச்சக்கரையுடன் பொங்கல் வைத்து சாப்பிடுவோம் இது அப்ப அப்ப நடக்கும இது தான் என் முதல் கூட்டாஞ்சோறு.

7ம் வகுப்பு படிக்கும போது நண்பன் விஜய் வீட்டில் இருந்து பாத்திரங்கள் எடுத்துக்கொண்டு பஞ்சாயத்து போர்டு டிவி அறைக்கு பின் உட்கார்ந்து யார் யர் வீட்டில் இருந்து என்ன கொண்டு வருவது என முடிவு செய்து எல்லாரும் அவர் அவர் பங்கை கொண்டு வந்ததும் எல்லா காய்களும் போட்டு சமைக்க ஆரம்பித்து விடுவோம் சாப்பாடு தயாரானதுடன் வாழை இலைகளை கொண்டு வந்து தண்ணீர் தொட்டியின் மீது அனைவரும் வரிசையாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.

10ம் வகுப்பில் நான் விடுதியில் தங்கி படித்ததால் கொஞ்சம் இடைவெளி வருடா வருடம் எங்கள் ஊரில் இருந்து அருகில் உள்ள சித்தேஸ்வரன் மலைக்கு செல்வோம் புரட்டாசி மாதமும், சித்திரை மாதமும் சனிக்கிழமைகளில் அங்கு பூஜை நடக்கும் நான் முதல் தடவையாக புரட்டாசி மாதம் சென்றேன் நாங்கள் மொத்தம் 40 பேர் சென்றோம் எல்லோரும் இங்கேயே அனைத்து பொருட்களையும் வாங்கி எல்லோரிடமும் பிரித்துக்கொடுத்து ஊமாரெட்டியூர் வழியாக விடியற்காலை 3 மணிக்கு மலை ஏற ஆரம்பித்தோம்.
முன்னால் செல்லும நபர் ஒரு சைக்கிள் டயரையும் கடைசியில் வருபவர் ஒரு டையரையும் தீ பந்தம் போல் பிடித்துக்கொண்டு செல்வோம். இடையில் கோயிந்தா கோயிந்தா என்று கோசமிட்டு செல்வோம் காலை ஆறு மணிக்கு நடுமலை மலையாளத்தான் காட்டுக்கு சென்று அங்கே மலை கிராம மக்களிடம் வீடு ஒன்று வாடகைக்கு(ஓலை குடிசைதான்) எடுத்துக்கொள்வோம் அனைவரும் ஆளுக்கு 10ரூபாய் முன்னாடி கொடுத்த பணத்தில் பாத்திரங்கள் வாடகைக்கு எடுத்து ஆளாளுக்கு ஒரு வேலை கொடுத்து காலை உப்புமா தயாராகும் சாப்பிட்டு விட்டு கோயிலுக்கு வாங்கடா என்றால் யாரும் வரமாட்டார்கள்.

அப்புறம் ஒரு வழியாக 40 பேர் சென்றதில் ஒரு 5 பேர் கோயிலுக்கு செல்வோம் ஒத்தையடிப்பாதை வழியெங்கும பலாவும் கொய்யாவும் இருக்கும் பறிக்க முடியாது மலைக்காரனுக காவலுக்கு இருப்பார்கள் புரட்டாசி மாதம் மழைக்காலமாக இருப்பதால் நிறைய சிறு சிறு அருவிகள் இருக்கும் குழித்துவிட்டு ஆட்ட்ம போட்டு விட்டு பாறை மேல் தவழ்ந்து ஒத்த பாறையில் நடந்து என பல சவால்கள் நிறைந்த பாதை அது கடைசியாக சித்தேஸ்வரனை தரிசிப்போம். அங்கு இருந்து பார்த்தால் மேட்டூர் அனை தீப்பெட்டி அளவு தான் இருக்கும்.

நாங்கள் இறங்கி மீண்டும் வரும் போது எங்க நண்பர்கள் எல்லாம் பொறியல், பருப்பு, சாப்பாடு, ரசம் என ஒரு விருந்தே வைப்பார்கள். இந்த கூட்டாஞ்சோறு தான் மறக்க இயலாது அதுவும் அந்த மலைத்தண்ணீர் ருசிக்கு ரசம் குடி குடி என குடிப்போம். இரவுகளில் சாப்பாத்தியும் உப்புமாவும் செய்வோம் அங்கு தான் முதன் முதலில் சமைக்க கற்றுக்கொண்டேன். இந்த சித்தேஸ்வரன் மலையில் ஒரு சிறப்பு உண்டு இந்த கோயிலுக்கு வந்தால் பெண்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது எல்லா வேலையும் ஆண்களே செய்வார்கள் நிறைய ஊர்களில் இருந்து ஊரே ஒன்று திரண்டு வந்து சமைத்து சாப்பிட்டு செல்லும் போது கரடி, அனுமார் வேஷம் போட்டு ஆடிச்செல்வார்கள். நாங்கள் எப்பவும் இக்கோயிலுக்கு வந்தால் இரண்டு நாட்கள் தங்கி இருக்கும பொருளை எல்லாம் சாப்பிட்டு முடித்துவிட்டுதான் செல்வோம்.

