Monday, October 11, 2010

நண்பன் அமைவதெல்லாம்...

நண்பன் எனக்கு இல்லை என்று சொல்பவர்களை விரல் விட்டு எண்ணலாம். அந்த அளவிற்கு நண்பர்கள் நம் வாழ்வில் இன்றியமையாதவர்களாகி விட்டனர் என்றால் அது மிகையாகாது.

ஒவ்வொருவருக்கும் ஒரு காலகட்டத்தில் நண்பர்கள் உருவாகி இருப்பர் நம் சிறுவயது முதற் கொண்டே நட்பு உருவாகிறது. குழந்தையாய் பக்தது வீட்டு குழந்தையுடன் முதல் நட்பு, பள்ளிக்குச் செல்லும் போது அங்குள்ள குழந்தைகளின் நட்பு, விடுமுறையில் அத்தை வீட்டுக்குச் செல்லும் போது அந்த ஊர் குழந்தைகளின் நட்பு என ஒவ்வொரு கால கட்டத்திலும் நட்பு இருந்தே வருகிறது. நட்புக்கு வரைமுறை எல்லாம் கிடையாது.

நண்பனை நம்பி ஏமாந்தவர்கள் நிறைய இருக்கின்றனர் ஆபத்தில் சிக்க விட்ட நண்பர்களும் இருக்கின்றனர், பாதியில் கழட்டி விட்ட நண்பர்களும் இருக்கின்றனர். இப்படி நிறைய வகை நண்பர்கள் உள்ளனர். யார் யாருக்கு எப்பொழுது வேண்டுமானாலும் நட்பு உருவாகலாம் அதை முறையாக கையாள்பவர்கள் தங்களது நட்பு கடைசிவரை உடன் வரும்.

நான் நிறைய நண்பர்களைப்பார்த்து உள்ளேன் அவர்கள் வீட்டு விசேசத்திற்கு அனைத்து வேலைகளையும் செய்வார்கள் அவர்கள் குடும்ப வேலைகளை இவர்கள் செய்வார்கள் என குடும்ப நட்பும் நிறைய உண்டு. உண்மையான நண்பன் கூட இருக்கும் போது எதற்கும் கவலை இல்லாம் இருக்கலாம். வெளியூரில் வேலை செய்யும் நண்பர்கள் தங்களது வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை எனில் முதலில் நண்பனைக் கூப்பிட்டு டேய் போய்பாரு என்று நண்பர்களுக்குத் தான் முதலில் தொடர்புகொள்வார்கள். நண்பனும் தங்களால் ஆன உதவியை செய்வார்கள் இது தான் இன்று நிறைய வெளியூரில் வேலை செய்யும் நண்பர்களிடம் இது அதிகமாக கணப்படும்.


உதவிக்காக மட்டும் தான் நண்பன் என்றால் அதுவும் தவறு. மாற்று உதவியை எதிர்பாரமல் உதவும் நண்பர்களே நண்பர்கள். நண்பனின் தேவை அதிகமாகும் இடம் வெளியூரில் வேலைக்குச் செல்லும் போது தான் அதிகரிக்கிறது. வேலைக்கு சென்று வீடு வாடகைக்கு எடுத்து தங்கும் போது நண்பர்கள் தேவை. வேறு ஊருக்கு வேலை காரணமாக செல்கிறோம் என்றால் முன்னரே நண்பனைக்கூப்பிட்டு இங்கே இருக்கிறேன் வாடா என்று உரிமையாக அழைக்கலாம். நண்பனை மட்டுமே அவன் எந்த பதவியில் இருந்தாலும் வாடா போட என்று அன்போடு அழைக்க முடியும்.

எனது நண்பர்கள் உடன் நான் அதிகம் சுற்றி எக்கச்சக்க சேட்டை செய்துள்ளோம் ஆனால் என் நண்பனுக்காக நான் செய்த ஒரு சின்ன உதவி இன்று வரை இருவரும் என்னை பார்த்தால் அவ்வளவு சந்தோசப்படுவார்கள். ஒரு 10 வருடங்களுக்கு முன்பு மே விடுமுறையில் எங்கள் ஊரிற்கு புதிதாக ஒரு பெண் வந்தாதாங்க அனைவரும் அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வரும் போது பார்ப்போம் இதில் என் நண்பன் ஒருவன் எனக்கு அந்த பெண் பிடிச்சிருக்கு கட்டினால் இந்த பெண் தான் என்று சுத்த ஆரம்பித்தான். அந்த காதலுக்கு முதல் எதிர்ப்பே நான் தான் அதன் பின் அவன் என்னிடம் எதுவும் இப்பெண்ணைப்பற்றி சொல்வதில்லை நானும் கண்டுக்காமல் இருந்தேன். அப்புறம் தான் விசயம் தெரிய வந்தது காதல் ஒகே ஆகிவிட்டது என்றும் அந்தப்பெண் ஊரிற்கு சென்று விட்டாள் எனவும்.

