Wednesday, October 13, 2010

அழிக்கப்படும் புராதனங்கள்- அரசுக்கு வேண்டுகோள்




சிதறாமல் அமர்வாரா ஜைனர்?

ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்டஆளுருட்டி மலை
 
புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?

வெடித்து வைக்கப்பட்டுள்ள கற்குவியல்கள்
 
தகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே
collr.tnpdk@nic.in மற்றும் collrpdk@tn.nic.in
 
மாபெரும் அழிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மின் அஞ்சல் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வலைப் பக்கங்களில் இதை மறு வெளியிடு  செய்து தருமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன் 
ஆரூரன் விசுவநாதன்
 
நண்பர் ஆருரான் வேண்டுகோளுக்கு இணங்க மீள் பதிவு....
 
To
The Collector,
Pudukottai Dist.
 
Order immediatly to stop quarrying. Such a monument can not be built by present or future govt. Such monuments are telling poetry, history of geography of glorious past.
 
Regds:\

15 comments:

  1. this is plagiarism. This came in fourthpress.wordpress.com by me, Atleast if you can put an acknowledgement from where you sourced this, that would have been fair.
    The helpless, blog owner of fourthpress.wordpress.com !
    Chandrasekaran J

    ReplyDelete
  2. original is seen in fourthpress.wordpress.com can't you not acknowlege that?

    ReplyDelete
  3. தேவையான மீள் பதிவு

    ReplyDelete
  4. ஆவன நடக்கட்டும்.

    ReplyDelete
  5. வணக்கம் நண்பர்களே...
    இப்பதிவு எங்கள் நண்பர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் எங்கள் சமூக ஆர்வத்தின் காரணமாக இப்பதிவை மீள்பதிவாக என் வலைப்பக்கத்தில் பதிவாக்கினேன்... இதனால் எனக்கு எந்த பேரும் புகழும் கிடைப்பதில்லை அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல மட்டுமே நாங்கள் பதிவிட்டோம்... இத முதல்லில் யார் போட்டாங்க அப்படிங்கிறது முக்கியமல்ல... எத்தனை பேரை சென்றடைந்தது என்பதே முக்கியம்...

    ReplyDelete
  6. அன்பிற்கினிய சங்கவி,

    பகிர்வுக்கு நன்றி. என்னுடைய இடுகையில் fourthpress.wordpress.com அவர்களை குறிப்பிடாதது என்னுடைய தவறே. மன்னிக்க.

    செய்தி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற வேகத்தில் மட்டும் சொல்லப்பட்டது. யாரையும் தவிர்க்கவோ, மறைக்கவோ செய்யப்பட்டதில்லை.
    தற்பொழுது சேர்த்துவிட்டேன்.

    நன்றி
    அன்புடன்
    ஆரூரன் விசுவநாதன்

    ReplyDelete
  7. தேவையான பதிவு..வாழ்த்துகள்

    ReplyDelete
  8. ஆதாரங்கள் என்றும் நிரந்தரமாக்கப்பட வேண்டும்.. வாழ்த்துக்கள் சகோதரா...

    ReplyDelete
  9. சமூக ஆர்வமுள்ள பதிவு.
    மனிதர்களின் இயந்திரத்தனமான வாழ்க்கை நடைமுறையில் பழங்காலமாவது?? புராதனமாவது?? என்று பலர் கூற கேட்டிருக்கிறேன். சமூக அக்கறை என்பது வெட்டி கௌரவத்திற்காக மட்டுமே ஒட்டிக்கொண்டிருக்கும்போது நாம் என்ன செய்ய முடியும்??

    ReplyDelete
  10. அவசியமான பதிவு, நன்றாக எழுதி இருக்கிங்க!

    ReplyDelete