இது எனது சைவ கூட்டாஞ்சோறுதான்... எனது அசைவ கூட்டாஞ்சோறு அடுத்த பதிவில் (தொடரும்)...

24 comments:

  1. சிறுவயது ஞாபகம் வருகிறது! நன்றி தொடருங்கள்!

    ReplyDelete
  2. அதுவும் மண் தரைமேல் இலையில் போட்டு சாப்பிட்டால் அதன் சுவையே தனி சார்

    ReplyDelete
  3. இந்த சித்தேஸ்வரன் மலையில் ஒரு சிறப்பு உண்டு இந்த கோயிலுக்கு வந்தால் பெண்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது எல்லா வேலையும் ஆண்களே செய்வார்கள்

    சித்தேஸ்வரன் கோவிலுக்கு இப்படி ஒரு சிறப்பா?!!!
    ஆத்துக்காரரோடு ஆஜர் ஆக வேண்டியதுதான்

    ReplyDelete
  4. கூட்டஞ்சோறு எங்களுக்கெல்லாம் இல்லையா பாஸ்!! அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. அருமையான கூட்டாஞ்சோறு ... நாங்க சின்ன வயசுல வார இறுதி நாட்கள்ல மாடு மேய்க்க போகும்போது இப்படித்தான் சாப்பிடுவோம் ... பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள் ...

    ReplyDelete
  6. அருமையான கூட்டாஞ்சோறு ... நாங்க சின்ன வயசுல வார இறுதி நாட்கள்ல மாடு மேய்க்க போகும்போது இப்படித்தான் சாப்பிடுவோம் ... பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள் ...

    ReplyDelete
  7. மிகவும் அருமை, மிக விரைவில் எதிர்பார்க்கிறோம் அசைவ கூட்டாஞ்சோறு பதிவை

    ReplyDelete
  8. ஆஹா சூப்பர் ரொம்ப ருசியான விருந்து படைச்சிட்டிங்க...

    ReplyDelete
  9. மண்மணம் மிக்க பதிவு,தழைவாழை இலை போட்டு மண் தரையில் அமர்ந்து கிராமங்களில் சாப்பிடுவது புதிய அனுபவமே.

    ReplyDelete
  10. உங்களுக்கு பதிவுலக பாரதிராஜா என ஒரு பட்டம் குடுக்கலாமா என ஆலோசித்துக்கொண்ண்டிருக்கிறோம்

    ReplyDelete
  11. //இது எனது சைவ கூட்டாஞ்சோறுதான்... எனது அசைவ கூட்டாஞ்சோறு அடுத்த பதிவில் //

    சைவ கூட்டஞ்சோறு நல்லா இருக்கு ., அசைவ கூட்டஞ்சோறு அடுத்த மாசம் எழுதுங்க .. நான் இந்த மாசம் சைவம் ..!!

    ReplyDelete
  12. பழைய நினைவுகள்...
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  13. எத்தனை அருமையான சுதந்திரமான வயசும் காலங்களும்.இனிக் கிடைக்குமா !

    ReplyDelete
  14. Evergreen memories. :)
    Nice post

    ReplyDelete
  15. உங்கள் பதிவு மூலம் என் நினைவுகள் சிறுவயது நாட்களுக்கு அழைத்து செல்கிறது.

    ReplyDelete
  16. படமும் பதிவும் அழகு - அருமை.

    ReplyDelete
  17. நல்லா இருக்குங்க....சுவையான நினைவுகள்

    ReplyDelete
  18. சாப்பாட்டு பிரியர் போல.
    ரசிச்சி சாப்பிடும் மனசு. அதுவும் நண்பர்களுடன், நாமே சமைத்து, வயல் வெளியிலும், ஆற்றின் கரையிலும் ,
    காடு மலைகளிலும், வாழை இலை போட்டு கூட்டமாக அமர்ந்து சாப்பிடுவது என்றும் மறக்காத ஒன்று.
    நல்லாத்தான் இருக்கு.

    ReplyDelete
  19. மலைப்பயணமும் கூட்டாஞ்சோறும் சுவைத்தது.

    ReplyDelete
  20. கூட்டாஞ்சோறு அருமை...

    சித்தேஸ்வரன் மலைக் கோவில் ஒரு அருமையான அனுபவம்...

    மலையுச்சியில் மேட்டூர் அணை தெரிந்த்தை பார்த்து பிரமித்த மாதிரி வேறு எதற்க்கும் பிரமித்ததில்லை... அதில் உங்கள் இரவு பயணத்தை விரிவாக எழுதுங்களேன்...

    ReplyDelete
  21. சிறுவயதில் சின்னவர்களாய் சேர்ந்து சமைத்து சாப்பிட்டோம்

    முதன் முதலில் செள செள சாப்பிட்டது அப்பொழுது தான் என்று நினைக்கிறேன்

    சிரட்டையில் சோறு போட்டு சாப்பிட்டோம்

    ஆஹா பசுமையான காலங்கள் ...

    ReplyDelete