சரி அந்த பெண்ணைப் பார்க்க போகனும் என்ன செய்யலாம் என்று அப்போது தான் என்னிடம் உண்மையை சொன்னான் சரி வா போகலாம் என்று எங்கள் ஊரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அப்பெண்ணின் ஊரிற்கு சென்றோம் இன்னும் இங்கிருந்து 2 கிலோ மீட்டர் உள்ளே போகனும் என்றான் ஊரைப்பார்த்து விட்டு அந்த ஊரில் என்ன செய்கிறார்கள் அந்த ஊர் எப்படி என்று விசாரித்து விட்டு திரும்பினோம். இதற்குப்பின் அவன் வேலை செய்யும் கம்பெனி வண்டியை எடுத்துக்கொண்டு அந்ந ஊரிற்கு சென்று கேஸ் அடுப்பிற்கு டியூப் வேண்டுமா என ஒவ்வொரு வீடாக நாங்கள் 5 பேர் அந்த ஊரைச்சுற்ற கண்டுபிடித்தோம் அவர்கள் வீட்டை அப்புறம் அந்த பெண்ணிடம் பேசிவிட்டு திரும்பினோம்.
இதற்குபின் அவன் தனியாக இருமுறை சென்று பார்த்துவிட்டுவந்து விட்டான். அப்புறம் பெண் கேட்கலாம் என நானும் அவனும் அவனது ஊரிற்கு செல்ல அந்த ஊர் இளைஞர்கள் இவன் வருவதையும் அப்பெண்ணிடம் பேசியதையும் பார்த்து வைத்துள்ளனர் சரியாக நாங்கள் இருவரும் போக ஊர் ஒன்று சேர்ந்து ரவுண்டு கட்டிவிட்டார்கள் அப்புறம் என்ன கொஞ்சம் கும்மாங்குத்து தான் அந்த ஊரில் உள்ள ஒரு பெரியவர் எங்களுக்கு சப்போட்டாக பேச அங்கு இருந்து தப்பி வந்தோம் எத்தனையோ நண்பர்கள் அவனுடன் சென்றாலும் நண்பனுக்காக பொதுமாத்து வாங்கியது நான்தான். அவர்கள் இருவரும் இன்றும் நினைவு கூர்ந்து சந்தோசப்படுவார்கள்...

அதற்குப்பின் இரண்டுமுறை அந்த ஊரிற்கு இரவில் கரும்புக்காட்டு வழியாக சென்று கடிதம் கொடுத்து மூன்றாவது முறை வெளியே கூட்டடிட்டு வந்து திருமணம் முடிந்து இன்று அனைவரும் சந்தோசமாக உள்ளனர் இது நண்பனுக்காக நான் செய்த உதவி மறக்க முடியாத நினைவுகள் தான்... நம்மில பல பேர் நண்பனுக்காக பல உதவிகள் செய்து இருப்பார்கள் நண்பர்களும் நமக்கு செய்து இருப்பார்கள். மனைவியிடம் பேச முடியாத விசயங்களைக் கூட நண்பனிடம் ஆலோசனை பெறபவர்கள் இங்கு அதிகம் இது தான் இன்றைய நிலையும் கூட....

இன்று நம் வலைப்பதிவில் எடுத்துக்கொள்ளுங்கள் எத்தனையோ முகம் தெரியாத நட்புக்கள் இதில் அனைவரும் சந்தித்திருப்பார்களா என்றால் நிச்சயம் குறைவு தான் ஆனால் நட்பு தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பது சந்தோசமான விசயம்....

நம் வாழ்விற்கு நண்பர்கள் முக்கியம்.. நண்பன் அமைவதொல்லாம் நாம் பெற்ற வரத்தைப் பொறுத்து... நண்பேன்டா.....

27 comments:

  1. எனக்குத் தன் சுடு சோறு

    ReplyDelete
  2. //////இரண்டுமுறை அந்த ஊரிற்கு இரவில் கரும்புக்காட்டு வழியாக சென்று கடிதம் கொடுத்து மூன்றாவது முறை வெளியே கூட்டடிட்டு வந்து திருமணம் முடிந்து இன்று அனைவரும் சந்தோசமாக உள்ளனர்////
    கலக்கீட்டிங்க சகோதர...

    ReplyDelete
  3. தொடர்ந்து கலக்குறீங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. உங்க பிரண்டு லவ் பண்ண ஏகப்பட்ட டகால்டி வேலையெல்லாம் பண்ணிருக்கிங்க போல ?
    அப்புறம் அப்பா , அம்மா சகோதர சகோதரிகள் , சொந்தக்காரர்கள் , மகன் ,மகள் ஏன் மனைவியிடம் கூட இல்லாமல் நமது அனைத்து ரகசியங்களையும் பகிர்ந்துகொள்ளும் ஒரே உறவு அது நட்புதான்சார்

    ReplyDelete
  5. நண்பன் அமைவதெல்லாம்
    நாம் செய்த புண்ணியம்
    சுவாரிசியமான கதை

    ReplyDelete
  6. நண்பேன்டா.....

    ReplyDelete
  7. எனக்கும் ஒரு சின்ன உதவி. 80 கிலோமீட்டர் எல்லாம் இல்ல. இங்க பக்கம் தான் ஒரு 10 கிலோமீட்டர்.வீட்டை கண்டுபிடிச்சு தரனும் நண்பா..........

    ReplyDelete
  8. என் இல்ல திருமணத்தில் சம்பார் வாளி தூக்கியவர்கள் அத்தனை பேரும் நண்பர்களே...

    ReplyDelete
  9. நண்பேன்டா..... repeatuuuu....

    ReplyDelete
  10. நெகிழ்ச்சியான பதிவு! நன்றி!

    ReplyDelete
  11. நண்பேண்டா என்று மார்தட்டிச் சொல்லும் நல்ல பதிவு,.

    ReplyDelete
  12. நண்பேண்டா என்று மார்தட்டிச் சொல்லும் நல்ல பதிவு,.

    ReplyDelete
  13. நண்பா,

    ... நண்பேன்டா...!

    ReplyDelete
  14. வாழ்வில் மிகப்பெரிய பாக்கியம் நல்ல நட்புகள் அமைவது.
    நல்ல சுவையான பகிர்வு

    ReplyDelete
  15. நண்பனுக்காக... கும்மாங்குத்து.
    கலக்கிட்டீங்க.

    வாழ்க நட்பு!

    ReplyDelete
  16. நட்பு குறித்து சிலாகித்து எழுதியமைக்கு நன்றி. நல்ல நட்பு வெகு சிலருக்கே கிடைக்கிறது.

    ReplyDelete
  17. அருமை சங்கவி..

    என்னோட பதிவை பாருங்க.. தீபாவளி லேடீஸ் ஸ்பஷலுக்கு உங்க படைப்பை இன்றோ நாளையோ அனுப்புங்க

    ReplyDelete
  18. நம் வாழ்விற்கு நண்பர்கள் முக்கியம்.. நண்பன் அமைவதொல்லாம் நாம் பெற்ற வரத்தைப் பொறுத்து... நண்பேன்டா.....

    ..... Indeed, it is a blessing! :-)

    ReplyDelete
  19. நல்ல கருத்தை சிறப்பாக பகிர்ந்து நட்புக்கு பெருமை சேர்த்திட்டீங்க சங்கவி...

    ReplyDelete
  20. //எத்தனையோ நண்பர்கள் அவனுடன் சென்றாலும் நண்பனுக்காக பொதுமாத்து வாங்கியது நான்தான். //

    நீங்க ரொம்ப நல்லவர் .. அடி வாங்கினத கூட மறைக்காம சொல்லிருக்கீங்க அண்ணா .. அப்புறம் உண்மைலேயே நண்பர்கள் தான் நமக்கு பெரிதும் பக்க பலமாக இருக்கிறார்கள் ..

    ReplyDelete
  21. நமக்கு என்னதான் மனச்சோர்வுகள் இருந்தாலும் நட்பு வட்டத்திற்குள் வரும்போது மறைந்துவிடுகின்றன.. அல்லது மறக்கப்படுகின்றன.
    நல்லதொரு நட்பான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. நட்பு பற்றிய பதிவு அருமை .பள்ளமான உள்ளங்களை நிரப்ப ஓடிவரும் வெள்ளங்கள் தான் நண்பர்கள் .

    ReplyDelete
  23. நல்ல பதிவு, தொடரட்டும் உங்கள் பயணம்.
    நண்பன் என்பவன் நம் மனசாட்சியாக இருப்பதும், மனம் வெறுத்து போவதும் சூழ்நிலைகளே தீர்மானிகின்றன.

    ReplyDelete